Pages

Wednesday, January 9, 2008

கருவுற்ற பெண் நாயை ஆண் நாய் புண‌ராது.

மனிதன் எல்லா மிருகங்களைவிடவும் கேவலமானவன். ஏன் எப்படி என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
1.நாய்:
கருவுற்ற பெண் நாயை ஆண் நாய் புண‌ராது. புணர்ச்சிக்கு முன்பு பெண் குறியை முகர்வதன் மூலம் கருவுற்றிருப்பதும்,இல்லாததும் தெரிகிறது.(தகவல்: வேலூர் டாக்டர்.அமரர்.கண்ணப்பர்). கருவுற்ற மனைவியிடம் உடல் உறவு கொள்வதற்கான பொசிஷனை பத்திரிக்கைகளிலேயே வெளியிடுகின்றனர்.
2.பறவைகள்:
மேப்,கூகுல் யர்த் உதவியின்றி கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றன. காட்டுப்பகுதிகளில் வெள்ளம் எந்த அளவுக்கு வரும் என்று சூட்சும உணர்வுடன் கணித்து வெள்ளம் தொட முடியாத உயரத்தில் மரங்களில் கூடு கட்டுகின்றன. மனிதர்களோ ஏரி,குளங்களில் வீடு கட்டி வெள்ளம் மூழ்கடித்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிறார்கள்.
3.புலி:
உண்ட உணவு செரிக்காது போனாலோ,அழுகிய மாமிசத்தை உண்டுவிட்டாலோ அருகம்புல்லை மென்று தின்று சுய வைத்தியம் பார்த்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment