Showing posts with label Deceases. Show all posts

Wednesday, April 21, 2010

இஸ்லாம் : சில கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே,
 நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும்  நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்!  கதம்!

நீங்க படிக்கப்போற  இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள்  பதிவுகள் போட்டிருக்கேன்.

1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?

2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்

அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.

இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.

இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம   செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான்  என்ன ?

ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?

என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும்  இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால்  இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.

இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு  வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?

இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.

இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது  குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்?  இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?

சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம்.  நான் இஸ்லாமை நோக்கி   கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி  இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின்  தனிச்சிறப்பு.

இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.

இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை

2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ண‌கும்பம் எல்லாம் கிடையாது‌
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .

4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் .   வட்டியை  தடை செய்துள்ளது.  ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில்  வளைந்து கொடுக்காத    தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய  சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய  நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.

பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில்  முடிவான முடிவுக்கு வர வொட்டாது  இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன.  நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.

ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால்  நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.

சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்

இதையெல்லாம்  எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.

இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே  மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே  இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.

இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.

நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.

அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.

இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?

இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.

உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில்  தனிமையில் வாழும் பெண்களால்  தனி மனித  ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான  வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?

பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு  வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல  வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்

 பாலை பூமியில்  ஆண்களுக்கு  கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

 மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.

முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று  தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?

முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.

இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?

பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?

நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத  மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.

மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்

நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?

இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.

அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !

வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)

இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.

ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?

போலி மருந்துகள்,காலாவதியான மருந்துகள்னு நிறைய பேசறாங்க .. நிறைய எழுதறாங்க. ஆனால் ஒரிஜினல்னு சொல்லப்படற மருந்தே, காலாவதியாகாத மருந்தே மருந்தா விஷமா?னு எனக்கு சந்தேகம் இருக்கு.

அல்லோபதி ,ஹோமியோபதி,சித்தா , தமிழ் வைத்தியம், மலையாள வைத்தியம் எத்தனை எத்தனை வைத்தியம் இருக்கு தெரியுமா? இத்தனை வைத்தியம் இருந்தும் நோய்கள் கூடிட்டே போகுதே தவிர குறையற மாதிரியில்லே,

அல்லோபதி,ஹோமியோபதி,சித்தா, நேச்சுரோபதி இதையெல்லாம்  எல்லாம் நாம் கேள்வி கூட கேட்க முடியாது. ஏன்னா இதுக்கெல்லாம்  அரசால அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கு,படிப்புகள் இருக்கு, தரக்கட்டுப்பாடு இருக்கு.

இருந்தாலும் என்ன ? துணிஞ்சவனுக்கு துக்கமில்லே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜஸ்ட் லாஜிக்.  இயற்கைய ,அதன் போக்கை ஓரளவு உன்னிப்பா கவனிப்பேன். அனுபவம் எதிர்ப்பட்டப்ப அதை மறக்க மாட்டேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல். ஒரு  நோய் தடவை தான் வரனும். அது ஏன் தானா வரப்பொவுது நாமதான் தெரியாத்தனமா இன்வைட் ண்ணியிருக்கனும். இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு  நோயை வெத்தலை பாக்கு வச்சி கூப்டாம இருந்தாலே போதும்.  நோய் நாடி நோய் முதல் நாடினு சொல்வாங்க. என்னா நோய்னு மட்டும் பார்த்தா போதாது. அதுக்கு முதல் என்னா? அதாங்க காரணம் .. என்னானு பார்த்து அதை அவாய்ட் பண்ணாலே போதும்.

ஒரே நோய்  மறுபடி வந்தா என்ன அர்த்தம் போன தபா அது வந்தப்போ நாம அதுக்கு நல்ல தீனி போட்டோம்னு அர்த்தம் அவ்ளதான்.

 "வரும் முன் காத்தல்" தான் நம்ம பாலிசி.வந்துட்டா முடிஞ்ச வரை ஃபேஸ் பண்றது. முடியலியா .. எத்தனை சந்தேகம் இருந்தாலும் எல்லாத்தயும் தூக்கி தூர போட்டுட்டு டாக்டர் கிட்டே போய் சரண்டர் ஆஃப் இண்டியா.

ஆனால் கடவுள் புண்ணியத்துல பெரிசா ஏதும் பிரச்சினை வந்தது கிடையாது. வந்ததெல்லாம் சின்னவயசுல கொப்பளம், சிரங்கு, ஒரு தரம் அம்மை, ஒரு தரம் உப்பு அதிகமாகி மூச்சா வராம போனது, ஒரு தாட்டி டைஃபாயிட் தட்ஸால்.

மேலுக்கு என்னதான் கான்ஃபிடண்டா பேசினாலும் உள்ளாற கொஞ்சம் உதறல் பார்ட்டிதான். உதறல்னா பயம்னு இல்லே. தாளி இன்னைக்கு செத்தா பத்து நாள் காரியம். இதுக்கு முன்னாடியாவது "அய்யய்யோ .. நம்ம மூளைல மஸ்தா சப்ஜெக்ட் சேர்த்து வச்சிருக்கமே எல்லாம் வீணா போயிருமேனு ஒரு பயம் இருந்தது. கால ஓட்டத்துல அதெல்லாம் இன்னைக்கு நேத்திக்கு வந்தும் கிடையாது, நாளைக்கு நாளன்னைக்கு போயிரப்போறதும் கிடையாது. இந்த ஜன்மத்துல எப்படி எல்லாத்தயும் ஃபைல் ரெக்கவரி மாதிரி ரிக்கவர் பண்ணிக்கிட்டமோ அப்படியே அடுத்த ஜென்மத்துலயும் ரிகவரி ஆயிட்டு போவுது விடுனு ஒரு தைரியம். பை தி பை இன்டர் நெட் உபயத்துல என் எழுத்துக்கள் எல்லாம் சிரஞ்சீவத்வம் அடைஞ்சாச்சு. என்னைக்கோ ஒரு நாள் என் எழுத்தெல்லாம் வேதமாகும். ஒட்டு மொத்தமா மனித குலமே கொண்டாடுங்கற நம்பிக்கை உண்டு. என் உதறல் பயமல்ல. எனக்குள்ள ஒரு சூப்பர் ஈகோ உண்டு. எனக்கா நோயா ஹ.. நடக்க கூடியதா சொல்லுப்பாங்கற மாதிரி.

இந்த சில்லறை உபாதைகள் வரும்போது ரொம்பவே அலர்ட் ஆயிருவன். ஏன் எதுக்கு எப்படினு மண்டைய போட்டு ஊறுகாய் பாட்டில் மாதிரி  உலுக்கி கிழங்கை தோண்டி எடுக்கிறாப்ல விஷயத்தை எடுத்துருவன். அந்த நோய் எனக்கு வந்ததற்கான காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணி தடா போட்டுருவன். இது என் ஸ்டைல்.

இப்படித்தான் 1993 ல எனக்கு திடீர்னு ஆஸ்மா,ப்ராங்கடைஸ், வீசிங் எல்லாமே மாட்டிக்கிச்சு. காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணேன். அவாய்ட் பண்ணேன். இதோ 17 வருஷம் ஆகுது நோ வீசிங்.

ஆனால் எல்லாராலயும் இப்படி இருக்க முடியாதில்லயா?  நோய் வந்துதான் தீரும். மறுபடி மறுபடி வரும். என்ன செய்ய? டாக்டர் கிட்டே போய்தான் ஆகனும்.

உலகத்துல கச்சா முச்சானு எத்தனையோ நோய்கள் இருக்கு. இதுக்கெல்லாம் ஜெனட்டிக் காஸஸ், என்விரான்மென்ட்டல் காஸஸ், சைக்கலாஜிக்கல் காஸஸ், சோஷியல் காஸஸ், எக்கனாமிக்கல் காஸஸ்னு  நிறைய காஸஸ் இருக்கு.

ஆனால்  நோய்ங்கறது எப்பவுமே நமக்கு நண்பன் தான். காரணம்  என்ன தெரியுமா?
நோய்ங்கறது ஒரு அறிவிப்பு. ராஜா கைய வைக்கலே ஏதோ ராங்கா பூட்சுபாங்கற அறிவிப்பு.

அலாரம் மாதிரி. பேங்க்ல அலாரம் அடிச்சா பேங்க் மேனேஜர் உடனே போலீசுக்கும், ஃபயர் ஸ்டேஷனுக்கும் போன் பண்றாரா அலாரத்தை நிறுத்தறாரா?

போன் பண்றார். ஆனால் உடம்பு விஷயத்துல நாம என்ன பண்றோம் அலாரத்தை நிறுத்தறோம். இது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்?

உதாரணத்துக்கு திடீர்னு வயித்தால போவுதுனு வைங்க. இது ஒரு அலாரம். என்னமோ ராங்கா பூட்சி. அத என்னா ஏதுனு ஆராய்ச்சி பண்ணாம உடனே டாக்டர்கிட்டே ஓடறோம். வடிவேலு ஏதோ சினிமால தார் உருண்டைய சாப்ட மாதிரி டாக்டர் ஏதோ மாத்திரை கொடுக்கிறாரு. சாப்டு கார்க் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து வாயே செத்து போச்சுனு சொல்லி ஊறுகாயை போட்டு பிசைஞ்சி சோத்தை ஒரு கட்டு கட்டறோம்.

வயித்தால போனா கொஞ்சம் டென்சனாவறது சகஜம் தான். ஹ்யூமன் பாடில 70% வாட்டர் கன்டென்ட் தான் . அது வேகமா குறைய ஆரம்பிச்சா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுரும். நியாயம் தா. ஆனால் வயித்தால போவுதே அதுல என்ன ரத்த மாமிசமா போயிருச்சு. இல்லியே மஷ்டுதான் போவுது. என்ன கூடவே நீர்சத்தும், சில தாது உப்புகளும் போயிருது சுஸ்தாயிர்ரம். நிறைய சர்க்கரையும், கொஞ்சமா உப்பும்  வென்னீர்ல  கலந்து குடிச்சா எல்லாமே ஓரளவு பேலன்ஸ் ஆயிரும். அட இன்னும் சுஸ்தாயிருந்தா எலக்ட் ரால் பவுடர் கலந்து குடிங்க.

(தொடரும்)

வாசகர் கேள்வி:
அடுத்த ஜன்மத்துலயா?