Sunday, November 14, 2010
ஏக் மார், தோ துக்டா
ஏக் மார், தோ துக்டா
ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை... “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது”.
நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை. ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.
அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு.
அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை... இது தியானம்...
எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...
சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது. சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.
இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள்.
மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை. தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.
ஒரு சின்ன கேள்வி... இப்பொழுது எல்லா வலைப்பூக்களிலும் கூகுள் ஆட்சென்ஸ் உண்டு... எத்தனை பேர் அதை கிளிக்கி அந்த வலை பதிவருக்கு உதவியிருக்கிறோம்?.
“போய்யா ஜி... நான் கிளிக்கினால் எனக்கா பணம் வருது... அவனுகுல்ல போகுது...!”
அடபாவிகளா... அவன் கிளிக்கினால் உனக்கு வருமேயா... அதை மறந்திட்டயே?
இந்த ஒரு பொதுவான விசயத்திலேயே இப்படியான முரண் இருந்தால்.... விளங்கிரும்லா...
வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை... உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.
ஆனால் இரண்டாவதான தன் வழிபாடு... தியானம், இது உடல், மன அமைதி தியானம் இல்லை. குண்டலி அ குண்டலினி தியானம்...
ஆர்வமுள்ளவர் மட்டுமே மேற்கொண்டு படிக்கலாம்...
குண்டலி மூலாதாரம் எனும் Sexual Gland ல் உறைந்திருக்கிற ஒரு மின்சாரம். அதுவே உடல், மன, எண்ண செயற்பாடுகளின் ஆதாரம். இதன் இயக்கம் சிவம்... இல்லையேல் சவம். சித்தர் தியான முறை... குண்டலியின் இயக்கத்தை மாற்றுதல்... தன் சுய இயக்கத்தை நிறுத்தி நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.
எப்படி கொண்டுவர இயலும்?
முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...
இது இப்போதில்லை... எளிய முறை குண்டலி தியான பயிற்சி கிடைக்கிறது... வேண்டுவோருக்கு மட்டுமே கிடைக்கும். எங்கே ஜி? தேடுங்கள்... வாழைப்பழம் தான் தர முடியும்... உரித்தலும், ஊட்டிவிடுதலும் என் வேலையல்ல.
கேள்வி: ஜி... கூகுளாண்டவர் கிட்ட கேட்டா நிறைய நூல் “குண்டலி தியானம்” பற்றி கிடைக்கிறதே முயற்சிக்கலாமா?
பதில்: விபரம் கிடைத்தவரையில் சரி... அதன் படி நடக்கவேண்டாம்... குண்டலி உசுப்பேற்றல் முறையாக இயக்கப்பட வேண்டும், முறை தவறினால்... உடல், மன, எண்ண செயற்பாடுகள் தடுமாறும் வாய்ப்புகள் உண்டு...
சரி... இதன் மூலமாக என்ன கிடைக்கும்?
ஓட்டுக்கு பணம் வாங்குகிற மக்களல்லவா நாம்... ஏம்ப்பா... எதாவது கிடைச்சாத்தான் பண்ணனுமா? பண்ணிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க கூடாதா?
அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?
நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.
அதான் தலைப்புல வச்சிருக்கேன்.... ஏக் மார், தோ துக்டா
வழிபாடு தொடரலாமா?
:)
குண்டலியின் தொடர்புடைய... திரு. முருகேசன் அவர்களின் பதிவு காண்க... இங்கே
Subscribe to:
Post Comments (Atom)
பாஸ்,
ReplyDeleteநம்ம மறுமொழியின் நீளத்துக்கு கமெண்ட் ஃபார்ம்ல இடம் பத்தாதுனு தனிப்பதிவே போட்டிருக்கன்.. பாருங்க.
ரெம்ப யோசிக்க வச்சுட்டிங்க.. சிவ ராத்திரியாவே ஆயிருச்சு
//முகத்தில் முகம் பார்க்கலாம்///
ReplyDeleteயார் அந்த மனிதர்?
மாயக்கண்ணாடி படத்தில் சேரன் போடோவுக்கு போஸ் கொடுத்தமாதிரி