நானு 2000 ஜூலை 31லருந்து மாஞ்சி மாஞ்சி இன்னா இன்னாமோ எள்திக்கினு கீறேன். " இத்தினிக்கு நீ இன்னாதான் சொல்றேபா"னு ஆருனா கேட்டா இதான்பா சமாசாரம்னு சொல்லனுமில்லியா?
சின்னப்ப தேவர் தன் கிட்டே கதை சொல்ல வரவங்களை மூணு வரில சொல்லுனுவாராம். அது மாரி என்னை ஆர்னா கேட்டா நான் இன்னா சொல்றது?
இப்ப சொல்லிர்ரேன் நைனா. நாம எல்லாரும் என்னிக்கோ,எங்கனயோ ஒரே உடம்பா ஒரே உசுரா இந்து கீறோம். அந்த கியாபகம் மட்டும் அப்டியே கீது. மறுபடி ஒன்னா சேரனும்னு துடிக்கிறோம்.அதுக்கு இந்த பாடி தான் அட்டம்னு இதை தூக்கி கடாசத்தான் கொல்றோம்.கொல்லப்படறோம்.
மன்சன் இன்னா பண்ணாலும் அதும்பின்னாடி கீறது இந்த ஃபீலிங் தான்னிட்டு சைக்காலஜில சொல்றாங்கபா.
செக்ஸு, பணம்,பதவி ,பேரு ,புகள் எதுனா எட்த்துக்கோ அதை வச்சிகினு இன்னா பண்றோம். கொல்றோம் இல்லே கொன்னுக்கறோம்.
என் குன்ஸு இன்னாடான்னா நாம இப்பத்திக்கும் சேர்ந்துதான் கீறோம். அல்லா மொபைல் ஃபோனையும் டவருங்க மூலியாமா சேட்டிலட்டு சேர்த்து புடிச்சு வச்சிக்கினு கீற மாதிரி இன்னாமோ ஒன்னு நம்ம நடுவுல கீதுபா.
அத்த நாம தான் பார்க்க மாட்டேங்கறோம் .ஃபீல் பண்ண மாட்டேங்கறோம். சைலன்சர்ல எலுமிச்சங்கா அட்ச்சிக்கின மாரி நான் வேறே இந்த ஒலகம் வேறேனு ஒரு ஃபீலிங் கீது. இத்தை தான் ஈகோன்றானுங்கோ.
நம்போ குடை எட்த்துகினு போறப்போதான் மளை வரனும், நாம ஏ.சி வச்சிக்கினப்பாறம் தான் வெய்ய காலம் வரனுங்கற மாரீ தான் ஃபீல் பண்றோம். ஆனால் இந்த நேச்சருக்கு மின்னாடி ரஜினிகாந்தும் ஒன்னுதான். கிங்காங்கும் ஒன்னுதான்.
இந்த நேச்சர் ஒரு ப்ரி ரிக்கார்டட் சி.டி மாரி. அதும்பாட்டுக்கு ஓடிக்கினே கடக்கும். நீ பார்த்தாலும் அம்புட்டுதேன்..பார்க்காட்டாலும் அம்புட்டுதேன்.
இந்த லைஃப்ல உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்லல்லாம் மீனிங் தேடிக்கினு லைஃபையே மீனிங்லெஸ் ஆக்கிட்டோம் பாஸு. எனக்கென்னவோ இந்த படைப்பே ஒரு விபத்துன்னுதான் தோணுது. அல்லாமே விபத்துதேன்.
ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதும் விபத்துதேன். மன்சன் செக்ஸுலருந்து பணத்துக்கு தாவினதும் விபத்துதேன்.
இங்கே எது வேணம்னா பொய்யா பூடலாம்.ஆனால் சாவு மட்டும் சத்தியம். அந்த சாவை ஃபேஸ் பண்றதுக்கோசரம் டோட்டல் லைஃபையும் ஸ்பென்ட் பண்றதான் புத்திசாலித்தனம்னு தோனுது.
சாவை எப்டி ஃபேஸ் பண்றதுன்னா தூக்கம்ங்கறது ஸ்லைடு மாரி. தியானம்ங்கறது ட்ரெய்லர் மாரி. சாவுதான் மெயின் ஃபிலிமு.
நாம இன்னாதான் வாய்ந்தாலும் ஒரு நாளில்லை ஒரு நால் இல்லாம பூடுவோம். நாம இருக்கறப்பயே இல்லாத மேரி இந்து பூட்டா பெரச்சினையே இல்லியோனு தோனுது.
இந்த ஒலகமே ஒரு பெரீ ஷூட்டிங் ஸ்பாட்டு. தாளி ஒரு பக்கம் நீலப்படம் எடுக்கறானுவோ,ஒரு பக்கம் க்ரைம் ,ஒருபக்கம் சோஷியல், ஒரு பக்கம் புராணம் . நான் எந்த யூனிட்லே கீறேன்னே தெரிலை. இர்ந்தாலும் டைரக்டர்னு ஒருத்தன் வந்து பிகில் ஊதி எதுனா சொன்னா செய்துட்டு போறேன்.
நேச்சரை பாரு ப்ரதர். மழைய எட்த்துக்கோ. அது பெய்யனுமே பெய்யனுமேனு டென்ஷன் ஆகுதா .. நோ. நான் பெய்ய கூடாது பெய்ய கூடாதுனு இறுக்கிக்கிதா நோ. அந்த நேரம் அடிக்கிற காத்த பொருத்து அந்த திசைய பொருத்து அடிச்சிக்கினே பூடுது.
நேச்சர்ல பாரு பாஸு.. நீ தனி நான் தனிங்கற பாவத்தே இல்லே. அல்லாமே டீம் ஒர்க்.ஒரு டைம் டேபிள் கீது. அது அதும் பாட்டுக்கு அது அது நடந்து போய்க்கினே கீது..
இவுனுக்காக ,அவுனுக்காக, இந்த சாதிக்காக அந்த சாதிக்காக, இந்த மதத்துக்காக அந்த மதத்துக்காக இந்த மதத்துக்காக , இந்த நாட்டுக்காக அந்த நாட்டுக்காகங்கற விவஸ்தை எல்லால் கிடையாது.
அதுனாலதான் சனங்க இன்னானா சொல்லிக்கினு போவட்டும் அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது. அதுக்கு எந்த ஃபீலிங்கும் கடியாது (ரஜினி ஸ்டைல்!)
நாம ஏன் மளை மாரி இருக்க கூடாது.. அதுக்கான சின்ன முயற்சிதான் ஆப்பரேஷன் இந்தியா 2000.
ஆத்துக்கெல்லாம் காவா வெட்டி லிங்க் பண்ணனும், வெவசாயம் பண்ணோனம். பசி கூடாது. வறுமை கூடாதுங்கறேன். இது நடந்தா சந்தோசம்தேன். நடக்கலைன்னா கண்ண கசக்கப்போறது ஒன்னும் கிடையாது.
மளை மாரி இரு நைனா. காத்து மாரி இரு பாஸு நெருப்பு மாரி இரு ப்ரதர் அட கு.ப இந்த பூமி மாரி இரு துரை ..
நோ ஃபீலிங்.. நோ ஹீலிங்.. உடு ஜூட்
No comments:
Post a Comment