கே: நீங்க ஆத்திகமா நாத்திகமா?
ப: மனிதம் மறவாத வரை ஆத்திகம் ஓகே. சமூக பொறுப்பை தட்டி கழிக்காத வரை நாத்திகமும் ஓகேதான்.என்னைப்பொறுத்தவரை நான் பகுத்தறிவுள்ள ஆத்திகன்
கே: ஜோதிடம் விஞ்ஞானமா? மெய் ஞானமா?
ப: ஜோதிடக்கடலின் கரையோரம் சிப்பிகள் பொறுக்கும் வரை விஞ்ஞானமாக தோன்றும். கடலில் குதிக்க அது மெய் ஞானமென்று விளங்கும்
கே:கடவுள் ?
ப: மனிதன் பின்னோக்கி பயணித்து மிருகமாகிவிடாது இருக்க, மனிதனாகவே தொடர உதவும் தொடுவானம்
கே: உங்கள் எழுத்துக்களின் நோக்கம் தான் என்ன?
ப: சற்றே நாடு குறித்தும் சிந்திக்கும் சற்றே சமூக பொறுப்புடன் கூடிய வாக்காளர்கள், அரசியல் வாதிகள், சற்றே சரளமான உலக வாழ்க்கையினூடே ஒரு மெலிதான தேடல் நிலவும் சூழலை உருவாக்குவதே என் எழுத்துக்களின் நோக்கம்.
கே: கட்டை பஞ்சாயத்து பற்றி ..
ப : நமது காவல், நீதித்துறைகளின் தோல்விக்கு சாட்சி க.ப
கே:பொன் மொழிகள் பற்றி ?
ப : கட்டு சோற்று மூட்டைகள். பல ஊசிப்போய்விட்டன
கே: தங்கம் விலை ஏறிக்கொண்டே போகிறதே?
ப: மனிதனுக்கு சக மனிதன் மீதும், குடும்பம், சமுதாயம், அரசுகளின் மீதும் உள்ள நம்பிக்கை நசிந்து கொண்டிருப்பதன் அடையாளம் இது
கே: மனிதனுக்கு இத்தனை வியாதிகள் வரக்காரணம்?
ப : அவன் சஞ்சார வாழ்க்கையை விட்டதும், சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும் தான்
கே: எழுத்தாளர்கள்?
ப : நிகழ்காலத்தை சீரணித்துக்கொள்ள முடியாத மென் தோலினர்.
கே: வியாபாரிகள்?
ப: அடுத்தவன் நஷ்டத்தில் லாபம் காண துடிப்பவர்கள்
கே: மன்மோகன் சிங் பற்றி ?
ப : நீண்ட நாள் பதவியில் தொடரும் குல்ஜாரிலால் நந்தா
கே: சோனியா ?
ப : தான் துக்கத்தில் இருப்பதால் நாட்டை, தமிழரை துக்கப்படுத்தி பார்க்கும் பரிதாபத்திற்குரிய ஜீவன்
கே: கலைஞர் ?
ப : நீண்ட ஆயுள் பெற்றதாலேயே மொக்கையாகிப்போன சரித்திர புருஷன்
கே: ஜெயலலிதா?
ப : குழாயடியில் குடுமி பிடி சண்டையிட்டு தண்ணீரை பிடித்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்ட ஸ்லம் பெண்மணி. என்னடா பிரச்சினை என்றால் குழாயில் தண்ணீர் வந்தாலன்றி குழாயடிக்கே வரமாட்டார்
No comments:
Post a Comment