Friday, October 22, 2010

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்...

 சுகுமார்ஜி பக்கங்கள் ( ரொம்ப முக்கியம்...!? )

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்... இல்லாதவர்கள் தள்ளி போகலாம்... (சொந்த மூளையை உபயோகிச்சா உங்களுக்குத்தான் பிடிக்காதே)

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி விடிவதில்லை, ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது (ஓஷோ ) ஆனால் மனிதன் படுத்தால் இப்படி, என்ன மனநிலையில் படுத்தானோ அதே நிலையிலேயே எழுகிறான்.

எனக்கொரு எண்ணம் முன்னாட்களில் எழும்...
மனிதன் எப்போது திருந்துவான்? கண்டிப்பாக இறக்கும் தருவாயில் அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருந்துவான். ஆனால் மறுநிமிடமோ, மறுநாளோ அவன் இறந்து விட யாருக்கு லாபம்? ஒரு தாத்தா செய்த அதே தவறுகளை மகன் செய்கிறான் (சிலர் விதி விலக்காக) அதே தவறுகளை பேரனும் செய்கிறான்.

ஆனால் மனிதர்கள், அவர்களின் மனநிலையும் வேடிக்கையானது...
தான் பெற்ற கஷ்டம் குழந்தை படக்கூடாது என்று எண்ணி வளர்த்தால் பிள்ளை வேறு மாதிரி வளர்கிறான் ...
கஷ்டங்களை பெற்றே வளரட்டும் என்று தந்தை நினைத்தால், அப்பனையே வெட்டி செய்கிறான் பிள்ளை...
அப்போ தவறு எங்கே?

நாமெல்லாம் வளர்ந்த கில்லாடிகள், குழந்தைகள் வளரும் கில்லாடிகள்! கில்லாடிக்கு  பிறந்தது   கில்லாடியகத்தானே இருக்கும்.

ஆனால் நான் இங்கே சொல்ல தயாரானது வேறு... மனிதன் 6to60 ன்னு   வச்சிக்கோங்க ... எல்லாம் ஸ்பார்க் மாதிரி இருக்காங்க... எதுல ஸ்பார்க்னு கேக்கலியே? அப்படி ஒரு கேள்வி கேக்கவே கூடாது... கொய்யால... எவன்கிட்ட போனாலும், மண்ணெண்ணையை வாயில ஊத்தி பக்னு நெருப்ப ஊதின மாதிரி நம்ம முஞ்சில ஊதுறன்கப்பா...

ஏன்டா இப்படி இருக்கிங்க?
நான் மட்டுமா? நக்கலா எதிர் கேள்வி கேக்குறாங்க...

அலுவலகத்தில் திட்டு வாங்கிட்டு, பொண்டாட்டியை புரட்டுன மாதிரி தொடர் கதையா போய்கிட்டே இருக்கு...

இருக்கிறதிலே எவன் நல்லவன் அப்படின்னு கேட்க  கூடாது? எவன் கொஞ்சமா தப்பு பன்றவன்னுதான் கேட்கணும். ஆனால் ஒருவர் கேட்டார் " என் பிள்ளையை நீ சொல்லுற மாதிரி வளர்த்தா, இந்த உலகத்தில  என் பிள்ளை இளிச்சவாயனா  போயிடுமே?"

கவனிங்க... ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...
துணிகளுக்கு ஒரு வாசிங் மிசின் இருக்கிறப்புல மனுஷன் மூளைக்கு யாராவது  ஒரு வாசிங் மிசின கண்டு பிடிங்களேப்பா...

இப்போதான் எல்லா வகையான தொழில்  நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள்,  அதித மூளை குழந்தைகள் இருக்கிறார்களே... கொஞ்சம் மூளையை கசக்கினால் கண்டு பிடித்து விடலாம் ....

அட.... யாருப்பா அது " அப்ப மனுசங்களே இல்லையானு கேக்கிறது" கம்முனு கிடங்க ...

2 comments:

  1. //ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...//

    சூ........ப்பர். ஆனா ஒன்னுங்கண்ணா நானும் இவிக மாதிரி கணக்கு பார்க்கிற பன்னாடை தான். ஆனால் எங்கப்பன் தர்மத்தை கடைபிடிச்சதால என்னா மாதிரி சேஃப்டி ஆனான், நான் எப்படி பெட்டர் லேட் தேன் நெவருன்னு மாறினேன் .என் லாப நஷ்ட கணக்கு என்னன்னு ஒரு பதிவே போடறேன். வெய்ட் அண்ட் சீ

    ReplyDelete
  2. ஒரு மனிதன் இறக்கும்போது நான் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ச்சியாக இறக்க வேண்டும்! அதுதான் முழுமையான வாழ்வு! சிறப்பான கட்டுரை!

    ReplyDelete