Pages

Wednesday, December 3, 2008

நடந்தது‍

நடந்தது:

சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற‌ தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.

No comments:

Post a Comment