ரெண்டு டாக்டர்களை வம்பிழுக்கிற இந்த பதிவோடயே வெளியாகியுள்ள இன்றைய விறு விறு சுறு சுறு பதிவுகள்
1.மசூதி -மந்திர் பிரச்சினைக்கு தீர்வு பதிவுக்கு வந்த ஒரு மறுமொழிக்கு என் விளக்கம்
2.அய்யர் தி கிரேட்டுங்கற பேர்ல ஒரு அராத்து போட்ட பதிவுக்கான எதிர் வினை
3. சித்தூரை வட்டமடித்த ஹெலிகாப்டர்
இனி கலைஞர் கவுசர் மேட்டருக்கு போயிரலாமா..
வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதான் பணத்தை அள்ளி வீசி தனியார் சேனல்ஸ்ல ஸ்பான்சர்ட் ப்ரோக்ராம்ஸ்ல யானை மேல ஏறிவந்து தரிசனம் கொடுத்து சுய தம்பட்டம் அடிக்கிறாரே. தேவி மாதிரி வார இதழ்கள்ள இரண்டு பக்கம் ஆப்ளிகேஷன் ஐட்டம் , ஒரு பக்கம் விளம்பரம்னு அசத்தறாரே. புதுசா கட்டிப்பிடி வைத்தியம்னு ஒன்னை ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. அதாவது மரத்தை கட்டிப்பிடிச்சா போதும் பலன் கிடைச்சுருமாம்.
இவர் தெய்வீக மருத்துவம்ங்கற பேர்ல ஒரு பத்திரிக்கையும் நடத்தறாரு. பத்து வருசத்துக்கு முன்னாடி தேவி வார இதழ்ல உதவி ஆசிரியர்கள் தேவைனு ஒரு விளம்பரம் வந்தது. கல்யாணமாகி 9 வருசம் ஆகி புது (?) பெண்டாட்டி மோகமெல்லாம் தீர்ந்து போய் "தாளி பைசால தான் பரமாத்மா இருக்காருங்கற மன நிலைல இருந்த நானும் அப்ளை பண்ணேன்.
(இந்த மன நிலை 2 வருஷத்துக்கு ஒரு தாட்டி வரும். பணம் வரவும் புது பிரச்சினைகள் வரவும் கரீட்டா இருக்க .அய்யய்யோ இந்த பணமும் வேணாம் இந்த லொள்ளும் வேணாங்கற முடிவுக்கு வந்துருவன்)
அவரோட மார்க்கெட்டிங்க் டெக்னிக் வெரி சிம்பிள். ரெண்டு கட்டு காசினி கீரைய எடுத்துக்கிட்டு காரை போட்டுக்கிட்டு சென்னை போயிருவாரு. அது சென்னை போ சேர்ரதுக்குள்ள வெயில்+ டீசல் சூட்டுக்கு கலைஞர் .........முகம் மாதிரி தொங்கி போயிரும். இருந்தாலும் அதை கலைஞருக்கு கொடுத்துட்டு ஒரு கலர் படம் எடுத்துக்கிட்டு வந்துருவார். மீடியால கலைஞரோட சிரிப்பார். உபரியா அப்பப்போ மூப்பனார் எட்ஸெட்ரா. அண்ணா திமுக ஆட்சி காலமாயிருந்தா இந்திர குமாரி. மறுபடி கலைஞர் ஆட்சி வந்துட்டா இ.கு படம் கார் ஷெட்டுக்கு போயிரும்.
இவரோட இன்னொரு ப்ரமோட்டர் ஞான சேகரன். அப்பப்போ சட்டமன்றத்துல காசினியை பத்தியும் ,காசினி டாக்டரை பத்தியும் கேள்வி எழுப்புவாரு.
தெய்வீக மருத்துவத்துல 9 மாதம் வரை குப்பை கொட்டினேன். அப்போ ஏதோ தோல் தொழிற்சாலைல வேலை பார்த்த கவுசர் எப்படி தெய்வீக மருத்துவரானார். கவுசரோட மூலிகை அறிவென்ன? அவர் வெற்றிக்கு பின்னாடி இருக்கிற சதி என்ன? அவருக்கு அரசாங்கம் கன் மேன் கொடுக்க காரணம் என்ன? (இப்பவும் இருக்காரா?) ஒரு கன்மேன் எப்படி தன்னை தானே சுட்டுக்கிட்டு செத்தாரு. ஊருக்கெல்லாம் மூலிகை வைத்தியம் பண்ற கவுசர் தனக்கு நோய் வந்தா மட்டும் எங்கே போவார்.
இவரோட படாடோபமான விளம்பரங்களை பார்த்து வந்த நோயாளிகள் எப்படியெல்லாம் ஏமாத்தப்பட்டாங்க. நக்கீரன்ல இவரோட வண்டவாளம் ஏன் தண்டவாளம் ஏறுச்சு. இதுக்கு பின்னாடி இருக்கிற கதைஎன்ன? அப்புறம் நக்கீரன் ஏன் கவுசர் கதைய ஃபாலோ அப் பண்ணல?
கவுசர் ஆஸ்பத்திரில ஏன் எல்லா எம்ப்ளாயிசும் பெண்களாவே இருக்காங்க. இதையெல்லாம் நேர்ல பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இதையெல்லாம் ஒரு தொடர்பதிவா போட்டா எப்படியிருக்கும்?
இவரோட பிசினஸ் ப்ரமோட்டிங் ஃபார்முலாவை மொக்கை பண்ணது சந்திரபாபுதான். தமிழ் நாடு போலவே ஆந்திராவுலயும் கடைவிரிக்கத்தான், தன்னோட பிரதாபங்களை தெலுங்குல டப் பண்ணத்தான் என்னை கட்டி அழுதுக்கிட்டிருந்தாரு.
ஆனால் இவர் போய் அரசு மூலிகை பண்ணையில பத்து நாள் போல தங்கியிருந்தும் சி.எம் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காம, வாந்தி பேதியாகி வாணியம்பாடிக்கு குப்பையா வந்து சேர்ந்தாரு.
அப்பாறம் இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணி ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டு வந்தாரு. இருந்தாலும் பாவம் கவுசருக்கு கதிகலங்கி போய் அந்த பாபத்தே வேணாம்னு விட்டுட்டாரு.
கவுசர் கெட்டு நொந்து போயிருக்கிற இந்த கால கட்டத்துல இந்த இழவையெல்லாம் தொடர்பதிவா போடறதை சமூக அக்கறை உள்ளவுக கேள்விகளா போட்டு தாக்கினா பதில் கொடுத்துட்டு சுட்டியா கழண்டுக்குவேன்.
உடு ஜூட்.
தேவையான பதிவு
ReplyDelete