Pages

Saturday, August 8, 2009

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள்

முன்னுரை:
பெண்களைப்பற்றிய எனது பதிவுக்கு மறுமொழி எழுதிய Mr.கோகுல் அவர்களுக்கு பதில் எழுதத்தான் ஆரம்பித்தேன் ,அது ஒரு பதிவாகவே ஆகிவிட்டது . மழை யாருக்காக பொழிகிறேன் என்று சொல்லியா பொழிகிறது. அகங்கார குடையை மூடி வைத்து நனையுங்கள் இந்த மழையில்

//அடங்கி போவதுக்கு இப்படி ஒரு பில்டப்பா //
தம்பி !
உங்க மறுமொழி உங்களுக்கு வயது 18க்குள் என்று காட்டுகிறது. அதனால் தான் இந்த அழைப்பு. அடங்கி போவது,அடக்குவது இதெல்லாம் தேவையில்லாத உறவு கணவன் மனைவி உறவு. இதில் அடங்கி போகிறவர்கள் தான் உண்மையில் அடக்கி ஆள்கிறார்கள். அடக்க நினைப்பவர்கள் ஆடிப்போகிறார்கள்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள்.
//அய்யா உடலுறுவு என்பது சாப்பிடுவது போல ஒரு செய்கை அவ்வளவுதான் , அது சில சமயம் உணர்வு பூர்வமாக அமைவதும் உண்டு, தயவு செய்து புனித சாயம் பூசாதிர்கள்//

உடலுறவு என்பது வெறுமனே விந்தை வெளியேற்றும் செயலாக இருந்தால் அவனவன் தன் கையே தனக்குதவி என்று இருந்துவிட்டிருப்பான். இங்கே ஒவ்வொரு மனிதனும் /ஆண்,பெண் அனைவரும் அரைகுறைதான் மறுபாலுடன் இரண்டற கலக்காதவரை.

ஒவ்வொரு ஆணிலும் ஆண் தன்மை 60 சதம், பெண் தன்மை 40 சதம் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணிலும் பெண் தன்மை 60 சதம் ஆண் தன்மை 40 சதம் இருக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் இரண்டற கலக்கும் போது அங்கு முழுமையான ஒரு ஆண் ,ஒரு பெண் ஏற்படுகிறார்கள்.

அனைத்து மாந்தரும் தோன்றியது முதலில் தோன்றிய அமீபாவிலிருந்துதான். அன்று ஓருயிராய் இருந்த போது தாம் அனுபவித்த பாதுகாப்பு,இலக்கற்ற தன்மை தான் மனித மனங்களின் ஆழத்தில் பதிந்திருக்கிறது. மீண்டும் ஓருயிர் ஓருடலாக மாற ஒவ்வொரு உயிரும் துடிக்கிறது. அதற்கு தடை தம் உடல் என்று பாவிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு உயிரும் தன்னைத்தானே கொன்று கொள்வதும்,பிற உயிர்களை கொல்வதுமாய் இருக்கிறது. மனித உயிர்கள் பல்வேறு முகமூடிகளுடன் செய்வது இரண்டு செயல்களைத்தான் .ஒன்று தற்கொலை அ கொலை.

ஈருயிர் ஓருயிரில் தங்கும் நிகழ்வு ஒரு பெண்ணில்தான் நடக்கிறது. அதனால் தான் கர்பிணியான பெண்ணின் முகத்தில் ஒரு க்ளோபல் மதர் தெரிகிறாள். எப்படிப்பட்ட காமுகனாக இருந்தாலும் ஒரு கர்பிணி எதிர்படும்போது அவன் மனதில் அந்த உணர்வு எழுவதில்லை.

ஆக படைப்பின் ஆரம்பத்தில் ஓருயிராய் இருந்த அனுபவத்தை தருவது உடலுறவு. மேலும் மனிதனி கொல்லும்,கொல்லப்படும் இச்சைகளையும் தீர்த்து வீர்ய ஸ்கலிதத்தின் போது ஒரு ப்ளாக் அவுட்டை தந்து சமாதி நிலைக்கான ஒரு முன்னோட்டத்தையும் தருவது உடலுறவு.

எனவே "ஆதலினால் காதல் செய்வீர்..

//சில சமயம் அது உணர்வு பூர்வமாக அமைவதுண்டு //என்று கூறியமைக்கு நன்றி. இந்த வரிக்காகத்தான் ஒரு பதிவு சைஸில் மறுமொழி போட இருந்து பதிவாகவே போடுகிறேன்.

5 comments:

  1. அய்யா,

    முதலில் என்னை 18 வயதாக நினைத்ததற்கு ஒரு நன்றி , ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அந்த வயதை கடந்து விட்டேன் ! நீங்கள்
    சொல்வது எல்லாம் படிப்பதற்கு மிகவும் இன்பகரமானதாக இருக்கிறது, குடும்பத்தில் அடங்கி போகிறவர்கள்தான் உண்மையில்
    அடக்குகிறார்கள் , ஆஹா , ஆனால் பாருங்கள், நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்களில் வரும் வழக்குகள் இந்த மாயாவாதத்தை விட்டு மிக
    மிக விலகி இருக்கின்றன.

    மேலும் இதை எழுதும்போது தோன்றுவது என்னவென்றால் உங்களுடைய இரண்டு பதிவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி
    இருக்கின்றது. முதல் பதிவில் மிகவும் காத்திரமாக 'ஆர்காசம்' பற்றியெல்லாம் மிகவும் யதார்த்தமாக ஆரம்பித்து உங்கள் அடுத்த பதிவில்
    அதற்கு நேர்திசையில் சென்று விட்டீர்கள் ஏன் என்று தெரியவில்லை.

    நீங்கள் சொல்வது போல ஆணோ பெண்ணோ முழுமை அடைவது உடலுறவின் மூலமாக என்று வைத்துக்கொண்டால், ஆர்காசம் வந்த உடலுறவின் மூலமாகவா அல்லது அது வராத உறவு மூலமாக கூட முழுமை அடைவார்களா? ஏனெனில் நீங்கள் சொன்னது போல பல பேர் 23 (அல்லது 22.5) அசைவு வரை தாங்குவதில்லை.

    நீங்கள் சொல்வதை கூட்டி கழித்து பார்த்தால், ஆண்கள் காதல் செய்ய வேண்டும் ஆனால் அதன் பிறகு (அல்லது முன்பே) வரும்
    உடலுறவில் அந்த பெண்ணை திருப்தி செய்ய முடியாது , ஆனால் நாம் முழுமையடைய வேண்டும் (அய்யய்யோ ... ) அதன் பிறகு லஞ்சம் வாங்கி அவளை திருப்தி படுத்த வேண்டும், அல்லது அவள் மன ஆழத்தில் இருக்கும் அன்பை தொட வேண்டும் (நமது பரம்பரையை ரட்சிக்க ..) அது 54 இன்ச் கலர் டி.வீ மூலம் சாத்தியம் ...கிம்பளம் அதிகம் வாங்க வேண்டும் ... போங்கையா போய் குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க (தப்பா நினைச்சுக்காதிங்க தேவர் மகன் கிளைமாக்ஸ்-இல் வசனம்)

    டென்சன் டென்சன் டென்சன் (கவுண்டமணி குரலில் படிக்கவும்)

    ReplyDelete
  2. தற்பொழுது ஒரு தினுசான மனைவிமார்களை பற்றியும் தாங்கள் தெரிந்துகொள்ள பிரியப்படுகின்றேன்...

    நம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த "வரதட்சணை கொடுமை - 498ஏ" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...
    இச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..
    மற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) "எனது" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்
    மற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)
    மற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..
    2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)

    ReplyDelete
  3. தமிழ் சரவணன் அவர்களே !
    தங்கள் கசப்பான அனுபவங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பெண் என்பவள் யாருக்கும் புரிபடாத விந்தை. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா தெய்வம் ..வாழ்க்கையில் எவனாவது எதையாவது சாதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவனை இப்படித்தான் பந்தாடும்.

    ம‌னிதன் ஆடை கட்ட ஆரம்பித்துவிட்டானே தவிர ஆடைக்குள் மிருகமாகவே இருக்கிறான். மேலும் பெண் காலங்காலமாக கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மிருகம். அடிப்பட்ட மிருகத்துக்கு தன்னை யார் நெருங்கினாலும் பதைப்பு ஏற்படுவது சகஜம்.

    மனித உறவுகளில் தவறான புரிவு என்பது ஏதோ ஒரு புள்ளியில் தோன்றி விடுகிறது. அது எங்கே எவரால் ஆரம்பித்தது என்று புரிந்து மராமத்து செய்து கொள்ளாவிட்டால் கை தவறிப்போய்விடுகிறது.

    ஒரு ஜோதிட ஆய்வாளனாக நான் கூற விரும்புவது இது போன்ற சம்பவங்கள் நிகழ சில காரணங்கள் உள்ளன. நம் வமிசாவழியில் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது,சின்ன வீடு வைத்து வாழ்வது, பெண்கள் சரியான வாழ்க்கை துணை அமையாது சீக்கிரம் விதவையாவது, பிள்ளையில்லாது போவது, அற்பாயுளில் இறந்து போவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் இது போன்று அடுத்த தலைமுறையை பாதிக்கிறது.

    உங்களுக்கு ஜோதிட நம்பிக்கையிருந்தால் எனது கீழ்காணும் வலைப்பூ சென்று முன்னுரையையும், சுக்கிரன் பேசுகிறேன் என்ற தலைப்பிலான பதிவையும் படித்துப்பார்க்கவும் , அதிலான நவீன பரிகாரங்களை பின் பற்றவும்

    ReplyDelete
  4. தமிழ் சரவணன் அவர்களே !
    வலைப்பூ முகவரியை தர மறந்துவிட்டேன். மன்னிக்கவும்

    http://www.anubavajothidam.blogspot.com

    ReplyDelete