இந்தியாவை பணக்கார நாடாக்க நான் திட்டம் தீட்டியதும்,சந்திரபாபுவுக்கு அனுப்பியது,அவர் அதை 5 வருடம் கிடப்பில் போட்டது,பதில் தர தபால் செலவுக்கு நான் ரூ 10 எம்.ஓ அனுப்பியது ,பிறகு கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டது,பத்திரிக்கைகள் மூலம் வழக்கு விவரம் அறிந்த சந்திரபாபு என் திட்டத்தை உரிய வகையில் உபயோகித்துக் கொள்வதாய் கடிதம் போட்டது / இந்த விசயமெல்லாம் தங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம்.(லேட்டஸ்டா கூட ஒரு பதிவுல இந்த விருத்தாந்தங்களையெல்லாம் சொல்லியிருக்கேன்)
என்.டி,ஆர் சிங்கம். சந்திரபாபு நரி. முதலில் என்.டி.ஆருக்காக நரி வேலைகள் செய்தார்.பின்பு என்.டி.ஆருக்கே நரி வேலை காட்டி அல்வா கொடுத்து முதலில் வீட்டுக்கும்,பின் எமப்பட்டணத்துக்கும் அனுப்பிய நரி சந்திரபாபு. அவர் 4 காலையும் தூக்கி, திட்டத்தை உரியவகையில் உபயோகித்துகொள்வதாய் கடிதம் போட்ட உடனேயே எனக்குள் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.
முதல்வர் அலுவலகத்திலிருந்தே மாவட்ட அரசு இயந்திரத்துக்கு நான் சப்மிட் செய்யும் எந்த வித மனு,புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்னுடன் வந்து கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்ட் மீது நடவடிக்கை எடுக்க 6 மாதம் பிடித்தது. அதுவும் மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு பிறப்பித்த பிறகு.
சந்திரபாபு இடைத்தேர்தலுக்கு திட்டமிட்டு ரேஷன் கார்டுகளை அள்ளிவிட உத்தரவிட்டார். ஊரில் லட்சாதிபதி,கோடீஸ்வரன் எல்லாம் அரிசி கார்டு வாங்கிக் கொண்டிருக்க, பஞ்சை பராரியான எனக்கு அல்வா கொடுத்து விடுவார்களோ என்ற அய்யம். அதுவும் ரேஷன் கார்டு என்பது நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஆகிவிட்ட காலகட்டத்தில் நாட்டுக்காக நாயாய் உழைக்கும் எனக்கு கார்டு மறுக்கப் படவே கடுப்பாகிவிட்டேன்.
எம்.ஆர்.ஓ வை பிடித்து எகிறினேன்.(1991 நவம்பரில் காதல் கடிமணம் கொண்ட உடனேயே கார்டுக்கு பதிவு செய்தவன் நான். 2004 ல் கூட மறுத்தால் எப்படியிருக்கும்) கோர்ட்டுக்கு போவேன் என்று மிரட்டினேன். "அட போய்யா" என்றார் அவர்.
கோர்ட்டுக்கு போக ஆட்டோவுக்கே காசில்லாத நான் வக்கீல் பார்த்து ,வளைக்காப்பு நடத்துவதெல்லாம் நடக்கிற விஷயமா? லோக் அதாலத்துக்கு தட்டினேன் ஒரு புகார்.
அப்போது யாரோ கவுடு தான் மாவட்ட நீதிபதி. பாவம் மனுசன் எங்கிருந்தாலும் வாழ்க ரொம்பவே நக்கலடித்தாலும் " கார்ட் கொடுத்துருங்கப்பா' என்று கலெக்டருக்கு ஒரு கடிதம் அனுப்பினார், கலெக்டர் எம்.ஆர்,ஓ வை காய்ச்சினார். எம்.ஆர்.ஓ எம்.எல்.ஏ விடம் ஓடி புகார் செய்தார்.
எம்.எல்.ஏ வுக்கு என்னை தெரியும். ப்ரைவேட் எலெக்ட்ரிக்கல் வைர்மேன் சங்க பி.ஆர்.ஓ வாக. உடனே யூனியனுக்கு போட்டார் போனை. " எங்கயா உங்க பி.ஆர்.ஓ? பத்து நிமிஷத்துல என் முன்னாடி இருக்கனும். இல்ல தூக்கிட்டு வரச்சொல்லுவேன்" என்றார்.
யூனியன் காரவுக "த பாருப்பா நீ இல்லன்னா சங்கம் நடக்கறது கஷ்டம். காசு தர்ரேன். எங்கனா போயிரு. நான் பேசிக்கிறேன்"னாய்ங்க. வர்ர லட்சுமிய ஏன் விடனும்னு சில்லறை வாங்கி கிட்டு ஹையர் சைக்கிள் ஒன்னு எடுத்துக் கிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன்.
நம்ம முகத்துல உள்ள பிராமண களை , சந்தன பொட்டு, கழுத்துல மாலை,பவ்யமான நமஸ்காரம்லாம் பார்த்ததும் எம்.எல்.ஏவுக்கு சுதி இறங்கி போச்சு. " என்னயா நீ உனக்கு பிரச்சினைன்னா எனக்கு சொல்லலாம்ல " என்று இறங்கி வந்தார்.
" அய்யா! எனக்கு ஏதோ நாலணா தமிழ்,நாலணா தெலுங்கு ,பத்து பைசா இங்கிலீஷ் தெரியும் பி.ஆர்.ஓ ஆகிட்டேன்,உங்களை தெரியும். ஒன்னுமே இல்லாதவனையும் இப்படித்தானே சார் லொள்ளு பண்ணுவாங்க எல்லாருக்கும் ரெக்கமண்ட் பண்ணி கார்டு வாங்கி தந்துருவிங்களா " என்றேன் .
இவன் எங்கடா மாட்டினான் தமிழ் சினிமா மாதிரி பேசிக்கிட்டுன்னு எம்.எல்.ஏ. நினைச்சுருப்பாரு. " அட நீ கூட்டிட்டு வாயா நான் வாங்கித் தரேன்" என்றார். மேட்ச் ட்ராவில் முடிந்தது.
பதிவு அருமை .........வாழ்த்துகள்
ReplyDelete