அண்ணே வணக்கம்ணே! கமெண்டுகளுக்கு பதில் போடறதை விட்டு பல காலமாச்சுண்ணே. கமெண்ட் போடறவுக மேல மரியாதை இல்லையான்னா மஸ்தா கீது. ஏனோ பழக்கம் விட்டுப்போச்சு. ஆனால் நம்ம ப்ளாகை ஆளில்லாத டீக்கடைன்னு சொல்லி யாருக்காக டீ ஆத்தறேன்ன பார்ட்டிக்கு மட்டும் நச்சுனு நெத்தியடியா பதில் கொடுத்தேன். (ரஜினி அய்யராத்து திருமணம்) . அது ஆச்சு போச்சு. ஆனா ஆளில்லாத டீக்கடைங்கற மேட்டர் ரெம்ப ரோசிக்க வச்சுது. தாளி..16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரம் ஹிட்ஸ் வாங்கியிருக்கு கவிதை07. ஆனால் இதை ஆளில்லாத டீக்கடைன்னு எப்படி சொல்ல போச்சு?
ஆரும் கமெண்ட் போடறதில்லையாம். த பார்ரா.. இத்தனைக்கும் அந்த பதிவு இண்ட்லில பிரபலமாச்சு. ஒரு பதிவை விரும்பி அதுக்கு ஓட்டுப்போடறது ஒரு கமெண்ட் இல்லையா?
எனக்கும் ரஜினிக்கும் வாய்க்கா தகராறா இருக்கு. ஒரு காலத்துல நாம லவ் பண்ண பொண்ணு அஞ்சுக்கும் பத்துக்கும் போவுதுன்னு தெரிஞ்சா மனசுல ஒரு சங்கடம் வருமில்லை அப்படி ஒரு சங்கடம் தான் ரஜினி மேட்டர்ல.
என்னதான் மிஸ்டர் பாரத் சினிமாவுல ராஜீவ் கெட் அப், காமராஜர் கெட் அப்,டீப்பாய்ல காங்கிரஸ் பார்டரை பார்த்து கழண்டுக்கிட்டாலும் அதுவரை நான் ரஜினி ரசிகனா இருந்திருக்கேன். ரஜினிங்கற பர்சன், பர்சனாலிட்டி இன்ஃப்ளுயன்ஸபிள் . ஏதோ ஓரளவு பெட்டர் சர்க்கிள் ,பெட்டர் படிப்பு ( அகடமிக் அல்ல) பெட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதால நான் முழிச்சுக்கிட்டன். முழிச்சுக்கலைன்னா என் ரசனை, என் சிந்தனை என்னவாகியிருக்கும்? அந்த நிலை இன்னொரு ரசிகனுக்கு வரக்கூடாதுன்னுதான் ரஜினியை கிழிக்கிறது.
அவர் மட்டும் தன்னோட தவறை புரிஞ்சிக்கிட்டு இனியாச்சும் தான் சினிமாவுல சம்பாதிச்ச காசை சினிமால இன்வெஸ்ட் பண்றது தன்னோட படம் நல்ல படமா இல்லாட்டியும் நல்ல படங்கள் வெளிவர உதவுறது, தன் சுய நலத்துக்கு ரசிகர்களை பலி கடா ஆக்காம இருக்கிறது இத்தனை நாள் பூச்சி காட்டினதை நிஜமாக்கி ஒரு கட்சி ஆரம்பிச்சு தான் பாயும் புலி இல்லேன்னாலும் தன் ரசிகர்கள் பாயும் புலிகள் தான்னு நிரூபிக்கனும். அவிகளுக்கு தான் பண்ண இன் ஜஸ்டிஸுக்கு நஷ்ட ஈடாவாச்சும் ஒரு முயற்சி பண்ணனும். அட்லீஸ்ட் ஒரு விஜயகாந்த் ரேஞ்சுக்காவது வந்து தன்னோட இன்ஃப்ளுயன்ஸை தமிழக அரசியல் மேல ப்ராக்டிக்கலா காட்டனும். இல்லேன்னா ரஜினி கிட்ட இருக்கிற ஒரு சில நல்ல விஷயங்களையும் ஃபாலோ பண்ண எவனும் முன்வர மாட்டான். தன்னையும் ரஜினி லிஸ்டுல சேர்த்துர போறாய்ங்கன்னு பயப்படுவான்.
இனியாச்சும் தன்னை தூக்கிவிட்ட சின்ன தயாரிப்பாளர்களை வாழ வைக்கனும். , இனியாச்சும் தன்னை வாழ வச்ச சூத்திரர்கள், சேரிக்காரவுக ரசனையை வளர்க்கிற மாதிரியான படங்கள்ள நடிக்கனும். தான் ஏறிட்ட புலி மேல இருந்து இறங்கனும். வருஷத்துக்கு 6 படமாச்சும் நடிக்கனும். தமிழ்பட உலகையும் வாழ வைக்கனும். இல்லாட்டி ரஜினிங்கற வார்த்தையே ஒரு திட்டா மாறிரும். ஆமா சொல்ட்டேன்.
இத்தனை கிழிப்புக்கு பிறவும் ஒரே ஒரு டீக்கடை பார்ட்டியை தவிர ஒருத்தரும் எதிர்ப்பு தெரிவிக்கலைன்னா என்ன அர்த்தம்னு டீக்கடை பார்ட்டி உள்பட ரஜினி ரசிகர்களும் சிந்திக்கனும்?
No comments:
Post a Comment