வணக்கம்ணே,
இந்த பதிவுக்கு முந்தி சுகுமார்ஜீ " காதலிக்க தோதான இடம்"னு ஒரு பதிவை போட்டிருக்காரு .அதை மிஸ் பண்ணிராம கீழே போய் ஓல்டர் போஸ்ட் லிங்கை க்ளிக்கி படிச்சுருங்க
இப்போ தலைவர்கள் மேட்டருக்கு போயிரலாமா? (இதான் கடைசி பதிவோனு பட்சி சொல்லுது - நிர்வாண உண்மைகள்னு பேரை வச்சிக்கிட்டு காபரேத்தனமான உண்மைகளை கூட சொல்லலைன்னா எப்படிங்கற நினைப்புல போட்ட இந்த பதிவு பிழைப்ப கெடுத்துருமோ என்னவோ? நீங்க படிங்க ராசா..)
தலைவன் இளமையில இருக்கனும். பெண்ணை புரிஞ்சிருக்கனும். செக்ஸை தர்மப்படி, நியாயமா, விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிச்சிருக்கனும். கண்ணாலம், சீமந்தம்,குழந்த பேறு மாதிரி மேட்டர்லாம் ஆத்மார்த்தமான திருப்தியை அவனுக்கு கொடுத்திருக்கனும்.
உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகள் இருக்கக்கூடாது. அது வன்முறை வேட்கையாவோ, பண தாகமாகவோ, அதிகார தாகமாகவோ மாறியிருக்கக்கூடாது. அவன் ஆட்சி புரியும் நேரத்துல அவனுக்கு மேற்படி ஆத்ம திருப்தி தொடரனும். (கிழவாடியாயிரக்கூடாது - பெண்டாட்டி செத்துப்போயிருக்க கூடாது - விவாகரத்து வாங்கியிருக்க கூடாது).
எவன் பெண் இன்பத்தை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாம , விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிக்கிறானோ அவனுக்கு பெண் மேலும், இயற்கையின் மேலும் நன்றி உணர்வு அலையடிக்கும். மனசுல நன்றி உணர்வு பொங்கும்.
பெண் குறித்த அவன் பார்வை பிரகாசமா இருக்கும். (காம்ப்ளெக்ஸுங்க இருக்காது) பெண் குறித்த பார்வைகள் மூன்று. காமினி -ஜனனி -சகி . இதுல மொத ரெண்டு பார்வை உள்ளவுக ரெண்டு விதமான விலங்குகளை கையில வச்சிருந்து படக்குனு பெண்ணுக்கு மாட்டி விட்டுருவாய்ங்க.
காமினி:
பெண்ணை காமினியா பார்க்கிறவுக பிரம்மச்சரியத்தை போதிப்பாய்ங்க. இவிகளை இவிக கட்டுப்படுத்திக்க துப்பில்லாம பெண்களுக்கு அடிமை விலங்கை மாட்டி தூர வைப்பாய்ங்க
ஜனனி:
இவிக ஜனனிங்கற பட்டம் (தாய்) கொடுத்து கற்புங்கற சங்கிலி போட்டு இவிக தயாரிச்ச ஃப்ரேமுக்குள்ள பெண்ண சிறைவைப்பாய்ங்க
மூன்றாவது பார்வை சகி. விரிச்சு சொன்னா வாழ்க்கை போராட்டத்துல சக போராளி. இந்த பார்வை தான் ஆரோக்கியமான பார்வை.இதுலதான் பெண் விலங்காவும் ஆக்கப்பட மாட்டா. விலங்குக்கும் ஆட்பட மாட்டாள்.
பதிவின் முதல் பாரால சொன்ன தகுதிகள் உள்ள பார்ட்டி தடுக்கி தடுக்கி பெண் குறித்த 3 ஆம் கோணத்தை கை கொள்ள வாய்ப்பு அதிகம். அதை பிடிச்சுட்டானு வைங்க..
தன் அதிகாரத்தை பெண்ணை காக்கவும் ,மண்ணை காக்கவும் உபயோகிப்பான்.
இல்லைனு வைங்க அந்த ஆட்சில பெண்கள் நரக வேதனை அனுபவிப்பாய்ங்க. இயற்கை சூறையாடப்படும். (மணல் கொள்ளைலருந்து குவாரி வரை)
இந்த நிபந்தனைகளை அடிப்படையா கொண்டு இந்தியாவை ஆண்ட தலைவர்களை ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.
காந்தி:
பிரதமரா இல்லைன்னாலும் சகலத்தையும் தன் கையில வச்சிருந்த ஆசாமி. பாவம் கடேசி வரை தன்னோட ( காமத்தோட) போராடியே போய் சேர்ந்துட்டாரு. சின்ன நேக் "பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார்படுத்தும் -செக்ஸ் பிரம்மச்சரியத்துக்கு வழி வகுக்கும்" (ஓஷோ) .
இதை தாத்தா புரிஞ்சிகிட்டிருந்தா நம்ம நாட்டோட தலையெழுத்தே வேறயா இருந்திருக்கும்.
நேரு :
இவரோட தாம்பத்ய வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. ( பொஞ்சாதி நித்ய ரோகி) இவருக்கும் மகளுக்கு இருந்த உறவே கேள்விக்குரியதுனு எங்கனயோ படிச்சேன். மேலும் இவர் ஹோமோ செக்சுவல்னும் ஒரு தகவல்
இந்திரா:
கணவனை பிரிந்து வாழ்ந்தவர். ஆண்கள் உலகத்துல தன்னை ஆணா காட்டிகவே/ மாத்திக்கவே தன் அத்தனை சக்தியையும் செலவிழிச்சுட்டார். செக்ஸாவது,இயற்கையின் பால் நன்றியாவது
ராஜீவ்: நல்லாவே ஆரம்பிச்சாரு (காதல்,திருமணம்,பிள்ளைப்பேறு) கிச்சன் கேபினட்,டூன் ஸ்கூல் கொலிக்ஸ் எல்லாருமா சேர்ந்து சொதப்பிட்டாய்ங்க
வி.பி.சிங்: இவர் மேலயும் நல்ல நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனால் பாரத் மாதா கீ ஜெய்னுட்டு ( ஜனனி கோணம்) அலைஞ்ச கூட்டம் ஆப்பு வச்சிருச்சு
சந்திர சேகர் - நரசிம்மராவ் - இன்னைக்குள்ள மன்மோகன் - அவருக்கு பின்னாடி இருந்து இயக்கும் சோனியா பத்தியெல்லாம் சொல்லனுமா என்ன?
தலைவருங்க எந்த ஆத்துலன்னா அடிச்சுட்டு போவட்டும் நீங்க சொல்லுங்க பாஸ் பெண் குறித்த உங்க பார்வை எது..
காமினி? ஜனனி? சக போராளி ?
நீங்க பயபடுறமாதிரி எதுவுமே சொல்லலியே... உள்ளத சொல்லுறீன்ங்க... அவ்வளோதான். :)
ReplyDeleteபாஸ்!
ReplyDeleteஅறிவு பூர்வமா யோசிச்சா இதெல்லாம் ஒன்னுமே இல்லைதான். எல்லாரும் அப்படி யோசிப்பாய்ங்கனு என்ன கியாரண்டி?
மிஸ்டர் சுகுமார்ஜி !
தமிழ்10 தரும் ரேங்க் பட்டியலில் முதல் ஐம்பதுக்குள் நிற்பதே கஷ்டம் இதில் 17 ஆம் ரேங்கை எட்டிப்பிடித்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா? ( இது உபசார வார்த்தை இல்லே உண்மையிலயே இது உங்க கைங்கரியம் தான்)
என் பார்வை அப்பப மாறுதே
ReplyDelete