இந்த தலைப்புல டெக்னிக்கலா நிறைய யோசனைகளை ஏற்கெனவே பல பேர் தந்தாச்சு. அதனால எதை எழுதலாம்,எதை எழுத கூடாது, எப்படி எழுதனும், எப்படி எழுத கூடாதுங்கற மேட்டரை மட்டும் நான் டச் பண்றேன்.ஏதோ 16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் வாங்கின தகிரியத்துல இந்த பதிவை போடறேன்.
1.மொதல்ல ஒழுங்கா தமிழ் எழுத/தட்டச்ச கத்துக்கிடுங்க. அதுவரை சொம்மா வேடிக்கை பாருங்க.பதிவுலகத்தை பத்தி ஒரு ஐடியா வரும். அருவறுப்பான எழுத்துப்பிழைகளை தவிர்த்தே ஆகனும்.
2.எடுத்ததும் பெரிய பெரிய மேட்டரா போட்டு கலக்கனும்னு ஆத்திரப்படாதிங்க. ஆரம்பத்துல சின்ன சின்ன விஷயமா செலக்ட் பண்ணிக்கிட்டு சுவாரஸ்யமா எழுதப்பாருங்க. ரெம்ப கிரமாட்டிக்கலா இல்லாம எளிய மொழிய உபயோகிச்சா நல்லது
3.தினசரிகள்ள வெளி வந்த, அல்லது நாளை வெளிவரப்போற ( டிவி?) நியூஸையெல்லாம் பதிவா போடாதிங்க. செய்திய ஓரிரு வரிகள்ள சொல்லி உங்க கருத்தை தெரிவிக்கலாம் .அதுவேற விஷயம்.
4.நான் செக்ஸ் எழுதறதை பார்த்து ஒரு கூட்டமே செக்ஸ் எழுதுது. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட கதையாயிரும். நான் செக்ஸ் எழுத காரணம் அதை நான் ஆன்மீகத்துக்கான த்ரெஷோல்டா பார்க்கிறதுதான். இது மாதிரி ஏதாச்சும் வலுவான காரணம் இருந்தா ஓகே இல்லேன்னா கிளுகிளுப்புக்காக எழுத ஆரம்பிச்சா நாஸ்தி ஆயிருவிங்க.
5.பதிவுலக அரசியல்ல சிக்கிக்காதிங்க. ஒரே ஒரு ஓம்கார் சுவாமிகள், ஸ்மார்ட் டமில் தவிர மத்தவுக மேட்டர்ல அம்பேல்.
6.வெறுமனே பிரச்சினையை எழுதிராம அதை அனலைஸ் பண்ணவும், அதனோட ஆணிவேரை பிடிச்சு உலுக்கவும் முயற்சி பண்ணுங்க
7.ஒரு எழுத்தாளனுக்கு சமூக பொறுப்பு, சமூக பார்வை முக்கியம். அதில்லேன்னா உங்க எழுத்தெல்லாம் பாசாங்காத்தான் இருக்கும்.
8.வெறும் டேட்டாவை போட்டு நிரப்ப பார்க்காதிங்க. இன்டர் நெட்ல டேட்டா கொட்டிக்கிடக்குது. டேட்டாவுக்கு நேட்டிவிட்டி,ஹ்யூமன் டச், பொறுப்புடன் கூடிய அனலைஸ், டைஜஸ்ட் முக்கியம். இல்லைன்னா கந்தலாயிரும்.
9.எழுதறதை பத்தி எழுதாதிங்க.( சக பதிவர்கள் அதிலயும் ஜூனியர்ஸ்,புதுமுகங்கள் படிப்பாய்ங்களோ என்னமோ ..மத்தவுக அலட்சியப்படுத்திருவாய்ங்க)
10.என்னத்தை எழுதன்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ரோசிக்காதிங்க. உங்க மனசுல ஒரு முடிவுக்கு வந்தபிறகு ஒரு ஃபார்ம் வந்த பிறகு மட்டுமே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருங்க
11.மலச்சிக்கல், பல் வலி, பசியின்மை, அதிக எடை இப்படி எத்தனையோ உபயோகமான மேட்டர் இருக்கு. கொஞ்சம் அக்கறையா டேட்டா கலெக்ட் பண்ணி, அனலைஸ் பண்ணி அக்கறையா எழுதினா நல்ல வரவேற்பிருக்கும்.
12.வெறுமனே அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளான்னு பத்து பேரு விமர்சனம் எழுதின படத்துக்கே விமர்சனம் போடறது, பதினாறு பேர் கிழிச்ச மேட்டரையே கிழிக்க இறங்கறதுல்லாம் வீண் சாகசம்.
13.காமெடி,ட்ராஜடி, அங்கதம், வஞ்ச புகழ்ச்சி, உயர்வு நவிற்சியணி இப்படி எந்த ஸ்டைல்ல வேணம்னா எழுதுங்க. சின்ன சின்ன வாக்கியங்கள், சிம்பிள் வோர்ட்ஸ் போதும். அதை விட்டுட்டு பரிணாமம், அவதானம் அது இதுன்னு கஷ்டப்பட்டு படிக்கிறவுகளையும் கஷ்டப்படுத்தாதிங்க
( இன்னம் நிறைய சொல்ல வேண்டியது இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்)
//ஏதோ 16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் வாங்கின தகிரியத்துல இந்த பதிவை போடறேன்.//
ReplyDeleteமுத உங்க பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வர மாட்டேன்குது...அத அனலய்ஸ் பண்ணி சொல்லுங்க தல ....
அப்படி என்றால் மக்கள் தங்களுக்கு போதுமான ஆதரவு தரவில்லை என்று தானே அர்த்தம் தல .....
இதை நான் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேக்கிறேன் ...மற்ற படி எந்த உள் குத்தும் இல்ல தல...
இதை நான் ஏன் திரும்ப திரும்ப கேக்கிறேன் என்றால் ....நமக்கு போதுமான ஆதரவு இல்லை என்னும் போது....சமுதாயத்துக்கு என்ன சொல்லி என்ன பயன்?
முட்டாள்களுக்கு சொன்னாலும் புரிய போவதில்லை ...அறிவாளிகளுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை ....
சில அரைகுறைகள் 20 லைன் எழுதினாலும் ...20 comments வருகிறது ......
நீங்களோ பக்கம் பக்கமாக அருமையாக தான் எழுதுகிறீர்கள் .....போதுமான ஆதரவு இல்லை என்பது தான் என் கணிப்பு .....
வள்ளலார் கூட மிக உயர்ந்த யோகி தான் ....அவரே கடைசியில் "கடை விரித்தேன் கொள்வாரில்லை ....கடைய close செய்கிறேன் " என்று தான் சொன்னார் ....
நமது சமுதாயத்தில் செக்ஸ் ஏறக்குறைய தடை செய்ய பட்ட நிலையில் உள்ளது ......செக்ஸ் தடை செய்ய பட்ட சமுதாயம் பிழைப்புகாக தான் அலையும் ....ஆன்மிகம் என்ற பெயரில் கூட செக்ஸ் வியபாரம் (நம் நித்தியானந்தன் போல ) தான் நடக்கும் ....
நீங்கள் பாலியலை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று தான் சொல்லி வருகிறீர்கள் ...ஒரு நாய் ஆவது ஆதரவு தந்ததா?
போலி கலாசார பண்ணி கூட்டம் தான் நம் சமுகம் ....
இந்த முட்டாள் சமூகத்திடம் உங்களக்கு போதிய ஆதரவு ஒரு போதும் கிடைக்காது என்பது தான் என் கணிப்பு ....
2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் முக்கியம் இல்லை தல ...நான் சில தமிழ் கில்மா சைட் -க்கு கொஞ்ச நாள் களுக்கு முன் சென்றேன் ...சில தளங்களின் ஹிட்ஸ் 10 லட்சத்தை விட அதிகம் ...
உலகம் ரொம்ப ரொம்ப பெருசு தல ...புரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப கடினம் தல ....
சரி ...இத பத்துன உங்க கருத்த சொல்லுங்க ....
//ஏதோ 16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் வாங்கின தகிரியத்துல இந்த பதிவை போடறேன்.//
ReplyDeleteமுத உங்க பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வர மாட்டேன்குது...அத அனலய்ஸ் பண்ணி சொல்லுங்க தல ..
அப்படி என்றால் மக்கள் தங்களுக்கு போதுமான ஆதரவு தரவில்லை என்று தானே அர்த்தம் தல .....
இதை நான் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேக்கிறேன் ...மற்ற படி எந்த உள் குத்தும் இல்ல தல...
இதை நான் ஏன் திரும்ப திரும்ப கேக்கிறேன் என்றால் ....நமக்கு போதுமான ஆதரவு இல்லை என்னும் போது....சமுதாயத்துக்கு என்ன சொல்லி என்ன பயன்?
முட்டாள்களுக்கு சொன்னாலும் புரிய போவதில்லை ...அறிவாளிகளுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை ..
சில அரைகுறைகள் 20 லைன் எழுதினாலும் ...20 comments வருகிறது ..
நீங்களோ பக்கம் பக்கமாக அருமையாக தான் எழுதுகிறீர்கள் .....போதுமான ஆதரவு இல்லை என்பது தான் என் கணிப்பு .....
வள்ளலார் கூட மிக உயர்ந்த யோகி தான் ....அவரே கடைசியில் "கடை விரித்தேன் கொள்வாரில்லை ....கடைய close செய்கிறேன் " என்று தான் சொன்னார் ....
நமது சமுதாயத்தில் செக்ஸ் ஏறக்குறைய தடை செய்ய பட்ட நிலையில் உள்ளது ......செக்ஸ் தடை செய்ய பட்ட சமுதாயம் பிழைப்புகாக தான் அலையும் ....ஆன்மிகம் என்ற பெயரில் கூட செக்ஸ் வியபாரம் (நம் நித்தியானந்தன் போல ) தான் நடக்கும் ....
நீங்கள் பாலியலை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று தான் சொல்லி வருகிறீர்கள் ...ஒரு நாய் ஆவது ஆதரவு தந்ததா?
போலி கலாசார பண்ணி கூட்டம் தான் நம் சமுகம் ....
இந்த முட்டாள் சமூகத்திடம் உங்களக்கு போதிய ஆதரவு ஒரு போதும் கிடைக்காது என்பது தான் என் கணிப்பு ....
2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் முக்கியம் இல்லை தல ...நான் சில தமிழ் கில்மா சைட் -க்கு கொஞ்ச நாள் களுக்கு முன் சென்றேன் ...சில தளங்களின் ஹிட்ஸ் 10 லட்சத்தை விட அதிகம் .....
உலகம் ரொம்ப ரொம்ப பெருசு தல ...புரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப கடினம் தல .............
சரி ...இத பத்துன உங்க கருத்த சொல்லுங்க ....
நான் செக்ஸ் எழுதறதை பார்த்து ஒரு கூட்டமே செக்ஸ் எழுதுது
ReplyDeletelinks please.........
தனிக்காட்டு ராசா அவர்களே !
ReplyDeleteநான் கமெண்ட் போடறதை என் கரேஜ் பண்ணலை. அதுக்கு பதில் போடறதுமில்லை.
வலைப்பூவுல கமெண்டா தங்கள் கருத்தை போடறதில்லையே தவிர எஸ்.எம்.எஸ், ஃபோன்
கால், மெயில் மூலமா நிறைய பேறு ரெஸ்பாண்ட் ஆகிறாய்ங்க.
மேலும் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை மூலமா வர்ர வருமானம் மாசா மாசம்
அதிகரிக்குதே தவிர குறையலை.
100 புது பார்ட்டி நம்ம ப்ளாகை பார்த்தா ஒரு க்ளையண்ட் காசை
போட்டுருவாரு .இது ஒரு குன்ஸு. வெறுமனே கமெண்டுகளை வச்சிக்கிட்டு நாக்கை
வழிக்கிறதா?
நம்முது வெஸ்டர்ன் ஸ்டைல் பாஸ். 2008 நவம்பர்லருந்து 2009 மே வரை தமிழ்
வலையுலகத்துலருந்து காணாம போயிட்டன்.ஏன்னா அப்போ நீங்க சொல்ற நிலைமை
இருந்தது இப்ப அப்படியில்லை.
மதியாதார் தலைவாசல் மிதிக்க நான் என்ன ரஜினியா?
உங்க அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி தலைவா
எஸ்.எம்
கலக்குங்க தல ....தொடர்ந்து எழுதிகிட்டே இருங்க தல .....
ReplyDelete