அண்ணே வணக்கம்ணே,
கடி ஜோக் வாங்காத பார்ட்டி உண்டோ என்னமோ ..கண்டி மூட்டைப்பூச்சிக்கிட்டே கடி வாங்காத பார்ட்டி மட்டும் கிடையவே கிடையாது.
ஒவ்வொரு நல்ல விஷயத்திலயும் ஒரு கெட்ட விஷயம் மறைஞ்சிருக்கும். காந்தி தாத்தா தன் ஆசிரமத்து பெண்களுக்கெல்லாம் மொட்டை போட்டுட்டாராம். இதனால கவர்ச்சி குறைஞ்சு ஆண்,பெண்களுக்கிடையில் "கச முசா" ஏற்படாதுன்னு அவரோட நெனப்பு. பெண்மைக்கு அழகூட்டுவது ஆணிலான ஆண்மையே தவிர பெண்ணிலான பெண்மையல்ல. இந்த சின்ன மேட்டர் தாத்தாவுக்கு புரியலை பாருங்க.
அதேமாதிரி ஒவ்வொரு கெட்ட விஷயத்துலயும் நல்ல விஷயம் மறைஞ்சிருக்கும். பின்லாடன் மட்டும் அமெரிக்காவோட மூக்குக்கடியில போயி தாக்குதல் நடத்தாம இருந்திருந்தா ரஜினி தன்னை சூப்பர் ஸ்டாருன்னு நம்பறாப்ல அமெரிக்காவும் தன்னை சூப்பர் பவருன்னு நம்பிக்கிட்டு கடந்திருக்கும். ஒசாமா ஒரு கனவை கலைச்சு யதார்த்தத்தை சூ காட்டிவிட்டாரு.
சரி மேட்டருக்கு வரேன். ஒரு மூட்டை பூச்சி ஒரு எய்ட்ஸ் பேஷண்டை கடிச்சு ரத்தம் உறிஞ்சுதுன்னு வைங்க. அதுக்கும் எய்ட்ஸ் வரனும்லியா? அட்லீஸ்ட் அதனோட ரத்தத்துல ஹெச்.ஐ.வி இருக்கனுமில்லயா? அதான் இல்லியாம்.
மனுஷ ரத்தத்துல உள்ள ஹெச்.ஐ.வியை ஃபணாலாக்கிற கப்பாசிட்டி மூட்டைப்பூச்சிக்கு இருக்குதாம். அதனால மூட்டைப்பூச்சிலருந்து எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்க திட்டமிட்டிருக்காய்ங்க.
No comments:
Post a Comment