Sunday, June 28, 2009

மறு மொழிக்கு மறுமொழி :சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு

நண்பரே !
ஆக்கப்பூர்வமாக அணுகி பொறுமையுடன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. பிறப்புறுப்புகளுக்கு் கடைசிச்சொட்டு சிறு நீரே கேடு விளைவிக்கும் என்றால் ஜன சஞ்சாரமிக்க இடங்களில் கிடைக்கும் கற்களில் அதுவும் மழைகாலங்களில் என்றால் சொல்லவே தேவையில்லை. அவற்றில் எத்தனை கோடி கிருமிகள் இருக்குமோ சிந்தித்து பாருங்கள். நாயகம் கூறியது பாலை நிலத்துக்கு 100 சதம் பொறுத்தம்.

அழுக்கை சுத்தப்படுத்தத்தான் தண்ணீர் இருக்கிறதே (In our country) . பாலை நிலத்தில் தண்ணிர் கிடைப்பது துர்லபம். எனவே தான் நாயகம் இப்படி கூறியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு எப்படி அழுக்கு சேர முடியும் ?

மருத்துவர்கள் நீரையோ,வென்னீரையோ, ஏன் டெட்டால் கலந்த நீரையோ ரெகமண்ட் செய்வார்களே தவிர ஆயிரம் பேர் உபயோகித்த கற்களை ரெகமென்ட் செய்யமாட்டார்கள்.

<முக‌ங்க‌ளை மூடிம‌றைக்க‌ இஸ்லாம் சொல்லித்தர‌வில்லை>

இது நிச்சயம் எனக்கொரு செய்தியே ! வரவேற்கத்தக்கது . <முஸ்லீம் பெயர் தாங்கிகள் > ஆஹா அற்புதமான பிரயோகம் ?

நான் மேற்சொன்ன <முஸ்லீம் பெயர் தாங்கிகள் >சொன்னதை இஸ்லாமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

மீண்டும் சொல்கிறேன்.. இஸ்லாம் மட்டும் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படுமேயானால் சர்வ‌ நிச்சயமாக வேறொரு மதம் இந்த பூமியிலேயே தொடர முடியாது.

<முஸ்லீம் பெயர் தாங்கிகள் > செய்வதை பார்த்து இஸ்லாமை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் என்றீர்கள் . பெரும்பாலான முஸ்லீம்கள் பின்பற்றும் பலவும் இஸ்லாமுக்கு விரோதமாக இருப்பதை காண்கிறேன். அவை குறித்த விவரங்களை தனிப்பதிவாகவே இட்டால் நலம்.

ஔரங்கசீப் தர்காவுக்குள் செல்வார். சலாம் அலைக்கும் என்று சலாம் கூறுவார். தர்காவுக்குள் புதை பட்டிருக்கும் பெரியவரிடம் பிரதி சலாம் வர வேண்டும். இல்லையோ அந்த தர்கா இடிக்கப்படும்.

அவ்வாறே எந்த ஒரு மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது ஔரங்கசீபுக்கு இணக்கமான வைபரேஷன்ஸ் கிடைக்கவில்லையோ அந்த மசூதி இடிக்கப்படும். ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். ஔரங்கசீப் தொழச்செல்லும் மசூதி வாயிலில் எப்போதும் ஒரு குருடன் இருப்பது வழக்கம். ஒரு நாள் ஔரங்கசீபுக்கு தோன்றியது "இறைவன் பேரருளாளனாய் இருக்கும்போது மசூதி வாயிலிலேயே இருக்கும் இந்த குருடனுக்கு ஏன் பார்வை கிடைக்கவில்லை..? ஆம் இவன் இறை நம்பிக்கையற்றவனாய் தான் இருக்கவேண்டும் அதனால் தான் பார்வை பெறவில்லை. இறை நம்பிக்கைக்கு களங்கம்கற்பிக்கும் வகையில் இவன் இங்கே இருக்கக்கூடாது "என்று முடிவு செய்தார்.

குருடனை அழைத்தார். " இதோ பார் ! நான் தொழுகைக்கு சென்று திரும்புவதற்குள் உனக்கு பார்வை கிடைத்திருக்கவேண்டும் இல்லை
என்றால் உன் கழுத்தை வெட்டியெறிவேன்"

தொழுகைக்கு சென்றார். திரும்பினார். குருடன் பார்வை பெற்றிருந்தான் . இது தான் ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கான அடையாளம். அவர் குரான் பிரதி எடுப்பதிலும், தொப்பிகள் தயாரித்து விற்பதிலும் கிடைத்த பணத்தை மட்டுமே சொந்ததுக்கு உபயோகித்து வாழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. பாபர் ,ஹுமயூன் கதை தெரியுமா? அது அடுத்த பதிவில்

4 comments:

  1. அன்பு நண்பருக்கு,

    இந்த நாட்டை ஆண்ட முகலாய மன்னர்களின் இறை நம்பிக்கை பற்றிய சரியான வரலாறு எனக்கு தெரியவில்லை.அவர்கள் இஸ்லாமுக்கு (இறை நம்பிக்கைக்கு)எதிரான காரியங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

    உதாரணம்:

    1.செல்வ செழிப்பாக இருந்திருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் இருந்தது.
    2.பொதுமக்கள் சொத்திலிருந்து தன் ஆசை மனைவி இறந்த பின் அவளுக்காக‌ நினைவில்லம்(தாஜ் மஹால்)கட்டியது.
    3.இறைவனை மட்டுமே வணங்ககூடிய மார்கத்தில் பிறந்து விட்டு மனிதர்களை வணங்கி கொண்டிருந்தது.
    4.மதுவை அறவே தடை செய்திருந்த மார்கத்தில் பிறந்திருந்தும் குடம் குடமாக மதுவை அருந்தியது.
    இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.எங்களுக்கு இவர்கள் காட்டி தந்தது மார்கமில்லை நபிகள் நாயகம் காட்டி தந்ததுதான் மர்க்கம்.

    ReplyDelete
  2. """இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை"""""

    அன்பு நண்பரே,

    நீங்கள் சொல்வது சரிதான் நபிகள் நாயகம் அவர்கள்கூட"தண்ணீர் இல்லாத பட்சத்தில்தான் இந்த வழிமுறையை கையாள சொல்லியிருக்கிறார்கள்".நீங்கள் சொல்ல வந்த கருத்தை தவறாக புரிந்து கொண்டு மறுமொழி எழுதி விட்டேன்.என்னை மன்னிக்கவும்.(நம் நாட்டில் தண்ணீருக்கு பஞ்சமில்லை ஆனால் சில முஸ்லிம்கள் நபிகள் சொன்ன கருத்தை புரிந்து கொள்ளாமல் விடாப்பிடியாக கற்களால் சுத்தம் செய்வதையே வாடிக்கையாய் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையான விஷயம்தான்).

    நபிகளாருடைய போதனையை மட்டும் ஒழுங்காக அராய்ந்து (அவர் சொல்லி கொடுத்ததுபோல் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றதுபோல்)பின்பற்றினார்களேயானால் மற்றவர்கள் விமர்சிக்க வாய்ப்பே இருக்காது .தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் நண்பரே,நாம் ஒவ்வொருவ‌ரும் க‌ருத்துக்க‌ளை ப‌ரிமாரிக்கொண்டால் நம் சமுதாய‌த்திர்க்குள் ச‌ம‌த்துவ‌ம் நிலைக்கும் ந‌ம‌க்குள் புரிந்துண‌ர்வு ஏற்ப‌டும்.ந‌ம்மை ப‌டைத்த எல்லாம் வல்ல இறைவ‌ன் நம் அனைவ‌ருக்கும் ச‌மாதான‌த்தை நில‌வ‌ செய்வானாக.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா ! பொதுவாகவே முஸ்லீம்கள் சகிப்புத்தனமையற்றவர்கள் என்ற கருத்து உள்ளது. என்னதான் நான் முஸ்லீம் சகோத‌ரர்களுடன் நெருங்கி பழகினாலும் உள்ளூற ஒரு உதறல் உண்டு. அதை போக்கி விட்டீர்கள். நபிகள் நாயகம் அவர்களை பற்றிய சிறு துணுக்கை படித்தாலும் என் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும். அவர் எந்த அளவுக்கு தர்கத்துடன் ,சமூக உணர்வுடன் சிந்தித்து விதிகளை ஏற்படுத்தியுள்ளார் என்று பல முறை பெருமிதத்துடன் நினைத்து பார்ப்பதுண்டு. அதே நேரம் விசயம் தெரியாத முஸ்லீம்கள் சிலர் "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்று வாழ்வதை பார்த்து மனம் நொந்ததும் உண்டு.

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா அவர்களுக்கு,
    நீங்கள் ஐயா என்று குறிப்பிடும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.உங்களைவிட மிகவும் சிறியவன்.தம்பி (அ) நண்பரே என்றே அழைக்கலாம்.

    ReplyDelete