Monday, October 22, 2007

இறக்கை முளைக்கிறது

ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது தேகம் பறக்கிறது
இது வைரமுத்துவின் பாடல் வரி.இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு இதமாகத்தான் இருக்கிறது. நான் எதையும் சாதிக்க முடியாது போனதற்கு காரணம் தொடர்ந்த மணி ஃப்ளோ இல்லாதது தான். யானை வாங்கிவிடுமத்தனை பணம் வரும், அங்குசம் வாங்குவதற்குள் யானையை அடகு வைத்திருப்பேன்.
இந்த முறை நவராத்திரிகளும் நவமாய்(புதிதாய்) இருந்தன. அவ்வப்போது என் மனமலர் கருகி தீயும் சம்பவங்களுக்கு குறைவில்லை என்றாலும் இதம் தான். காரணம் தொடர்ந்த மணி ஃப்ளோ. இது ஆத்தாளின் கருணைதான் என்று நான் நம்புகிறேன். ஜாதகம்,ராசிப் படி பார்த்தால் இந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக வாய்ப்பே இல்லை.
ஆன்மீகத்தில் ஒரு விதி உள்ளது. முதலிரண்டு பிறவிகள் சிவ‌னாரையும்,ராமனையும் தியானித்து வந்தாலன்றி சக்தியை உபாசிக்கும் தகுதி வராதாம். அதென்னவோ என்வாழ்வில் எல்லாமே டைம் டேபுள் போட்டு நடக்கின்றன. முதலில் சிவனார்,பின் ராமன் ஜஸ்ட் 7 வருடங்களுக்கு முன்புதான் சக்தி.
நிற்க இந்த நினைவுகள் உக்கிரமாய் வர காரணம் மேற்சொன்ன மணி ஃப்ளோதான்.
விஜய தசமி. கி.பி.2000 டிசம்பர் 23 ஆம் தேதி ஹ்ரீங்கார பீஜ ஜபம் முதலான முதல் விஜயதசமிக்கே கண்டதையும் கற்பனை செய்து கனவு கண்டு நிராசைக்குள்ளானேன் என்பது உண்மைதான்.
ஆனால்ஒரு மந்திரத்தையோ,பீஜத்தையோ லட்சம் முறை ஜபித்தாலன்றி சித்தி ஏற்படாதாம். சித்தி என்றால் அதை உச்சரிக்கும் தகுதி. மேலும் மனம் ஒன்றி சொன்னது மட்டுமே கணக்கிலாயி. இப்படியாக அட்சர லட்சம் பூர்த்தியாக 7 வருடங்களானது போலும். ஆனால் ட்ரெயினிங்க் எஸ்.ஐ க்கும் சில அதிகாரங்கள் இருப்பது போல் அந்த காலகட்டத்திலேயே பல அற்புதங்கள் நிகழ்ந்ததை மறுக்க முடியாது. இந்த விஜய தசமி வருவதற்குள் சித்திரை முதல் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய திருப்புமுனைகள்.
1.ஏப்ரலில் தினத் தந்தி நிருபனாக வாய்ப்பு.
2.சேர்ந்த 3 மாதங்களுக்கு பிறகு ரூ.3000 பேசிக் ப்ளஸ் லைன் அக்கவுண்டு
3.நிலாசாரலில் பரிகாரம் தொடர்
4.ஜோதிட பூமியில் தொடர்
5.ரூ.5,000 வரை ரோலிங்க்
6.நூறு,இரு நூறு கேட்டால் (கடனாக) கிடைக்கும் நிலை.
7.யு.எஸ்.ஏ வில் இருந்து க்ளையண்டு ரூ.3000 டி.டி.
8.மும்பை க்ளையண்டு ரூ.200/-
9.பைப் லைனில் இன்னொரு க்ளையண்டு/ ப்ளஸ் 15 ப‌வுண்டு செக்
10.சைக்கிள்,டெஸ்க்,பல சரக்கு,கடனில்லாத நிலை

இது எல்லாமே ஆத்தாளின் பீஜ ஜபத்தால் கிடைத்த அருள் என்றே நம்புகிறேன்.

No comments:

Post a Comment