Sunday, December 23, 2007

ந‌ரேந்திர‌ மோடி// 2008, ஏப்ர‌லுக்குள் மரண அடி

ந‌ரேந்திர‌ மோடி ச‌னி,குரு,ராகு,கேது ப‌ல‌த்தில் முத‌ல்வ‌ரானாலும் ஏப்ர‌லுக்குள் அவ‌ர் ராசிக்கு
8 ல் உள்ள‌ செவ்வாய் ப‌த‌வியிழ‌க்க‌ச் செய்வார்.

அன்றே சொன்னேன்..ஆள்வோருக்கு நேரம் சரியில்லை என்று. இன்று பாருங்கள் குஜராத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்கியுள்ளது.

Total: 182
bjp : 117
congress: 62

ஆம் . ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி, சிம்மத்துக்கு வந்தது ஆள்வோருக்கு நலம் தராது. மேலும் மன்மோகனின் சிம்ம ராசியில் கேது,சனி நின்று ஏழை பார்க்கின்றனர். இது மைனாரிட்டி வகுப்பினர்,பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை இழக்கச்செய்யும்.

சோனியா வின் கும்ப ராசியில் ராகு உள்ளார். ஏழில் சனி,கேது நின்று ஜன்மத்தை பார்க்கின்றனர். இதுவும் மன்மோகனுக்கு சொன்ன பலன் களையே தரும். குரு தனுசில் நின்றதால் ஆஷாடபூதிகள்,மதவாதிகளுக்கு யோகம் கிடைக்கும். இன்று கூறுகிறேன்.

அன்று நான் உள்ளீடு செய்த பதிவின் சுட்டி இதோ:

http://tamilvasam.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஐயா.. நான் பிராமணனல்ல. மூடநம்பிக்கையாளனுமல்ல. என்னை நம்பி வருபவர்களுக்கு ஜோதிடம் குறித்த என் ஆராய்ச்சியிலான இடைக்கால முடிவுகளை மட்டுமே தெரிவித்து வருகிறேன்.

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஜோதிடவியலில் ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அறிந்தால் ஜோதிடம் என்பது ஏய்த்து பிழைப்பவர்களுக்கானதே தவிர ,உழைத்து பிழைப்பவர்களுக்கல்ல என்பதை உணரலாம். என்னைப் பொருத்தவரை ஜோதிட விதிகளை வகுத்தளித்த நம் ரிஷிகள்,மகரிஷிகள் தாம் ஆதி கம்யூனிஸ்டுகள்.

ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்:

சுக்கிர அஸ்தமனத்தின் போது வீடு மாறுவது கூடாது என்பது விதி. இதற்கான விதிவிலக்கில் யுத்த பயம்,தொற்று நோய்கள் பரவும் காலம், பஞ்சம் பிழைக்க வீடு மாறும்போது சுக்கிர அஸ்தமனம் பற்றி கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னலமற்ற லட்சியத்துடன் உழைப்பவர்கள் விஷயத்தில் கிரகங்கள் வேலை செய்யாது என்றும் ஒரு விதி உள்ளது. இதற்கு பார்வதி தேவி சாபம் காரணமாக கூறப்பட்டுள்ளது.

பத்து வட்டி வாங்குபவன் ராகு,எம, காலம் பார்த்தால் எத்தனையோ ஏழைகள் காப்பாற்றப்படுவார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் இதெல்லாம் பார்த்ததால் தான் இன்று சில கட்டிடங்களேனும் மிச்சம் உள்ளன. இல்லாவிட்டால் தமிழ்நாடே கபளீகரம் ஆகியிருக்கும்.

இருப்பவன் பஞ்சாங்கம் பார்த்தே வாழட்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. இல்லாதவன் ஆண்டுக்கு ஒரு முறை சேவை மனப்பான்மை உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்து பலனறிந்து அதற்கேற்ப செயல்பட்டாலே போதும். ஏழைக்கு ராகு,எம,காலங்கள் வேலை செய்யாது. இதை நிரூபிக்க நான் தயார்.

ச‌னி பிடித்த‌ போது பிற‌ரிட‌ம் வேலை செய்தும், ச‌னி விடுத‌லையான‌ போது சொந்த‌ வியாபார‌ம்,தொழில் செய்தும் வ‌ந்தாலே போதும் ஏழைக‌ள் ப‌ண‌க்கார‌ர்க‌ளாவ‌து உறுதி

விஞ்ஞானத்தை வளர்க்க போறேங்க !

கலைவாணர் தம் பாடலில் "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி' என்பார். தமிழ் நாட்டு பெண் மேயர்களிடம் (ப்ரவுஸர்ஸ்) உதை வாங்கும் தெம்பு இல்லாததால் பாட்டை மாற்றிவிட்டேன்.

விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சி தெருச்சாக்கடைகளிலெல்லாம் பாலும்,தேனும் ஓடவைக்கும் என்று சொல்ல‌ மாட்டேன். அது அலாவுதீன் பூத‌ம் போன்ற‌து. க‌ணிணி,செல் போன்ற‌ க‌ண்டுபிடிப்புக‌ளையெல்லாம் த‌ம் செக்ஸ் தின‌வை தீர்த்துக் கொள்ள‌வே பெரும்பாலோர் உப‌யோகிப்ப‌தை நான் ம‌றுக்க‌ மாட்டேன். அதே நேர‌ம் இத‌ற்கு ந‌ம் ம‌த‌,அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் கார‌ண‌ம். செக்ஸ் ப‌ற்றிய‌ த‌ம் த‌வ‌றான‌ க‌ருத்தை மாற்றிக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளுக்கு உரிய பயிற்சிக்கு பிறகு அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கி விட்டால் போதும், விஞ்ஞான‌த்துக்கும்/செக்ஸுக்கும் உள்ள‌ தொட‌ர்பு அறுந்து விடும்.

இன்றைக்கு உள்ள‌ விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சியில்,முக்கிய‌மாக‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ புர‌ட்சியில் ராம‌ராஜ்ஜிய‌ம் என்ன‌ அந்த‌ ராம‌னும் வெட்கி த‌லை குனிய‌த்த‌க்க‌ ந‌ல்லாட்சியை வ‌ழ‌ங்க‌ முடியும்.

என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திவிட்டால் ஸ்தூல‌ பிர‌ச்சினைக‌ள் யாவும் ஒழிந்து நிர்வாக‌ சிக்க‌ல்க‌ள் ம‌ட்டுமே இருக்கும்.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ஒவ்வொரு வார்டு மெம்ப‌ருக்கும் க‌ணிணியை உப‌யோகிக்க‌ க‌ற்றுக்கொடுத்துவிட்டால் போதும் பிற‌கு எம்.பி,எம்.எல்.ஏ, க‌லெக்ட‌ர்,போன்ற‌ இர‌ண்ட‌டுக்கு,மூன்ற‌டுக்கு நிர்வாக‌ இய‌ந்திர‌மே தேவையில்லை. ஸ்விட்ஜ‌ர்லாந்து போல் நேரிடை ஜ‌ன‌நாய‌க‌த்தை வார்ட் அள‌வில் அம‌ல் ப‌டுத்தி விட‌லாம். காந்தி கூறிய‌ கிராம‌ ராஜ்ஜிய‌ம்,ராம‌ ராஜ்ஜிய‌ம் எல்லாமே சாத்திய‌மாகிவிடும். மாவ‌ட்ட‌ அள‌வில் உள்ள‌ நிதி,நீதி,நிர்வாக‌ இய‌ந்திர‌த்தை கிராம‌,வார்டு அள‌விலேயே ஏற்ப‌டுத்தி விட‌லாம். வார்டில் கொலை ந‌ட‌ந்த‌ 24 ம‌ணி நேர‌த்தில் தீர்ப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு கொலை செய்த‌வ‌ர் சிறைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு விடுவார்.

தேர்த‌ல் சீர்திருத்த‌ம்:

நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ஒரு ப்ரொஃபார்மாவை கொடுத்து அதை கிராம‌,வார்டு இய‌ந்திர‌ம் உத‌வியுட‌ன் நிர‌ப்பி ஆன்லைனில் அனுப்ப‌ச்சொல்லி,அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை ஒரு சூப்ப‌ர் க‌ணிணி உத‌வியுட‌ன் ச‌லித்தெடுத்து திட்ட‌ம் தீட்டினாலே போதும் ,அதை அம‌ல் ப‌டுத்தும் அதிகார‌த்தை ம‌ட்டும் கிராம‌,வார்டு நிர்வாக‌த்துக்கு த‌ர‌வேண்டும்.

தேர்த‌ல் என்ப‌து ஆன்லைன் மூல‌ம் 15 நாட்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும். 90 ச‌த‌வீத‌ம் வாக்குப்ப‌திவு ந‌ட‌க்கும் வ‌ரை முடிவு தெரிவிக்க‌ப்ப‌ட‌க்கூடாது. அவ‌ர‌ர் க‌ட்டை விர‌ல் ரேகையையே பாஸ் வோர்டாக்கி விட‌லாம்.

ஹ்ம்.. எத்த‌னையோ செய்ய‌லாம் ! ம‌ன‌மிருந்தால் மார்க‌ம் உண்டு. ம‌ன‌மில்லையே ஆள்வோருக்கு.

Thursday, December 20, 2007

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும்

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும் இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மீண்டும் சுஜாதா குங்குமம் வார இதழில் ஜோதிடம் குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாளென்செயும் கோளென்செயும் என்று பழம் பாடலை குறிப்பிட்டுள்ளார். அந்த பழம் பாடலின் இறுதியில் ஒரு வரி வரும்: அதையும் சேர்த்து படிக்கும்போது:

குமரேசரிரு தாளும்,சிலம்பும்,சதங்கையும் நம் கண் முன் வந்து தோன்றிய பிறகு தான் நாள் என் செய்யும் , கோள் என் செய்யும் என்ற நிலை ஏற்படும் என்பது தெரிய வரும். இந்த 40 வயதுக்கே இந்த பாடலின் கடைசி வரியை சரியாக குறிப்பிட முடியவில்லை. குங்குமத்தை அரை,குறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை பார்க்கவே வாங்கி படிக்கும் டீன் ஏஜர்களுக்கு இந்த பாடலின் வாசனை கூட தெரியாதிருக்கலாம்.

சுஜாதா திட்டமிட்டே ஜோதிடம் குறித்து இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். ராமர் ஜாதகத்தில் குரு,சந்திர சேர்க்கை இருந்ததால் தான் வனவாசம் செய்தார், செவ்வாய் 7 ல் இருந்ததால் தான் சீதையை பிரிந்திருக்க வேண்டிவந்தது என்று கூறும் சனாதனர்களின் வழி வந்த சுஜாதா ஜோதிடத்தை பழிக்க ஒரே ஒரு காரணம் தான்:

பிராமணர்கள் தம் பஞ்சாங்கங்களை விட்டெறிந்தனர் , அநாதையாக்கிவிட்டனர்.தலைமை செயலகத்தில் ஆளப்போய் விட்டனர். சூத்திரர்கள் அவற்றை தத்தெடுத்து நாட்டுடைமை ஆக்கி விட்டனர். இந்த வயிற்றெரிச்சலில், குலாபிமானத்தில் தான் சுஜாதா ஜோதிடத்தை பழித்து வருகிறார்.