ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சுருட்டிய பத்திரிக்கைகள் அந்த பணத்தை திருப்பித்தரவேண்டும். ஆட்டுக்காரன்,மாட்டுக்காரன் என்று வண்ண வண்ண விளம்பரங்களை அள்ளிவிட்டு மக்கள் பணத்தை வேட்டு விட்டு மாயமாய் மறைந்து போன ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கதை நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் ஏமாந்த மக்களுக்கு? நின்று போன திருமணங்கள் எத்தனை? நின்று போன இதயங்கள் எத்தனை? உடனே தமிழக அரசு பத்திரிக்கைகள் ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு வாரி சுருட்டிய பணத்தை பத்திரிக்கை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். அல்லது பத்திரிக்கைகளையும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment