Tuesday, September 14, 2010

மனைவி அமைவதெல்லாம் - 3

கடந்த பதிவுல நீங்க சுவர்.( கண்ணாலம் பண்ணிட்டா குட்டிச்சுவர்னு சில பேர் சொல்வாய்ங்க.அது முழு உண்மையில்லை) மனைவி சித்திரம்னு சொல்லியிருந்தேன்.



ஆமாங்கண்ணா உங்க மனைவியோட கேரக்டரை நீங்க தான் முடிவு பண்றிங்க.



பல்லாயிரம் ஆண்டுகளா பெண்ணினம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை வாழையடி வாழையா ஜீன்கள் வழியா அப்படியே தலை முறை தலை முறையா வருது. உயிர்மைல எஸ்.ராம கிருஷ்ணன் தரமணியில் கரப்பான்பூச்சிகள்னு ஒரு சிறுகதைல சொல்றாரு." நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையே கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல் நடந்துகொள்வதில்லை.



இந்த வரில நாய்களுக்கு பதில் பெண்கள். மனிதர்களுக்கு பதில் கணவர்னு மாத்திப்போட்டிங்கனா மேட்டர் ஓவர். ஒரு வீட்ல கணவன் ஸ்தூலமா இருக்கானா இல்லையாங்கறதோட சம்பந்தமில்லாம அவனோட இன்ஃப்ளுயன்ஸ் ஒவ்வொரு அங்குலத்துலயும் பரவியிருக்கும்.



"ஏய் யார்ரீ அது சோஃபா மேல ஈர டவலை போட்டது? உங்கப்பன் பார்த்தா செருப்பால அடிப்பான்"



"டேய் யார்ரா அது செருப்பை நடைல விட்டது. அதுக்குனு ஒரு அலமாரி இருக்குல்ல அதுல விட வேண்டியதுதானே உங்கப்பா வந்தா அர்ச்சனைதான்"



இதுலருந்து என்ன தெரியுது உங்க மனைவிய மட்டுமில்லை குழந்தைகளை கூட செதுக்கற சிற்பி நீங்க தான். அட்லீஸ்ட் நீங்க சுவர் அவிக ஓவியம். அண்டர்ஸ்டாண்ட்?



அது என்ன இழவோ தெரியலை. ஒவ்வொரு வீடும் சர்க்கஸ் மாதிரியும் கணவங்க எல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரியும் தான் இருக்காய்ங்க.



அப்போ தாய்குலமெல்லாம் பொறுப்பில்லாதவுகளா? மேட்டர் அப்படியில்லை. பொறுப்புங்கறது ஒரு பிணம் மாதிரி. யாரோ ஒருத்தரு சுமக்க வேண்டியதுதான். புதைக்க வேண்டியதுதான் இல்லாட்டி நாறிடும். அதை ஒரு தாட்டி லிஃப்ட் பண்ணிட்டா தாளி லைஃப் லாங் இறக்கி வைக்க முடியாது. புருசங்காரங்க விவரம் புரியாம கமாண்ட் பண்றேன் பேர்வழி அந்த பிணத்தை தூக்கி தலை மேல வச்சுக்கிட்டு அல்லாடறாய்ங்க.



அதுலயும் குடும்ப வாழ்க்கைல நாயடி படறவன் எவன்டான்னா எவன் பொறுப்பா இருக்கானோ அவனுக்கு தான் ஆப்பு. வேணம்னா பாருங்க குடிகாரன், கூத்திக்கள்ளன், பெண்டாட்டியெல்லாம் பொறுப்பா டெயிலரிங் எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை போஷிக்க ஆரம்பிச்சுர்ரா. ஆனால் பொறுப்பானவன் பெண்டாட்டிங்கதான் எம்.எல்.எம்லயும் , சீட்டுலயும், விமன்ஸ் க்ளப்லயும் சேர்ந்து லந்து பண்றாய்ங்க.



( சில கேஸ்ல புருசங்காரன் ஹேங் ஓவர்ல பெட் ரூம்ல படுத்துக்கிடந்தா கேபிள் டிவிகாரனோட அரட்டை அடிக்கறதும் உண்டு. ஆனால் இது எக்செப்ஷன் தான்)



புருசன் பொஞ்சாதில யாரு கமாண்ட் பண்றாய்ங்களோ அவிகளுக்கு ஆரோக்கிய குறைவு , ஆயுசு குறைவுல்லாம் சகஜம். நெம்பர் ஒன் , கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலிங்கறதெல்லாம் விருதுல்ல .. பொறுப்பு. பொறுப்புங்கறது ஆப்பு.



கிராமப்புறங்கள்ள பச்சையா சொல்வாய்ங்க " .........க்கற நாயை பார்த்தா பார்க்கிற நாய்க்கு கேவலம்" ஏற்கெனவே சொன்ன மாதிரி பொறுப்புங்கறது அதிகாரத்தை தந்தாலும், ஈகோ சேடிஸ்ஃபேக்சனை தந்தாலும் அது பிணத்தை தூக்கிட்டு போறமாதிரிதான். தோள் மாத்தினா மட்டும் போதாது ஆளும் மாத்தனும்.



இதை சொன்னதும் தாய்குலம் " அவருக்கு ஒன்னும் தெரியாது சாமி ..எல்லாம் நான் தான் பார்த்து பார்த்து செய்யனும்பாய்ங்க"



உங்களுக்கு சொன்னா நீங்க " அவளுக்கா பொறுப்பையா மாத்தி கொடுக்கிறதா.. கிழிஞ்சுது போங்க. டப்பா டான்ஸ் ஆடிரும்"னு சொல்விங்க.



வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான்.மனிதனோட அடிமனசு எதிர்க்கிறதும் மாற்றம் ஒன்னைத்தான். அந்த மாற்றம் இல்லேன்னா தற்கொலைக்கு தூண்டறதும் மாற்றம் இல்லேங்கற ஏமாற்றம்தான்.



அரசியல்ல எதிர்கட்சிக்காரவுக ஆளுங்கட்சிக்காரவுகளை சொல்வாய்ங்களே" முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு அது நம்ம எல்லாருக்கும் 100 % பொருந்தும்.

வேணும், வேணான்னு நம்ம எண்ணங்களின் அடுக்கு மாறி மாறி அமைஞ்சிருக்கு. இதுல எதுவுமே பக்கா கிடையாது. இந்த இயற்கையோட அடி நாதமே உயிர்ப்பே ஃப்ளெக்சிபிளிட்டியும் ,மாற்றமும் தான். அதுக்கு நம்ம வாழ்க்கையில இடமில்லைன்னா உயிர்ப்பு போயிரும்.



வாழ்க்கையில உயிர்ப்பு போயிட்டா எதிராளியோட ஈகோவை கொன்னு தான் உசுரோட இருக்கிறதை எதிராளிக்கு நிரூபிக்க வேண்டி வந்துரும் (கையோட கையா தனக்கும் நிரூபிச்சுக்கிறது - தான் உசுரா இருக்கிறதை) நாறிரும்.



ஷாட் கட் பண்ணா அடி,கடி ,உதை, ரத்தக்களறி , ரணக்களறி, ஆஸ்பத்திரி , ஹால் பஞ்சாயத்து, மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு... ஆக தாம்பத்யம் செழிக்கனும்னா மாற்றத்துக்கு இடம் தரனும். மாற்றத்துக்கு தயாரா இருக்கனும்.



வாழ்க்கைல உயிர்ப்பு இருக்கனும். அது எந்த இழவால கிடைச்சாலும் சரி. என் பெண்டாட்டி நாலணாவுக்கு பூ வாங்கி முக்காமணி நேரம் கட்டிக்கிட்டு கிடப்பா. அப்பாறம் இடுப்பு வலிக்கு முக்காலணா தைலம் தேச்சுப்போ. அதுல தான் அவளோட வாழ்க்கைக்கு உயிர்ப்பு வருதுன்னா வந்துட்டு போவட்டுமே.



தேவையோ இல்லையோ நீங்க ஃப்ரெஞ்ச் கத்துக்கங்க. ஜெர்மனி மொழி கத்துக்கங்க. உங்களுது டேபிள் ஒர்க்குன்னா ஃபீல்ட் ஒர்க் கத்துக்கிடுங்க. உங்களுது ஃபீல்ட் ஒர்க்குன்னா மொழி,ஓவியம் , இண்டோர் கேம்ஸ் இத்யாதில கான்சன்ட் ரேட் பண்ணுங்க.



ஒவ்வொரு மனசுலயும் ஒரு ரணம் இருக்கு. உங்க பார்வை,பேச்சு , நடவடிக்கைகளை வச்சு அந்த ரணத்தை கீறலாம், பெருசாக்கலாம். அல்லது மயிலிறகால தடவி விடலாம். நீங்க அவிக ரணத்தை கீறினா அவிக உங்க ரணத்தை கீறிவிடுவாய்ங்க.



உங்களுக்கு வீடுங்கறது சின்னதாவும், உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாம் ப்ளர்ராவும் தெரியும். தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம் லாம் பெருசாவும் தெரியும். இதுக்கு உங்க உடல் பலமும் அது தர்ர தன்னம்பிக்கையும் ஒரு காரணம்.



ஆனா அவிகளூக்கு வீடு, உறவுகள்,அக்கம்பக்கம் பெருசாவும் , தொழில்,வியாபாரம், ஆஃபீஸ்,ஃப்ரெண்ட்ஸ் , வெளியுலகம்லாம் சின்னதாவும் தெரியும்.



இதுக்கு அவிக உடல் ரீதியிலான பலவீனம், இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸும் ஒரு காரணம். மந்திரி சபைல உள் துறை, அயல் நாட்டுத்துறைன்னு ரெண்டிருக்கில்லா.. அதே போல நீங்க பொறுப்பை பிரிச்சிக்கிடனும். உள் துறைய அவிக பார்க்கட்டும், அயல் நாட்டுத்துறைய நீங்க பாருங்க. ஏன்னா வாழ்க்கைல ரெண்டுமே முக்கியம்.



சின்ன சின்ன பொறுப்புகளை மாத்திப்பாருங்க. உங்க ஆஃபீஸ் அட்டெண்டர் வீட்டு கண்ணாலத்துக்கு அவிகளை அனுப்புங்க. அவிக ஒன்னு விட்ட விரோதமாயிட்ட தம்பி கண்ணாலத்துக்கு நீங்க போய் வாங்க. மாற்றம் தான் உறவுகளுக்கு புத்துயிர் தரும்.



இடையில ஒரு கில்மா டிப்:



ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமின்மை பிரச்சினை வர காரணமே பலான மேட்டருக்குனு ஒரு அறையை, நேரத்தை ஒதுக்கினதுதான்னு நான் நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தை ப்ளாஸ்ட் பண்ணாலே வயாக்ரா இல்லாமயே ஆண்மை பொங்கும்.



திருமண வாழ்க்கை சீக்கிரமே கசக்க பல காரணங்கள் இருந்தாலும் அதீத எதிர்பார்ப்புகள் தான் முத காரணம். தி.வா இனிக்க எதிராளி என்னெல்லாம் செய்யனும்னு கற்பனை பண்ற மனசு அதுக்கு தான் என்ன பண்ணனும் நினைச்சுக்கூட பார்க்காது.



பொஞ்சாதி காலங்கார்த்தால எந்திரிச்சி குளிச்சுட்டு துளசி மாடத்துக்கு பூஜையெல்லாம் பண்ணிட்டு சன் ரைஸ் காஃபியோட எழுப்பனும்னா அதுக்கு எத்தனையோ தடைகள் இருக்கு. அந்த தடைகளை தகர்க்க வேண்டிய கடமை புருசங்காரனுக்கு இருக்கு. உ.ம் பாடி ராத்திரி வரை டிவில சேனலுக்கு சேனல் தாவி அலுத்த பிற்பாடு விடியல் 3 மணிக்கு மட்டுமே பெண்டாட்டிய சீண்டறது கூடாது. பொஞ்சாதிக்கு செல் ஃபோன்ல அலாரம் வைக்க கத்துக்கொடுத்திருக்கனும். காலங்கார்த்தால பச்ச தண்ணில குளிச்சா தலை பாரம், தலைவலி, மண்டை பீனிசம், கண்ணு மூக்குல நீர் வழியறது, வீசிங் இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரு கெய்சரோ, ஷாக் அடிக்காத எலக்ட்ரிக் ஸ்டவ்வோ வாங்கி வச்சிருக்கனும். மாசக்கடைசில கரண்ட் பில் வந்தா அதிர்ச்சியோ, எரிச்சலோ ஏற்படாத அளவுக்கு சம்பாதனை இருக்கனும்.



ஒன் வே ட்ராஃபிக் எல்லாம் சிட்டி போக்குவரத்து போலீசுக்குத்தான் தகும். குடும்ப வாழ்க்கைக்கு அல்ல.



அதீத எதிர்பார்ப்புகள் இல்லாம, மாற்றத்துக்கு சித்தமா, ஃப்ளெக்சிபிளா மேரீட் லைஃபுக்குள்ள என்டர் ஆனா வெற்றி நிச்சயம்னு சொல்ல முடியாட்டாலும் நாறாம இருக்கும்.



இன்னொன்னு தன்னையே மையப்புள்ளியா வச்சு ரோசிக்கிறது. தாளி எதிராளிக்குன்னு ஒரு கோணம் இருக்குமில்லையா?



"மதியத்துல என்ன பண்றே பன்னி மாதிரி ஹால்ல உருண்டுக்கிட்டு டிவி தானே பார்க்கிறே" இது உங்க கோணம்.



ஆனா அவிக கோணத்துல பாருங்க.. காலைல இருந்து காஃபிய குடிச்சு வயித்த ரொப்பிக்கிட்டு உங்களையும்,பசங்களையும் எழுப்பி, ரெடி பண்ணி, உங்களுக்கு டிஃபன் , குடிக்க தண்ணி,குளிக்க தண்ணி ப்ரிப்பேர் பண்ணி ஷூ, ஷூ லேஸ்லருந்து லைட்டர் வரை தேடிக்கொடுத்து, எல்லாரும் புறப்பட்டு போன பிற்பாடுதான் ஞா வரும் தான் கக்கூஸுக்கு கூட போகலைன்னு.



காதல் மண தம்பதிகள்:

லவ் பண்ற கேசெல்லாம் செவ்வாய் இன்ஃப்ளுயன்ஸ்லதான் பண்றாய்ங்க. செவ்வாய் யுத்த கிரகம். அவரு கமாண்டர் ஆஃப் தி ப்ளானெட்ஸ். எதிரி நாட்டுக்குள்ள நுழையறச்ச தன் படை பாலத்தை கடந்ததும் அதை வெடி வச்சு தகர்க்க சொல்லிர்ர பார்ட்டி. அதனால தான் நிறைய லவ்ஸ் எல்லாம் ராங் செலக்சனாவே இழவெடுக்குது.



லவ் பண்ற பார்ட்டிகளுக்கு என் சஜசன் " எவளை பார்த்தா இவ இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாதுன்னு தோணுதோ அவளை அவாய்ட் பண்ணிருங்க. இது ரிவர்ஸ் எஃபெக்ட் "



நீங்க லவ் பண்ற பொண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுர்ரதில்லை அவளோட அம்மாவையும் பாருங்க ( தப்பா நினைச்சுராத துரை - அவிக ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை )



ஏன்னா உங்க லவரும் அவிக அம்மா வயசுல அவிக அம்மாவ போலத்தான் இருப்பா.



இதை படிக்கிற நீங்க தாய்குலமா இருந்தா உங்க லவரோட டாடியையும் ஒரு தாட்டி பாருங்க. ஃபிசிக், பர்சனாலிட்டி, பேச்சு, நடவடிக்கை எல்லாத்தயும் அப்சர்வ் பண்ணுங்க. இன்னைக்கு விஜய் மாதிரி இருக்கிற உங்க லவர் அவனோட அப்பா வயசுல அவனோட அப்பனை போலவே மாறிட 100 சதம் வாய்ப்பிருக்கு.



அப்பாறம் முக்கியமான மேட்டர் பார்ட்டி அழகா இருக்கான்/க்காள்னு ஜொள்ளு விட்டுராதிங்க. இந்த அழகான பார்ட்டிகளோட சைக்காலஜி என்னடானா அழகா இருக்கிறதே தங்களோட பெரிய தகுதிங்கற நினைப்புல வேறெந்த நல்ல குணத்தையும் வளர்த்துக்கிட்டிருக்கமாட்டாய்ங்க.



ஜோதிஷ சாஸ்திரப்படி பார்த்தா லக்னம்தான் ஜாதகரோட உடல்,உள்ளம் ரெண்டையும் காட்டுது. லக்னத்துல உள்ள பாபகிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலைன்னா மனசை கூவம் மாதிரி நாற வச்சிருக்கும். சப்போஸ் பார்ட்டி கருப்பா,கட்டையா,குட்டையா , சாதாரண முகத்தோட இருந்தா அவர் ஜாதகத்துல லக்னத்துல உள்ள பாபகிரகங்கள் அவரோட உடலழகை மட்டும் கெடுத்து உள்ள அழகை விட்டு வைச்சிருக்க வாய்ப்பிருக்குங்கோ.



(அதே நேரத்துல அவலட்சணமா இருக்கிறவனெல்லாம்/ளெல்லாம் உத்தமன் உத்தமின்னு சொல்லலை. ஒரு சான்ஸ்.. ஒரு சாய்ஸ் இருக்குன்னு சொல்லவரேன். ஒருவேளை லக்னம் 100% டேமேஜ் ஆகியிருந்தா உடல் உள்ளம் ரெண்டுமே நாறியிருக்கலாம்)



ஒரு நா நானும் ஒரு முதிய நண்பரும் கிளி போல பெண்டாட்டி ,குரங்கு போல கூத்தியாரை பத்தி பேசிக்கிட்டிருந்தம். இப்படி அழகான பொஞ்சாதி இருந்தும், அவலட்சணமான கூத்திய வச்சு கூத்தடிக்கிற பார்ட்டிகளோட சைக்காலஜி பத்தி டிஸ்கஷன். அப்போ அவர் சொன்னாரு..



"அதெல்லாம் ஒன்னுமில்லிங்க முருகேசன்.. இவன் பெண்டாட்டி அழகு. அவள் இவனை பண்ண டார்ச்சருக்கு அய்யய்யோ அழகான பொம்பளையெல்லாம் இப்படித்தான் இருப்பாள் போலன்னு அரண்டு போயி ..அவலட்சணத்தை வச்சிக்கிறான்னாரு"



நெஜம் தான் போல.



அப்பன் ஆயி மேட்டர்ல இன்னொரு மேட்டரையும் நீங்க அப்சர்வ் பண்ணனும் அ என்கொய்ரி பண்ணனும். அது என்னடான்னா அவிக கண்ணாலம் எப்படி நடந்தது? லவ்வா? அரேஞ்ஜ்டா? எந்த இழவா இருந்தாலும் சுமுகமா நடந்ததா கத்தி குத்து எதாச்சும் நடந்ததா? இந்த டேட்டா எதுக்குன்னா உங்க கண்ணாலமும் அந்த கதியா நடக்க சான்ஸ் அதிகம்.



வமிச விருட்சம் பத்தி தெரியுமில்லை. கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்குமுங்கோ.. பை தி பை அது மொத கண்ணாலம் தானா? அவிக வமிசத்துல எவனாச்சும், எவளாச்சும் கண்ணாலத்துக்கு முந்தியே செத்திருக்கானா/ளா? பிள்ளையில்லாதவுக, குழந்தையே இல்லாதவுக ஆராச்சும் இருந்திருக்காய்ங்களா? அவிக வம்சத்துல துர்மரணம் ( தற்கொலை,கொலை, விபத்து) ஏதாவது நடந்திருக்கா? அகால மரணம் ( நாற்பது வயசுக்குள்ள செத்து போயிர்ரது) ஏதாச்சும் நடந்திருக்கா? இதையெல்லாம் டாலி பண்ணுங்க. அவிக சைட்ல மட்டுமில்லை..உங்க சைட்லயும் டேட்டா கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணுங்க.



ஏன்னா ஹிஸ்டரி ரிப்பீட்ஸுங்கற மாதிரி மேற்படி சம்பவங்கள் உங்க தலைமுறையிலயும் நடக்கலாமுங்கோ.. ரெண்டு பக்கமும் ஒரே ரேஞ்சுல இழவெடுத்திருந்தா நோ ப்ராப்ளம். யாருக்கும் புதுசா வர்ர பிரச்சினை ஒன்னும் கிடையாது. ஒரு சைட் மட்டுமிருந்தா ரோசிங்க. உங்க சைட்ல மட்டுமிருந்து கண்ணாலம் கட்டினா அது துரோகம். அவிக சைடு மட்டுமிருந்து கட்டினா அது தியாகம் - நீங்க வேற யாரையாச்சும் கண்ணாலம் கட்டினா இந்த இழவையெல்லாம் தவிர்க்கலாமே.



அடுத்து அவிக வீட்டை பாருங்க. வீடுங்கறது உயிரில்லாத பொருள் இல்லே. அதுல வாழற மனிதர்களோட ஃபிசிக்கல், சைக்கலாஜிக்கல் எக்ஸ்டென்சன். அவிக மைண்ட் செட்டை காட்டற சைக்கியாட்ரி ரிப்போர்ட். குப்பையும்,கூளத்தையும் வச்சிருக்கிறவன் மைண்டும் குப்பையா தான் இருக்கும். அதை விட்டுட்டு நான் போனா எல்லாத்தயும் மாத்திருவன்னு கனவு காணாதிங்க.



சனங்க எல்லாம் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் விலாசத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாரு. அவனவன் போய் சேர வேண்டிய விலாசத்துக்கு கரீட்டா போய் சேர்ந்துர்ரான்.



ஓஷோ சொல்வாரு :



சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை அடைஞ்சுர்ரான்.

தப்பான ஆளு சரியான வழில போனாலும் கோட்டை விட்டுர்ரான்.



ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை எல்லா இழவுக்கும் இதான் அடிப்படை விதி. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஏன்னா நீங்க தானே, உங்க கேரக்டர்தானே உங்க மனைவி கேரக்டரையும் டிசைன், பண்ணுது டிசைட் பண்ணுது



உடு ஜூட்.



(தொடரும்)

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் அருமை தல .........

    ஏன் தல ...இவ்வளவு அருமையா எழுதறீங்க ... நெறைய அரை லூசு -தனமான பதிவுளுக்கு எல்லாம் நெறைய கமெண்ட்ஸ் வருது ....ஏன் இந்த மாதிரி பதிவர் பதிவுகளை கமெண்ட்ஸ் கொடுத்து பதிவுலக மக்கள் ஊக்கு விப்பதில்லை .....

    நான் என்ன நினைக்கிறேனா.......பொய்ய சாப்பிட்டா தான் ஜீரணம் ஆகும் போல ....உண்மைய நெனைசாலே நெறைய பேருக்கு அஜீரண உணர்வு வந்துரும் போல.........

    ReplyDelete