Friday, September 17, 2010

ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய்

அண்ணே வணக்கம்ணே,
ஆண்,பெண்கள் அலிகளாய் ,மலடியராய் ங்கற இந்த பதிவு மட்டுமல்லாது கேள்வி பதில் ங்கற ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேன். படிங்க. இன்னைக்கும் மனைவி அமைவதெல்லாம்தொடருது. ( ஆறாவது அத்யாயம்)

என் பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு தனிக்காட்டு ராசா வருத்தப்பட்டிருக்காரு. 100 பேர் நினைச்சதுதான் ஒருத்தர் வாய் வழியா வெளிய வரும். மத்த 99 பேரும் கமெண்ட் போட்டா கூட எங்கயோ போயிரும்.

மறக்காம கமெண்ட் போட்டுருங்கண்ணா..இது ஏதோ அதிர்ச்சி மதிப்பிற்காக வைத்த தலைப்பல்ல. உயிர்களின் அடி நாதம் படைப்புக்கான துடிப்பு. அதன் வெளிப்பாடே செக்ஸ். மக்கள் தலைவனை முன்னிறுத்தி அவன் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் மக்களும் படைப்பை பின்னிருத்தி  செக்ஸை பிரதானப்படுத்தி பின் அதை ஏறக்குறைய தடைப்படுத்தி ஒரு கதியா(க்)கி விட்டார்கள். படைப்பு என்றால் அது வெறுமனே சந்தானாபிவிருத்தி மட்டுமல்ல. படைப்பு என்றால் அது மனதின் அடியாழங்களில் புதைந்துள்ள படைப்பு வேட்கையின் ஸ்தூல வெளியாக்கம் . ஒரு கயிற்று கட்டிலை எடுத்துக்கொள்ளுங்களேன். அதை செய்பவன்/செய்விப்பவனின் டச் அதில் இருக்கும்.  அதன் மேல் படுப்பவனுக்கு இருக்கக்கூடிய பிருஷ்டம், தொந்தி,விரை வீக்கம், கால்களின் நீளம் முதுகின் அகலம் இத்யாதியை மனதிலிருத்தி செய்யப்பட்டிருக்கும். அதை செய்வதில், செய்விப்பதில், அதில் படுப்பதில் கிடைக்கும் கிளுகிளுப்பு கில்மா வேலைகளிலோ , அஜால் குஜால் வேலைகளிலோ கிடைப்பது அரிது. ஆனால் இன்று?

எவனோ ஒரு மயிர் பிடுங்கி ஏ.சி அறையில் சராசரியை வைத்து போட்ட பென்சில் கோடுகள் உயிர் பெற்று ஜஸ்ட்,கேவலம் வெறும் பணத்தை வீசி பொறுக்கிக்கொண்டு வந்து படுக்கு இரட்டை கட்டிலில் ஆண்மை பொங்குமா என்ன? நெவர் !

ஒரு குடும்ப தலைவி எப்படா விலை குறையும், எப்படா வெயில் காலம் வரும் என்று காத்திருந்து தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி இடுப்பு வலிக்க, துடை வலிக்க, முதுகு குறுக்கில் மின் வெட்ட வடாம் செய்யும் போது அது ஏறக்குறைய ஒரு பிள்ளை பேற்றுக்கு சமமான த்ரில்,சஸ்பென்ஸ், புளங்காகிதம் ஆச்சி மசாலா ,பேச்சி மசாலாவில் ஏது?

ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய் வாழ்ந்து மடியும் இந்த காலத்தை இருண்ட காலம் என்பதா? வாழ்க்கையிலான ஜீவன்  தடம் புரண்ட காலம் என்பதா?  இந்த கணம் எனக்கு ஜி.டி நாயுடு வேலை என்ற பிரயோகம்  ஞா வருகிறது.

எம்.ஜி.ஆர் வேலைன்னா என்னன்னு நான் புதுசா சொல்ல தேவையில்லை. ஆனால்  ஜி.டி நாயுடு வேலைன்னா இன்னைக்கிருக்கிற தலை முறைக்கு சொல்லியே ஆகனும். இவர் கோயமுத்தூர் காரர் . இன்னைக்கு அதிரடி விலைகுறைப்புன்னு பம்மாத்து பண்றாய்ங்களே அதை ப்ராக்டிக்கலா நிஜமாக்கினவர் ( குறைந்த விலை ட்ரான்ஸிஸ்டர்) பெயர் ஜி.டி நாயுடு. (கோபால்சாமி துரைசாமி நாயுடு)  மக்கள் விஞ்ஞானின்னு இவருக்கு ஒரு பட்டம் உண்டு. தமிழ் வாணன், வேலூர் மருத்துவர் இரா.கண்ணப்பர் எழுத்துகள் மூலமா இவரை பத்தி அவ்வப்போது படிச்சிருக்கேன். மொத்தத்துல பெருசா படிக்காதவர். அதே நேரத்துல டெக்னிக்கலா நிறைய புரட்சி பண்ணவரு. இவரை பத்தி இன்னம் விவரமா தெரிஞ்சுக்க விரும்பினா இங்கன அழுத்துங்க.

இவரோட ஞா வர காரணம் இருக்கு.  நேத்திக்கு என் மகள் ஒரு எலக்ட் ரிக்கல் ஸ்டவ் வாங்கியாந்தா. விலை ரூ 1,600  நாம குடியிருக்கிற வீடு நாட்  நாட்ல கட்டின வீடு. ஒயரிங்னா ஒரே ஒரு ஸ்விட்ச் போர்ட் அதுல ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.ஆனால் ஒயர் எல்லாம் அந்த காலத்து ஒயர். ரூ 150 க்கு வாங்கின பாடாவதி கரண்ட் ஸ்டவ்வையே தாங்குச்சுன்னா பார்த்துக்கங்களேன். அந்த ப்ளக் பாயிண்ட்லருந்துதான் சகலத்துக்கும் கனெக்சன் எடுக்கனும்.

புதுசா வாங்கி வந்த எ.ஸ்டவ்ல தாயும் மகளும்  பால் காய்ச்ச முற்பட்டப்ப நான் கவுரதையா " யம்மாடி மொத்த கனெக்சனையும் பிடுங்கிட்டு ப்ளக்ல போட்டு செய்ங்க" ன்னு சொன்னேன். சனம் கேட்கலை. சில்க் வயர் போட்டு இழுத்து ஏற்பாடு பண்ண  ஸ்விட்ச் போர்டுல செருகினாய்ங்க. என்னாகும்? டுபுக்னு ஒரு சத்தம்.

அப்பாறம் என் மகளுக்கு சில்க் வயருக்கும், 1.18 வயருக்கும் உள்ள வித்யாசங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு சொல்ல வேண்டியதாயிருச்சு.  இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஜி.டி. நாயுடு ஞா வந்தாரு.

சாதாரணமா டேபிள் ஒர்க் பண்றவுகளுக்கு இந்த டெக்னிக்கல் லைன்ல டச் இருக்காது,விருப்பமும் இருக்காது. கொடி கயிறு கட்டக்கூட எலக்ட் ரீஷியனையோ ,ஆஃபீஸ் அட்டெண்டரையோ கூப்பிடற கேசுங்க தான் அதிகம்.

அதென்னமோ (விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே)  நமக்கு மட்டும் டெக்னிக்கல் லைன்ல ரொம்ப இன்டரஸ்ட். இந்த இன்டரஸ்ட் எப்படி வந்ததுன்னா மொதல்ல என் அப்பாவை சொல்லனும். அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் அதுக்கு முந்தி லைசென்ஸ்ட் சினிமா ஆப்பரேட்டர். அமெச்சூர் ஃபோட்டோ கிராஃபர், ஹவுஸ் ஒய்ரிங் வேலையெல்லாம் நல்லாவே செய்வார்.

இங்க் பேனாவை வாங்கி முள்ளோட முனைய உடைச்சு  சந்தனக்கல்ல உரசி உரசி அதை மழுங்க செய்து எழுதுவாரு பாருங்க. அந்த  எழுத்து ஏறக்குறைய  ப்ரிண்டட் ஃபான்ட்  மாதிரியே இருக்கும்.

அந்த காலத்து வால்வு ரேடியோ ஹால்ல இருக்கும். நாங்க படுத்துக்கறது இந்த கோடில இருக்கிற பூஜை ரூமுன்னா இங்கன ஒரு ஸ்பீக்கர் அரேஞ்ஜ்  பண்ணிருவாரு. ( அந்த காலத்து வால்வு  ரேடியோவை  இடம் பெயர்க்கனும்னா ஆஞ்சனேயரே யோசிப்பாருங்கோ). ஸ்பீக்கர்க்கு ஒரு ஸ்விட்ச் இருக்கும். எங்கப்பாவோடஜி.டி நாயுடுவேலைகள் பத்தி சொல்ல நிறைய  இருக்கு. அதையெல்லாம் அவ்வப்போது சொல்றேன்.

இப்போ அவருக்கு எப்படி இதுல இன்டரஸ்ட் வந்ததுன்னு பார்ப்போம். அவரோட ஃப்ரெண்ட்ஸ் தான் இதுக்கு காரணமா இருந்திருக்கனும். ஒருத்தர் ஏ.சி.செங்கல்ராய நாயக்கர். இவர் சிமெண்ட் ஸ்லாப், பைப்ஸ், மொசைக் விற்பன்னர். இன்னொருத்தர் தசரத  நாயுடு. இவர் ஆத்தோரம் மாவு மிஷின் வச்சிருந்தார். ( ஆனா பயங்கர விஞ்ஞானி காயலான் கடைதான் இவருக்கு சுவர்கம். தன் மிஷினோட ப்ளேடுகளுக்கு கூர் திட்ட இவரே ஒரு லேத் சொந்தமா ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்தார்னா பாருங்க. உபரியா  ரசனையோட புறா வளர்ப்பாரு) 

இவிகளுக்கிடையில எப்படி நட்பு வந்ததோ நமக்கு தெரியாது.  ஆனால் இன்னைக்கு மாதிரி வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. எங்கப்பா வெளியூர்ல இருந்தப்ப நாங்க குடியிருந்த வாடகை வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ண சொல்ல, அந்த வீட்டையே வாங்கி எங்கம்மா பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாய்ங்கன்னா பாருங்க. அப்பாறம் எங்கப்பா வந்து என்னை கடன் காரனாக்கிட்டிங்களேடான்னு குதிச்சதும், வீடு வாங்க செலவழிஞ்ச பணத்தை மாசாமாசம் அடைச்சதும்  வேற விஷயம்.

எங்க வீட்டோட ஏரியா 19X64 இதுக்கு சிமெண்ட்ல த்ராய் போட்டு அதும்மேல சிமெண்ட்  ஸ்லாப் போடறாப்ல ப்ளான். சுவர் எழுப்பி, த்ராய் எல்லாம் ஏத்தி உட்கார வச்ச பிறவு  ஒரு  நாள் எஸ்டேட்ல இருந்து ஸ்லாப்களை லாரில கொண்டு வந்து இறக்கினாய்ங்க. ஸ்லாபுகளை ஏத்தி மேற்படி ஏரியாவை மூட எத்தீனி நாளாச்சுங்கறிங்க? கரீட்டா 24 ஹவர்ஸ். அந்த மாதிரி பக்கா ப்ளானிங்.

ஒரு சங்கதி சொன்னா நம்பமாட்டிங்க. எங்க சித்தப்பு ஜீப் கத்துக்கறேன்னு போய் கலெக்டர் பங்களா காம்பவுண்டு சுவரை  வாஸ்து சரியில்லைன்னோ என்னமோ  ஏதோ ஒரு மூலைல இடிச்சு தள்ளிட்டு  வந்துர ராத்திரியோட ராத்திரியா கல் வச்சு சுவர் எழுப்பி பூசு வேலை செய்து சுண்ணாம்பும் அடிச்சு விட்டுட்டு வந்துட்டாய்ங்கன்னா பார்த்துக்கங்களேன். நாளிதுவரை மேற்படி சம்பவம் கண்டு பிடிக்கப்படலை ( நீங்க யாரும் புண்ணியம் கட்டிக்கலைன்னா சரி சுவரை இடிச்ச சித்தப்புவும் காலி- சுவரை கட்டினவுகளும் காலி ).

அடுத்து எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவுக பழனி - கிட்டு பாய் .பழனி டயர்
ரீ ட்ரேடிங் கம்பெனி குடும்பத்தை சேர்ந்தவன். வன்னியர் குலத்தோன்றல் . கிட்டு பாய் ஆட்டோ ட்ரைவர் கம் ரேடியோ மெக்கானிக்.

4 ,5 க்ளாஸ்ல படிக்கறச்ச க்ளாஸ்ல க்ரூப்ஸ் பிரிப்பாய்ங்க. காந்தி க்ரூப்பு, நேரு க்ரூப்புன்னு பேரிருக்கும். ஒரு அட்டைல வெள்ளை காகிதம் ஒட்டி க்ரூப் பேரெழுதி தலைவன் ,உப தலைவன் பேரெல்லாம் எழுதி கொண்டு போகனும். அந்த காலத்துலயே  ஊர்ல இருக்கிற ரேடியோ கடையெல்லாம் ஏறி இறங்கி தீர்ந்து போன செல் , சிக்ச் வோல்ட் சீரியல் பல்பு பிச்சையெடுத்து மேற்படி க்ரூப் அட்டை பின்னாடி பேட்டரி செட் பண்ணி பல்பு எரியவச்சதுதான் முத ஜி.டி. நாயுடு வேலைனு நினைக்கிறேன்.

வீடு கட்டிக்கிட்டிருக்கிற காலத்துல வேலை நடக்கிற இடத்துக்கெல்லாம் லைட் வசதி. ஈரச்சுவர்ல படம் வரைஞ்சு ஸ்விட்ச் கனெக்சன் கொடுக்கிறது எப்படின்னு கத்துக்கொடுத்த ஜெய்குமார் -  ஆடியோ கேசட் நாடா டேப் ரிக்கார்டர்ல சிக்கிக்கிடா -

புது வீட்டுக்கு  பக்காவா ஒயரிங் எல்லாம் முடிஞ்ச பிறவு பழைய எலக்ட் ரிக்கல் சாமான் எல்லாம் மாடியறைல போட்டுட்டாய்ங்க. வீடு கட்டி முடிச்ச அலுப்புல மாடியறைக்கு சூப்பர் சிம் அடிச்சுட்டு விட்டுட்டாய்ங்க. நானும் என் தம்பியுமாவே பெயிண்டிங் வேலையை முடிச்சுட்டம்.

மாடியறைல கொண்டு வந்து போட்ட சாமான்கள்ள  ஒரு  டேபிள் ஃபேன் இருந்தது. ஒரு நா அதை சீலிங் ஃபேனாக்கிர்ரதுன்னு முடிவு பண்ணேன். அதை தோரஹா பண்ணி (பார்ட் பார்ட்டா கழட்டி)  தகிடுதத்தம்லாம் பண்ணி சீலிங் ஃபேனாவே மாத்திடன்.

வீடு கட்டின 6 மாசத்துலயோ என்னமோ எங்கம்மாவுக்கு யூட்ரஸ்ல கான்சர் அட்டாக் ஆயிருச்சு. வீட்ல பாட்டிதான் சமையல். சமையல்னா என்னா சரிய்யா அரைமணி நேரம் ஓவர். எங்கம்மாவாச்சும் தேபை (அப்பாவி) வஞ்சனையில்லாம பலசரக்கு வாங்கி ஓடி ஓடி சமைப்பாய்ங்க. பாட்டி ரோசய்யா ரேஞ்சுல வெட்டு மேல வேட்டு போட்டுத்தான் பலசரக்கு வாங்கும். வெட்டினதை தன் மக வீட்டுக்கு பார்சல் பண்ணிரும் அது வேற கதை. டேஸ்டு , நறுவிசுன்னா அச்சு அசலா அம்மா மாதிரியே இருக்கும்.

நமக்கு வீட்டு பின்னாடி இருக்கிற கிணற்றுக்கு மேல கட்டின மாடியறை அலாட் ஆன புதுசு. வயசு என்ன சுமார் 17 இருக்கலாம். 17 வயசுல தனியறைன்னா சுவர்கமோன்னோ.

சாப்பிட இறங்கி வர்ரது கூட பிடிக்காது.பாட்டி மாடிப்படி ஏறி வந்து சாப்பாடு தரனும்னா கஷ்டம், அதுக்கு ஒரு வழி பண்ணேன். கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வேணம்னு வலுவான கம்பி போட்டு  அதுவழியா எவரும் தவறி விழுந்துராம இருக்க கம்பி ஜன்னல் போட்டிருந்தாய்ங்க. அதுக்கு நேர கூரையில  ஒரு மோட்டரை ஃபிக்ஸ் பண்ணி ( வேறென்ன நம்ம ரூம்ல போட்டிருந்த காலாவதியான ஃபேனோடதுதான்) அதுக்கு ஒரு புல்லி செட் பண்ணி  தராசு தட்டு மாதிரி நாலு பக்கம் கயிறு கோர்த்த  ஒரு பலகை கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிற  கிணற்று மேல இருக்கும். அதனோட கயிறு புல்லில முடியப்பட்டிருக்கும்.  பாட்டி அந்த பலகை மேல சாப்பாடு வச்சிட்டு குரல் கொடுத்தா மோட்டர் சுவிட்ச் போடுவேன். அதுவாயிதா போன மோட்டருங்கறதால முக்கி முக்கி மேலுக்கு இழுக்கும்.

 நம்ம அறையில கொண்டு வந்து போட்ட ஸ்க்ராப்ல இருந்து ஒரு டூல்பாக்ஸ் ரெடி பண்ணி வச்சிக்கிட்டேன்.  நம்ம மேட்டர்ல தான் கண் பார்த்தா கை செய்யுமே. மெல மெல்ல டேப் ரிக்கார்டர் பெல்ட் மாட்ட / மாத்த கத்துக்கிட்டேன்.

ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கனும்னு ஆசை. ஆனால் மிடில் கிளாஸ் லைஃப்ல அதெல்லாம் லக்சரியாச்சே.அதனால வீட்ல இருந்த ஹீரோ  சைக்கிளுகே  மட் கார்ட் எல்லாம் கழட்டி, சென்னைலருந்து வாங்கி வந்த  சீட், ஹேண்டில் பார் மாத்தி  கொஞ்ச நாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆக்சில் கழட்டி பால்ஸ் எல்லாம் மாத்தற ரேஞ்சுக்கு வந்துட்டன்னா பாருங்க.

இந்த திறமைகளை வளர்த்ததுல அக்கம்பக்கத்து ஆன்டிகள் ( முருகா.. பாத் ரூம்ல லைட்டே எரிய மாட்டேங்குது பாரு - மேக்சிமம் பல்பு ஃப்யூஸ் போயிருக்கும்) பொம்மை கொலு இப்படி பல அம்சங்கள் அடங்கும். கொலுன்னா அதுல  ஃபவுண்டன்   நிச்சயம். ஒரு சினிமா தியேட்டர் நிச்சயம்.

வெறுமனே அட்டைபெட்டில செய்து ஜோதி டாக்கீஸுன்னு ஸ்கெட்ஸ்ல எழுதிர்ரதுல்ல  பத்திரிக்கைகள்ள வர சினிமா பேஜையெல்லாம் வெட்டி வால் மாதிரி ஒட்டி என்னென்னமோ செய்து அதை ஓட வைக்க முயற்சிக்கிறது உண்டு.

இந்த லிஸ்டுல  எதுகை மோனை கண்டுபிடிக்க பாக்கெட் மெஷின் கண்டுபிடிச்சதுதான் ஹை லைட்.  மேட்டர் ஒன்னுமில்லிங்கண்ணா. ரோல் கேப் மாதிரி ஒரு காயிதத்துல தமிழ் எழுத்துக்களை அ முதல்  ஔ வரை, க முதல் ன வரை , க,கா முதல்  னே,னோ, னௌ வரை எழுதிரனும். இந்த ரோலை டேப் ரிகார்டர் மோட்டரை வச்ச்சு சுத்த விடனும்.  இந்த செட்டப் எல்லாம் உள்ளாற மறைஞ்சிருக்க ஒரே ஒரு எழுத்து மட்டும் எக்சிபிட் ஆறாப்ல ஓட்டை. மோட்டர் சுத்த சுத்த எழுத்து மாறும். அ,ஆ,இ,ஈன்னு மாறும். நாம அதும்பக்கத்துல "னல்"ன்னு பென்சில்ல எழுதிக்கிட்டம்னு வைங்க. மோட்டர் ஓட ஓட அனல்,ஆனல்,இனல்,ஈனல்னு மாறும். பொருளுள்ள சொல் வரும்போது, அது முத வரிக்கு பொருத்தமா வந்தா உபயோக்கிச்சிக்கறதுன்னு கான்செப்ட்.


ஃப்யூஸ் போனா போடறது, ஃபேனுக்கு கண்டென்சர் மாத்தறது ,  ஃபேன் ஃபிட்டிங் - ட்யூப் லைட் ஃபிட்டிங் எல்லாம் ஜுஜுபி - ப்ளம்பிங்னா லேத்துக்கு  போய் மரை போட்டுக்கிட்டு வந்து மல்லாடி செய்யறதுண்டு. முக்கியமா "பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்லே வேண்டியதை நீ கேளம்மா" டைப்பு.  இந்த ப்ளம்பிங் தொழில் நுட்பம்  என் மகள் நாலோ அஞ்சோ வயசுல இருந்தப்ப ஏதோ சினிமால பார்த்துட்டு  ஷவர் கேட்டப்ப  அவள் ஆசைய நிறைவேத்த உதவினது

இதை பத்தி இவ்ளோ விஸ்தாரமா பதிவு போட காரணம் இதுமாதிரியான க்ரியேட்டிவிட்டியெல்லாம்  நம்ம யூத் மேட்டர்ல குப்பைக்கு போயிருச்சோ ..இவிகல்லாம் கார்ப்போரேட் கம்பெனிகளோட வேட்டைக்களம் தானோங்கற சந்தேகம்தான்.

ரெடி மேட் - மேக்ரோ ப்ரொடக்சன்ஸ்  நம்மை அலிகளாக்கி வச்சிருக்கு.ஆண்மைன்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லை பாஸ். படைக்கனும். படைக்கிறதுன்னா சாலக்கான வரிகளை போட்டு புதுக்கவிதையோ,  நாலு புஸ்தவம் படிச்சு ஒரு புஸ்தவம் எழுதிர்ரதோ இல்லை. ஃபிசிக்கலா படைக்கனும். என் வீட்டுக்கு வந்திங்கனா,  நானே அடிச்ச ரீப்பர் கேட் வரவேற்கும். என்னையும்தான். இதெல்லாம் நம்ம மேல நமக்கே நம்பிக்கை வரவைக்கிற விசயங்க.

பேகி பேண்ட் சென்னைக்கே வராத பீரியட்ல எம்.ஜி.ஆர் கத்தி சண்டை போடற ஸ்டில்லை டெயிலர் கிட்டே கொடுத்து  இடுப்பு சைஸ்ல பெல் வச்சுருப்பா அதான் பேகின்னு எஜுக்கேட் பண்ணி தைக்க வச்சு போட்டப்ப  நம்ம காலருக்கு ஹீலியம் கேஸ் பலூன் கட்டின எஃபெக்ட் வந்ததுங்கண்ணா.

நாம உபயோகிக்கிற பொருட்கள்ள  ஹ்யூமன் டச் அதுலயும் நம்ம டச் இருக்கனும்.    நம்ம மைண்ட்ல இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட் படைப்புக்கான துடிப்பு, அதுக்கு தீனி போடலைன்னா வாழ்க்கையே வீண். 

கஷ்ட காலத்துல இருந்தப்ப யாரோ ஒருத்தர் பேட்டரியே கிடைக்காத மலேசியா மொபைல் ஃபோன் ஒன்னை தானம் பண்ணாரு. அந்த ஃபோனுக்கு ரீசார்ஜபிள் பேட்டரீஸை வச்சு  நானே ஒரு  பேட்டரி  தயார் பண்ணி உபயோகிச்சேன். என்ன ஒரு லொள்ளுன்னா தூரத்துலருந்து பார்க்கிறச்ச டைம் பாம் மாதிரியே இருக்கும்.ஆனால் அதை உபயோகிச்சப்ப இருந்த திருப்தி இப்போ இந்த கைக்கு அடக்கமான எல்.ஜி. பீஸ்ல இல்லிங்கண்ணா.

சமயம் கிடைக்கிறப்ப நம்ம ஜி.டி. நாயுடு வேலைகளை ஃபோட்டோ எடுத்து வைக்கிறேன் பார்ப்பிக. இந்த மாதிரி மேட்டர்ல தாய்குலத்துக்கு பெரிசா ஆர்வமில்லாம போகவும், இது மாதிரி ஆர்வமுள்ள ஆணை தாய்குலம் நச்சு கிராக்கின்னு ஒதுக்கிவைக்கவும் ஒரு உள்ளார்ந்த உயிரியல் காரணம் இருக்குங்கண்ணா அது என்னனு தெரிஞ்சவுக ஒரு கமெண்ட் மூலம் சொன்னா அவிகளுக்கு எந்த பெயர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா பச்சக்குனு ஒட்டிக்கும்ங்கற மேட்டர் மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

உடு ஜூட்

1 comment:

  1. comment போதுமா ? தலை நாமா comment போட்டாலூம் போடாடிம்
    தலை தலைதான்

    ReplyDelete