Thursday, October 4, 2007

ஷேர் மார்க்கெட் தொபுக்க‌டீர்

நாம் ந‌ன்றாக வாழவேண்டுமென்றால்..நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரொ நன்றாக வாழவேண்டும். இல்லை என்றால் நம் வாழ்வு நிலைக்காது.

ஆந்திராவில் இந்த 3 வருடங்களும் நல்ல மழை. ஏன் தெரியுமா?சந்திரபாபு காலத்துல குந்த குடிசையில்லாம இருந்த ஜனம் மழை வரக்கூடாது, மழை வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிட்டிருந்தது. ரெட்டி வந்து ஏழைக்கெல்லாம் வீடு கட்டித் தர ஆரம்பிச்சுட்டார். சித்தூர் மாவட்டத்துல மட்டும் , 2007 நிதியாண்டுல மட்டும் லட்சம் வீடுகள் கட்ட திட்டம் போட்டு 60 ஆயிரம் வீடுகள் கட்டி முடிச்சுட்டாங்க..இனி அவன் மழை வரக் கூடாதுன்னு வேண்டுவானா?

அன்று (இன்றும், என்றும் கூட) அமெரிக்க பொருளாதாரமே ஆயுத உற்பத்தியின் மீது ஆதாரப்பட்டு வளர்ந்தது. இதற்காக உலகையே இரண்டாக பிளந்து அணி சேர்த்து கச்சை கட்டியது. ரஷ்யாவின் அழிவுக்கு பிறகாவது தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் புலி வாலை பிடித்த நாயர் கதையாகி டாலர் கதை கந்தலாகி கொண்டிருக்கிறது.

கீதையில் கிருஷ்ணன் சொன்னான்:"பர தர்மம் எத்தனை உயர்ந்ததாயினும் சு(ய)தர்மமே மேல்"

அதை கடை பிடித்து தம் ஒப்பந்தங்களை கரன்ஸி அடிப்படையில் போட்டிருந்தால் திருப்பூர் பனியன் கம்பெனிகள் இன்று பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

ஷேர் மார்க்கெட் சென்செக்ஸ் உயர்கிறது உயர்கிறது மேலும் உயர்கிறது என்று பிரதமரும்,நிதி மந்தி(ரி)யும் கதைத்து கொண்டே இருக்கிறார்கள். நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறதா என்ன? சென்செக்ஸ் உயர்கிறது என்றால் என்ன அர்த்தம் குறிப்பிட்ட சில கம்பெனிகள் லாபத்தை குவிக்கின்றன என்று அர்த்தம். அந்த கம்பெனி ஷேரை வாங்கியவன் லாபத்தை குவிக்கின்றான் என்று அர்த்தம். இந்த இழவுக்கு கிழித்து கொள்வது ஏன்? (வாயைத்தான்).

இன்று சொல்கிறேன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:

2008 ஏப்ரலுக்குள் இந்திய பொருளாதாரமே ஆட்டம் காணப் போகிறது. மத்தியில் ஆட்சி கவிழப் போகிறது. வரிசையாக வரும் 60 தமிழ் வருடங்களுக்கும் அது எத்தனையாவது சுற்றானாலும் ஒரே பலன் தான்.
இந்தியா சுத‌ந்திர‌ம் பெற்று 60 வ‌ருட‌ங்க‌ள் முடிந்து விட்ட‌ இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் மீண்டும் ப‌ழைய‌ குருடி க‌த‌வை திற‌டி என்று இந்து/முஸ்லீம்க‌ள் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் மோதி நாச‌மாக‌ போகிறார்க‌ள். நாடு மீண்டும் ஒரு த‌ட‌வை துண்டாட‌ப் ப‌ட்டால் கூட‌ நான் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ மாட்டேன்.
மீண்டும் அந்நிய‌ர் ஆட்சி வ‌ந்தாலும் வ‌ர‌லாம். (இப்ப‌வே அதான் என்று புர‌ட்சித் த‌லைவி சொல்வ‌தை ந‌ம்பாதீர்க‌ள். சோனியா ந‌ம்ம‌ நாட்டு ம‌ரும‌க‌ள்.
இப்ப‌வும் ஒன்றும் மிஞ்சிப் போக‌வில்லை.

உட‌ன‌டியாக‌ பாராளும‌ன்ற‌ம் கூட்ட‌ப்ப‌ட்டு தேசீய‌ அர‌சு அமைய‌ வேண்டும். ராம‌ர் கோவில், ராம‌ர் பால‌ம், பாப‌ர் ம‌சூதி போன்ற‌ க‌வைக்குத‌வாத‌ ச‌ர்ச்சைக‌ளுக்கு ஒரு 5 வ‌ருட‌ம் விடை கொடுத்து "பொளைக்க‌ற‌ வ‌ழிய‌ " பாருங்க‌ப்பா ..இல்ல‌ன்னா ஷேர் மார்க்கெட் தொபுக்க‌டீர்னு ம‌ண்ணுல‌ விழும், காய் க‌றி மார்க்கெட்டு வான‌த்துக்கு ப‌றக்கும்.

ஊதுற‌ ச‌ங்கை ஊதியாச்சு.. கேட்டா கேளுங்க‌.. இல்லாட்டி போங்க‌..உங்க‌ளுக்கான‌து தான் என‌க்கும்



No comments:

Post a Comment