Showing posts with label periyar university. Show all posts

Thursday, May 20, 2010

பெரியார் பல்கலை மானம் கப்பலில்

பெரியார் பல்கலை மானம் கப்பலில் ஏறி லைலா புயலை விட வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆத்திகனேயானாலும் மூட நம்பிக்கைகளை எதிர்க்க  கற்றுத்தந்த ஆசான் பெரியார். பெரியார் மீது பெரும் மதிப்பு,மரியாதை கொண்ட எனக்கு பெ.பல்கலை தொலைதூர கல்வி தேர்வுகள் நடக்கும் லட்சணம் பெரும் அதிர்ச்சியை தருவதோடு ஆத்திரத்தையும் தருகிறது.

தாளி .. முடிஞ்சா ஒழுங்கா நடத்துங்க இல்லாட்டி இழுத்து மூடுங்கய்யானு சொல்லத்தோணுது. விவரம் கீழே:

பெரியார் பல்கலை கழக தொலைதூரகல்வி தேர்வுகள் ஆந்திரமெங்கும் நடந்து வருகின்றன. எந்த லட்சணத்தில் என்றால் நந்தியாலா கலெக்டர் இவர்கள் தேர்வு நடத்தும் லட்சணத்தை பார்த்து எக்ஸாம் சென்டருக்கே கல்தா கொடுத்துவிட்டார். சித்தூர்,மதன பல்லி, குண்டூர்,ராஜமண்ட்ரி ,வரங்கல்,ஹைதராபாத்,கடப்பா மாவட்டங்களில் இத்தேர்வுகள் நடந்து வருகின்றன. எல்லாரும் ஒரு வழின்னா ரஜினி மட்டும் தனி வழில போறாப்ல மத்த ஊர் ஸ்டடி சென்டர்காரவுக ஸ்டைல் அப்படி இப்படி இருந்தால்

விஜயவாடா மாத்திரம் அத்வானம். (மத்த ஊர்லயும் நடக்குது.ஏதோ பயந்து பயந்து ஒளிஞ்சு ஒளிஞ்சு, ஒளிச்சு ஒளிச்சு செய்றாய்ங்க) விஜயவாடா டிகிரி காலேஜ்தான் பல்கலை தீர்மானிச்ச எக்ஸாம்  சென்டர்.(பல்கலை கோட் நெம்பர்: 1066)  நீங்க சொன்னா நாங்க கேட்கனுமான்னு ஹை ஸ்கூல்ல நடத்தறாய்ங்க.

முதல் கோணல் முற்றும் கோணல்னு  எல்லாமே கோணல்தான். 919 மாணவர்கள் இருக்க 750 பேர் மட்டும் எக்ஸாம் எழுதறாங்க. என்னடா சமாசாரம்னா  காலை 8 மணிக்கே எக்ஸாம் சென்டருக்கு வந்துரனும் ஒரு ஐ நூறு ரூபா வெட்டினா கொஸன் பேப்பர், ஆன்சர் பேப்பர் ரெண்டும் கொடுத்துருவாய்ங்க .வீட்டுக்கு போய் நிதானமா பதில் எழுதி மறு நாள் கொடுத்தா போதும். இதெல்லாம் சேலத்துலருந்து வந்த பல்கலை அப்சர்வருக்கு தெரிஞ்சே நடக்கிறதுதான் கேவலம்.

அவரையோ, ஸ்டடி சென்டர் கோ ஆர்டினேட்டரையோ கேட்டால் எங்கெல்லாம் பங்கு போவுது தெரியும்லன்னு வைஸ் சேன்சலர் பேர் வரை சொல்றாங்களாம்.மே15 ல இருந்து இதே பாணில தான் தேர்வுகள் நடக்குது. மறுபடி 23 ஆம் தேதி ஆரம்பமாகுது. தெலுங்கு விஷுவல் மீடியா பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கவர்னரையே கணக்குல வைக்கிறதில்லை. தில்லு துரைங்க. கல்கியை எப்படி  கலக்கி விட்டாய்ங்க தெரியுமில்லை?

ஏதோ ஒரு சேனல்ல லைவ் வரப்போறது நிச்சயம். ( என்னதான் வாய்க்கரிசி போட்டாலும் அதுல பங்கு கிடைக்காத சேனலாவது லைவா  விட்டுருமில்லை)

பெரியார் பல்கலை  மானம் மீடியா கப்பலேறி  லைலா புயல் மாதிரி  சீற போகுது. முழிச்சுக்கங்கப்பா.

குறிப்பு: கண்ணா ஸ்மார்ட்டு! தொலைதூர கல்வியோட லட்சணம் இதுதான் ராசா

Wednesday, December 9, 2009

பெரியார் பல்கலை பெயர் மாற்றுங்கள்

ஆந்திர மானிலமெங்கும் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளின் லட்சணம் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன். அதாங்க கடப்பா டிஸ்ட்ரிக்ட்ல ஒரு தெ.தேசம் தலைவர் வீட்ல ஜெராக்ஸ் மிஷினோட கூட்டு காப்பி. அது ஒருபக்கம்னா நிறைய பேர் மெயில் மூலமா பல தகவல்களை கொட்டியிருக்காங்க.
1.ஒவ்வொரு முறையும் தேர்வுகள் தள்ளித்தான் போகுமாம்.
2.ஒவ்வொரு முறையும் ஒரு தேர்வுக்காவது கேள்வித்தாள்கள் மிஸ் ஆவது, மாணவர்களின் கல்வியாண்டு வீணாவதும் சகஜமாம்
3.மேலும் தேர்வுகளின் போது விசிட் செய்யும் அப்சர்வர்களின் ஓட்டல்,லாட்ஜு செலவுகள் பல ஆண்டுகளாய் யூனிவர்சிட்டியால் தரப்படவில்லையாம்.
4.இது மட்டுமல்ல தேர்வுகள் நடைபெறும் கல்லூரிகளின் மெயின்டெனன்ஸ் கூட நாமம்தானாம்
5. இதையெல்லாம் ஸ்டடி சென்டர் காரர்களே பேர் செய்து வருகின்றனரா ? என்றால் இல்லை அவர்கள் மாணவர்களிடமிருந்து வசூலித்துவிடுகின்றனர்

6.மேற்படி செலவுகளை உரிய பில்களோடு சமர்ப்பித்தால் துணைவேந்தர் ஃபைனான்ஸ் டிப்பார்ட்மென்டை கேளுங்க என்கிறாராம். ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட் டைரக்டரைகேளுங்கங்கிறாராம்

இந்த இழவில் நாசமாவது என்னவோ கல்வியின் தரம் தான். ஸ்டடி சென்டர்காரர்கள் "பாஸ் கியாரண்டி" என்று எச்சி உமிழ்ந்து சத்தியம் பண்ணாத குறையாய் ஆளைப்பிடிக்கிறார்கள் . தேர்வுகள் போதான செலவுகளை மாணவர்களிடம் வசூலித்து பிட் சப்ளை செய்கிறார்கள். ஏற்கெனவே பட்டம் என்பது பறக்க விடத்தான் என்றொரு நிலை இருக்கிறது . இதில் இந்த பஞ்சாயத்துக்கள் வேறு.

பெரியார் பெயரில் பல்கலை வைத்து இப்படி கூத்தடித்தால் போவதுபெரியார் மான‌ம்தானே . ஒன்று எல்லாத்தயும் சரி பண்ணுங்க இல்லே அந்த பேரையாவது தூக்கிருங்க.

பி.கு: பி.ஏ லிட்ரேச்சருக்கான பாடங்களை பிக் அப் பண்ணி வைத்திருக்கிறேன்.அவற்றை படித்தால் கண்ணீல் நீர் வழிகிறது, மானாவரி எழுத்துப்பிழைகள். பொருட் குற்றங்கள் .. வேண்டாண்டா சாமி

Tuesday, November 17, 2009

பெரியார் பல்கலை மானம் போயே போச் !

பெரியார் பல்கலை மானம் போயே போச் !
ஆமாங்க Cudappa (AP)மாவட்டத்துல நடந்த பெரியார் பல்கலை முதுகலை (பி.ஜி) தேர்வுகள் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல் வாதி வீட்ல நடந்திருக்கு. மாஸ் காப்பியிங் நடந்திருக்கு. குப்பையா புக்ஸை பரப்பி பார்த்து எழுதியிருக்காங்க. இதுல ஒரு ஜெராக்ஸ் மிஷினை வேற வச்சு ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடிச்சுருக்கானுவ.

சேலம் பெரியார் பல்கலை பத்தி நான் கேள்வி படாத சமாச்சாரமே கிடையாது. என்னதான் ரிப்போர்ட்டரா இருந்தாலும் தினத்தந்தி மாதிரி ரெப்புட்டேஷனுள்ள பத்திரிக்கைல இருந்தும் நாம எலும்பு பொறுக்குற வேலைக்கு போகாட்டாலும் தாளி சேலத்துல இருந்து எவனெவன் வரான். எந்த ஓட்டல்ல ரூமு, எந்த ட்ராவல்ஸ் கார்ல திருமலைக்கு போனான். அங்கே என்ன செலவு யார் செலவழிச்சது எல்லாம் காதுக்கு வந்துக்கிட்டுதான் இருக்கும் .

அதனோட க்ளைமாக்ஸ்தான் இது. சாட்சி நாளிதழ்ல வெளிவந்த செய்தியை தமிழாக்கியிருக்கேன் தட்ஸ் ஆல் .

இனி இது சாட்சி பெரியார் பல்கலை சம்பந்த பட்ட விஷயம் . ஓகே வா ஜூட் 1

தெலுங்கு தேசம் தலைவர் வீட்டில் முதுகலை தேர்வுகள்
( 10/11/2009 சாட்சி தெலுங்கு நாளிதழில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்)

ஃபோட்டோவுக்கான ஃபுட் நோட் :
தலைவர் வீட்டில் மாஸ் காப்பியிங் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள்)

* பார்த்து எழுதுதல்
*ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல்
*தலை மறைவான தேர்வு நிர்வாகி
*இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கலை - தலைவர்
ஒன்ட்டி மிட்டா , ந்யூஸ் லைன்
மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ஏதேனும் கல்லூரிகளில் நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாதவரத்தில் மட்டும் தேர்வு நிர்வாகி ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் தேர்வை நடத்தி புதிய சாதனை படைத்துள்ளார். இன்னும் கேட்க வேணுமா அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை முன்னே வைத்துக்கொண்டு பார்த்து எழுதினார்கள். இது குறித்த விவரம் வருமாறு தமிழ் நாடு, சேலம் பெரியார் பல்கலை கழகத்தின் முதுகலை தேர்வுகள் மூன்று நாட்களுக்கு முன் துவங்க்கின. ஒன்ட்டி மிட்டா மண்டலம் ,மாதவரத்தை சேர்ந்த பண்டாரு ரத்ன சபாபதி ஜூனியர் காலேஜை தேர்வு மையமாக நிர்ணயித்து ஏற்பாடு செய்திருந்தனர். காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை தேர்வுகள் நடை பெற வேண்டும். ஆனால் கல்லூரியில் நடக்க வேண்டிய தேர்வை ஒரு அரசியல் தலைவர் வீட்டில் நடத்துகிறார்கள் என்ற செய்தி கசிந்தது. உண்மையை கண்டறிய திங்க்கள் கிழமை ந்யூஸ் லைன் களத்தில் குதித்தது. தேர்வு மையமான கல்லூரிக்கு சென்ற போது அங்கு தேர்வு நடப்பதற்குண்டான எவ்வித அடையாளமும் இல்லை. தெலுங்கு தேசம் தலைவரும் மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவருமான மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டில் மாணவர்கள் தேர்வு எழுதுவதாய் கிடைத்த தகவலை அடுத்து ந்யூஸ் லைன் அந்த வீட்டுக்கு சென்றது. சுமார் 50 பேர் மாணவர்கள் அங்கு மாஸ் காப்பியிங் செய்வதை காணமுடிந்தது. ந்யூஸ் லைன் கேமராவை கண்டதுமே மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் முகத்துக்கு குறுக்கே கைகளை வைத்து மறைக்க முயன்றனர். இதற்கிடையில் தகவலறிந்த போலீசார் களமிறங்கினர். மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவர் மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டிலிருந்த ஜெராக்ஸ் மிஷினை பறிமுதல் செய்தனர்.

தேர்வு நிர்வாகியை போலீசார் தேடினர். சம்பவம் குறித்த முழு விவரங்களை பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ந்யூஸ் லைன் ஸ்ரீ ராமுலுவை விளக்கம் கேட்டபோது ஏதோ தேர்வு நடத்த இடம் கேட்டதால் கொடுத்தேன் இது இந்த அளவுக்கு போகும் என்று நினைக்கவில்லை எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்று கூறினார்.