Monday, November 22, 2010

மருந்தா ? நோய்க்கு விருந்தா?

அண்ணே வணக்கம்ணே,
நிர்வாண உண்மைகள்னு டைட்டில் வச்சிக்கிட்டு, வானத்துக்கு கீழானவை மட்டுமல்லனு சப் டைட்டில் வச்சுக்கிட்டு ஒரு சப்ஜெக்டை பத்தி எழுதாமயெ விட்டுட்டது உறைக்கவே கோதாவுல இறங்கிட்டேன்.

அந்த சப்ஜெக்ட் ..டட்டடாஆஆஆஆஆஆஆய்ங் ..மருத்துவம் தேன். பொதுவா சட்டத்தை பத்தியும் மருத்துவத்தை பத்தியும் நிபுணர் அல்லாதவர்கள் எழுதக்கூடாதுனு சட்டம் இருக்கு.

நாம என்ன 24 மணி நேரத்தில் எடை குறைய, விளக்கு கம்பம் கணக்காய் நிற்க, 6 மணி நேரத்தில் மூஞ்சி செங்குரங்கா மாறனு ஊரை ஏமாத்தவா போறோம் . இல்லை. எப்படியெல்லாம் ஏமாத்தறாய்ங்கனு தான் எழுதப்போறோம். ஒரு மருத்துவனா இல்லாம மருத்துவனா வேஷம் கட்டி எழுதினாதான் சட்டப்படி தவறு.

ஒரு நோயாளியா,ஒரு தனி மனிதனா நம்ம கருத்துக்களை எழுத உரிமை இருக்குங்கண்ணா..

எனக்கு தெரிஞ்ச சட்டப்படி - தீர்க்க முடியாத தீர்க ( நாள்பட்ட)  வியாதியை தீர்க்கறேனு விளம்பரம் தர்ரது தவறு. உ.ம் கான்சர், எய்ட்ஸ், சொரியாசிஸ்,எழுச்சி இன்மை

தீர்க்க முடிஞ்ச வியாதியை கூட தீர்க்கறோம்னு கூட விளம்பரமே தரக்கூடாது. இவ்ள ஏன் போர்டு கூட பெருசா வைக்ககூடாது.(மெடிக்கல் கவுன்சில் நார்ம்ஸ் படி) .

இதையெல்லாம் எத்தீனி பேரு ஃபாலோ பண்றாய்ங்கனு உங்களுக்கே தெரியும்.

நம்ம சிற்றறிவுக்கு எட்டின வரையில எல்லா மருத்துவமுமே டுபாகூர்தான். காரணம் என்னன்னா.. நோய்காரணத்தை ட்ரீட் பண்றதில்லை. நோய் குறிகளைத்தான் ட்ரீட் பண்றாய்ங்க.

உ.ம்: ஜல்பு. ஜல்பு ஏன் வந்ததுனு எந்த டாக்டரும் விஜாரிக்கிறதில்லை. உடனே ஆன்டிபயாடிக் எழுதி கொடுத்துர்ராய்ங்க (டஸ்ட் அலர்ஜி இருக்கலாம் - ஒட்டடை அடிச்சிருப்பான், சன்னலோர சீட்ல பல நூறு மைல் ஜர்னி பண்ணியிருப்பான் . எதுனா ஒரு ஐட்டம் இவனுக்கு ஒத்துக்காததா இருக்கும் -அதையே ஒரு வெட்டு வெட்டியிருப்பான் அட சிறு பருப்பு/ பைத்தியம்பருப்பு சாம்பார் அடிச்சிருப்பான்னு வைங்களேன்).

இன்னொரு சமாசாரம் என்னடான்னா பாடி வேணானு வெளிய தள்ற ஐட்டத்தைதான் லேப்ல வச்சு டெஸ்ட் பண்ணுறாய்ங்க. உடம்பு எடுத்துக்கிட்ட சரக்கை டெஸ்ட் பண்ண வாய்ப்பே இல்லியே..

அல்லோபதில தர்ர மருந்துக்கு ட்ரக்னு பேரு. இதுக்கு டிக்சனரி மீனிங் : மாறுபட்ட விளைவை தூண்டும் பொருள்

உங்களுக்கு ஜுரம்னு போனா வியர்வைய தூண்டற மருந்தை தருவாய்ங்க.பேதினு போனா ப்ளாட்டிங் பேப்பர் கணக்கா மலக்குடல்ல உள்ள நீரை கூட ( உவ்வே)  உறிஞ்சிக்கிற மருந்தை கொடுப்பாய்ங்க. அப்பாறம் நாலு நாளைக்கு கக்காவே வராது

ஹோமியோபதினு ஒரு சப்ஜெக்ட். இதுல நோய்க்கான காரணம் எதுவோ  சிகிச்சையும்  அதுவேங்கறது இதன் சித்தாந்தம். ஹோமோன்னா ஒருனு அர்த்தம் .ஹோமோ செக்ஸுன்னா ஓரின சேர்க்கை. ஹோமியோன்னா நோய்க்காரணத்தையே சிகிச்சையா தர்ர மருத்துவம்னு அர்த்தம்.

அடுத்தது சித்தமருத்துவம். அல்லோபதில செயற்கையா தயாரிச்ச விசத்தை வச்சு ட்ரீட் பண்ணுவாய்ங்க. சித்தமருத்துவம் இயற்கையான விசங்களை யூஸ் பண்ணும்.

உ.ம் ஆஸ்மா/இசிப்பு (?) மூச்சிரைப்பு  காரவுகளுக்கு தர்ர ட்ரீட்மென்ட். பேசண்ட் மூச்சு விடவே முடியாம திணறிகிட்டிருப்பான். டாக்டர் ஹிட் மருந்தடிச்ச கணக்கா ஒரு டப்பாவ எடுத்து வாய்க்குள்ள விட்டு புஸ்கு புஸ்குனு அடிப்பார். ஒடனே ப்ராப்ளம் சால்வ்ட். எப்படி?

தாளி ஒடம்புக்கு ஒத்துவராத ஏதோ ஒரு இழவு உள்ளாற போயிருச்சு. அதை வெளியேற்ற நுரையீரல் டபுள் ட்யூட்டி பண்ணுது. அது வெளியேற்ற முயன்ற சரக்கை விட மோசமான சரக்கை டாக்டர் புஸ்கு புஸ்குனு அடிச்சாரு.

நுரையீரல் "தூத்தெறிக்க ..எக்கேடோ கெட்டுப்போ"னு தன் முயற்சியை நிறுத்திருச்சு தட்ஸால்.

சித்தமருத்துவத்துல சுக பேதியாக விளக்கெண்ணை கொடுப்பாய்ங்க. வி.எண்ணெய் உள்ளாற போனதுமே உடம்பு அதை வெளித்தள்ள ட்ரை ப்ண்ணுது.ஏன் ?அது உணவல்ல. உடலுக்கு ஒத்துக்க கூடிய ஒன்னல்ல. விசம் என்பதால் வெளித்தள்ள பார்க்குது அந்த முயற்சில மஷ்டு எல்லாம் வெளிய வருது..

(இப்படி சொல்ல வேண்டியது  மஸ்தா கீது வாத்யாரே.. அடுத்தடுத்தபதிவுல பார்ப்போம்)

3 comments:

  1. //அப்பாறம் நாலு நாளைக்கு கக்காவே வராது//
    //நுரையீரல் "தூத்தெறிக்க ..எக்கேடோ கெட்டுப்போ"னு தன் முயற்சியை நிறுத்திருச்சு தட்ஸால்//
    சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது அய்யா! :)

    ReplyDelete
  2. பாஸ்!
    நான் எந்தளவுக்கு கடுப்பாயிர்ரனோ அந்தளவுக்கு காமெடி வருது ..

    "இடுக்கண் வருங்கால் நகுக"ங்கற பாயிண்டு ஆட்டோமேட்டிக்கா என்னமா ஃபாலோ ஆகுது பார்த்திங்களா?

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

    (ஆமா எங்க புது ஐட்டம் எதையும் காணோம்?)

    ReplyDelete
  3. நல்லாவே எழுதுறீங்க இல்ல.....கலாய்கிறீங்க.
    ஆனாலும் யேசிக்க வேண்டிய விஷயங்கள்.

    ReplyDelete