Showing posts with label தமிழ் பத்திரிக்கை ஆசிரியர். Show all posts
Showing posts with label தமிழ் பத்திரிக்கை ஆசிரியர். Show all posts

Tuesday, December 14, 2010

3ஜி ஸ்பெக்ட்ரம்: " நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ

3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ராஜா, நண்பர்கள்,உறவினர்களின்  வீடுகளில் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தியது தெரிந்ததே.

இதையடுத்து மேலும் சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிலும் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ். ஆரின் மகனும் மானிலத்தில் காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாட்சி சானலில் இந்த செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது.

ஆரு அந்த ஆசிரியரு? விஜாரிச்சு தகவல் சொல்லுங்கப்பா.. இந்த ஊழல்ல வட நாட்டு பத்திரிக்கையுலக குரங்குகள் ( ஜாம்பவானும் குரங்கு தானே/கரடியா? ) தானே இன்வால்வ் ஆனதா பேசிக்கிட்டாய்ங்க.

நம்மாளுங்க கூட இடம் பிடிச்சிட்டாய்ங்களா? பரவால்லைப்பா நல்லாவே முன்னேறிருவம்.

எச்சரிக்கை:

" நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ நம்மாளு ஒருத்தரு கமெண்ட்லயே தகவல் கொடுத்திருக்காரு பாருங்க