அம்மான்னா வீரம் செறிஞ்ச கதைகள்,( வீர சிவாஜிக்கு அவிக அம்மா சொன்ன மாதிரி ) நீதிக்கதைகள்தான் சொல்லனும் ( காந்திக்கு புத்லி பாய் சொன்ன மாதிரி) னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. ஆனா எங்கம்மா எனக்கு ஒரு பலான கதை கூட சொல்லியிருக்காய்ங்க. அதை அப்பாறம் சொல்றேன். அதுக்கு மிந்தி நீதின்னா என்ன ,நீதிக்கதைன்னா என்னனு பார்ப்போம்.
நீதிக்கு தலைவணங்குன்னு வாத்தியார் படம் ஒன்னிருக்கு. நீதின்னா எப்படிப்பட்ட
அநீதிக்காரனும் அதுக்கு தலைவணங்கனும் அந்த அளவுக்கு அது பர்ஃபெக்டா இருக்கனும். சமீபத்துல ஒரு ஐ.ஏ.எஸ் ஆள்றவுக பெருசா பண்றாய்ங்க, நாம சிறுசா செய்தது வெளிய வராதுன்னு இருந்தது ஞா இருக்கும்னும் நினைக்கிறேன்.
நீதிங்கறது அடுத்தவன் வந்து சொல்லனும்னு கிடையாது. அது நம்ம மனசாட்சிக்கே தெரியனும். இந்த ப்ளாகை படிக்கிறவுகளுக்கு நான் யாரு ,என்னனு தெரியாது. நான் உத்தமன்,அஸ்கலித நைஷ்டிக பிரம்மசாரினு பீலா விட்டாலும் நம்பத்தான் போறிங்க. இருந்தாலும் அல்லாத்தையும் போட்டு உடைச்சேன்.
மேற்படி ஐ.ஏ.எஸ் கூட எப்போ தன் லைஃப் ஸ்டைலை மாத்திக்கிட்டாரோ அன்னைக்கே ராஜினாமா பண்ணியிருக்கலாம். பிரச்சினை வர்ரதுக்கு மிந்தியே நான் பலான கோட்டால பதவிக்கு வந்தேன். ஆனால் இன்ன நம்பிக்கைகள் எனக்கிருக்குது, சட்டப்படி இது தப்புன்னா ராஜினாமா பண்ண தயார்னு முன் கூட்டியே சொல்லியிருக்கனும்.
அதைவிட்டுட்டு முதுகெலும்பில்லாத கலைஞர் அரசு மண்டியிட்டுட்ட மாத்திரத்துல அவர் தர்மத்தின் தலைவனாயிர முடியாது.
சரிங்கண்ணா இப்போ நீதிக்கதைக்கு வந்துருவம். கதைக்குள்ளாற ஒர் நீதியை வச்சிருக்கிற கதை நீதிக்கதையா? அல்லது ஒரு நீதியை சொல்லவே எழுந்த கதை நீதிக்கதையா? எப்படியோ கதைக்கும் நீதிக்கும் சேர்த்து இடம் கொடுக்கிற கதை நீதிக்கதைனு வச்சிக்கலாம்.
எங்கம்மா கதை சொல்றதுலயும் புலி, கதை சொல்லிட்டே வெறும் ரசம் சோத்துக்கு காரக்குழம்பை சைட் டிஷ்ஷா மாத்திர்ரதுலயும் புலி.
(புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? எங்க சித்திக்கு - அம்மாவுக்கு தங்கச்சிங்கோ - 20லருந்து 7 வரை பல்வேறு வயசுல பொம்பளை பசங்க- பெரியவ புடவை , கடைக்குட்டி ஜட்டி போட்டுக்கிட்டு அலையும்- அவிக வீட்டுக்கு நான் போனா எல்லா டிக்கெட்டும் ஹால்ல சோஃபாவுலயே ஐக்கியமாயிர்வாய்ங்க- சித்தி சமையலறைலருந்து கரண்டியோட வரும்- இந்த பையன் வந்தாலே இம்சைதான்- எல்லாம் இவன் வாயை பார்த்துக்கிட்ட் உட்கார்ந்துருதுங்கனு திட்டிக்கிட்டே வரும்- சித்தி உத்தேசம் நம்ம கதைக்கூடத்தை கலைக்கிறது- ஆனா அடுப்புலருந்து எதுனா தீயற வாசனை வர்ர வரை கதை கேட்டுட்டுத்தான் கிச்சனுக்கு அலறியடிச்சுக்கிட்டு ஓடும் )
கதை சொல்றதுல புலியா இருந்து என்னையும் புலியாக்கின எங்க அம்மாவே "கதை கேட்ட நாயி வேட்டைக்கு உதவாது"ன்னும் ஒரு கதை சொல்லியிருக்காய்ங்க. அது டக்குனு ஞா வரலை. அதாவது வெறுமனே கதை கேட்கிறது கிரிமினல் வேஸ்ட். அந்த கதையிலருந்து நமக்கு தேவையானதை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்கனும்.
நீங்க கத்துக்க சித்தமாயிட்டா எதுலருந்து வேணம்னா கத்துக்கிடலாம். அதுக்கு கதை,கவிதைன்னு தராதரம்லாம் இல்லே.
நான் டீன் ஏஜ்ல இருந்தப்ப சரோஜா தேவி கதைகள் மாதிரியே இந்து நேசன்ங்கற புஸ்தவமும் பலான கதைகளுக்கு பிரபலம். வீட்டுக்காரம்மாவுலருந்து வேலைக்காரி வரை எல்லாரும் எல்லாரோடயும் தக் ஜம் பண்ணுவாய்ங்க. சொம்மா ஜிவ்வுனு ஏறும். என்ன ஒரு லொள்ளுன்னா கடைசில கெட்டகாரியம் பண்ண எல்லாரும் ஒன்னு ஜெயிலுக்கு போயிருவாய்ங்க அ கொலையாயிருவாய்ங்க. ஏறினதெல்லாம் பொசுக்குனு இறங்கிரும்.
என்னைக்கேட்டா ஒவ்வொரு மனிதவாழ்க்கையும் ஒரு நீதிக்கதை தான். எப்படி வாழக்கூடாதுங்கற நீதியை சொல்ற கதை. அட ஒவ்வொரு நாளூம் நீதிக்கதைதான் பாஸ்.
இப்ப நான் ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கிற P4 சிஸ்டம் ஆரம்பத்துல வைரஸால லொள்ளு பண்ணாலும் சமீப காலமா சி ட்ரைவ் லாக் பண்ணிட்டதால பதவிசாதான் வேலை செய்துக்கிட்டிருந்தது.
நம்ம கிட்டே ஒரு கெட்ட புத்தி என்னன்னா எதையும் அப்கிரேட் பண்ணிட்டே இருக்கிறதுதான். பாண்டான்னு ஒரு ஆண்டி வைரஸ் போட்டிருந்தேன். சுட்டியா வேலை செய்துக்கிட்டிருந்தது.
வைரசை டெலிட் பண்ணலின்னாலும் நியூட் ரலைஸ் பண்ணிரும். கடந்த வாரம் அவாஸ்த் ஆண்டி வைரஸ், அடோப் ரீடர்,டேட்டா ரிக்கவரி சாஃப்ட் வேர்சை இன்ஸ்டால் பண்ணினேன். நேத்து போட்ட நாலு ஐட்டத்தையும் பக்காவா ரெடி பண்ணி, பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்ட பொறவு தூசு தட்டினேன். ( இன்னொரு செட் ஆஃப் சாக்கெட்ஸ் போட வசதியா இருந்த கேபினெட் ( டப்பா ) கேப்ல ஒரு எலி உள்ளாற போய் ஃபேமிலியே நடத்திக்கிட்டிருந்ததுங்கண்ணா)
மறுபடி மக உதவியோட சிஸ்டத்தை கனெக்ட் பண்ணி ஓட விட்டேன்.ஓகே.அவாஸ்தை வச்சு ஒரு ஃபுல் ஸ்கேன் கொடுத்துட்டு நாம ப்ரிண்ட் பண்ண அம்மன் , ஷீரடி பாபா, கிருஷ்ணன் சத நாமாவளியை ஒரு பாட்டம் படிச்சேன். அவாஸ்த் ஏதோ ஒரு சிஸ்டம் ஃபைலை தூக்கிருச்சு போல . சிஸ்டம் ஆஃப் ஆயிருச்சு.என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணியும் பெப்பே.
என் மகளோட லவ்வர் களமிறங்கி என்னென்னவோ கதை பண்ணான் .பெப்பே. டிஸ்ப்ளே வரலை, கீ போர்டு ,மவுசு கூட வேலை செய்யலை, கடைசில ஜேம்ஸை வரச்சொன்னேன் ( இவரை பத்தி ஒரு பதிவே போடனும்)
அஞ்சு நிமிஷத்துல நானா ..வேலை செய்யலையா.. நான் படு சுட்டியாக்கும்ங்கறா மாதிரி பதவிசா வேலை செய்யுது. சிஸ்டம் வேலை செய்யாம இருந்த காலை 10 முதல் இரவு 10 வரை என்னென்னமோ யோசனைகள்.
கடவுள் நமக்கு 16-112 ஐ நிவாசமாக்கின மாதிரி எலிக்கு பி4 ஐ டிசைட் பண்ணாப்ல இருக்கு. அதனோட வயித்தெறிச்சலை கொட்டிக்கிட்டதாலதான் டப்பா வேலை செய்யாம போயிருச்சா? அல்லது சிஸ்டம் இருக்கிற சிமெண்ட் அலமாரியோட மேல் தட்டுத்தான் ஸ்வீட்டியோட ( பெண் பாமரேனியன் குட்டி ) டென். சோன் பப்டி மாதிரி வெள்ளை மயிர் பறந்துக்கிட்டே இருக்கும். கம்ப்யூட்டரை க்ளீன் பண்ணப்பறம் அதை பக்கத்துக்கு அறைக்கு ஷிஃப்ட் பண்ணும்படியாவும், இங்கன விடக்கூடாதுன்னும் ஒரு ஜி.ஓ பாஸ் பண்ணியிருந்தேன்.
சிஸ்டம் வேலை செய்யாம போயிரவே டர்ராயிட்டன். ஏழை மக்களை குப்பத்தை விட்டு காலி பண்ண வைக்கிற சினிமா வில்லனுக்கும், எலி , நாயை விரட்டியடிச்ச நமக்கும் என்ன வித்யாசம்ங்கற மாதிரி கில்ட்டி கூட வந்துருச்சு. கில்மா ஐட்டங்க எழுதினப்பல்லாம் ஒன்னும் ஆகலே, மாமியாருக்கு மருமவ சக்களத்திதானு எழுதினப்பயும் ஒன்னும் ஆகலை.
சாக்தேயம் பத்தி ஏதோ நாலு பேரு தெரிஞ்சிக்கிட்டம்னு "அவள்" தொடர் ஆரம்பிச்ச பொறவு இப்படி நடக்குதேனு வருத்தம் + நல்லாவே ரீச் ஆகும் போலன்னு ஒரு நம்பிக்கை. இளையராஜா மொதல் மொதலா ரிக்காரிடிங்குக்கு போனப்பபவர் கட்டாம்ல.
இதையெல்லாம் நான் சொல்ல காரணம்,அக்டோ 2 முதல் விடை பெறுவதான என் அறிவிப்பு என் செல்ஃப்லருந்து வந்ததில்லை. காலத்தோட அஜெண்டாலயே இருக்காப்ல இருக்குனு சொல்லத்தான். லோக்கல்ல ப்ராண்ட் பேண்ட் வாங்கிரலாமா? அல்லது பி.எஸ்.என்.எல் வாங்கிரலாமானு ரோசிச்சிட்டிருந்த சமயம் அசலுக்கு மோசம் வந்துருச்சு பாருங்க.
நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான். சரிங்கண்ணா நீங்க இவ்ள நேரம் தங்கினதே சாஸ்தி. இப்போ எங்கம்மா சொன்ன பலான கதைய பார்ப்போம்.
அபரஞ்சின்னு ஒரு தாசி. ரெம்ப காஸ்ட்லி. மினிமம் ஆயிரம் வராகன் இருந்தாதான் கதவையே தட்ட முடியும்.அதே ஊர்ல ஒரு பஞ்ச கச்சம். அதுக்கு அபரஞ்சின்னா பயங்கர ஜொள்ளு. ஒரு நா அவன் கனவுல அபரஞ்சி வந்தா. "தக் ஜம்" எல்லாம் ஜாம் ஜாம்னு நடந்துருச்சு. இந்த சந்தோசமான (?) சம்பவத்தை (?) ஆற்றங்கரைல தன் நண்பர்கள் கிட்டே சொல்லி குஜிலி பண்ணிக்கிட்டிருந்தாரு ஐயரு.
இதை தாசி வீட்டு வேலைக்காரி கேட்டுட்டு ஓனரம்மாக்கிட்டே போட்டு கொடுத்துட்டாள். தாசி பஞ்சாயத்துல ப்ராது கொடுத்துட்டா.
பஞ்சாயத்துக்கும்,குப்பைக்கும் ஒரு ஒத்துமை உண்டு. ரெண்டையும் கூட்டுவாய்ங்க மேறப்டி பஞ்ச கச்சம் கனவுல தன்னை அனுபவிச்சதுக்கு ஆயிரம் வராகன் கொடுத்தே ஆகனும்னு அபரஞ்சியோட டிமாண்ட்.
பஞ்சாயத்துல செட்டியார் ஒருத்தரும் இருந்தாரு. அவர் கிட்டே ஒரு அறிவுள்ள கிளி இருந்தது. ஜட்ஜ்மென்டை அதுங்கிட்ட விட்டாய்ங்க. கிளி லாஜிக்கலா திங்க் பண்ணி ஆயிரம் வராகனை ஒரு சாட்டின் பைல போட்டு கண்ணாடி முன்னாடி தொங்க விட்டு கண்ணாடிக்குள்ள தெரியற பொற்காசு மூட்டைய அபரஞ்சி எடுத்துக்கனும்னு தீர்ப்பு சொல்லிருச்சு.
இதுக்கு அபரஞ்சி அந்த கிளியை எப்படி பழி வாங்கினாள் ,அந்த கிளி எப்படி தப்பிச்சுருச்சு. எப்படி அபரஞ்சியை மொக்கை பண்ணிருச்சுங்கறதெல்லாம் கூட ஞா இருக்குங்கண்ணா அதையெல்லாம் ஆருனா கேட்டா சொல்றேன்
மொத்தத்துல இன்னிக்கு பதிவோட நீதி :
நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான். ( நாம மறந்துட்டப்போ).
//
ReplyDeleteஇதுக்கு அபரஞ்சி அந்த கிளியை எப்படி பழி வாங்கினாள் ,அந்த கிளி எப்படி தப்பிச்சுருச்சு. எப்படி அபரஞ்சியை மொக்கை பண்ணிருச்சுங்கறதெல்லாம் கூட ஞா இருக்குங்கண்ணா அதையெல்லாம் ஆருனா கேட்டா சொல்றேன்//
சாமியின் மன அலைகள் என்ற பதிவில் எழுதும் தாத்தா ஒருவர் விவரமாக இந்தக் கதையை (ஏற்கனவே) எழுதி வச்சிருக்கிறார்
என் இந்த திடீர் முடிவு
ReplyDeleteநண்பரே! ஏன் இவ்வாறு முடிவுச் செய்தீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. Followers-ன் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும் என்ன? உங்களின் நிலைக்கு அது எந்த வகையில் உதவப் போகிறது.
ReplyDeleteஅதிகமான Followers இருந்தால் ப்ளாகில் எழுதி அதிகமாய் பணம் சம்பாதித்து விட முடியுமா என்ன? உங்களுக்கு தெரிந்த, புரிந்த, பிடித்த விஷயங்களை எழுதுவதற்காகத் தானே இந்த வலைப்பக்கம் இருக்கிறது. அதை ரசித்து அனுபவித்துச் செய்யுங்களேன்.
இதில் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு 500 Followers வேண்டும், 1000 Followers வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்.
அப்படியே அதிகமாய் Followers இருந்தாலும், எல்லாரையும், உங்களின் விருப்பபடி உங்களின் பதிவுகளை எல்லாம் படிக்க வேண்டும் என்றோ, அவற்றைப் பாராட்டிப் பின்னூட்டம் இட வேண்டும் என்றோ, எல்லா பதிவுகளுக்கும் அதிகமாய் ஓட்டு இட வேண்டும் என்றோ கட்டாயப்படுத்த முடியாதே. உங்களின் நிலையை விளக்குங்கள் நண்பரே! தெரிந்துக்கொள்ள ஆவல்!
கோ.வி.கண்ணன் அவர்களுக்கு,
ReplyDeleteஅண்ணா.. பிரபல பதிவராவும், ரீடராவும் தொடர எப்படின்னா முடியுது? நானும் ரீடரா மாறத்தான் சதி பண்ணியிருக்கேன். 500 பேர் எப்படியும் மெம்பராக போறதில்லை. வீட்டுக்கே கனெக்சன் வாங்கி மொதல்ல ஒழுங்கா படிக்க போறேன். மறுமொழிக்கு நன்றி
யாதவன் அவர்களே,
ReplyDeleteயந்திரனை பத்தி நான் போட்ட பதிவை படிச்சுட்டு நம்ம ப்ளாகை ஒரு பார்ட்டி ஆளில்லாத டீக்கடைன்னிருச்சு. பெஞ்சுல 500 பேரு இருந்தா இந்த பேச்சு வராதில்லை. மேலும் இந்த எண்ணத்தை ஆகஸ்ட் 15 க்கே செயலாக்கியிருக்கனும். அப்ப ஏதோ ஒரு சபலத்துல காம்ப்ரமைஸ் ஆயிட்டன் இந்த தாட்டி நோ காம்ப்ரமைஸ்
என்னது நானு யாரா அவர்களே,
ReplyDeleteதிரு யாதவன் அவர்களுக்கு கொடுத்த பதில்தான் தங்களுக்கும். பணம் என்பது ஜோதிட ஆலோசனையில் கொட்டுகிறது. அதுவல்ல பிரச்சினை. ஆளில்லாத டீக்கடைன்னு இன்னொரு பார்ட்டி ஒடையல் விடக்கூடாதுல்லை