Showing posts with label wife and Husband. Show all posts

Monday, September 13, 2010

மனைவி அமைவதெல்லாம் : 2

நாம எல்லாரும் வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கை ஒன்னுதான் . அதை ஸ்வர்கமாவோ, நரகமாவோ மாத்திக்கிறது நம்ம கையில தான் கீது. இதையே பெண்டாட்டி மேட்டருக்கும் அப்ளை பண்ணி பாருங்க.

ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னதா ஞா. இந்த பொம்பளைகல்லாம் கண்ணாலத்துக்கு முந்தி வேணம்னா ஒவ்வொருத்தரு ஒவ்வொரு கேரக்டரோட இருக்கலாம். ஆனால் எந்த பெண்ணா இருந்தாலும் கண்ணாலத்துக்கப்பாறம் மனைவின்னு ஒரு ஜந்துவா மாறிர்ராய்ங்க.

ஆண்களும் இப்படித்தான் கண்ணாலத்துக்கு முந்தி தான் டிஃப்ரண்ட் கேரக்டர்ஸ். கண்ணாலத்துக்கப்பாறம் கணவன்ங்கற விசித்திர ஜந்துவா மாறிர்ராய்ங்க.

இந்த ரெண்டு ஜந்துக்களுக்குமே தாங்கள் ஏதோ ஸ்வர்கத்துல இருந்தாப்லயும் எதிராளி ( லைஃப் பார்ட்னர்) தங்களை காலை தடுக்கிவிட்டு நரகத்துல தள்ளிட்டாப்லயும் ஒரு எண்ணம் உண்டு

கண்ணாலம் மட்டும் நடக்காம இருந்திருந்தா தான் முகேஷ் அம்பானி அ அனில் அம்பானிக்கு ரேஞ்சுக்கு போயிருப்போம்னு கணவர்களோட நினைப்பு.

கண்ணாலம் மட்டும் நடக்காம இருந்திருந்தா தான் ஐஸ்வர்யா ரேஞ்சுல நித்ய யவ்வனத்தோட பூத்து குலுங்கியிருப்போம்னு பெண்டாட்டிகளோட நினைப்பு.

அவிக நினைப்புகள் தன்னிலையில..

கணவன்:

அய்யய்யோ அவள் கும்பலே சரியான பீத்த கும்பல். ஏதோ நான் முட்டி மோதி இந்த பன்னிய ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்தேன். இல்லேன்னா இது கூட சாணி அள்ளிக்கிட்டு தான் இருந்திருக்கும்

மனைவி:

அய்யய்யோ அவரு சைட் ஆளுங்கல்லாம் சரியான குடிகார கும்பல். பேச்செடுத்தா கத்தி குத்து கொலை தான். ஏன் நானுன்ன வாசி எல்லாத்தயும் அடக்கி ஒடுக்கி இந்த ரேஞ்சுல வச்சிருக்கன்.

கணவன்:

என்னமோப்பா கண்ணாலமாகி ஒரு 3 மாசம் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருந்தது. இவள் கர்பம்னு பார்த்துட்டு போக அவிக கும்பல் வந்து போச்சு பாரு அன்னைக்கு பிடிச்சது சனி

மனைவி:

ஹும்.. கண்ணாலமாகி ஒரு 3 மாசம் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருந்தது. இவருக்கு வைரல் ஃபீவருன்னு பார்த்துட்டு போக அவிக கும்பல் வந்து போச்சு பாரு அன்னைக்கு பிடிச்சது சனி

இது மாதிரி இன்னம் நிறைய இருக்கு. அதையெல்லாம் போட்டு உடைச்சா நான் ஏதோ கட்டிலடியில ஒளிஞ்சிருந்து பார்த்தேனோன்னு சனத்துக்கு ஒரு சந்தேகம் வந்துரும்.எனக்கென்னத்துக்கு பாஸ் அந்த வில்லங்கம்?

இப்படி ஆண் ,பெண்கள் விசித்திர ஜந்துக்களா மாற கவுண்டர் பார்ட்டுகளான பெண்கள், ஆண்களும் ஒரு முக்கிய காரணம். என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த மாற்றத்தை தள்ளி போட முடியுமே தவிர நிரந்தரமா தடுக்க முடியாது.

அப்படி தள்ளிப்போட நாம பண்ணவேண்டியது கேஸ் ஸ்டடி . அதாவது மனைவிங்கற பாத்திரம் ஏன் நம்ம லைஃப்ல என்ட்ரி கொடுக்குது?எத்தனையோ சோகக்கதைகளை கேட்டும் மறுபடி மறுபடி ஆண்கள் ஏன் கண்ணாலம் கட்டிக்கிடறோம்? இதனோட முன் கதை என்ன? இதுக்கெல்லாம் பதில் தேடி புறப்பட்டா இந்த தொடர்பதிவு மெகாசீரியல் கணக்கா நீளும். இருந்தாலும் சுருக்க முடிக்க தம் கட்டி பார்ப்பம்

ஆணோட தேவை வெறுமனே ஒரு பெண் தான்னா விலைவாசி கொஞ்சம் போல ஏறியிருந்தாலும் பஜார்ல சொப்பு சொப்பா சீப்பு சீப்பா கிடைக்குது. எய்ட்ஸுக்கெல்லாம் கேண்டோம் முறிவு இருக்கு. அப்பாறம் ஏன் அவனவன் சொட்டை தலைய நாலு மயிரால நிரவி ஃபோட்டோ எடுத்து ப்ரோக்கர் கிட்ட கொடுத்து கண்ணால மார்க்கெட்ல என்ட்ரி கொடுக்கான்?

ஒரு எலக்ட்ரானிக்ஸ் ப்ராடக்ட்ல ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருக்காப்ல மனித மூளைலயும் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருக்கு. அதாவது தன்னைத்தான் காப்பாத்திக்கனுங்கற வெறி இருக்கிறாப்லயே தன்னைத்தான் அழிச்சுக்கனுங்கற வெறியும் இருக்குது.

ஒரு ஆண் தன்னை அழிச்சுக்க ஒரு பெண்ணை கண்ணாலம் பண்ணிக்கிறதை விட பெட்டர் சாய்ஸ் வேற கிடையாது. அதுமட்டுமில்லை ஒரு பெண் தன்னை தான் அழிச்சுக்க ஒரு ஆணை கண்ணாலம் பண்ணிக்கிறதை விட பெட்டர் சாய்ஸ் வேற கிடையாது.

ஆக ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கத்தான் கண்ணாலம் கட்டறாய்ங்க. ஒரேயடியா அழிக்கிற தில், தம்,தாக்கத்,கலேஜா இருக்கிறவுக ஒரே தவணைல போட்டுத்தள்ளிட்டு தந்தில செய்தியா வந்துர்ராய்ங்க. மேற்படி சமாசாரமெல்லாம் இல்லாதவுக தவணைல அழிச்சுக்கறாய்ங்க. கண்ணாலத்தோட ஒரே நோக்கம் இதுதான்.

என்ன அண்ணாத்தை வயித்துல கடபுடாங்குதா? உட்காரு சொல்றேன். டூ இன் ஒன் தெரியுமில்லையா? பொம்பளையும் அப்படித்தான் நீ சாகனும்னாலும் அவதான் . மறுபடி பிறக்கனும்னாலும் அவ தான் கதி.

மறுபடி பிறக்கிறதுன்னா எப்படி? நீங்க குழந்தையா இருந்தப்ப அம்மாலருந்து, அக்கம்பக்கத்து ஆன்டிங்க வரை க்ளோஸா மூவ் ஆகியிருப்பாய்ங்க, எப்ப உங்க உதட்டு மேல கருமை , குரல்ல கரகரல்லாம் வந்ததோ அவிகல்லாம் அபவுட் டர்ன் அடிச்சு உங்களை விட்டு விலகி போயிட்டாய்ங்க. இதுக்கு காரணம் உங்க காமம்.

என்னதான் நீங்க நான் உத்தமன்னு விபூதி,சந்தனம் குங்குமம்லாம் தரிச்சு சீன் போட்டாலும் முகத்துல பருவும், கண்ல காமமும் உங்க உள்ளத்தை காட்டி கொடுத்துரும். உங்கள்ள உருவான காம நினைவுகள் முழுக்க ஒழிஞ்சா தான் உங்க முகம்,கண்கள் எல்லாம் மறுபடி பழைய மாதிரி ஆகும். அப்பத்தான் தாய்குலம் உங்களை பழையபடி நெருங்கும்.

டீன் ஏஜ் எஃபெக்டால உங்களுக்குள்ள செத்துப்போன கல்மிஷமில்லாத சிறுவன் மறுபடி பிறந்து வரணும்னா அதுக்கு பெண் தான் உதவனும். பெண் என்றால் யாரோ பெண் அல்ல பெண்டாட்டிதான்.

அடங்கொக்கா மக்கா காமம் தீர பொம்பளைதானே தேவை நீ என்னவோ பெண்டாட்டி தேவைங்கறேம்பீக . சொல்றேன்.

ஒரு ஆம்பளை வயசு/பருவம் வந்ததுலருந்து தினம் தினம் ஒரு பொம்பளையோட செக்ஸை அனுபவிச்சா அவனால 100 வயசுல கூட காமத்தை ஜெயிக்க முடியாது. அவனுக்குள்ள புதைஞ்சு போன கல்மிஷமில்லாத சிறுவனை மறுபடி பிறப்பிக்க முடியாது.

இங்கன பயாலஜி,செக்ஸாலஜி,சைக்காலஜி, எக்கனாமிக்ஸ்ல வர்ர தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி எல்லாம் வேலை செய்தாகனும். அப்பத்தான் காமத்தை தாண்டி வரமுடியும். காமத்தை தாண்டி வந்தாதான் தாய்குலத்தோட நெருக்கம் மறுபடி கிடைக்கும்.

பயாலஜி & செக்ஸாலஜி:

:

(பல தடவை சொன்னதுதான் 23 Vs 7) ஏழு அசைவுலயே விந்துவை வெளிப்படுத்திர்ர பலகீனம் குறைஞ்சு 23 ஐ எட்டிப்பிடிக்கனும்னா ஒரே பெண்ணோட வருஷக்கணக்கா உடலுறவு கொள்ளனும். அவளோட மனசுல மறைஞ்சிருக்கிற சாடிசம், சதி, பொறாமை, பொய்,வேஷம், மாதவிலக்கு, வெள்ளைப்படுதல், வயித்துவலி எல்லாம் இவனுக்கு விளங்க விளங்க அவள் மேல இருக்கிற மோகம் நிலத்தடி நீர் கணக்கா பாதாளத்துக்கு போயிட்டே இருக்கும். அப்பத்தான் 7 டு 23 சாத்தியமாகும். இதெல்லாம் நம்ம முன்னோர்கள் கணக்கு போட்டுத்தான் கண்ணாலங்கற சிஸ்டத்தை கொண்டுவந்திருக்கனும்.

சைக்காலஜி:

எனக்கு ஒரு ஜாதகம்ங்கறது 12 சேனல் கொண்ட ஒரு போர்ட்டபிள் டிவி மாதிரி. அதை பார்க்க பார்க்க ரெம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் இன்னைலருந்து தினசரி 15 நிமிசத்துக்கு ஒரு ஜாதகம்னு பலன் சொல்லிட்டே இருக்கனும். 10 டு ஃபைவ் ஒர்க்கிங் ஹவர்ஸுனு டீட் சைன் ஆயிட்டா இப்ப இருக்கிற ஆர்வம் நிச்சயமா இருக்காது. இது ஹ்யூமன் சைக்காலஜி. எது கட்டாயமோ அது எத்தனை இனிமையானதா இருந்தாலும் கசப்பா மாறிரும். எது கட்டாயமில்லையோ அது எத்தனை கோரமானதா இருந்தாலும் இனிப்பா மாறிரும். ( சின்ன வயசுல புளியங்கா அடிச்சு பச்ச மிளகா சேர்த்து அரைச்சு தின்னு தயிர் சோத்தை தின்னாக்கூட நெருப்பை வாரி வாயில கொட்டின எஃபெக்டை அனுபவிச்சிருக்கிங்களா? பேதியே புடுங்கிக்கினு அவஸ்தை பட்டு இருந்தாலும் மறுபடி மறுபடி போய்த்தானே இருக்ககோம் )

தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி:

முதல் லட்டை சாப்பிட்ட ஆகா ஓகோ, ரெண்டாவதுக்கு ஆகா , மூணாவதுக்கு போதும்பா . இதான் இத்தனாம் பெரிய சப் ஹெடிங்குக்கு மேட்டரு.

ஆக தங்களை கொல்லவும், புதுசா பிறப்பிச்சுக்கவும்தான் ஆண் கண்ணாலம் கட்டறான்.

நம்ம ப்ளாகை தாய் குலம் சீந்தறதில்லைன்னாலும் அவிக பார்வையிலருந்து சில விஷயங்களை சொல்லியே ஆகனும். டீன் ஏஜ்ல ஒரு பெண் ஒவ்வொரு ஆணாலயும் கேவலம் ஒரு துளையாத்தான் பார்க்கப்படறாள். அந்த பருவத்துல அது பெருமையா இருந்தாலும் சில நாள்ள அது ஒரு வித அபத்திரத்தை ,அதிருப்தியை தந்துருது.

பேசிக்கலி அவளோட கேரக்டர் தாய். அந்த தாய்ங்கற கேரக்டரை எட்டிப்பிடிக்க கொடுக்கப்பட்டதுதான் அழகு,கவர்ச்சி இத்யாதியெல்லாம். அதனால தான் வேறும் பெண்ணா பார்க்கப்படறது அவளுக்கு அலுப்பை கொடுக்குது. என்னதான் அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு பில்டாப் கொடுத்தாலும் அவளுக்குள்ளும் மோகம் இருக்கு. ஒன்னு அந்த மோகம் தீரனும் அல்லது அது தீரவே வழியில்லே. அதுக்கான சத்தா, மஸ்த் தன் கணவனுக்கு இல்லேங்கறதை புரிஞ்சிக்கிடனும் இந்த ஸ்டேஜ் வந்தாதான் அவள் ஒரு தாயா பரிணமிக்கிறாள். அதைத்தான் அவளோட அடி மனசு விரும்புது.

என்னோட ஓருயிர் -ஓருடல் - அமீபா- செல் காப்பி- காப்பி எர்ரர் - புது ஜீவராசி- தனிமை, இன்செக்யூரிட்டி சித்தாந்தத்தை ஞா படுத்திக்கங்க. உயிர்கள் மறுபடி ஏகமாக தடை இந்த உடல்ங்கற பிரமை இருக்கு - உடலை உதிர்த்தா இணையலாங்கற மூட நம்பிக்கையும் இருக்கு. அதுக்குத்தான் கொல்லுதல் -கொல்லப்படுதலுக்கான விருப்பம். இதெல்லாம் உடலுறவுல மட்டுமில்லை. திருமண வாழ்க்கையிலயும் சாத்தியமாகுது.

எதை கொல்றாய்ங்க? எதிராளியோட ஈகோவை கொல்றாய்ங்க. எதுக்கு ஆன்மாவை ஈகோ மறைச்சிருக்கு. ஈகோ அழிஞ்சா ஆன்மா பிரகாசிக்கும்.ஆன்மாவுக்கு பிரிவு- மறுபடி சேரனுங்கற வெறி கிடையாது. ஏன்னா ஆன்ம வடிவத்துல ஆல்ரெடி நாமெல்லாம் இன்டர்லிங்க்ட்.

நாயே நீன்னா அது உன் ஈகோ இல்லடா கண்ணா அதுக்கு அப்பால என்னமோ இருக்ககு. அதை நீ உணர்ந்துக்கத்தான் உன் ஈகோவை சீண்டறேன்னு ஒரு பெண்டாட்டிக்கு தெரியாம இருக்கலாம். ஆனால் அது அவளோட நினைவிலி மனசுக்கு தெரியும்.

ஆக எப்படி பார்த்தாலும் கண்ணாலங்கறது இன்னொரு உயிரோட இணையற முயற்சித்தான். உடலுறவுல உடல் அளவில் சில நிமிடங்கள் இது சாத்தியமாகுது. குழந்தை உண்டாகியிருக்கிறப்ப ஒரு பத்து மாசம் ஒரு பெண்ணுக்கு இது சாத்தியப்படுது. ஆணுக்குத்தான் இது அசாத்தியம். என்னதான் குழந்தைய எடுத்து கொஞ்சி , நெஞ்சோட அணைச்சாலும் அது சின்ன தா ஏப்பம் விட்டா கூட " ஏய்

இதுக்கு வாந்தி வராப்ல இருக்கு இந்தா"ன்னுட்டு எந்திருச்சு போயிர்ர நிலை தான்.

ஒரு ஆணால உயிர் வரை இணையறதுங்கறது சாத்தியமில்லேன்னு தான் சொல்லனும். ஆனால் பெண் தன்மை மிக்க ஆண்கள் வரபிரசாதிகள். இவிக அதுக்கான முயற்சில ஈடுபட ஆரம்பிக்கறச்ச பெண்ணுக்கு (மனைவி) " என்ன இந்தாளு நமக்க்கு போட்டியா வந்துருவான் போலிருக்கேன்னு ஒரு ஜெலஸ் வந்துருது. அவன் ஈகோவை சீண்டி அவனை முழு ஆணாக்க தன்னாலன முயற்சியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுர்ரா.

"ஏம்பா இந்த பாய்ஸ் எல்லாம் இப்படி இருக்கா" னு பேசிக்கிற வாலைக்குமரிகள் முதல், ஹும்.. இந்த வயசுல இந்த கிழத்துக்கு பில்டாப்பை பாரேன்னு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சிக்கிற பேரிளம்பெண்கள் வரை உணராத ஒரு சத்தியம் என்னன்னா..

இவிக கற்பனை உயிர்பெற்று ஒரு ஆண் இவிக லைஃப்ல என்ட்ரி கொடுத்தா தாளி பத்து நா இவிகளால தாங்க முடியாது. " ஹேய் இன்னைக்கு உங்க அண்ணா அண்ணி ஊர்லருந்து வராங்கண்ணியே போவலை"ன்னு டீன் ஏஜ் குமரியும், "அய்யே.. ரொம்ப வழியாதிங்க.. என்ன இன்னைக்கு கிளப்புக்கு போகலியான்னு பேரிளம்பெண்ணும் துரத்தி விட்டுருவாய்ங்க.

ஏன் இப்படி ? எலி பூனைய துரத்துறதை பத்து மினிட் மார்க்கலாம் 30 மினிட் பார்க்கலாம். வாழ முடியுமா? எலி எலி தான். பூனை பூனைதான். எலி எலியாத்தான் இருக்கனும் பூனை பூனையாத்தான் இருக்கனும்.

அதுக்குன்னு நான் தாய்குலத்தை கிச்சன்ல சிறைவைக்க சொல்லலை. உங்க பாடி மைண்டோடசெயல்பாடுகளை தீர்மானிக்கிறது ரத்தத்துல கலக்கிற கெமிக்கல்ஸ். அதை சுரக்கிறது நாளமில்லா சுரப்பிகள். அந்த சுரப்பிகளோட ராசா ஹைப்போ தலாமஸ். அதை கட்டுப்படுத்தறது உங்க எண்ணம். உங்க எண்ணங்களுக்கு ஆதி மூலம் ஆன்மீக பாஷைல சொன்னா வாசனை. உயிரியல் பாஷைல சொன்னா ஜீன்ஸ்.

விதி வழியே மதிங்கறாய்ங்களே.. அது பிரம்மன் எழுதின விதியில்லை. உயிரியல் விதி. யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. இடம் மாறினா நாறிர வேண்டியதுதான்.

ஆண் தன்மை மிக்க பெண்கள் இருக்கலாம். அவிக வேணம்னா என்ன வேணம்னா பண்ணிட்டு போவட்டும். சராசரி பெண்கள் தங்கள் மனசு, உடம்பு இயல்புக்கு ஏத்தபடி வாழ்ந்தா அதுவே பெட்டர். இல்லாட்டி தாளி மாதவிலக்கே நின்னுரும். மீசை முளைக்கும். தாடி வரும். குரல் கூட கரகரவாயிரும். அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தான்.

சரி நீட்டி முழக்கி ஆரம்பிச்ச இந்த பதிவை முடிக்க வேண்டிய கட்டாயம். நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதிக்கு நான் சொல்ல விரும்பறது என்னன்னா..

மேலே சொன்ன விசயங்களை இன்னொரு தாட்டி படிங்க. புரிஞ்சிக்கிடுங்க. இது ஜஸ்ட் மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாதிரி. இது ஒன்னும் ஓம்கார் ஸ்வாமிகள் தர்ர சக்கரமில்லை தலையணைக்கு கீழே வச்சிட்டு தூங்க. படிங்க ஃபாலோ பண்ணுங்க.

கணவன்/மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமில்லை. நீங்க கடந்த பிரிவை முடிச்சுட்டு ஆன்ம ரூபத்துல இருந்தப்ப ப்ரிப்பேர் பண்ண கொட்டேஷனின் படி கடவுள் கொடுத்த டெலிவரி.

இட் ஈஸ் யுவர் கப் ஆஃப் டீ. கடவுள் என்ன டீக்கடை நாயரா? வேலைக்காரன் வரலைங்கற கவலைல டீயை மாத்தி கொடுத்துர

சுவரை வச்சித்தான் சித்திரம். புருஷனை வச்சுத்தான் பெண்டாட்டி, பெண்டாட்டிய பொருத்துத்தான் புருசன்.

அவிக கேரக்டரை டிசைன் பண்ணதும் நீங்கதான் ,டிசைட் பண்றதும் நீங்க தான். ஆரம்பத்துல வேணம்னா இழு பறி இருக்கும். ஆண் கமாண்ட் பண்ண பார்ப்பான். பெண் மன அழுத்தத்தை உணர்வாள். போக பொக ஆணோட கமாண்டெல்லாம் காலாவதியாகிட்டு சரண்டர் ஆஃப் இண்டியாதான். இதை இருபாலாரும் புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை ஸ்வர்கம் தான். ( படிக்கவும்: இன உறுப்பும் கேரக்டரும் )

மனைவி : ஹும் கொஞ்ச நாளைக்குத்தானே இந்த கார்வாரெல்லாம்னு அஜீஸ் ஆயிரனும்.

கணவன்:"ஹும் எப்படியும் இவள் வழிக்குத்தான் போகப்போறோம். என்னத்துக்கு இந்த இழு பறின்னு விட்டுக்கொடுத்துரனும்

டிவிஷன் ஆஃப் லேபர்:

மத்திய மானில அரசாங்கங்களோட அதிகாரங்கள் மூன்று பட்டியல்ல அடங்கும் .ஸ்டேட் லிஸ்ட், சென்டர் லிஸ்ட், கன் கரண்ட் லிஸ்டு. இங்கன மனைவி தான் ஸ்டேட். கணவன் தான் சென்டர். கன் கரண்ட் லிஸ்டுன்னா ரெண்டு பேரும் சேர்ந்து டிசைட் பண்ற இஷ்யூஸ்

ஜோதிஷப்படி பார்த்தா பெண்டாட்டியால இம்சைபடனுங்கற தலையெழுத்து இருந்தா சீக்கிரம் கண்ணாலம் ஆகும். ஞானப்பல் முளைக்கிற வரை (ப்ராக்டிக்காலிட்டி புரியறவரை) கொஞ்சம் இழு பறியிருக்கும். இந்த கேஸெல்லாம் 90% காதல் திருமணமாத்தான் இருக்கும். அதனால " ஹும் நம்ம தலையெழுத்து இதான். யாரோ திணிச்சதில்லையே.. நான் எடுத்த முடிவுதானே" னு கொஞ்ச காலத்துக்கு - ஞானப்பல் முளைக்கிற வரை) அஜீஸ் ஆயிரனும்.

பெண்டாட்டியால சுகப்படற எழுத்திருந்தா கண்ணாலமே ஆகலைன்னாலும் பெண்டாட்டி சுகம் கிடைச்சுரும். ( இப்படி ஒரு சோடி பத்தி இன்னொரு தாட்டி விவரமா பார்ப்போம்)

இந்த பொம்பள பசங்க கண்ணாலத்துக்கு மிந்தி அப்பனை டார்ச்சர் பண்ணி பண்ணி பழக்க தோஷத்துல கண்ணாலத்துக்கப்பாறம் புருசனை டார்ச்சர் பண்ணுவாய்ங்க. இதை குறைக்க ஒரே வழி நீங்க உங்க அம்மாவை டார்ச்சர் பண்ண மாதிரி பெண்டாட்டிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருங்க. ( வண்டி சாவியை எங்கனா அங்கே போட்டுர்ரது - பேண்ட் சட்டைய சோஃபா மேல குப்பையா போட்டுர்ரது )

உங்க ரெண்டு பேர்ல யார் சாடிஸ்ட் யார் மசாக்கிஸ்ட்டுன்னு அப்சர்வ் பண்ணி தெரிஞ்சுக்கங்க. ராத்திரில இடம் மாறுங்க. பத்து வருஷத்துக்கு அப்பாறம் பர்மனென்டா இடம் மாறுங்க.

என்னா மஹேஷ் சார் .. முடிச்சுரலாமா ? தொடரலாமா?

Thursday, September 9, 2010

மனைவி அமைவதெல்லாம்

இது ஜஸ்ட் ஆன்மீக ,ஜோதிஷ ஆங்கிள் இன்னம் 360 டிகிரிலயும் நோண்டி நுங்கெடுத்துரலாம் பாஸ்

இந்த பூமில பிறக்கிற ஒவ்வொரு உயிரும் முக்திக்கு குவாலிஃபைட் தான்.  நம்மளோட ஒவ்வொரு பிறப்பும் முக்திக்கான பயணத்துல ஒரு அடி தான். சொம்மா தமாசுக்குன்னே கூட வச்சுக்க வாத்யாரே.

போன ஜென்மமும் முக்திக்கான பயணத்துல ஒரு அங்கம் தானே. போன ஜென்மத்துல இன்னைக்கு நீ ஃபேஸ் பண்ற பிரச்சினை ஒன்னுமே இல்லியா நீ அந்த சுகத்துல மதி மயங்கி முக்தியை காத்துல விட்டுட்ட.

உசுரு போற சமயம் உன்னோட கடந்த பிறவியெல்லாம் க்ளிப்பிங்ஸா வந்து போவுது. அடடா இன்னா மாதிரி டைம் வேஸ்ட் பண்ணிட்டோண்டானு படா பேஜாரா பூட்சி. அப்போ நீ கடவுள் கிட்டே வேண்டிக்கினே.

" தா பார் சாமீ. இந்த பொறப்புல தான் எனுக்கு இன்னின்னாமோ சொகத்தையெல்லாம் கொடுத்து என் புத்திய மயங்க வச்சுட்டே. அடுத்த ஜென்மத்துல  நான் ஒரே ஒரு நிமிட்டு கூட உன்னை மறக்க கூடாது. அந்தா மாதிரி கஷ்டத்தையெல்லாம் குடு"

கடவுள் குட்தே உட்டாரு. இதே மாதிரி வேண்டுதலை கீற பொண்ணை உனக்கு சம்சாரமா பொறக்கவச்சி லிங்க் கொடுத்து உட்டுட்டாரு.  நம்ம லைஃபெல்லாம் பொம்மலாட்டம் மாதிரி பாஸு.. இன்னாடான்னா இந்த பார்ப்பானுங்கோ ஸ்க்ரீன் ப்ளேவை கடவுள் எழுதறாருன்னு ரீல் உட்டானுங்கோ. இல்லே துரை ! ஆல் ரெடி எள்தி கொடுத்துட்டம். அதை அவரு சொம்மா வேடிக்கை பார்க்கிறாரு.

பாக்யராஜ் ஆக்டர் கம் டைரக்டர் இல்லியா. ஒரு சீன் ஆல்ரெடி எழுதி அசிஸ்டன்ட்  கிட்டே  கொடுத்து வச்சிருப்பாரு. நட்ச்சிக்கினே கீறப்ப இன்னாடா இது ரொட்டீனா கீது கொஞ்சம் மசாலா சேர்க்கலாமேன்னு  தோணினா சேர்த்துக்கலை அந்த மாதிரி தான் மன்சாலுக்கும் ரைட் கீது .கவலைப்படாதே.

உன் கதைக்கு ஈரோயினை செலக்ட் பண்ணது கூட நீதான் வாத்யாரே.

 சம்சாரத்தை பெட்டர் ஆஃப்னு சொல்றானே . அது சொம்மா பம்மாத்துக்குத்தான் சொல்லியிருப்பானுங்கோ. ஆனா வாத்யாரே நம்ம ஜோசியத்துல மட்டும் அது  100 சதவீதம் நெஜம் தான்.

உன் ஜாதகத்துல ஏழாவது ராசிய லக்னமா வச்சி பார்த்தா உங்க சம்சாரம் ஜாதகம் வந்துரும். அவிக ஜாதகத்துல ஏழாவது ராசிய லக்னமா வச்சி பார்த்தா உன் ஜாதகம் வந்துரும். அதாவது ஆண் ஜாதகம் + பெண் ஜாதகம் டிவைடட் பை 2 . இதான் கணக்கு.

Saturday, April 17, 2010

மனைவிகளை புரிந்து கொள்வது எப்படி ?

எந்த பெண்ணும் தாயாய், மகளாய், சகோதரியாய் ஓரளவேனும்  சக்ஸஸ் ஆகிறாள். ஆனால் நூற்றுக்கு 99.9 சதவீத  பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போகிறார்கள்.

( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே

 "த பாரும்மா!  நீ பேசிக்கலா மனுச ஜென்மம்.  ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.

ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.

ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.

இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.
ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.

இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.

அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.

அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா  கூட தோத்துப்போயிருவ.  So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க  வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.

முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.

ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.

அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ?  புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான்.  நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.

 நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன்  ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.

மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப  நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.

அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.

பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.
நாஸ்திதான்.

சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)

சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய்  வெளிப்படறப்போ)

நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு  நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.

உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.

சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !

1.மனைவியரின் மனதில்  செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.

(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம்  பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.
அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம்.  ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப்  மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.

(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச
பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)

5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.

( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே  தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய்  மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு,  ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)

6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.

(இதுக்கும் நீங்க தான் காரணம்.  நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.

பலான நேரத்துல கூட  இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி   டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம்  உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க,  தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .

இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.

7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)

8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.
(இதையெல்லாம்  நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)

9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.

பஞ்ச்:

எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் கெட காரணமான பெற்றோரும், புகுந்த வீட்டாரும், கணவன் மாரும்  திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்