Sunday, November 21, 2010

பணம் ஒரு கன்னித்திரை

1.பணம் வாழ்க்கை பயணத்துக்கு தேவையான எரிபொருள்

2.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அத வச்சு என்னத்த கழட்டப்போறோங்கறதுதான் முக்கியம்

3.லட்சியத்தை அடைய பணமும் ஓரளவு உதவலாம். ஆனால்பணமே லட்சியமாயிட்டா தூத்தேரிக்க..

4.நாம சம்பாதிக்கனும்னா  நம்மை சுத்தி இருக்கற ஒவ்வொருத்தனும் சம்பாதிச்சிட்டே இருக்கனும்.

5.என்னைக்கோ ஒரு நா சம்பாதிச்சா வேஸ்ட். தினம் தினம் சம்பாதிக்கனம்.  நீங்க ஃபீல்டுல இருந்தாதான் பணம் வரும்னா அது  ஒர்ஸ்ட். நீங்க இல்லாட்டாலும் பணம் வந்துட்டே இருக்கும்னா அது பெட்டர்.

6.அடுத்தவனோட நஷ்டம் தான் உங்க லாபம்னா ஒரு நாளில்லை ஒரு நாள்  அவன் நஷ்டப்பட முடியாத இழி நிலைக்கு வந்துருவான் .அப்ப உங்க நிலை கோவிந்தா கோவிந்தா

7.கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது சுகமா வாழத்தான். என்னைக்கோ ஒரு நா சுகப்படலாம்னு கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தா கதை கந்தலாயிரும்.

8.பணம் பழக்கப்பட்டுட்டாலும் பரவால்லை. அது போதையாயிட்டா பொழப்பு நாறிரும்.

9.பணம் ஒரு சவுண்ட் ப்ரூஃப். பெட்டி நிறைய பணம் இருந்தா ஏழைங்களோட பசி கூச்சல் காதுல விழவே விழாது.

10. பணம் BP டாப்ளெட்ஸை விட  சூப்பரா BPயை கண்ட்ரோல் பண்ணும்.

11.பணத்துக்கு சுய மரியாதை சாஸ்தி. அகங்காரம் பயங்கர எதிரி. எவன் பணத்தை தன்  ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக செலவழிக்கிறானோ அவன் கிட்டே இருந்து கழண்டுக்கும்.

12.பணம் விலை உயர்ந்த சென்டை விட பவர் ஃபுல் .உங்க நாத்தத்தையெல்லாம் கண்ட் ரோல் பண்ணிரும்

35.பணம் ஒரு மவுத் ஃப்ரெஷ்னர் ..உங்க பேச்சுக்கு வாசனைய கூட்டும்.

36.பணம் எலும்பு துண்டு மாதிரி. சனம் நாய் கூட்டம் மாதிரி. எலும்பை வீசிட்டே போகனும். அதுக்காகவாச்சும் எலும்பை பொறுக்கியாகனம்

37.பணம் ஒரு ரா மெட்டீரியல் அதை வச்சு  நீங்க தயாரிக்கப்போற  ப்ராடக்ட் எதுங்கறது முக்கியம். பணத்தையே ப்ராடக்டுனு நினைச்சுட்டா ஒரு வாழ் நாள் வீணாயிரும்.


38.பணம் ஒரு மூங்கில் . அறிவாளி அரையடில ஓட்டை போட்டு புல்லாங்குழலாக்கிர்ரான். முட்டாள் எட்டுக்கு எட்டா வெட்டி பாடையாக்கிக்கறான்.

39.பணம் உங்க கிட்ட மஸ்தா இருந்தா பணம் இல்லாமயே எல்லா வேலையும் ஆயிரும். அது இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் கட்டாயம் பணம் தேவை.

40.பணம் இல்லாதவுக இருக்காய்ங்க. பணத்தேவையில்லாதவுக இல்லவே இல்லை.

41.பணம் சஞ்சீவனி வேர் மாதிரி செத்துப்போனவனுக்கு உயிர் கொடுக்கும். ( என்ன ஒரு லொள்ளுன்னா நீங்க உசுரோட இருக்கிறச்சயே உங்க இதயத்தை கொன்னுரும்)

42. சம்பாதிக்கிறதுக்கு முதல் படி  பேட் பிடிச்சுக்கிட்டு அவுட் ஆகாம நிக்கறதுதான். சிக்ஸர்,ஃபோர் எல்லாம் எப்பயாச்சும் க்ராஸ் ஆகும்.


44. பணம் ஒரு கன்னித்திரை மாதிரி எந்த பட்டி தே.ளையும் கன்னியாக்கிரும்.

45. பணம் ஒரு  காயகல்பம் எந்த கிழவனையும் குமரனாக்கும்

46.பணம் ஒரு வயாக்ரா ( அதை ஈட்டும் ப்ராசஸ்ல  ஆண்மை பலியயாயிர்ரதுதான் சோகம்)

2 comments:

  1. //பணம் ஒரு மூங்கில் . அறிவாளி அரையடில ஓட்டை போட்டு புல்லாங்குழலாக்கிர்ரான். முட்டாள் எட்டுக்கு எட்டா வெட்டி பாடையாக்கிக்கறான்//
    //பணம் சஞ்சீவனி வேர் மாதிரி செத்துப்போனவனுக்கு உயிர் கொடுக்கும். ( என்ன ஒரு லொள்ளுன்னா நீங்க உசுரோட இருக்கிறச்சயே உங்க இதயத்தை கொன்னுரும்)//
    கலக்கல்_ அனுபவம் பேசுது...
    அப்புறம், 12க்கு பிறகு 13 தான்... 35 இல்ல... எந்த வாத்தியார்ட்ட படிச்சீங்க? :)

    ReplyDelete
  2. ஹி ஹி நான் கணக்குல வீக்கு பாஸ். 1 ஆம் கிளாஸ்லயே கணக்குல நூத்துக்கு 99 தேன்.

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

    ReplyDelete