அண்ணே வணக்கம்ணே ,
நீங்க மனைவி அமைவதெல்லாம் சீரியலை படிக்கிற அவசரத்துல இருந்தா Jump in to it. மத்தபடி இந்த தேவ ரகசியங்கள் ரெம்ப தத்துவார்த்தமா போயிருச்சு. உங்களுக்குள்ள ஆன்மீக தேடல் இருந்தா படிங்க. ஓரளவுக்கு யூஸ் ஃபுல்லா இருக்கும். பை தி பை இளம் பதிவர்களுக்கு சில யோசனைகளை தெரிவிச்சிருக்கேன். அவிக படிச்சு ஃபாலோ பண்ணா புண்ணியம் புருஷார்த்தம்
Now let us jump in to .......... தேவ ரகசியங்கள்
தேவ ரகசியங்கள் 2
எதையெல்லாம் வெளிப்படுத்தினா நான் சாபத்துக்காளாவேனோ, தரித்திரம் என்னை பிடுங்கி தின்னுமோ அற்பாயுசுல செத்து போயிருவனோ அதையெல்லாம் வெளிப்படுத்திர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். நேத்து இதே மாதிரியான சிவராத்திரி சந்தர்ப்பத்துல விழிப்பும் தூக்கமும் கலந்த நிலைல மனக்கண் முன்னாடி ஒரு கண்ணாடி தெரிஞ்சது. அதுக்குள்ள நான் பிணமா படுத்திருக்கிற மாதிரியான காட்சி தெரிஞ்சது. இன்னைக்கு அதே போன்ற நிலைல 15 நாள் தான்னு ஒரு குரல் கேட்டது. ( ஆடிட்டரி ஹெலூசினேஷன் இல்லை வாத்யாரே)
என்னை பை.காரன்னு டிசைட் பண்ணாலும் சரி, நான் சொல்றதுல உள்ள சத்தியத்தை கிரகிச்சு மேலும் மேலும் இந்த சத்தியங்களை வெளிப்படுத்த எனக்கு ஆன்ம பலத்தை கூட்ட எனக்காக பிரார்த்தனை பண்ணாலும் சரி. சொல்ல வந்ததை சொல்ல முயற்சி பண்றேன்.
என்னதான் இந்த பதிவு கடவுளுக்கு, படைப்புக்கு எதிரானதா இருந்தாலும் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துங்கற மாதிரி இதுக்கும் கடவுளோட அருள் தேவைப்படுது. பாண்டவருங்க பீஷ்மரை கொல்ல அவர்கிட்டேயே க்ளூ கேட்டுக்கலையா அது மாதிரி. இங்கே கடவுளை கொல்றது நம்ம உத்தேசமில்லே. கடவுள் பேரால இங்கன செலாவணில இருக்கிற பிரமைகளை, மூட நம்பிக்கைகளை ஒழிச்சுக்கட்டறதுதான்.
நிறைய பேரு என்ன நினைக்கிறாய்ங்கன்னா கடவுளை கும்புட்டா அவரு அத்தை கொடுப்பாரு இத்தை கொடுப்பாருன்னு தான்.
அப்படி ஏதாச்சும் உங்களுக்கு கிடைச்சிருந்தா ஒன்னு நீங்க ஆன்மீகத்தோட டோர் ஸ்டெப்லயே இருந்திருப்பிங்க. அல்லது உங்க பிரார்த்தனைக்கான பலன் உங்க சொந்த இயற்கைலருந்தே வெளிப்பட்டிருக்கும் ( ஆதாரம்: விவேகானந்தர்).
கடவுளை ஹரிங்கறாய்ங்க. ஹரின்னா என்ன அர்த்தம் பிடுங்கறவன். ( பௌராணிகர்கள் உலக துன்பங்களையெல்லாம் பிடுங்கிறவன்னு இட்டு நிரப்பி சொல்வாய்ங்க அதையெல்லாம் நம்பாதிங்க) கடவுள் பிடுங்கறவருதான். உங்க பேர்,புகழ், உடல் வலிமை, மன வலிமை, புத்தி பலம் எல்லாத்தயும் பிடுங்கறவருதான். ஏன் பிடுங்கறாரு?
யத்பாவம் தத்பவதின்னிட்டு உங்களையும் தன்னை போல மாத்த பிடுங்கறாரு. அவர் அனாமி - பேரில்லாதவர் அதனால உங்க பேரை நாஸ்தி பண்ணிருவாரு. அவர் அசரீரி - உருவமில்லாதவர் அதனால உங்க உருவத்தை குலைச்சுருவாரு. அவருக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி பொஞ்சாதி, புள்ளைக்குட்டி யாருமில்லை. உங்களுக்கும் எதுவும் இல்லாம பண்ணிருவாரு.
இதெல்லாம் பிடுங்கப்பட்ட பிறவு இருக்கிற நீங்க தான் உண்மை . இதெல்லாம் சொம்மா கவரிங்.
"அய்.. என் ஃப்ரெண்டு பத்துவருஷமா சாமி கும்பிடறான் . நல்லாருக்கானே"
"அட எங்க சித்தப்பா 25 வருஷமா கோவிலுக்கு போய் வராம பச்ச தண்ணி கூட குடிக்கமாட்டாரு . நல்லாருக்காரே"ன்னெல்லாம் கிராஸ் பண்ணுவிக.
அவிக ஆன்மீக கோட்டையின் அகழியை கூட தாண்டியிருக்கமாட்டாய்ங்க அதனால தான் ஒரு இழவும் நடக்கலை.
ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஒரு இடத்துல கேட்கிறார். " கடவுள் ஒரு அமிர்தம் நிறைஞ்ச பாத்திரம்னு வை நீ எப்படி சாப்பிடுவே?"
அதுக்கு விவேகானந்தர் சொல்றாரு " பாத்திரத்தோட உதட்டு மேல சாக்கிரதையா நின்னுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சுவைப்பேன்" விவேகானந்தர் மாதிரி யோகியே உதட்டு மேல நின்னுன்னு சொல்றாரு.
நாம இந்த உலக வாழ்க்கைல ஆன அநியாயம்,அக்குறும்பு எல்லாம் பண்ணிக்கிட்டு நடக்கிற அதர்மத்தையெல்லாம் சகிச்சிக்கிட்டு பாவ மூட்டைய சுமந்துக்கிட்டு கிடக்கோம் நாம என்னான்னு சொல்லனும்? அய்யய்யோ அந்த பக்கம் கூட திரும்ப மாட்டேம்பான்னுதானே சொல்லனும்.
நீங்க நினைக்கிற மாதிரி கடவுள் கருணைக்கடலெல்லாம் இல்லே. வில்லன் நெம்பர் ஒன். பயங்கர சாடிஸ்ட்.
நீங்க அந்தாள கண்டுக்காத இருக்கிற வரை எல்லாமே உங்க கண்ட் ரோல்ல இருக்கிற மாதிரி ஒரு பிரமையை கொடுத்து வச்சிருப்பாரு. நீங்க அவரை கண்டுக்கனும்ங்கற நேரம் வந்ததும் ( இதை ஃபிக்ஸ் பண்ணதும் நீங்கதான். அப்போ நீங்க ஆன்ம ரூபத்துல இருந்திங்க. கடவுளுக்கு சமமா இருந்திங்க ) எல்லா சர்க்யூட்லயும் புகை வர வச்சிருவாரு. பைத்தியமா அடிப்பாரு.
ஒரு வழியா நீங்க ரூட்ல விழுந்து அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சா போதும் மொதல்லஉங்களை கழட்டிவிட எத்தனை வழி இருக்கோ எல்லா வழியையும் பார்ப்பாரு. கோவில்,குளம், தானம்,தர்மம் இப்படி ஏதோ ஒரு ஸ்டாப்ல உங்களை இறக்கி விட்டுருவாரு. நீங்க உங்க டெஸ்டினேஷனை மறந்துட்டு மேற்படி ஐட்டங்க தான் உண்மையான ஆன்மீகம்ங்கற பிரமைல வாழ்க்கையை வீணாக்கிருவிங்க.
ஏன் இப்படி சூ காட்டி விட்டுர்ராருன்னா இந்த பாதையில தொடர்ந்து பயணம் பண்றவனுக்கு மேட்டர் புரிஞ்சு போவுது இந்த வாழ்க்கைங்கற திரைக்கதைக்கு ஆசிரியர் கடவுள் இல்லே. நாமதான். நாம நினைச்சா காட்சிகளை கூட்டலாம் குறைக்கலாம். ஒன் லைனையே மாத்தலாம்.
இது கடவுளுக்கு விருப்பமில்லே போலும். சரிய்யான ஈகோயிஸ்டுப்பா.
( ஆன்மீக பாதையெங்கும் லோட் லோடா ஃபெவிக்கால் கொட்டி வச்சிருக்குங்கோ. காலை வச்சிங்க பச்சக்குனு ஒட்டிக்கும். தாளி ஒரு அடி எடுத்து முன்னே வைக்க முடியாது)
இப்போ என் கேஸையே பாருங்க 1967 முதல் 1984 வரை எனக்குள்ள எந்த வித கேள்வியும் கிடையாது. க்ளாக் வைஸ் லைஃப். 1986ல கூட ஏதோ இந்த செக்ஸ் செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் விளைவிக்கிறாப்ல இருக்கே இதை ஒரு கை பார்க்கனும்ங்கற எண்ணத்துலதான் சொம்மா வேடிக்கை பார்க்க ஆன்மீகத்துல இறங்கினேன்.
பல்ப் மாட்டிக்கிச்சு. அங்கன இருந்து நாயடி பேயடி கொடுத்து இரும்பு பழுக்க காஞ்சு போச்சு. இன்னம் ஒரே அடிக்கு ஷேப் வந்துருங்கற ஸ்டேஜ்ல 2007 ல சின்ன டர்னிங் பாயிண்ட். அதாவது சூ காட்டி விட்டுர்ரது.
அதுக்கு முந்தி அடுத்த வேளை சோத்துக்கு தவிர வேற எதுக்கும் ஸ்கெச் பண்ணாம சதா சர்வ காலம் அந்த ஆளையே நம்பிகிட்டு அந்தாளையே தியானம் பண்ணிக்கிட்டு நெருப்பு நெருப்பு மாதிரி இருந்தேன்.
என்ன பண்ணாரு தினத்தந்தியை சூ காட்டி டைவர்ட் பண்ணாரு. என்னடா சாக்கு கிடைக்கும்னு தேடி தேடி சாக்கு கிடைச்சதும் நான் அதை உதறித்தள்ளிட்டன். இருந்தாலும் அன்னைக்கு பிடிச்ச சூடு இன்னை வரை ஆறலை. பொருளாதார ரீதியில பெருசா பிரச்சினை இல்லாம ஸ்லோ அண்ட் ஸ்டெடி டெவலப்மென்ட்ஸ்.
சனம் ஏன் இத்தனை மந்தமா இருக்காய்ங்க, பணத்துக்கு ஏன் இத்தனை இம்பார்ட்டன்ஸ் தராய்ங்கன்னு சமீப காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். பணம் வர வர பல மெல்லிய உணர்வுகள் காணாம போயிருது. பழைய ஞா மந்தப்பட்டு போகுது. மனுஷன் ஒரு கூட்டுக்குள்ள அடங்கிர்ரான்.
பசியா இருக்கிறவன் கண்ணுக்கு இட்லி ஒரு சுத்து பெருசா தெரியறாப்ல பசி தீர்ந்துட்டவன் கண்ணுக்கு அது ஒரு சுத்து சின்னதா, எதிராளியோட பசி சில்லியா தோணும் போல.
தமிழமுதம் கூகுல் குழுமத்துல இந்தியாவுல வறுமையே இல்லேன்னவுக நிலையும் இதான் போல. ஆனால் பை தி கிரேஸ் ஆஃப் காட் நமக்கு ஞா சக்தி கொஞ்சம் அதிகம். பழசை மறக்கறதா இல்லை. கொஞ்சமா முக்கினா ஒட்டு மொத்தமா ஞா வந்துருது.
(நம்ம விஷயத்துல பணம் சேர சேர உணர்வுகள் மந்தமாகலிங்கண்ணா வர வரன்னு வேணம்னா வச்சிக்கலாம். இன்னைக்கும் நாம ஏக் தின் கா சுல்தான் தான். 20 வருஷம் 100 சதம் ஆஸ்திகனா , இறை சக்தியையே நம்பி வாழ்ந்துட்டு கடைசி காலத்துல நாஸ்திகனா மாற விரும்பல்லே. நாம விதைக்கறதுமில்லே அறுக்கறதுமில்லே சேமிக்கிறதுமில்லே )
இது வரை இந்த சப்ஜெக்டுல சனங்க சொல்லி வச்சதெல்லாம் பாதி உண்மைகள் தான். முழு உண்மைய சொன்னா ஜேஜி கோச்சுக்கும்னு சொல்லவே இல்லை பயந்தாகொள்ளிங்க.
நாமதான் தற்கொலைப்படையாச்சே. அதான் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கோம். உண்மையான ஆன்மீகம் உங்களுக்குள்ள பூக்கனும்னா உங்க உடல்,மன,புத்தி பலங்களால தீர்க்க முடியாத பெரிய பிரச்சினை ஒன்னு வரனும். நீங்க மேற்படி உடல்,மன,புத்தி பலங்களால முழு மூச்சா முட்டி மோதி ஃபெயில் ஆகனும். அப்பத்தான் புது புது கதவுகள் திறக்குது.
அப்படி அந்த கதவுகள் திறந்ததன் விளைவா உங்க லௌகீக வாழ்க்கைல ஒரு சில சவுகரியங்கள் கூடும் அதுகள்ள மதி மயங்கிட்டா திறந்த கதவுகள் படக்குனு மூடிக்கும். இன்னைக்கு நான் எழுதற விஷயங்கள்ள சிலதை பல காலமா சலூன்லயும் டீக்கடையிலும் பல வருஷங்களா சொல்லிக் கிட்டு இருந்திருக்கேன்.இல்லேங்கலை. ஆனால் இப்போ எழுதிக்கிட்டிருக்கிற பல விஷயங்களோட ஃபார்ம், சாரம், வே ஆஃப் ப்ரசன்டேஷன் எல்லாம் அந்தந்த நொடி ஸ்ட்ரைக் ஆனதுதான். ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்காக தொடர்பு கொள்றவுகளுக்கு தர்ர பலன்,பரிகாரம் எல்லாமே கடந்த கால சாதனைகளின் பலன். இந்த பலன் எக்ஸாஸ்ட் ஆயிட்டே வந்ததுன்னு வைங்க.. கதை கந்தலாயிரும்.
ஆன் லைன் ஜோதிட ஆலோசனை அறிவிப்பால பணம் வருது இல்லேங்கலை. ஆனா அவிகளுக்கு பலன் அனுப்பறதால என் ஆன்ம சக்தி விரயமாறதை என்னால உணரமுடியுது. இதையெல்லாம் ரீசார்ஜ் பண்ணனும்னா இன்னொரு 20 வருஷம் தேவைப்படுமோ என்னமோ?
என் அனுபவத்துல இந்த மேட்டர்ல நான் உங்களுக்கு சொல்ல விரும்பறது ஒன்னுதான். நீங்க பார்க்கிற உலகம் வேற . உங்க கண்ணுக்கு தெரியாத இன்னொரு உலகம் இருக்கு. அக உலகம் ,புற உலகம்னு வச்சிக்கலாம்.
புற உலகத்துல நீங்க எதை வளர்ச்சின்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் அக உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதான். ஆனால் அக உலக வளர்ச்சி உங்க புற உலக வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு உலக வாழ்க்கைங்கறது பலாப்பழம் மாதிரி. இதை பிளந்து சுளையெடுக்கிறதுக்கு முந்தி ஆன்மீகம்ங்கற விளக்கெண்ணையை பூசிக்கனும். அப்பத்தான் பிசின் ஒட்டாது.
அக உலகுல மட்டுமில்லை , புற உலகுலயும் எல்லாத்தயும் தீர்மானிக்கிறது உங்க எண்ணம் தான். ( ஆன்ம வடிவத்துல இருந்தப்ப நீங்க) அந்த எண்ணம் சுய நலம் கலக்காததா இருந்தா டூ இன் ஒன் கணக்கா தூள் கிளப்பலாம். இல்லேன்னா நாஸ்திதான்.
ஆன்மீக முன்னேற்றம்ங்கறது ஏதோ ஃபிக்ஸட் டிப்பாசிட் மாதிரின்னு ஒரு எண்ணமிருக்கு. அது கூட தப்புத்தான். நாம தேனிரும்பு துண்டு மாதிரி இதுல கடவுள் அருள்ங்கற மின்சாரம் பாயற வரைதான் நாம காந்தம். மின்சாரம் பாயலைன்னா ஷெட்டுதான்.
நான் பணம்,பவிசுக்கெல்லாம் எதிரி கிடையாது. அது எஸ்.பி அக்கவுண்ட்லருந்து ட்ரா பண்ண மாதிரி இருந்தா ஓகே. ஆனால் நிறைய பேர் விஷயத்துல அது கரண்ட் அக்கவுண்ட்ல வாங்கின ஓவர் ட்ராஃப்ட் மாதிரி இருக்கிறதுதான் இம்சை.
வெற்றி கிரகங்களோட வேக்குவத்தை அதிகரிக்கும். தோல்வி குறைக்கும் . வெற்றி கருமத்தை கூட்டுது. தோல்வி அதை தொலைக்குது. இந்த படைப்புல இருந்து தன்னை வேறா நினைக்கிறவன், சுய நலத்தோட செயல் படறவன் கிரகங்கள் காலடில பந்து. இந்த படைப்புல தன்னை பிரிக்க முடியாத பாகமா நினைக்கிறவன் பொது நலத்தோட செயல்படறவன் சுதந்திரன்.
வாழ்க்கையில எதை இழந்தும் காப்பாத்திக்க வேண்டிய அம்சம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்கக்கூடாததும் சுதந்திரமே. கடவுளோட கட்டுப்பாட்டுலருந்து விடுபடனும்னா அதுக்கு ஒரே வழி அவரை பர்ஃபெக்டா புரிஞ்சுக்கறதுதான். அவர் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்காரு. இயற்கைய புரிஞ்சிக்கங்க. இயற்கையோட இயைந்து வாழும் வாழ்வை மேற்கொள்ளுங்க. சூரியனோடவே விழிதெழவும், சூரியனோடவே கூட்டிலடங்கவும் பழகுங்க. காற்றுக்கும்,மழைக்கும், வெயிலுக்கும் உங்க உடலை ஒளிக்காதிங்க. உங்க பாடியே ஒரு செல் ஆண்டெனா மாதிரி. அது அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்துல நனைய விடுங்க. காய விடுங்க. காத்தாட விடுங்க.
காப்பவன் இழப்பான். இழந்தவன் பெறுவான். மரிப்பவன் பிறப்பான். தேடுபவன் தவற விடுவான். தவற விட்டவன் பிடிப்பான். என்ன.. ஒரு இழவும் புரியலையா? ஹும் நானும் ஏழேழு ஜன்மமா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்களும் கேட்டுக்கிட்டுதான் இருக்கிங்க இதை அப்போ தவற விட்டுட்டு கடைசியா இன்னொரு தாட்டி கேட்கத்தான் பிறவியெடுத்து வந்திங்க.இருந்தாலும் ருசிக்கலை . நான் என்ன பண்ண?
அதுக்குத்தான் இஸ்லாம் கடவுளை மாகிர் ங்குது. மாகிர்னா சதிகாரர்களுக்கு சதிகாரன்னு அர்த்தமாம். பின்லாடனை கூட பிடிச்சுரலாம். கடவுளை தவற விடவே அதிகம் வாய்ப்புண்டு.
அந்தாளு உங்களுக்கு கடன் பட்டிருந்தாலும் நீங்க நவதுவாரத்துலயும் புகை வந்துக்கிட்டு கடிச்சு குதறிர்ர மூட்ல இருப்பிங்க பாரு அப்பத்தான் இந்த மாதிரி பதிவை கண்ல பட வச்சு தூத்தேரிக்க ஒரு இழவும் புரியலைன்னு ஆல்ட் எஃப் ஃபோரை அழுத்த சொல்வாரு.
வீட்டு நிறைய கடவுள் படங்களை மாட்டி வச்சுட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி கிடைக்கும்னு நினைக்கிறாய்ங்க. ஆனால் அதெல்லாம் ப்ளாக் ஹோல் மாதிரி உங்க சக்தியை எல்லாம் உறிஞ்சுக்கும். அப்பால உங்க கிட்ட இருந்து கிரகிச்சுக்கிட்ட சக்தியை வச்சே உங்கள்ள மிச்சம் மீதி இருக்கிற சக்தியையும் உறிஞ்சும். அப்பத்தான் அசலான உங்களை உங்களுக்கு அடையாளம் தெரியும்.
(சொம்மா ஷோவுக்கு வச்சிருந்தா நோ ப்ராப்ளம் - பை மிஸ்டேக் பக்தியோட வணங்கறது தியானிக்கிறதுன்னு இருந்திங்கனா மட்டும் கதை கந்தல்தான்)
//ஏன் இப்படி சூ காட்டி விட்டுர்ராருன்னா இந்த பாதையில தொடர்ந்து பயணம் பண்றவனுக்கு மேட்டர் புரிஞ்சு போவுது இந்த வாழ்க்கைங்கற திரைக்கதைக்கு ஆசிரியர் கடவுள் இல்லே. நாமதான். நாம நினைச்சா காட்சிகளை கூட்டலாம் குறைக்கலாம். ஒன் லைனையே மாத்தலாம்.//
ReplyDeleteஉண்மை தான் தல ....
//சனம் ஏன் இத்தனை மந்தமா இருக்காய்ங்க, பணத்துக்கு ஏன் இத்தனை இம்பார்ட்டன்ஸ் தராய்ங்கன்னு சமீப காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். பணம் வர வர பல மெல்லிய உணர்வுகள் காணாம போயிருது. பழைய ஞா மந்தப்பட்டு போகுது. மனுஷன் ஒரு கூட்டுக்குள்ள அடங்கிர்ரான். //
உண்மை தான் தல ....
Really Wonderful One......