Monday, March 31, 2008

கல்கியில் மோடி புராணத்திற்கு பின்னுள்ள உண்மையான உண்மைகள்

கல்கி போன்ற பிராமண பத்திரிக்கைகளே அல்லாது, மக்கள் நாடி அறிந்து நடத்தப்படும் சூத்திரப்பத்திரிக்கைகளும் விற்பனை சரிந்து அல்லாடி வருகின்றன. இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். தொலக்காட்சி கலாச்சாரத்தை வளர்த்தது இந்த பத்திரிக்கைகளே.. இப்போது அவதிப்படுவதும் இவர்களே. நிற்க மோடி புராண பின்னணியில் இருப்பது விளம்பர வருவாயே. இந்த மானங்கெட்ட அரசாங்கங்களில் மக்கள் தொடர்புதுறை என்று ஒரு துறை இருக்கும். இதன் முக்கிய வேலையே பத்திரிக்கையாளர்களுக்கும்,அரசுக்கும் இடையில் தரகுவேலை செய்வதே.

போனியாகாத கல்கி இதழ் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள குஜராத் அரசின் மக்கள் தொடர்புதுறையை பிடித்து தொங்கியிருக்கும்,இதற்கு சோ போன்றவர்கள் தரகு வேலை செய்திருக்கலாம். குஜராத் அரசின் பெருமைகள் தம்பட்டம் அடிக்க கல்கி ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு கைமாறாக இந்த தொடரை ஸ்பான்ஸர் செய்யும் வங்கிகள் பணத்தை கொட்டி அழுதிருக்கலாம். யார் பணம்? குஜராத் மக்களின் வரிப்பணம்.

குஜராத்தில் 500 பிரதியாவது விற்கிறதோ இல்லையோ தெரியாத கல்கிக்கு இந்த விளம்பர வருவாயை கொட்டியழுததிலிருந்தே மோடி அரசின் நிர்வாக திறமை பளிச்சிடுகிறது.

குறிப்பு: எம் மாநிலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்த போது மணீமேகலை பிரசுரம் நான் பரிந்துரைத்த " சமகால சாண‌க்கியர் சந்திரபாபு" என்ற நூலை எழுதப்பணித்தது. நானும் சாஸ்த்ரோக்தமாக அரசுக்கு இதை கடிதம் மூலம் எழுதினேன். உடனே மனோ வேகம்,வாய் வேகத்தில் உதவி பறந்து வந்தது. அனுபவத்துல சொல்றேன். கல்கியின் மோடி புராணத்தின் பின்னணி இது தான்.

ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா,

திரும்பிப்பார்க்கிறேன்..

கிரிட்லி பாடசாலையில் கிறிஸ்தவ சூழலில் , பூக்கார பாபு வகையறாக்களுடன் படித்த நாட்கள். நடேச முதலியார் பேரன் சதீஷின் பிஞ்சில் பழுத்த குசும்புகள்,பா.ஜ.க. உயர்நிலைப்பள்ளியில் ஐசக்,மாணிக்கம் வகையறாக்களின் பிடியில் 6,7,வகுப்புகள், பின் சுந்தரேசன்,டி.ஜி.ஆர். பத்மினி மேடம் உபயத்தில் சட்டாம்பிள்ளையாய் இருந்த காலம்,பி.சி.ஆர் .ஜூனியர் காலேஜில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த முதல் வருடம், தோல்வியின் ருசியை முதல் முதலாய் உணர்ந்தமை (முதல்வ் வருடம் அக்கவுண்ட்ஸில் கோட்டு),பேச்சு,கட்டுரை போட்டியில் வென்று,கல்லூரி ஆண்டு மலரில் கவிதை எழுதி, அக்கவுண்ட்ஸில் 72 மார்க் வாங்கியது எல்லாம் நினைவிருக்கிறது. பி.வி.கே என். கல்லூரியில் பிரச்சினை இல்லாத டிகிரி முதல் வருடம். சித்தூரின் அரசியல், குண்டாயிச நெளிவு சுளிவுகள் தெரியாது செக்ரட்ரியாக நிற்க முனைந்து நாறிய 2 ஆவது வருடம், கலை செயலராய் நின்று 468 வோட்டுகள் வாங்கி, 3 வோட்டில் தோற்ற 3 ஆவது வருடம். அப்பா முன்னாள் மாவட்ட கருவூல அதிகாரி, இந்நாள் அதிகாரி அப்பாவின் அந்நாள் சீடர் என்ற முறையில் கிடைத்த நாலணா உத்யோகம்,(நிஜ‌மாவேங்க ..முதியோர் உதவிதொகைக்கு எம்.ஓ.எழுதனும்,ஒரு எம்.ஓ க்கு நாலணா)

பெட்ரோலுக்கு இந்தியா செலவழிக்கும் அந்நிய செலாவணி விவரம், நாற்கர சாலைகளுக்கு பின்னாலுள்ள சதிகள் ஏதும் தெரியாது இரண்டாம் கை லூனாவுக்காக தந்தையுடன் மோதி வெளியேறியது எல்லாம் நினைவிருக்கிறது. ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தும்படி அறிவுரை சொன்ன மாவட்ட கருவூல அதிகாரி, வீட்டின் மாடியறையில் தனியே சமைத்து தின்றது எல்லாமே நினைவிருக்கிறது.

Friday, March 21, 2008

ஆபத்தான வாழ்க்கை

ஆபத்தான வாழ்க்கை
ஆபத்தான வாழ்க்கையை வாழாவிட்டால் நீ வாழ்ந்ததற்கு பொருளே இல்லை என்பது ஓஷோ வின் வாக்கு. இந்த தினத்தந்தி நிருபர் வேலையில் சேர்ந்த பிறகு ரத்தத்தில் சூடு குறைந்து,ஒருவித அசமஞ்சத்தனம் வந்து விட்டது. (ஒரு ரகசியம்: லேசாக தொப்பை கூட‌ போட்டிருக்கிறது).

ஆனால் என் மனைவி என் ரத்தச்சூடு ஆறாது பார்த்துக்கொள்கிறாள் என்பது வேறு விஷயம். சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே.பாபு. இவர் குண்டர்,ரிக்கிங் பார்ட்டி என்று தெ.தேசம் அரசு,கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருவது தெரியும். ஆனால் அவருக்கிருக்கும் மக்கள் ஆதரவு வேறு எந்த நாய்க்கும் கிடையாது என்பதை இறுதியாக நடந்த தேர்தல்களுக்கு முந்தைய தேர்தலில் நானே கண்ணார கண்டேன்.ஓட்டுப்பதிவன்று சிகே.பாபுவை அப்படியே அடைகாத்தது போலீஸ், முகர்ந்தபடியே பின் தொடர்ந்தது. ஆனாலும் என்ன சி.கே . எம்.எல்.ஏ ஆனார்.

நான் என்.டி.ஆர்.ரசிகன். என் மனம் ஏன் சி.கே.பாபுவுக்கு அனுகூலமாய் மாறவேண்டும். அவர் பிறந்த நாளுக்கு நான் ஏன் 8 பக்கத்தில் சிறப்பிதழ் வெளியிடனும்? அதை விளக்கத் தான் இந்த பதிவு:\

நான் என்.டி,.ஆர் ரசிகன் என்று ஏற்கெனவே சொல்லியாயிற்று. நடிப்புக்கு மட்டுமல்ல அவரது அரசியல் சிந்தனைக்கும் ரசிகன் தான்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் :

நரசிம்மராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்.டி.ஆர் உடனே அறிவித்தார், பி.வி.போட்டியிடும் தொகுதியில் தெ.தே.வேட்பாளரை நிறுத்தாது. காரணம் அவர் தெலுங்கர் என்பதாம். இதெல்லாம் சராசரி அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. நிற்க.

என்.டி,.ஆர் ரசிகனான நான் அவர் முதுகில் குத்திய சந்திரபாபுவை எதிரியாக பாவித்ததில் தவறில்லை. என்.டி.ஆர் பிள்ளைக‌ள்,பேர‌ன் க‌ள் ,ம‌ரும‌க‌ள்க‌ள் எல்லாமே ச‌ர‌ண்ட‌ர் ஆகிவிட்டாலும் நான் த‌னியொருவ‌னாக‌ இருந்து ச‌ந்திர‌பாபு மான‌த்தை உல‌க‌ அள‌வில் வாங்கினேன்,வாங்கிகொண்டே இருக்கிறேன்.

இத்த‌னைக்கு விச‌ய‌ம் என்ன‌வென்றால்:

ச‌முதாய‌ம் என் கோவில்,ஏழைம‌க்க‌ளே என் தெய்வ‌ம் என்றார் என்.டி,.ஆர். இந்த‌ முழ‌க்க‌த்தின் தொட‌ர்ச்சியாய் ஏழைம‌க்க‌ள் 40 கோடி பேருக்கு சுய‌ம‌ரியாதையுட‌ன் கூடிய‌ உயிர்பாதுகாப்பு,வேலை வாய்ப்பு,உண‌வு,உடை,இருப்பிட‌ம் வ‌ழ‌ங்க‌ ஒரு திட்ட‌ம் தீட்டினேன். அதை 1997 முத‌ல் ச‌ந்திர‌பாபுவுக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ். த‌பால் செல‌வுக்கு 10 ரூ. எம்.ஓ அனுப்பினேன். வாங்கிக்கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இது பெய்ட‌ட் ச‌ர்வீசாகிவிட்ட‌தால் மாவ‌ட்ட‌ நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்தேன். உட‌னே முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ முறையில் உப‌யோகித்துக்கொள்கிறோம் என்று க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி விட்ட‌து.

ப‌ழிவாங்கும் போக்கு:

பெரிய‌ம‌னித‌த்த‌ன‌மாய் ப‌தில் போட்ட‌ பாபு, மாவ‌ட்ட‌ அதிகாரிக‌ளுக்கு ர‌க‌சிய‌ உத்த‌ர‌வு போட்டு என‌து த‌னிப்ப‌ட்ட‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளை கூட‌ கிட‌ப்பில் போட‌ச்செய்தார். காவ‌ல் நிலைய‌த்தில் ஒரு மிஸ்ஸிங் க‌ம்ப்ளெயிண்டை கூட‌ எடுக்க‌லைங்க‌..

நா‌ளைக்கு எவ‌னாச்சும் என்ன‌ க‌த்தியால் கிழித்தாலும் க‌தை இவ்ள‌தானே.. அர‌ண்டு போன‌ நான் ம‌னித‌ உரிமை க‌மிஷ‌னுக்கு புகார் கொடுத்து என் பிர‌ச்சினையை தீர்த்துக்கொண்டேன்.

சி.கே.மீது கொலை வ‌ழ‌க்கு:

எங்க‌ள் ஊரில் ஒரு ம‌க‌ளிர‌ணி த‌லைவி. அவ‌ருக்கும் சி.கே.வால் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ தெலுங்கு தேச‌ம் வேட்பாள‌ர் ஏ.எஸ்.ம‌னோக‌ருக்கும் ந‌ல்ல‌ நெருக்க‌ம். இந்நிலையில் த‌லைவியின் ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட்டார். ப‌ழி சி.கே த‌லையில் விழுந்த‌து. த‌ற்போது அது த‌ள்ளுப‌டி செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌து வேறு க‌தை.

அட‌க்குமுறை:

இந்த‌ வ‌ழ‌க்கில் சி.கே. மீது தெ.தே.அர‌சு அவிழ்த்துவிட்ட‌ அட‌க்கு முறை இருக்கிற‌தே. அட‌டா! மாவ‌ட்ட‌த்துல‌ இருக்க‌ கூடாதுனு சில‌ மாச‌ம், ட‌வுனுக்குள்ள‌ வ‌ர‌க்கூடாதுனு சில‌ மாச‌ம். அட‌ப்பாவிக‌ளே ! இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் என‌க்கு சி.கே. மீது சிம்ப‌தி ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து.

துஷ்பிர‌ச்சார‌ம்:

வ‌ழ‌க்கு நீதிம‌ன்ற‌த்தில் ந‌ட‌க்கிற‌து. அத‌ற்குள் தெ.தேச‌த்தின‌ர் சி.கே.வை த‌னிப்ப‌ட்ட‌ வ‌கையில் இழிவு ப‌டுத்தி பிர‌ச்சார‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர். ஏனோ சி.கே த‌ர‌ப்பில் இந்த‌ துஷ்பிர‌ச்சார‌த்தை திருப்பிய‌டிக்க‌ ச‌ரியான‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை.

துண்டு பிர‌சுர‌ம்:

இந்நிலையில் நான் கைக்காசை செல‌வ‌ழித்து 5000 துண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு, ம‌க்க‌ள் க‌டித‌த்துக்கு ப‌தில் போட‌ ஸ்டாம்புக்கு துட்டில்லாது, ம‌க்க‌ள் ப‌ண‌த்தில் ப‌தில் எழுதும் இந்த‌ அர‌சை வீட்டுக்கு அனுப்புங்க‌ள் என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம்.

சி.கே.இருப்ப‌தால் பெரிதாய் லாப‌மில்லாம‌ல் கூட‌ இருக்க‌லாம். ஆனால் சி.கே. க‌ள‌த்தில் இல்லையென்றால் ம‌ட்டும் க‌தை க‌ந்த‌ல் தான். தெ.தேச‌த்தில் உள்ள‌ வால் எல்லாம் பாம்பாகி ஆடுவ‌தோடு கொத்த‌வே ஆர‌ம்பித்து விடும். இந்த‌ ஒரே நோக்க‌த்துட‌ன் தான் சிற‌ப்பித‌ழ் வெளியிட‌ உள்ளேன்.

Thursday, March 20, 2008

உடலுறவில் பெண்களுக்குஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு

ஆண்களுக்கு உடலுறவில் தொடர்ந்த ஆர்வம் இருப்பதற்கு காரணம், கடந்த முறை தாம் சரியாக செயல்படவில்லையோ என்ற குற்ற உணர்ச்சிதான். இந்த முறையாவது சரியாக செயல்பட முடியாதா என்ற துடிப்புதான்.

பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு.

இதற்கு உயிரியல் ரீதியாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று : யோனியில் நுழைந்த பிறகு ஆணின் இன உறுப்பு 7 முறை அசைக்கப்பட்டாலே அவன் உச்சம் பெற்றுவிடுகிறான். வீரியம் வெளியான பிறகு அவன் செயல்பட முடிவதில்லை. ஆனால் பெண்ணுக்கோ அவளது உறுப்பு, ஆணுறுப்பு நுழந்த பிறகு 23 முறை அசைந்த பிறகே அவள் உச்சம் பெறுகிறாள்.

இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறுவதை காமசூத்திரம் "சம ரதம்" என்கிறது. ஆனால் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி அற்ற ஆண்களால் சமரதம் என்பது கைகூடாதே போய்விடுகிறது. இன்னமும் உறுப்பின் அளவு பொருத்தும், எத்தனை முறை உடலுறவு என்பதை பொருத்தும்,தம் ஆண்மை நிரூபிக்க படுவதாய் எண்ணும் ஆண்கள் உள்ளனர்.

23 க்கும் 7 க்குமிடையில் உள்ள வித்யாசம் 16. இந்த 16 அசைவுகளை, மூக்கு,நாக்கு,விரல்கள் கொண்டு கொடுக்க தெரிந்தால் சமரதம் உறுதி. மேலும் ஆணின் காமம் பால் பொங்குவதை போன்றுள்ளது. பெண்ணின் காமமோ அரிசி வேகுவதை போன்ற ஸ்லோ பிராசஸாக உள்ளது.

இதை ச‌மாளிப்ப‌தில்தான் ஆணின் வெற்றி அட‌ங்கியிருக்கிற‌து. பெண்ணின் ம‌ன‌திலான‌ ச‌ந்தேக‌ங்க‌ள், கு.உண‌ர்ச்சிக‌ளைப்போக்கி, பாதுகாப்பான‌ சூழ‌லில், கர்ப பயம் போக்கி, முன்விளையாட்டுக்க‌ளுக்கு பிற‌கு உட‌லுற‌வில் ஈடுப‌ட்டால் ச‌ம‌ர‌த‌ம் உறுதி.

குறிப்பு: உட‌லுற‌வில் கிடைக்கும் இன்ப‌ம் அற்ப‌மான‌து. ஆனால் தியான‌த்தில் ஏற்ப‌டு சிந்த‌னைய‌ற்ற‌ நிலை உட‌லுற‌வில் ஒரு நொடி ஏற்ப‌டுகிற‌து. இது அற்ப‌மே. என்றாலும் தியான‌த்தில் கிடைக்கும் பிர‌ம்மான‌ந்த‌த்துக்கு இது முன்னோடி என்ப‌தால், இது தியான‌த்துக்கான‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்தும் என்ப‌தால் இந்த‌ குறிப்பை இப்ப‌திவில் இட்டுள்ளேன். ப‌டித்து ப‌ய‌ன‌டைந்து தியான‌த்துக்கு வ‌ரும்ப‌டி அழைக்கிறேன்.