Pages

Thursday, December 13, 2007

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக்

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக் வெளிவந்துள்ளது. தலைவர் ஏன் ரத்தவங்கிக்கு போறார்? _ இது கேள்வி.

"கட்சிக்கு புதிய இளரத்தம் வேண்டுமாம்" _ இது பதில்.

கலைஞர் கட்சிக்கு இளைஞர்களை வரவேற்று தொடர்ந்து உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வருவது தெரிந்ததே !

இந்நிலையில் இந்த ஜோக் வெளிவந்துள்ளது நிச்சயம் உள் நோக்கத்த்தோடு வெளிவந்திருப்பதாகவே கூறலாம்.

"வளர்த்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா போன ஜென்ம பாவமடி அம்மாளு" என்ற பாட்டு வரிதான் நினைவுக்கு வருகிறது.

யாரையெல்லாம் கலைஞர் வளர்த்து விடுகிறாரோ அவர்களெல்லாம் கலைஞரின் முதுகில் குத்துவது அவர் ஜாதக ராசி போலும்.

கலைஞர் இனியாவது நன்றி கெட்ட குடும்ப உறவுகளை விட்டு, முதுகில் குத்தும் அரசியலை விட்டுத்தொலைத்து தன் வாழ்வை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அர்ப்பணிக்க வேண்டும் .

No comments:

Post a Comment