வணக்கம் தலைவா!
சுஜாதா கிட்டே எனக்கு பிடிச்சதே தன் எழுத்துக்களில் போகிற போக்கில் அவர் புதுமுகங்களை அறிமுகம் செய்ததே. நம்ம பிராபல்யத்தை மறுபடி மறுபடி சொல்ல சலிப்பா இருக்கு.. இருந்தாலும் இன்னொரு தாட்டி சொல்லி உடறேன். 2009 மே முதல் நாளிதுவரை உள்ள 17 மாதங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஹிட்ஸ் பெற்றிருக்கிறேன்.
என்னதான் வர்ர சனத்தை விரட்டற மாதிரியே எழுதினாலும் தமிழ் 10 ரேங்கில் ஐம்பதுக்குள், உலவு ரேங்கில் பத்துக்குள் நிற்கிறேன்.
இதை தெரி/புரிஞ்சிக்கிட்டவுக தங்களோட பதிவுகளை எனக்கு மெயில் மூலம் அனுப்பறாய்ங்க. நமக்கு வயசு 43. மானிட்டரை ஒரு மணி நேரத்துக்கு மேல பார்க்க முடியறதில்லை. அதுலயும் பிரவுசிங்னா நம்ம கப்பாசிட்டி 45 நிமிஷம் தான்.
அதனால என் பாராட்டை பெற விரும்பறவங்களுக்கு என் ப்ரியாரிட்டி என்னனு சொல்ட்டா அவிகளோட வியய,பிரயாசைகள் வீண் போகாதுன்னு சின்னதா ஒரு அபிப்ராயம்.
என் ப்ரியாரிட்டிஸ்:
1.மனித உயிர்களுக்கு ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்
2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை
3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்
4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்
5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.
6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்
7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.
8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்
9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை
10. ஆன்மீகம் - தியானம் -யோகா
இதையெல்லாம் ஒர்க் அவுட் பண்ணனும்னா மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றம் வரணும். முதல்ல மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய நம்ம மாதிரி பார்ட்டிகள்ள மாற்றம் வரனும். இந்த மாற்றம் தான் ஒரு மவுன புரட்சிக்கு அடிகோலும்.
இந்த கன காரியங்களை நான் ஒருத்தனே செஞ்சு கிழிச்சுர முடியும்னு நான் நினைக்கலை. அதனால இந்த காரியங்களை யார் செய்தாலும் பாராட்ட, ஊக்கப்படுத்த ப்ரமோட் பண்ண காத்திருக்கிறேன்.
நிபந்தனை:
1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2.இந்த பதிவின் கீழே கமெண்ட் ஃபார்மில் சின்ன முன்னோட்டத்தோட உங்க பதிவின் லிங்கை கொடுத்தா போதும்
பாராட்டு மழையில் நனையலாம். ( நாம பாராட்டறதுல பெரிய கஞ்சனுங்கோ.ஏறக்குறைய பெரியார் மாதிரி - நம்ம பாராட்டை பெறுவது வசிஷ்டர் கையால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கற அளவுக்கு கஷ்டமுங்கோ.
பலன்:
எனது வலைப்பூவின் சைட் பாரில் தங்கள் வலைப்பூவின் பேனர் வைக்கப்பட்டு உங்க ப்ளாகுக்கு லிங்க் தரப்படும். பேனர்களின் எண்ணிக்கை 10 ஐ தாண்டும்போது முதலில் வைக்க ப்பட்ட பேனர் நீக்கப்படும்
ஓகேவா உடு ஜூட்
ம் ம் கலக்குங்க
ReplyDeleteஅருமை அருமை
தலை நம்ம விவசாய வலைப்பதிவை இணைத்து ஆதரவு தாருங்கள்
ReplyDeletewww.agasool.blogspot.com
நிச்சயம் விஜய் அவர்களே. என் ஆப்பரேஷன் இந்தியா2000ன் நோக்கமே விவசாயத்தை உன்னத நிலைக்கு கொண்டு செல்வதே
ReplyDelete