Showing posts with label sexy astrology. Show all posts

Friday, May 21, 2010

கிரகமும் கிளுகிளுப்பும்

இதைப்பற்றியெல்லாம் ஒரு ஜோதிட ஆய்வாளனான நான் எழுதுவது ஏன் ? இது தகுமா? தருமமா? என்றெல்லாம் பலரும் கேட்கலாம். அவர்களுக்கு சிறு விளக்கம்.
ஜோதிடம் என்பது மனித குல வாழ்வின் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.  ஜோதிடம் செக்ஸை ஒதுக்கி வைத்துவிடவில்லை. மனிதனின் செக்ஸ் லைஃபையும் சேர்த்தே அது  ஆராய்கிறது.  ஜாதகத்தின் 1,7,12 பாவங்கள் செக்ஸ் லைஃபை நிர்ணயிக்கின்றன  என்று சொல்லிவிட்டு போகலாம்.ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது ஜாதகத்தின் 12 பாவங்களுமே செ.லைஃபை நிர்ணயிக்கின்றன. அதே போல் கிரகங்களில் சுக்கிரன் செ.லைஃபை நிர்ணயிக்கின்றார் என்று சொல்லிவிடலாம்.ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது  9 கிரகங்களுமே செ.லைஃபை நிர்ணயிக்கின்றன.

ஓரின புணர்ச்சியாளன் யார், குத புணர்ச்சியை விரும்புபவன் யார், மிருக புணர்ச்சியை விரும்புபவன் யார், சுய இன்பத்திலேயே முழு திருப்தியடைந்துவிடுபவன் யார் இப்படி யார் யார் எந்த கேட்டகரி என்பது ஜாதகத்தில் தெரிந்துவிடுகிறது.

உங்கள் ஜாதகம் அனுமதிக்காத வேலையை  நீங்கள் செய்யவே முடியாது. அதுசரி இப்படி கசமுசா வேலையெல்லாம் பண்றது நாளைக்கு வரப்போற மனைவிக்கு பண்ற துரோகமில்லையானு நீங்க கேட்கலாம்.

லக்னம் முதற்கொண்டு 7 ஆம் பாவம் மனைவியை காட்டுகிறது. இதனை லக்னமாக கொண்டு பலன் சொன்னால் ஜாதகருக்கு வரவிருக்கும் மனைவியைப்பற்றி
டாப் டு பாட்டம் சொல்லி விடலாம்.  திருமணமான பின் அவர் மனைவியின் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தை லக்னமாக கொண்டு பலன் சொன்னால் இவர் பற்றி டாப் டு பாட்டம் சொல்லிவிடலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? யாருக்கு மனைவி யார் என்பது ஜாதகத்திலேயே ஃபிக்ஸ் ஆகியிருக்கிறது. இது பாயிண்ட் நெம்பர் ஒன்.

இவன் எந்த லோலாயியோட ஆட்டம் போட்டானோ (7 ஆமிடம் தான் இதையும் காட்டும்)  அந்த லோலாயியோட குண நலன் கொண்ட பெண்தான் இவனுக்கு மனைவியா வருவாள்.(மனைவிய காட்டறதும் 7 ஆமிடம் தான்) . இது பாயிண்ட் நெம்பர் டூ.

பொதுவாவே எவனுக்கு 7 ஆமிடம் கெட்டிருக்கோ அவனுக்குதான் திருமணம் தாமதமாகும். அவன் தான் ஊர் மேய்வான். 7 ஆமிடம் ராகுவால கெட்டிருந்தா இவன் குடிகாரியோடவோ, போதை ஊசி போடறவளோடவோதான் கட்டிலை பகிர்ந்துக்கனும். இவனுக்கு பெண் பார்க்கும்போது மட்டும் 7 ஆமிடத்து ராகு தேர்தல் சுற்றுப்பயணம் போயிருவாரா ? இல்லையே. அவர் அங்கயேதான் இருப்பார்.தன்னோட அம்சம் கொண்ட பெண்ணைத்தான் மனைவியாக்குவார். என்ன நம்ம சொசைட்டில குடிகாரிகள், சூதாடிகள் கிடைப்பது சற்று சிரமம் என்பதால் ராகு தன்னுடைய வேறு சில அம்சங்கள் கொண்ட பெண்ணை மாட்டி வைப்பார்.

சரி செக்ஸையும் ஜாதகத்தையும் வச்சு  சொம்மா உங்களுக்கு பேதிக்கு கொடுக்கிறதை விட இன்ன பிரச்சினைக்கு இன்ன பரிகாரம்னு சொல்லிட்டா பெட்டர் இல்லியா.  (ஜாதகம்,கிரக நிலைகளை வச்சு சொல்லும்போது ஜாதகமில்லாதவங்க எல்லாம் வேடிக்கைதான் பார்க்க முடியும். பாவம். அவிகளுக்காக இந்த மெத்தட்ல ஒரு தொடர்பதிவு போடலாம்னு ஐடியா) ஆனால் ஒன்னு பத்து பேராச்சு ப்ரசண்ட் சார் சொன்னாதான் தொடர்பதிவு . இல்லாட்டி அல்வாதான்.

Monday, February 22, 2010

இதுதாண்டா ஜோதிடம்: 2

அனுபவ ஜோதிடம்-1
//உங்க லக்னாதிபதி யாரு, அவரு எங்க நின்னாரு,அங்கே அவரோட பலம் என்ன?  யாரோட சேர்ந்தாருங்கறதையெல்லாம் பொருத்து  பலன் மாறிக்கிட்டே போகும்.//னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.   லக்னாதிபதியின் இருப்பை பொருத்து பொதுப்பலனையும் சொல்லியிருந்தேன்.
லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி லக்னத்திலேயே யிருந்தால்:
பொதுப்பலனில் சொன்ன நல்ல பலனோடு  மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி ஏற்படலாம்.,வலது கண், பல்,எலும்பு, முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் வரலாம். தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்யலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்டில் பங்கெடுப்பான். லோ.செ.கவர்ன்மென்ட் காண்ட்ராக்டுகள் செய்யலாம். சுற்றி சுற்றி வந்து செய்யும் வேலைகள், சூப்பர் வைசிங்க், தரக்கட்டுப்பாடு, விளம்பரம், கிராமப்புற நிறுவனங்களில் வேலை, டீம் லீடர் போன்ற பொசிஷனில் இருக்கலாம். இவர் தன்னவர்கள் நல்வாழ்விற்காக அவர்களை உழைக்க தூண்டியபடியே இருப்பார். இதனால் பிறர் இவரை " நச்சு" கிராக்கிப்பா என்று நக்கலடிப்பார்கள்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  2லிருந்தால்:
வலது கண் சிவந்திருக்கலாம், சிறந்த விமர்சகராக இருக்கலாம். சொந்த உழைப்பில் பொருளீட்டு வார். மேற்சொன்ன துறைகள் கைகொடுக்கும். குடும்பம் சிறுத்து காணப்படும்.

லக்னம் சிம்மமாகிலக்னாதிபதி  3ல் இருந்தால்:
பொதுப்பலனில் கூறிய கெடுபலனோடு லேசான செவிடு ஏற்படலாம்.இவரே கடைசி வாரிசாக இருக்கலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 4ல் இருந்தால்:
ஜாதகர் பிறந்த வீடு  பாழடைந்து போகலாம். வீட்டின் நடுவே திறந்த வெளி இருக்கலாம். அவ்வீட்டின் வலது ,இடது புறம், எதிரில் வீடுகள் இல்லாதிருத்தல், ஒரு வேளை இருந்தால் அவ்வீடுகள் மூடப்பட்டு இருத்தலும் நடக்கலாம். அரசு வாகனயோகம் அமையலாம். ஆனால் வீட்டில் நிம்மதியிராது. தாய் விதவையாக இருக்கலாம். மேற்சொன்ன துறைகள் தொடர்பான கல்வி பயில்வார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 5ல் இருந்தால்:
முன் கோபமிருக்கும். பொறுமையிருக்காது. சிடு சிடுனு இருப்பாய்ங்க. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஆண் குழந்தை பிறக்கும்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 6ல் இருந்தால்:
லோக்கல் பாலிட்டிக்ஸ்ல முட்டி மோதிக்கிட்டே இருப்பாய்ங்க.  பல்,எலும்பு,முதுகெலும்பு,தலை,வலது கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். பகல்ல பிறந்திருந்தா அப்பாவோட ஒத்து வராது.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  7ல் இருந்தால்:
மனைவி கற்புக்கரசியாக இருப்பார். அரசியல் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்திருப்பார். ஒல்லியாக, சிவப்பாக இருப்பார். பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருக்கலாம்

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  8ல் இருந்தால்
பொதுப்பலனில் கூறிய பலன் கள் 100 சதம் நடக்கும். இந்த தீமைகளுக்கு தந்தை தந்தை வழி உறவினர்கள், லோக்கல் பெரிய மனிதர்கள் காரணமாக இருப்பர்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  9ல் இருந்தால்:
தந்தை,தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் ஜாதகர் பெரும்பொருளீட்டி சொத்துக்கள் வாங்குவார் வாரிசு அரசியலில் கிராம சர்பஞ்ச் , வார்டு மெம்பர் பதவிகள் கிட்டலாம்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  10ல் இருந்தால்:
மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களில் ஆர்வம் ஏற்படும்.மேலும் சமூக கொடுமைகள்,ஏற்றத்தாழ்வுகள்  குறித்தும் ஜாதகர் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவார்.  பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் நலம் நாடினாலும் அவர்கள் குறித்த ஏளன ஸ்வபாவம் இருக்கும். விக்கிரகாராதனை சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்காது.ஆத்ம சாட்சியாக செயல்படுவார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி 11 ல் இருந்தால்:
தந்தை  வழி சொத்து,தந்தை  வழி உறவினராலும், சொந்த முயற்சியாலும் மேற்சொன்ன சூரிய தொடர்பான தொழில்களினாலும்  ஜாதகர் பெரும்பொருளீட்டுவார்.

லக்னம் சிம்மமாகி லக்னாதிபதி  12ல் இருந்தால்:
தூக்கமின்மை, அல்லல் அலைச்சல், அளவுக்கு மிஞ்சிய அகந்தை காரணமாக வீண்செலவுகளை இழுத்துவிட்டுக்கொள்வார்கள்.

Sunday, February 21, 2010

இது தாண்டா ஜோதிடம்: 1

என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற தரப்படும் கட்டணம் கவிதை07 வலைப்பூவில் இன்னும் ஆழமான பதிவுகள் போடவும், ஜோதிடம் குறித்த என் ஆய்வு முடிவுகளை அனுபவஜோதிடம் வலைப்பூவில் வெளியிடவும் பயன் படுத்தப்படும் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் பிரச்சாரம் மற்றும் அமலுக்கு பயன் படுத்தப்படும் என்றும் கூறியிருந்தேன்.

முதலில் அனைவருக்கும் முக்கியமாக என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு உபயோகப்பட கூடிய டிப்ஸை இந்த தொடர்பதிவில் தர முடிவு செய்துள்ளேன்.

ஜோதிடத்தின் பிரிலிமினரி விஷயங்கள் ( நட்சத்திரம், நட்சத்திர பாதம்,ராசி இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவையே.) தெரியாதவர்கள் ஒரு பாக்கெட் டைரி வாங்கினாலும் தெரிந்துவிட்டு போகும். எனவே சற்று கனமான விஷயத்திலேயே இந்த தொடர்பதிவை ஆரம்பிக்கிறேன்.

ஜாதகம் என்றால் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு ராசி. ஆக 12 ராசிகள். ஒவ்வொரு ராசிக்கும் 9 நட்சத்திர பாதங்கள் . டிகிரியில் சொன்னால் 30 டிகிரி.

மேற்படி கட்டத்தில் இடது மூலையில் உள்ளது மீன ராசி. அதையடுத்து கடிகார வரிசையில் ( க்ளாக் வைஸ் / இடமிருந்து வலம்) பார்த்தால் மேஷம்,ரிஷபம்,மிதுனம் கடகம், சிம்மம் ,கன்னி,துலா,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்.

இவற்றிற்கு அதிபதிகள் உண்டு. அதிபதிகள் விவரம் வருமாறு:
மேஷம்- செவ்வாய்
ரிஷபம்- சுக்கிரன்
மிதுனம்-புதன்
கடகம்- சந்திரன்
சிம்மம்- சூரியன்
கன்னி-புதன்
துலா-சுக்கிரன்
விருச்சிகம்-செவ்வாய்
தனுசு-குரு
மகரம்-சனி
கும்பம்-சனி
மீனம்- குரு

இப்படி அறிந்துகொள்வதும், ஞா வைத்துகொள்வதும் சற்று சிரமம். எனவே சிரமம் பார்க்காது போன்ற வெப்சைட்களில் தங்கள் பிறப்பு விவரங்களை கொடுத்து ஜாதகம் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அதனை கண் முன்னே வைத்துக்கொண்டு ஜாதக கட்டங்களில் பென்சிலில் அந்தந்த ராசிகளின் பெயரையும், ராசி அதிபதிகளின் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளார் என்று பாருங்கள். சந்திரன் நின்ற ராசியே ஜன்ம ராசி.

லக்னம் என்றால் என்ன?
சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதமும் ராசி மாறுவார். சித்திரையில் மேஷம், வைகாசியில் ரிஷபம் என்ற வரிசையில் பங்குனியில் மீனத்தில் இருப்பார். நீங்கள் காலை 6 மணியிலிருந்து சுமார் 2 மணி நேரத்துக்குள் பிறந்திருந்தால் சூரியன் நின்ற ராசியே தங்கள் ஜன்ம லக்னம் ஆகும். சுமார் இரண்டிரண்டு மணி நேரங்கள் தாமதமாக தாமதமாக லக்னம் அடுத்த ராசிக்கு மாறும்.

உ.ம்: சித்திரை மாதம் முதல் தேதி காலை 6 முதல் 8 க்குள் பிறந்தால் மேஷ லக்னம். 8 முதல் 10 க்குள் பிறந்தால் ரிஷப லக்னம்.

குறிப்பு: நீங்கள் பயந்துவிடக்கூடாது என்பதால் ஆழமாக செல்லவில்லை. ஒரு லக்னம் இரண்டு மணி நேரமே என்பது ச்சும்மா சொன்னது. இதற்கெல்லாம் ஆக்யுரேட் கணக்கிருக்கிறது. பஞ்சாங்கம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்தபிறகு பஞ்சாங்கத்தில் பார்த்தால் விவரம் புரியும். சூரியோதயமும் மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள் மாறும். லக்ன சமயமும் அப்படியே. மேலும் மாவட்டத்துக்கு மாவட்டம் சொல்ப மாற்றமிருக்கலாம். இதெல்லாம் அப்புறமா நீங்களே தெரிஞ்சுப்பிங்க. ஓகேவா.

இப்ப பாயிண்டுக்கு வரேன். லக்னம்னா என்னனு பார்த்தோம். கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் மறைவதற்குள் ராசிச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளையும் இரண்டிரண்டு மணி நேரம் ஒளிரச்செய்கிறார். நீங்க பிறந்த நேரத்துல சூரியனால் ஒளிரச்செய்யப்பட்ட ராசியே உங்கள் லக்னமாகிறது.

சூரியன் என்றால் படம் வரைந்து பாகங்கள் குறிக்க தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.சோலார் பவர் எடுக்கலாம். சூரிய ஒளியிலிருந்து தாவரங்கள் உணவு தயாரிக்குது.(பச்சையம்? ஸ்டார்ச்?) அதை தின்னுதான் நாம வாழறோம். அதை தின்னு வாழற ஆடு ,மாடை அடிச்சு திங்கறோம்.

குறை மாசத்துல பிறந்த குழந்தைக்கு தோல்ல ஏதாச்சும் மாற்றமிருந்தா சூரிய ஒளியில காட்டறாங்க. சூரிய தரிசனம்னு நாள் குறிச்சு குழந்தைய சூரிய ஒளில காட்டுவாங்க. சூரிய வெளிச்சத்துல விட்டமின் டி, விட்டமின் இ இருக்குதாம்.

பறவைகள் கூட்டை விட்டு கிளம்பவும், மீண்டும் கூடு சேரவும் சூரியனோட உதயாஸ்தமங்கள்தான் டெட்லைன். நாம வாழற பூமியே சூரியனைத்தான் சுத்தி வருது.

நதிகள்,குளம்,குட்டைகளில் உள்ள நீர் சூரிய வெப்பத்துல ஆவியானாதான் நமக்கு மழை. ஊறுகாயை வெயில்ல வைக்கலன்னா நாறிபோயிரும். துவைச்ச துணிகளை ரூமுக்குள்ள ஃபேன் காத்துல காயப்போட்டா ஊச நாத்தம் வந்துரும். இதெல்லாம் நமக்கு தெரியும்.

சரி ....சரி விஷயத்துக்கு வரேன். உங்க லக்னம் எந்த ராசில அமைஞ்சிருக்குனு பார்த்துக்கங்க. (லக்னத்துக்கு சூரியனுக்கும் சம்பந்தமிருக்குனு புரிஞ்சுக்கங்க) இப்ப அந்த ராசிக்கு அதிபதி யாருனு பார்த்துக்கங்க. அவர் யாருங்கற பொருத்தும், அவர் லக்னம் முதல் எத்தனையாவது ராசில இருக்காருங்கறத பொருத்தும் பொதுப்பலனை இப்போ பார்ப்போம். ( ஏற்கெனவே சொன்னபடி இதெல்லாம் ப்ரிலிமினரிதான். கொலை பண்ணா செக்ஷன் 302. போதைல செய்திருந்தா செக்ஷன் 85, பலான ஆளை போட்டுத்தள்ளவே குடிச்சிருந்தா அது கான்ஸ்பிரசியோட செக்ஷன் 302கீழே வரும்லியா. அப்படி உங்க லக்னாதிபதி யாரு, அவரு எங்க நின்னாரு,அங்கே அவரோட பலம் என்ன? யாரோட சேர்ந்தாருங்கறதையெல்லாம் பொருத்து பலன் மாறிக்கிட்டே போகும். . அப்புறம் என்னடா முருகேசன் முன்னுக்கு பின் முரணா பலன் சொல்லியிருக்காருனு என்னை திட்டிக்காதிங்க ஓகே.

( எல்லா அம்சங்களையும் படிப்படியா விவரமா பார்ப்போம். குரு தட்சிணை ? ஒன்னுமில்லே உங்களை சேர்ந்தவங்க யாருக்காச்சும் ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டா நம்ம மெயில் அட்ரஸ் கொடுங்க. இல்லாட்டி நம்ம வலைப்பூவுல ஆன்லை ஜோதிடம்னு ஒரு படம் இருக்கில்லயா , அது மேல க்ளிக் பண்ணி விவரத்தை சொல்லுங்க)

கீழே 1-1 என்று கொடுத்திருக்கேன். இதில 1 என்றால் லக்னாதிபதினு அர்த்தம். 1-1 என்றால் லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தால்னு அர்த்தம். 1-2 என்றால் லக்னாதிபதி இரண்டில் இருந்தால், 1-3 என்றால் லக்னாதிபதி 3ல் இருந்தால் இப்படி அர்த்தப்படுத்திக்கிட்டு படிச்சுபாருங்க.

1-1
உடல், மன நலம், மன பலம், ஞாபக சக்தி, உறுதியான எண்ணம்
1-2
பேச்சு,எழுத்து திறமை, குடும்பத்துடன் நெருக்கம்,ரசனையுடன் உணவு, நல்ல கண் பார்வை,சுய முயற்சியால் பணமீட்டல்
1-3
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம்
1-4
தாய்,தாய் வழி உறவு, வீடு,வாகனம், கல்வி வகையறாவில் நன்மை
1-5
புத்தி கூர்மை,அதிர்ஷ்டம்,வாரிசுகளால் நன்மை, அவர்களுக்கு நல்ல முன்னேற்றம்.
1-6
வாழ் நாள் முழுக்க கடன், நோய்,வழக்கு, விவாதங்கள்,எதிரிகளால தொல்லை
1-7
ஃப்ரண்ட் ,லவர்,பார்ட்னர் வைஃப் வகையறாக்களோட இம்பேக்ட் அதிகம்
1-8
தற்கொலை, கொலை எண்ணம். ஐ.சி (தாழ்வுமனப்பான்மை) ,தொடரும் துரதிர்ஷ்டம், தன்னை தனிமையா ஃபீல்பண்றது, தீராத கடன், கண்டங்கள் ( ஆசியா ,ஐரோப்பா இல்லிங்கோவ்) , சிறைப்படுதல், பெண்ணானால் வைதவ்யம் (சில லக்னங்களுக்கு மட்டும்), ஐபி போடறது
1-9
அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும்.
1-10
தொழில்,உத்யோகம், வேலை,கைத்தொழிலில் ஆர்வமிருக்கும்.
1-11
பிசினஸ் மைண்ட் இருக்கும். மூத்த சகோதரவர்கத்தோட உதவி கிடைக்கும். டபுள் மைண்டடா இருப்பிங்க
1-12
வாழ் நாள் எல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கே சரியா போயிரும். வீண் செலவு அதிகம். தூக்கம் அதிகம். செக்ஸுக்கு, லக்சரிக்கு அதிக முக்கியத்துவம் தருவிக.