Pages

Monday, December 3, 2007

எனக்கென்று ஒரே ஒரு பிரதி கூட இல்லாது போய்விட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சத நாமாவளி

தலைப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இது ஆல்ஃபபிடிகல் ஆர்டரில் நானே தயாரித்த நாமாவளி. சித்தூரில் நான் வெளியிட்டு வரும் தெலுங்கு மாதமிருமுறை இதழில் இதனை 1000 பிரதிகள் அச்சிட்டு விநியோகித்திருக்கிறேன். இதில் சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா என்று ஒரு நாமாவளி. இந்த நாமாவளியை வாரம் ஒருமுறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ படித்து வந்தேன். சுதந்திர ஜீவனம் செய்து வந்தேன்.இருந்தும் என்ன லாபம் எனக்கென்று ஒரே ஒரு பிரதி கூட இல்லாது போய்விட்டது. ஞாபக‌சக்தியா சூனியம். படக்கென்று மாதம் ரூ.900 சம்பளத்துக்கு /அதுவும் டவுனிலிருந்து 5+5 ரூ. தூரத்தில் அடிமை வேலை செய்ய வேண்டி வந்து விட்டது. அந்த 900 ரூபாயிலும் அந்த தனியார் பள்ளி உரிமையாளருக்கு வாடகையாக‌ ரூ300 ம், மின் கட்டணமாக ரூ.100 ம் போய் கைக்கு ரூ 500 தான் வரும். தினசரி ஆட்டோவுக்கு எனக்கு+என் மகளுக்கு ரூ.20 பச்சா ! பின்பொரு தினம் ஞானோதயமாகி நாமாவளிகளை ஞாபகத்திலிருந்து கோர்த்து கணிணியில் தட்டச்சி வைத்துக் கொண்ட பிறகுதான் சுதந்திரம் கிடைத்தது. இதோ அந்த நாமாவளிகள்:

முதலில் ஓம் ஹ்ரீம் இறுதியில் நமஹ சேர்த்து வாசிக்கவும்.

ஓம் ஹ்ரீம் அம்பிகாபுர வாசின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அன்னபூர்னேஸ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அகிலாண்டேஸ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அம்ருத்தாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆர்த்த ஜன ரக்ஷின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆத்யந்த சிவரூபாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அபயவரத ஹஸ்தின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அனாமிகாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அங்காள பரமேஸ்வர்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அனந்தாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆத்யந்த ரஹிதாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அருணாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் பால பீட அதிரோஹின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் பஹளாமுகே நமஹ‌
(தொடரும்)

No comments:

Post a Comment