புருசன் கள்ளப்புருசனுக்கிடையில பாலன்ஸ் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறது எம்மாம் கஷ்டம்னு அவிகளுக்கு தான் தெரியும். பகவத் பக்தி பத்தி சொல்றச்ச ரா.கி பரமஹம்சர் சொல்வாரு " ஒரு பொம்பளை தன் புருசனுக்கு தேவையானதை எல்லாம் பக்காவா செய்துக்கிட்டே இருப்பா. ஆனால் அவள் மனசு கள்ள புருசன் மேல, அவன் வரச்சொன்ன இடத்து மேல,அவன் தரப்போற சுகத்துமேலதான் கான்சன்ட் ரேட் ஆகி கிடக்கும். அதே போல ..
இந்த உலகம்ங்கற கணவனுக்கு செய்யவேண்டிய பணிவிடையையெல்லாம் பக்காவா செய்துட்டு இரு. ஆனால் உன் மனசு மட்டும் கள்ளப்புருசனான கடவுள் மேலயே கான்சன்ட்ரேட் ஆகியிருக்கனும்.
இந்த மேட்டர்ல பேலன்ஸிங் கப்பாசிட்டி மட்டும் பொம்பளைகளுக்குதேன் அதிகம்னு ஒரு சம்சயம். எவனெல்லாம் உபரியா எவளை வச்சிருக்கானு பட்டுனு தெரிஞ்சுபோவுது. ஆனால் எவள் எவனை உபரியா வச்சிருக்காங்கறது கொலை,தற்கொலைனு எதுனா எக்குதப்பா நடந்தாதான் வெளி உலகத்துக்கு தெரியுது.
ரெண்டு பெண்டாட்டிக்காரவுக பொளப்பு நாறப்பொழப்பு. இவிகல்லாம் கள்ளக்காதல் மேட்டர்ல தாய்குலத்தை ஃபாலோ பண்ணிக்கிட்டா பெட்டர் போல.
கரகாட்டம் பார்த்துருப்பிங்க. ஆட்டம் பாட்டுக்கு நடந்துக்கிட்டிருக்கும்.வாண வேடிக்க ஒரு பக்கம், மேள தாளம் ஒரு பக்கம், சாமி ஊர்வலம் ஒரு பக்கம், வேடிக்கை பார்க்கிற கூட்டம் ஒரு பக்கம் எவன் ஜாக்கெட்ல நோட்டு குத்துவான் , எவன் நோட்டை மட்டும் குத்துவான், எவன் கப்பாசிட்டி என்னனு குன்சா கமனிச்சிட்டே இருக்கனும். இத்தீனி இழவுக்கும் இடையில தலையில வச்சிருக்கிற கரகம் விழுந்துராம பார்த்துக்கனும்.
நம்ம நிலையும் இதாண்ணேன்.அஷ்டாவதானம், சதாவதானம்லாம் தாய்க்குலத்துக்கு கை வந்த கலை. கைக்குழந்தைய வச்சிக்கிட்டி காஃபி,டிஃபன்,சோத்துக்கடைய பார்த்துக்கிட்டே ஆத்துக்காரருக்கு வென்னீர் போட்டு, ஷூவை துடச்சி பாலிஷ் போட்டு வச்சி, நாறிப்போன சாக்ஸை அவசரமா துவைச்சி ஃபேன் காத்துல உலர்த்தி
ய.......பாஆஆஆஆஆஆஆ
வெளியூர் போறச்ச நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துருதுண்ணே. (ஊரை போய் சேரனுமேங்கற டெட்லைன் - தாளி இந்த உலகமும் வெளியூர்தானே.- ஒரு நாளில்லை ஒரு நா மேலூர் போக வேண்டியதுதானே -அதை மறந்துட்டதாலதான் இந்த குழப்படி -வெத்து அலட்டல்)..
என்னை பொருத்தவரை ரா.கியோட ஃபார்முலாவை விடாப்பிடியா ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்.
நமக்கு கள்ள புருசன் ஆப்பரேசன் இந்தியா2000. "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோணே"னு நாம எது செய்தாலும் அது ஆ.இ க்காகத்தேன்.
நியூமராலஜிப்படி நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 வரை ( நமக்கு மட்டும்ணே) அல்லல்,அலைச்சல், சாகசயத்தனம்லாம் தூள் கிளம்பனும். கரீட்டா கீதுண்ணே. எட்டாம் தேதி வீடு மாத்தினேனா , எது எங்கன இருக்குனு தெரியவே ஒரு வாரம் ஆச்சு.
படக்குனு ஆஃபீஸ் போட ஷகரான பஜார் தெருவுல இடம் கிடைச்சது. அந்த வெலை ஒரு வாரம் இழுத்துருச்சு. இத்தனைக்கும் ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் எதுவும் விடலை. தமிழ்பதிவு, தெலுங்கு பதிவு, ஆன் லைன் ஜோதிட ஆலோசனையெல்லாம் தனி தனி ட்ராக்ல ஓடிக்கிட்டே இருந்தது.
இதுல லோக்கல் பாலிட்டிக்ஸ் வேற சூடாயிருச்சு.ஒரு புதுப்பணம், மந்திரி ஒத்தாசையோட பயங்கர படம்லாம் காட்ட ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்ல கதை எப்படியோ ஆந்திராவுல பிற்படுத்தப்பட்டோர் அரசியல்னு தனியே ஒரு பிட்டு தனி ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். த. நா மாதிரி படு தேசல் இல்லைன்னாலும் சின்னபாம்பையும் பெரிய தடி கொண்டுதானே அடிக்க வேண்டியிருக்கு.
லோக்கல் எம்.எல்.ஏ ஓ.சி. அந்த ஒரு ஆசாமிக்கு ஆப்பு வைக்க BCகர்ஜனானு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க. BCக்கு அரசியல் அதிகாரம்ங்கறது அஜெண்டா. தாளி .. BCக்கு அதிகாரமா?, BC லீடர்ஸுக்கு அதிகாரமா?, அவிக வாரிசுகளுக்கு அதிகாரமா? தமிழ் நாட்ல தாத்தாவே BC தேன்..
த.நா BCங்க வீட்ல ரெண்டு குழாய் போட்டு ஒன்னுல பாலும்,இன்னொன்னுல தேனுமா வருது..
அரசுவேலைல ரிசர்வேஷன் கேட்டிங்க.. வந்தாச்சு. வானத்தை வில்லா வளைச்சுட்டிங்களா இல்லை. அரசுவேலைய நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்? விவசாயத்தை நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்.. விவசாயத்துக்கு அடிப்படை நிலம். ஜனத்தொகை அடிப்படையில நிலம் கேளு.
டைரக்ட் டெமாக்ரசி கேளுங்கப்பா. அட்லீஸ்ட் பிரதமர்,முதல்வர் பதவிக்கு டைரக்ட் எலக்சன் கேளுங்கப்பா அதை விட்டுட்டு எவனோ பத்து பேரு எம்.எல்.ஏ ஆகனும்னு சனத்துக்கு கொம்பு சீவி விட்டுக்கிட்டு அலப்பறை பண்ணாதிங்கனு தலையங்கம் எழுதி கொஞ்சம் போல காசு பணம், சனம் மொபிலைஸ் பண்ணி ஒரு ஸ்பெஷல் இஷ்யூ போட வேண்டியதாயிருச்சு.
ஆ.இ வுல மொதல் பாயிண்டே நேரிடை ஜன நாயகம் தேன்.
நேத்து (24/11/2010) பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாச்சு. காங்கிரசுக்கு கல்தானு கூட சொல்ல முடியாது கல்லறையே கட்டிட்டாய்ங்க. இது உலகறிஞ்ச உண்மை. ஆனால் 21 ஆம் தேதி பாதி ராத்திரி ( 22 விடியலுக்கு பூர்வம்) நமக்கு கொஞ்சம் ஞம ஞமங்கவே சோனியா டேட் ஆஃப் பர்த்தை பீராஞ்சு பார்த்தேன். 9/12/1946.
இப்ப இன்னா வயசு? அதை நேம் நெம்பரால டிவைட் பண்ணா 8. அடடா அப்போ எட்டாவது ரவுண்டா? 2009லயே ஸ்டார்டாயிருச்சா? அதான் தெலுங்கானா மேட்டர்ல கைவச்சு நாறிட்டாய்ங்களா அது இதுனு கிராஸ் செக் எல்லாம் முடிச்சு சோனியாவுக்கு கஷ்ட (கண்ட) காலம்ங்கற தலைப்புல தெலுங்குல ஒரு பதிவ போட்டேன். அதைப்பார்க்க இங்கே http://sambargaadu.wordpress.com/2010/11/22/futuresoniya/
அழுத்துங்க.
நான் இந்த பதிவை போட்ட பிற்பாடுதான் பீகார்ல ஆப்பு, ஆந்திராவுல முதல்வர் மாற்றம். கிரண் குமார் ரெட்டி சித்தூர் மாவட்டம். ராயலசீமா கல்ச்சர். ஒய்.எஸ். சிஷ்ய கோடி. ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் கைக்கு வந்தா அப்ப இருக்கு கச்சேரி.
ஹய்யா .. யாரு அடுத்த சி.எம்ன்னுட்டு பெட்டிங்கே ஆரம்பிச்சுரலாம்.
9ன்னா செவ். செவ்வாய்க்குரிய காரகத்வங்கள் கீழே: (செவ்வாயே சொல்றாருங்கண்ணா)
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.
எச்சரிக்கை: மேற்சொன்ன எல்லா மேட்டர்லயும் ஆப்புத்தேன். இதை எழுதற என் பேர் கூட முருகக்கடவுள் தொடர்பானதா இருக்கிறதை கவனிக்கவும்.
புருசன் கள்ளப்புருசனுக்கிடையில பாலன்ஸ் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறது எம்மாம் கஷ்டம்னு அவிகளுக்கு தான் தெரியும்
ReplyDelete/////////////////////
எவிக அவிக ?
ஆரம்பத்துல ஏதோ உள்ளூர் மேட்டர் போலன்னு படிச்சா எல்லாம் விஷயத்தையும் சொல்லி கடைசில பீகார் வரைக்கும் போயிருக்கிங்க
ReplyDeleteநக்கல் நடை அழகுதான்.
ReplyDelete:))))))))))))
சோனியா பற்றிய தகவலை தமிழ்ல், ஆங்கிலம் ரொண்டுலையும் தந்தா நல்லா இருக்கும் ஏன்ன, தேசிய கட்சி சம்பந்தப்பட்டதால நிறையபேர் படிப்பங்கன்னு நினைக்க்றென்.
ReplyDeleteவினோத் அவர்களே,
ReplyDeleteதாங்கள் சொன்னபடியே ஆங்கிலத்திலும் பதிவு செய்துள்ளேன்
http://wwww.chartdotcom.blogspot.com
என்னக்கு அப்படி பிளாக் இல்லை என செய்தி கிடைத்தது.
ReplyDeletehttp://wwww.chartdotcom.blogspot.com/
The blog you were looking for was not found. If you are the owner of this blog, please sign in.
Return to Blogger
Home | Features | About | Buzz | Help | Discuss | Language | Developers | Gear
Terms of Service | Privacy | Content Policy | Copyright © 1999 – 2010 Google