Tuesday, November 30, 2010

இன உறுப்பும் கேரக்டரும் - மீள்பதிவு

கேரக்டர்னா தெரியுமில்லியா " நம்மளோட குண நலன்கள்". இந்த பதிவுல உங்க கேரக்டரை உங்க செக்ஸ் (பால்) அதாவது ஆணா பெண்ணாங்கற ஃபேக்டர் எப்படி நிர்ணயிக்குதுனு பார்ப்போம்.

சொல்ல மறந்துட்டேங்கண்ணா இது தமிழ் மணம் தடை செய்ய மறந்த பதுவுங்கண்ணா. தாளி பிரபாகரன் சாகலைனு ஒரு ஜோதிஷ கணிப்பை போட்டதுமே பேதி புடுங்கிக்கினு நம்ம வலைப்பூவை தடை பண்ணிட்டாய்ங்க.

பாரதியார் பாரதமாதாவை "முப்பது கோடி முகமுடையாள்"னு பாடினாரு. அதாவது அப்போ இந்திய ஜனத்தொகை முப்பதுகோடி . அதனால அப்படி பாடினாரு. இப்போ 120 கோடிய தாண்டி மீட்டர் ஓடுது. மனித பிறப்பு எப்படி நிகழுதுன்னான்னுட்டு ஆரம்பிச்ச உடனே  செக்ஸை நுழைக்கிறான்பா என்று கடுப்பாகாதீர்கள். நான் என்னவோ நம்ம சொல்ற மடிசஞ்சி விஷயங்களை பத்துக்கு நூறு பேரா படிச்சா ஒருத்தர் ரெண்டு பேரு ஏத்துக்கிடு வாய்ங்களேங்கற ஆத்திரத்துல கில்மாவ நுழைக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு பார்த்திங்கன்னா செக்ஸுக்காகவே செக்ஸு எழுதறாய்ங்க.இவிகளுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷனோன்னு ஒரு கு.உ.

நிற்க..இந்த பதிவு கம்ப்ளீட்டா உயிரியல். முடிஞ்சவரை சப்ஜெக்டை டைல்யூட் பண்ணி சுவாரஸ்யமாவே சொல்றேன்.

தந்தி (டெலிக்ராம்) பாஷைல சொன்னா ஆணும் பெண்ணும் சேர்வதால் மனித பிறப்பு நிகழுது. இதே ப்ராசஸ்ல நீங்க ஆணா பெண்ணா, உங்ககேரக்டர் என்னங்கறதும் நிர்ணயிக்கப்பட்டுருது.

ஆண்,பெண் உடல்களில் பல்லாயிரம் கோடிக்கணக்கான செல்கள் இருக்கின்றன.
ஒரு வீடு செங்கல்லால கட்டப்படற மாதிரி நம்ம உடல் செல்களால கட்டப்பட்டிருக்கு. ( பேசற செல் இல்லிங்கண்ணா) நம்ம உடம்புல கோடிக்கணக்குல இருக்கிற செல்கள் தேஞ்சு அழிய, அழிய அதுக்கு சமமா புதிய செல்கள் உற்பத்தியாகிறது. (ரீ ப்ளேஸ்மென்ட்?) வயசாக வயசாக அழிஞ்சு போன செல்லை விட உற்பத்தியாற செல்லோட நெம்பர் குறைஞ்சிட்டே போவும். அதுவேற விஷயம்

சரி நம்ம வீட்ல ஃப்யூஸ் போன பாத்ரூம் பல்பை மாத்தரப்பவே கலர் மாறிப்போவுது, கம்பெனி மாறிப்போவுது, ஓல்ட் மாறிப்போவுது. புது செல் உற்பத்தியாகனும்னா அது பழைய செல் மாதிரியே இருக்கனும். இல்லேன்னா வம்பாயிரும். உதாரணமா ஒரு வளர்ந்த ஆணோட உதட்டுல இருக்கிற செல் தன் சாதிய சேர்ந்த செல்லை காப்பிபண்ணிக்காம மேலுதட்டுல இருக்கிற செல்லை காப்பி பண்ணிருச்சுன்னா என்னாகும்? உதட்டுல மீசை வளரும்,கின்னஸ்ல போட்டோ வரும்.

அதுக்காக உடம்பு புது செல்களை தயாரிக்கும் போது ரொம்ப எச்சரிக்கையோட செயல்படுது. அது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா செல்லோட அமைப்பை பத்தி தெரிஞ்சுக்கனும். நமக்கு ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும்.

செல்லில உட்கரு இருக்கு. அதுல குரொமோட்டின் ரெட்டிகுலம்னு ( Reddy குலம் ,இல்லிங்கண்ணா Rettikulam) ஒரு வலை இருக்கு. . இந்த வலைலதான் சூட்சுமமே அடங்கியிருக்கு. (ப்ளூ ப்ரிண்ட்) இதை ஒரு ஃபிலிம் ரோலுன்னு வச்சுக்கிட்டா இதுல 46 ஷாட் ஷூட் பண்ணலாம்.

அதே நேரத்துல இந்த ஆறடி உடம்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும். இது நம்ம அப்பா அம்மாவோட கூட்டு முயற்சி. (இனி அப்பா அம்மானு சொல்லாம ஆண்,பெண் என்றே குறிப்பிடலாம்)


பெண்ணோட உட்கருல இருக்கிற செல்லுலயாகட்டும், ஆணோட வீரியத்துல இருக்கிற உயிரணுவுல(செல்)யாகட்டும் மேற்சொன்ன க்ரொமோட்டின் ரெட்டிக்குலம்ங்கற ஃபிலிம் ரோல்ல 46 ஷாட்டுக்கு பதில் 23 ஷாட்ஸ் தான் ஷூட் பண்ணமுடியும். (அதாங்க க்ரோமோசோம்)

உடலுறவின் போது விந்துவிலான உயிரணு விரைக்கு வந்து சேர்ந்து, இன்னும் சில திரவங்களோட சேர்ந்து ஆண் உறுப்பு வழியா புறப்பட்டு பெண்ணுறுப்பின் வாய் வழியாக அவளோட கருப்பைல இருக்கிற அண்டத்தை துளைக்குது. அப்போ 23+23 க்ரோமோ சோம் சேர்ந்து முதல் செல் உருவாகுது.

இந்த 23+23 க்ரோமோசோம்ல உடலுறவுல ஈடுபட்ட ஆண்,பெண்ணோட (அவிக முன்னோர்களோட டேட்டா கூட) கம்ப்ளீட் டேட்டா இருக்கு. தலையோட வடிவம், தலை முடியோட நிறம், நீளம், சுருட்டையா இல்லையா, கண்ணு பாப்பா கருப்பா,பிரவுனா, ப்ளூவா பராம்பரியமா வரக்கூடிய நோய்கள் இப்படி கம்ப்ளீட் டேட்டா பதிவாயிருக்கும்.

இதுல 22 ஷாட் யு சர்ட்டிஃபிகேட். 23 ஆவது ஷாட் தான் ஏ சர்ட்டிஃபிகேட். அதாவது இதுதான் உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்குது. இது வெறும் பாலைத்தான் நிர்ணயிக்குதுன்னு நினைச்சிருந்தாங்க. (இப்போ தயிரை கூட நிர்ணயிக்குதானு கேட்டு நக்கலடிக்க கூடாது ஆமாம் சொல்ட்டேன்பா)

ஆனா இப்போ லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு என்னன்னா உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்கிற அதே குரோமோஜோம் தான் உங்கள் குண் நலன் களையும் நிர்ணயிக்குது " என்பதாகும்.

அப்போ ஆண்பாலுக்கு ஒரு கேரக்டர், பெண்பாலுக்கு ஒரு கேரக்டர் இருக்கும்னுதானே அர்த்தம்? செக்ஸுவல் பிஹேவியரும், நீங்க ஆணா பெண்ணாங்கறத பொருத்து தானே அமையும்? மனிதனின் பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட் செக்ஸ் தான். மனித உடலின் மையம் மட்டுமில்லே மனித மனதின் மையம் கூட செக்ஸ்தான். குளத்து மத்தியில கல்லெறிஞ்சா அது எப்படி குளத்து பரப்பு முழுக்க அலைகளை ஏற்படுத்துதோ அப்படியே பாலை நிர்ணயிக்கிற அதே ஜீன் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது பாஸு !

ஆண்,பெண் சைக்காலஜிய அவிக இன உறுப்பே சொல்லிருது. ஆண் உறுப்பு ஆக்கிரமிக்க துடிக்கிற மாதிரி தோணினாலும் அது இன் செக்யூர்டா ஃபீல் பண்ணுது தஞ்சமடைய இடம் தேடுது.

அதே மாதிரி தான் ஆண் இனம் பெரிய பிஸ்தா மாதிரி பில்டப் கொடுத்தாலும் சரண்டர் ஆயிர்ராங்க. ( என்ன பெண் கொஞ்சம் மதர்லி கேரக்டரோட , அவனோட பிஸ்தா பில்டப்பை சகிச்சுக்கனும். )

பெண்ணோட இன உறுப்பு பாதுகாப்பற்றதா திறந்து வச்ச கோட்டை கதவா தோணினாலும் அது இன்னொரு சமாச்சாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஸ்டேஜ்ல தான் இருக்கு. ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பெண் தன்னை அபலையா உணரலாம். தட்ஸால்.

செக்ஸ் குறித்த உணர்வுகள் கிளம்பறதுக்கு முன்னாடி ஆண்,பெண் குழந்தைகள் ரெண்டோட பிஹேவியரும் ஒரே மாதிரிதான் இருக்கும். பெண் குழந்தை மரமேறி மாங்காய் பறிக்கும் . ஆண் குழந்தை நொண்டி விளையாட்டு விளையாடும். உணர்வுகள் லேசா தீட்டப்பட்டதுமே பிஹேவியர்ல மாற்றம் வந்துருது. அதுவரைக்கும் பிஹேவியர் மட்டுமில்லே ஃபிசிக்கல் ஸ்ட்ரக்சர் கூட ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். (இன உறுப்பை தவிர்த்து)

பால் நிர்ணயம் கருவிலேயே நிர்ணயிக்கப்பட்டூட்டாலும் அது ஜஸ்ட் ரஸ்னா பவுடர் மாதிரி /கான்சன்ட்ரேட்டட் ஃப்ரூட் பல்ப் மாதிரி தான் இருக்கு. குறிப்பிட்ட வயசு/பருவம் வந்த பிறகுதான் அது 22 டம்ளர்ல கலந்து வச்ச மாதிரி விஸ்தரிக்கப்படுது. அப்போதான் தன் பால் குறித்த உணர்வே அந்த குழந்தைக்கு வருது. அம்மா " டேய் கண்ணா .. அந்த டீ கப்புகளை மட்டும் கழுவி கொடுரா "ன்னு கேட்டா பையன், " போ போ.. "ன்னிட்டு போய்க்கினே இருப்பான். பரணைல இருக்கிற ஸ்டீல் அண்டாவை இறக்க வீடு பையனுக்காக காத்திருக்கறப்ப அவன் ஆம்பளையாயிர்ரான்.

சரி பால் (செக்ஸ்) டிசைட் ஆயிருச்சு. உணர்வுக்கு உயிர் வந்துருச்சு. அவன் தன்னை உணர ஆரம்பிச்சுட்டான். அடுத்தது என்ன ? இயற்கையின் பிரதான விதி வழியே அவன் மதி வேலை செய்ய ஆரம்பிக்குது . அதாங்க செக்ஸ், மற்றும் இனப்பெருக்கம்.

ஆண் குழந்தை எல்லாத்தயும் ஆக்கிரமிக்க பார்க்கிறது ஒரு பார்ட்.
தஞ்சமடையறது இன்னொரு பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்

பெண் குழந்தை எல்லா ஆக்கிரமிப்புக்கும் ஈடுகொடுத்துக்கிட்டு "தேமே"ன்னு இருக்கும் இது ஒரு பார்ட்
படிப்படியா எல்லாத்தயும் தன் கட்டுப்பாட்ல கொண்டு வந்துரும். இது செகண்ட் பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்.

பெண்ணுரிமை வாதிகளாகட்டும், ஆணாதிக்க வாதிகளாகட்டும் யாருமே குறை சொல்லமுடியாத வகைல இயற்கை இரு பாலாரையும் பேலன்ஸ் பண்ணி வச்சிருக்கு.

பின்னே எங்கடா வருது வில்லங்கம்னா இரு பாலாருமே தங்களோட க்ரோயிங்க் ப்ராசஸ்ல முதல் பார்ட்லயே நின்னுர்ராங்க.

அதாவது ஆண் சதா சர்வ காலம் ஆக்கிரமிக்கவே பார்க்கான்.
பெண் ஆக்கிரமிக்கப்படவே விரும்பறா.

ஸோ உங்க பால் நிர்ணயிக்கப்படும்போதே அதே க்ரோமோஜோமால உங்க கேரக்டரும் நிர்ணயிக்கப்பட்டுருது . உங்க கேரக்டரை உங்க இன உறுப்பே சிம்பாலிக்கா காட்டுது. க்ரோயிங்க் ப்ராசஸ்ல ரெண்டு பார்ட் இருக்கு. பழக்க தோஷத்துல நீங்க முதல் பார்ட்லயே நின்னுர்ரிங்க.

வாழ்க்கைல ரெண்டையுமே பார்க்கனும். ரெண்டுலயுமே சுகமிருக்கு. ஆக்கிரமிக்கறதுல இருக்கிற சுகம் டெம்ப்ரரி. அதை இழக்கறது உங்க கவுண்டர் பார்ட் கைல இருக்கு. ( புரட்சி வெடிச்சு எப்பவேணா எவிக்ட் ஆயிர்ர வாய்ப்பிருக்கு)

ஆக்கிரமிக்க படறதுல இருக்கிற சுகம் பர்மனென்ட். அதை நீங்களா முயற்சி பண்ணாதான் இழக்க முடியும்.

அதனாலதான் பெண்களுக்கு இதய நோய், பி.பி.ஷுகர்,சர்க்கரை வியாதியெல்லாம் குறைவா வருது.

3 comments:

  1. உண்மைதான் தலிவா..

    ReplyDelete
  2. operation 2000......

    நன்றி

    ReplyDelete
  3. //( Reddy குலம் ,இல்லிங்கண்ணா Rettikulam)//
    //(ப்ளூ ப்ரிண்ட்) இதை ஒரு ஃபிலிம் ரோலுன்னு வச்சுக்கிட்டா இதுல 46 ஷாட் ஷூட் பண்ணலாம்.//
    //
    பின்னே எங்கடா வருது வில்லங்கம்னா இரு பாலாருமே தங்களோட க்ரோயிங்க் ப்ராசஸ்ல முதல் பார்ட்லயே நின்னுர்ராங்க.//
    அடிச்சி தூள் கிளப்புறீங்க... மிக எளிமையான விளக்கம் :)
    //
    ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்.//
    2 டைம்ஸ் வந்திருக்குங்க :)

    ReplyDelete