Pages

Saturday, July 18, 2009

நாத்திகம் : அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது

ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது

No comments:

Post a Comment