Showing posts with label Tamil poetry. Show all posts
Showing posts with label Tamil poetry. Show all posts

Tuesday, June 22, 2010

மழையும் கனவும்

மழை
பொறுப்பில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களின்
சுய நலத்தால்  பொது நலத்துக்கே மறு பெயரான மழையும்
விருப்பற்றுதான் பொழிகிறது
ஈங்கிவர் ஈன தனத்தால் பொழிந்ததும்
கடலுக்குத்தான் சேர்கிறது.

கல்லெடுத்து கடவுள் செய்தாலும்
சொல்லெடுத்து அவனுக்கு காவியம் செய்தாலும்
மனித மனங்களில் வறட்சிப்பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஓசோனுக்கே ஓட்டை போட்டாலும்
ஓஷோவுக்கு விஷத்தை தந்தாலும்
மனித மனங்களில் ஈரப்பதம் இருக்கத்தான் செய்கிறது.

என் பணி மனித மனங்களில் மனிதம் விதைப்பதே
மனிதம் முளைக்க வான் மழை பொழியாவிடினும்
பொழிந்ததுவும் கடல் தேடி போனாலும்
விதைப்பேன் மனிதம்.
அது முளைத்திட என் உதிரமும் சொரிவேன் நிதம்.

கனவு

உண்டு உறங்கி கனவு காணும் சாதி இவர்கள்
கனவை உண்டு கனவில் உறங்கி கனவே வாழ்வானவன் நான்
என் கனவெல்லாம் ஒன்றே
என் கனவை கலைத்துப்போடும் யதார்த்தம் கனவென கலைந்து போக வேண்டும்.

யதார்த்த கல்லறையில் கிடக்கும் உயிர் பிணங்களின் சிந்தையிலும் கனவு கசிய வேண்டும்
அவர்தம் கணிதம்  நசிய வேண்டும்.
புனிதங்களுக்கு திருத்தப்பட்ட புதிய பதிப்பு வரவேண்டும்.

என் கனவு ஒன்றே இங்கு இவர்களுக்கு கனவே உணவாகா விட்டாலும் பரவாயில்லை
செரிக்க முடியாத விஷயங்களை விழுங்கி வைக்க நீராகவேனும் ஆகட்டும்.

                                           

மழையும் கனவும்

மழை
பொறுப்பில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களின்
சுய நலத்தால்  பொது நலத்துக்கே மறு பெயரான மழையும்
விருப்பற்றுதான் பொழிகிறது
ஈங்கிவர் ஈன தனத்தால் பொழிந்ததும்
கடலுக்குத்தான் சேர்கிறது.

கல்லெடுத்து கடவுள் செய்தாலும்
சொல்லெடுத்து அவனுக்கு காவியம் செய்தாலும்
மனித மனங்களில் வறட்சிப்பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஓசோனுக்கே ஓட்டை போட்டாலும்
ஓஷோவுக்கு விஷத்தை தந்தாலும்
மனித மனங்களில் ஈரப்பதம் இருக்கத்தான் செய்கிறது.

என் பணி மனித மனங்களில் மனிதம் விதைப்பதே
மனிதம் முளைக்க வான் மழை பொழியாவிடினும்
பொழிந்ததுவும் கடல் தேடி போனாலும்
விதைப்பேன் மனிதம்.
அது முளைத்திட என் உதிரமும் சொரிவேன் நிதம்.

கனவு

உண்டு உறங்கி கனவு காணும் சாதி இவர்கள்
கனவை உண்டு கனவில் உறங்கி கனவே வாழ்வானவன் நான்
என் கனவெல்லாம் ஒன்றே
என் கனவை கலைத்துப்போடும் யதார்த்தம் கனவென கலைந்து போக வேண்டும்.

யதார்த்த கல்லறையில் கிடக்கும் உயிர் பிணங்களின் சிந்தையிலும் கனவு கசிய வேண்டும்
அவர்தம் கணிதம்  நசிய வேண்டும்.
புனிதங்களுக்கு திருத்தப்பட்ட புதிய பதிப்பு வரவேண்டும்.

என் கனவு ஒன்றே இங்கு இவர்களுக்கு கனவே உணவாகா விட்டாலும் பரவாயில்லை
செரிக்க முடியாத விஷயங்களை விழுங்கி வைக்க நீராகவேனும் ஆகட்டும்.

                                           

Tuesday, April 13, 2010

வான் மழை பொழியட்டும்

வான் மழை பொழியட்டும்
ஆறு குளம் நிறையட்டும்

ஆகாச கங்கை கொணரும்
பகீரதர்கள் இன்றில்லை
கல்லணை கட்டிட கரிகாலர்கள் இல்லை
தென்னாடுடைய சிவனே உன் சிரசில்
கங்கையை சிறை வைத்து
வடக்கிருந்து வாட்டுகின்றனை.
பெண்ணடிமை மௌடீகமென்று
சந்திர மவுளீஸ்வரா அறியாயோ
கங்கையை விடுவித்து
தென்னாட்டின் தாகம் தீர்

பேரணைகள் கட்டி பாசனம் பெருக்கிடவே 
நவ பாரத சில்பிகள் இல்லை

வான் மழை பொழிந்தாலன்றி - மனித
உயிர் பயிர் தழைப்பதாயில்லை
பயிர் உயிர் தரிப்பதாயில்லை
கலைமகள் பெற்றெடுத்த கடைக்குட்டி
நானிங்கு கவித் தேன் மழை பொழிய வல்லேன்
வான் மழை பொழிந்திடவே
கலைத்தாய் வாய் திறந்து   நல்ல வழி சொல்லேன்


வேட்டி வரிந்து கட்டி
அரசின் வெட்டி வேலைகளை
தள்ளி வைத்து
ஜல யக்னம் புரிந்திடவே
ராஜ சேகரர்கள் இல்லை

வான் மழை பொழிந்தாலன்றி
வரப்புயர வழியில்லை
வாட்டம் ஒழிவதாயில்லை.
தரணி சிரிக்க தானழும்   வான் மகளும்
கெட்டாளோ?
கருணை விட்டாளோ?

அணைக்கதவை பூட்டி வைத்து
நிலமகள்  வாய் பிளக்க
அவளுக்கு உழுதுண்டு வாழ்வோர்
வாய்க்கரிசி போடவும் வழியிலாது செய்யும்
அண்டை மானில அரசர்கள்
மனமிரங்கார்
உட் சண்டை மறந்திவரே
நீர் கொணர களமிறங்கார்

வான் மழை பொழிந்தாலன்றி வையத்தோர்
ஊன் வளர்த்தல் கனவாமே.
பதவிக்கனவே உணவாய்
உன்மத்தராய்  மலினத்தில் வீழ்ந்திருக்கும்
மண்ணாள்வோர்
வறட்சியால் மாள்வோர் திசையும் பாரார்

வான் மழை பொழிந்தாலன்றி
வறுமை ஒழிவதாயில்லை.
வான் மழை பொழியட்டும்
ஆறு,குளம் நிரம்பி வழியட்டும்

மேகமங்கை கருக்கட்டும்
மழை நீர் கருக்கொள்ளட்டும்.

நிலமகள் தகிப்பெல்லாம்
தன்னாலே அடங்கட்டும்

வான் மழை பொழியட்டும்

வான் மழை பொழியட்டும்
ஆறு குளம் நிறையட்டும்

ஆகாச கங்கை கொணரும்
பகீரதர்கள் இன்றில்லை
கல்லணை கட்டிட கரிகாலர்கள் இல்லை
தென்னாடுடைய சிவனே உன் சிரசில்
கங்கையை சிறை வைத்து
வடக்கிருந்து வாட்டுகின்றனை.
பெண்ணடிமை மௌடீகமென்று
சந்திர மவுளீஸ்வரா அறியாயோ
கங்கையை விடுவித்து
தென்னாட்டின் தாகம் தீர்

பேரணைகள் கட்டி பாசனம் பெருக்கிடவே 
நவ பாரத சில்பிகள் இல்லை

வான் மழை பொழிந்தாலன்றி - மனித
உயிர் பயிர் தழைப்பதாயில்லை
பயிர் உயிர் தரிப்பதாயில்லை
கலைமகள் பெற்றெடுத்த கடைக்குட்டி
நானிங்கு கவித் தேன் மழை பொழிய வல்லேன்
வான் மழை பொழிந்திடவே
கலைத்தாய் வாய் திறந்து   நல்ல வழி சொல்லேன்


வேட்டி வரிந்து கட்டி
அரசின் வெட்டி வேலைகளை
தள்ளி வைத்து
ஜல யக்னம் புரிந்திடவே
ராஜ சேகரர்கள் இல்லை

வான் மழை பொழிந்தாலன்றி
வரப்புயர வழியில்லை
வாட்டம் ஒழிவதாயில்லை.
தரணி சிரிக்க தானழும்   வான் மகளும்
கெட்டாளோ?
கருணை விட்டாளோ?

அணைக்கதவை பூட்டி வைத்து
நிலமகள்  வாய் பிளக்க
அவளுக்கு உழுதுண்டு வாழ்வோர்
வாய்க்கரிசி போடவும் வழியிலாது செய்யும்
அண்டை மானில அரசர்கள்
மனமிரங்கார்
உட் சண்டை மறந்திவரே
நீர் கொணர களமிறங்கார்

வான் மழை பொழிந்தாலன்றி வையத்தோர்
ஊன் வளர்த்தல் கனவாமே.
பதவிக்கனவே உணவாய்
உன்மத்தராய்  மலினத்தில் வீழ்ந்திருக்கும்
மண்ணாள்வோர்
வறட்சியால் மாள்வோர் திசையும் பாரார்

வான் மழை பொழிந்தாலன்றி
வறுமை ஒழிவதாயில்லை.
வான் மழை பொழியட்டும்
ஆறு,குளம் நிரம்பி வழியட்டும்

மேகமங்கை கருக்கட்டும்
மழை நீர் கருக்கொள்ளட்டும்.

நிலமகள் தகிப்பெல்லாம்
தன்னாலே அடங்கட்டும்

Friday, February 19, 2010

கன்னத்துக்கு சத்துணவு

புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்

அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்

அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி

பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன

நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை

இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ

சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்

கன்னத்துக்கு சத்துணவு

புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்

அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்

அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி

பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன

நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை

இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ

சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்