விடை பெறுகிறேன்னு தலைப்பு வச்சா செவிட்டு ராஜ்ஜியத்தின் அரசவை கவிஞன் நானுன்னு ஆரம்பிச்சு உணர்ச்சி வசப்பட்டுகவிதையெல்லாம் எழுதனும் அடுத்த இன்னிங்ஸ்ல ரீ என்ட்ரி கொடுக்கறப்போ அய்யர் தி கிரேட் மாதிரி பார்ட்டிங்க அப்போ அப்படி சொல்ட்டு போனியே இப்போ எந்த முகத்தை வச்சிக்கிட்டு வந்தே அது இதுன்னு கேள்வியெல்லாம் கேப்பாய்ங்க. எதுக்குன்னா வம்பு.
மேலும் எனக்குள்ளயும் ஒரு டிபிக்கல் கவிஞர் இருக்காரு. அவருக்கு முனுக்குன்னா கோவம் வந்துரும். எப்பயும் தன்னை உசத்தியாவே நினைச்சுப்பாரு. அவரு அவுட் டேட்டட். கவிஞரா இருந்தாலும், ஜோசியரா இருந்தாலும்,கதாசிரியரா இருந்தாலும் அந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காம அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
ஒரு வகையில சொன்னா கிருஷ்ணர் மாதிரி. காலம் முன் வைக்கும் சவாலை சவாலே சமாளின்னு ஏத்துக்கிடறதுதான் மொத வேலை. ஆயுதம் தூக்கமாட்டேன்.யுத்தம் செய்யமாட்டேன்னு சொல்வாரு. தேவை வந்தப்போ படக்குனு வில்லேஜ் சப்ஜெக்ட்ல க்ளைமேக்ஸ் ஹீரோ மாதிரி வண்டி சக்கரத்தை தூக்கி சுழட்ட ஆரம்பிச்சுருவாரு.
தேவைன்னா துரத்தி துரத்தி அடிப்பாரு. மேட்டரு கை மீறிப்போயிருச்சுனா , இன்னம் டின்னுதான்னு உறுதியாயிட்டா யுத்தகளத்துலருந்து ஓடுவாரு, முடிஞ்சவரை போராடுவாரு. முடியலைன்னா "போடாங்கொய்யாலன்னு தனி நகரத்தையே நிர்மாணம் பண்ணிக்கிட்டு ஓரங்கட்டிக்குவாரு.
1984 ல கவிதை எழுத ஆரம்பிச்ச எனக்கு இன்னைக்கும் கவிதை ஊறினாலும் அதை வழிய விடறதில்லை. ஏன்னா ஒரு காலத்துல நாம எழுதின நம்ம கவிதைய எல்லாம் தட்டி தரம் பார்த்து தட்டிக்கொடுக்கிற, கொட்டிக்கொடுக்கிற ரசனையோ, உணர்வோ புரவலர்களுக்குமில்லை, தமிழினத்துக்கும் இல்லே.
சொம்மா எதுக்கு உ.வ பட்டு, உடம்பை கெடுத்துக்கறதுன்னுதான் விடை பெறுகிறேன்னு தலைப்பு வைக்காம , கவிதை எழுதாம அசால்ட்டா டாட்டா ! சீ யு !! பை பை !!!ன்னுட்டு கழண்டுக்கறேன்.
மேலும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பதிவராதான் கழண்டுக்கறேன். விமர்சகனா தொடர்வேன். (பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேண்ட் கனெக்சனுக்காக ரூ 1,225 ரூ கட்டி வச்சிருக்குண்ணே - திங்க கிழமை கனெக்சன் கொடுத்துருவாய்ங்கனு ஒரு நம்பிக்கை. பார்ப்போம்)
புலி பேரைச்சொன்னாலே தமிழ் நாட்டுல அஸ்தில ஜுரம் வந்துருது . நானும் ஒரு புலிதான். கொஞ்ச நாளு குகையிலயே இருந்து காயத்தை எல்லாம் நக்கி சொஸ்தப்படுத்திக்கிட்டு வரேண்ணே. புலி பதுங்கறது பாயறதுக்குத்தான்.
என்னைக்கோ ஒரு நாள் உறுப்பினர் எண்ணிக்கை 500 ஐ தொடாம போயிருமா? அன்னைக்கு கச்சேரி ஆரம்பம். அதுவரை ஜஸ்ட் சுருதி கூட்டல்.
நான் எங்கன வேலைக்கு போனாலும் ஒரு வசனம் விடறது வழக்கம்." த பாருப்பா உங்களுக்கு இதான் உலகம். நீங்க இங்கயே இருப்பிங்க. நான் நாடோடி நேத்து வந்தேன் இன்னிக்கு இருக்கேன். நாளைக்கே போயிருவன். எனக்கு இங்கனயே குப்பை கொட்டித்தான் ஆகனும்னெல்லாம் இல்லை. நான் கரப்பான் பூச்சி மாதிரி எப்படினா பொழச்சுக்குவன். நீங்க இதையே உலகம்னு வாழ்ந்துராதிங்க . இதுக்கப்பாறமும் உலகம் இருக்கு"
இதே வசனம் உங்களுக்காகவும் ரிப்பீட்டு.
ராமன் வனவாசம் போனப்ப அயோத்தியா வாசிகள் எல்லாரும் ராமனோடயே காடுவரை போயிட்டாய்ங்களாம். அப்பாறம் ராமர்தான் சமாதானம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
எங்க ஊர்ல என்.டி.ஆரை நாதேள்ள பாஸ்கர்ராவ் முதுகுலு குத்தி முதல்வர் நாற்காலியை இழுத்துட்டப்போ ஆந்திராவே கொதிச்செழுந்தது.
ஆனால் பிற்காலத்துல சந்திரபாபு அதே வேலைய செய்தப்போ சனம் பெருசா கண்டுக்கலை.
ஏன்னா சனத்துக்கு அவிக லைஃப்ல பிரச்சினைகள் அதிகமாயிருச்சு. உடனடியா பாதிக்கக்கூடிய பிரச்சினைகள், அன்னன்னய பிரச்சினைகள் சாஸ்தியாயிருச்சு.
ஆனானப்பட்ட என்.டி.ஆர் நிலையே இதுதான். நானெல்லாம் எதுல கணக்கு.ஏதோ மரியாதைக்கு 262 பேர் சைட்ல மெம்பரா சேர்ந்தாய்ங்க அதுவே மஹா பிரசாதம். அவிகளுக்கெல்லாம் நன்றி நன்றி நன்றி.
ரேடியோல இன்று ஒரு தகவல் சொல்லிக்கினு இருந்தாரே தென் கச்சி அவரு சொன்ன ஒரு தகவல் மட்டும் அப்படியே மைண்ட்ல நின்னுபோச்சுங்கண்ணா.
ஞானிகளும், நாய்களும் ஒரே மாதிரியாம். எத்தனை விரட்டினாலும் போகமாட்டாய்ங்களாம். ஆனா செமர்த்தியா அடிச்சு விரட்டிட்டா அந்த பக்கமே திரும்ப மாட்டாய்ங்களாம்.
நான் ஞானின்னு சொல்லலை. அப்போ நாயானு கேப்பிக. அப்படியே வச்சிக்கிடுங்க. மொத தடவை 8 வருச காலத்துல யார்யா இவன் என் ப்ரொஃபைலை பார்த்தவுக ஜஸ்ட் 2006 தான்.
இந்த அடிக்கு பயந்து ஓடினவன் 6 மாசம் காணாம போயிட்டன். இது முதல் இன்னிங்ஸ். ஒரு ஆறு மாசத்துக்கு அப்பாறம் வந்தேன். சொம்மா சொல்லக்கூடாது நல்லாவே ரிசீவ் பண்ணிக்கிட்டிங்க. பிரபாகரனை ஜஸ்ட் அஸ்ட்ராலஜிக்கலா உயிர்ப்பிச்சதுக்கே படக்குனு தமிழ் மணம் தடை பண்ணிருச்சு.
இருந்தாலும் மெறிச்சிக்கிட்டு அப்படியே மெயின்டெயின் ஆயிட்டன். கொஞ்சம் போல உசாராகி ஆகஸ்டு 15க்குள்ள 500 பேராச்சும் சேர்ந்துருங்கனு ரிக்வெஸ்ட் பண்ணேன். நோ ரெஸ்பான்ஸ் . இது ரெண்டாவது அவமானம்.
சரி ஓஞ்சு போவுது உடுன்னு கர்மவீரர் காமராஜ் மாதிரி கடமையை தொடர்ந்தேன். ஒரு பிக்காலி வந்து ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுச்சு. ஒரு ஐ நூறு பேரையாச்சும் பெஞ்சுல உட்கார்த்தி வச்சு காட்டலாம்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. இது மூணாவது அவமானம்.
"இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
பாறைகள் இல்லையேல் ஓடைக்கில்லை சங்கீதம்" - நன்றி வைரமுத்து
"தோல்வித்தொட்டிலில் தூங்கிப்போய் விட்டால் சமாதியாகுமே காலம் வெல்லுமே தோழா" - இது சொந்த சரக்கு.
நம்ம கிட்ட சோசியம் பார்த்துக்கிட்டு பணம் கொடுத்தவுக நான் என்ன பண்ணப்போறேனு பார்ப்பாய்ங்களோ இல்லையோ என் மனசாட்சி பார்த்துக்கிட்டே இருக்கு ராசா..
என்னை வாழ வச்ச மக்கள் வாழ ஆப்பரேஷன் இந்தியா2000 மட்டுமே இல்லை, அது அமலாகாமயே போயிட்டாலும் அட்லீஸ்ட் உப சாந்திகளுக்காகவாவது உழைச்சிக்கிட்டே இருப்பேன். ஊக்கமருந்து இருந்தாதான் ஷீல்டுங்கறது ஸ்போர்ட்ஸ்ல மட்டுமில்லை படைப்புலயும் ஃபவுல் ப்ளேதான்.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும். டோண்ட் கேர்.
தற்போதைக்கு டாட்டா... சீ யு... பை பை.. பிராண்ட் பாண்ட் வரட்டும் நமக்குள்ள இருக்கிற விமர்சகனை கோதாவுல இறக்கறேன்.
( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்)
உடு ஜூட்
நெஞ்ச தொட்டுடிங்க நண்பா
ReplyDeleteடென்சன் ஆகாதீங்க தல...வழக்கம் போல பட்டைய கிளப்புங்க...
ReplyDelete//த பாருப்பா உங்களுக்கு இதான் உலகம். நீங்க இங்கயே இருப்பிங்க. நான் நாடோடி நேத்து வந்தேன் இன்னிக்கு இருக்கேன். நாளைக்கே போயிருவன். எனக்கு இங்கனயே குப்பை கொட்டித்தான் ஆகனும்னெல்லாம் இல்லை. நான் கரப்பான் பூச்சி மாதிரி எப்படினா பொழச்சுக்குவன். நீங்க இதையே உலகம்னு வாழ்ந்துராதிங்க . இதுக்கப்பாறமும் உலகம் இருக்கு"//
ReplyDeleteவணக்கம் பாஸ், இவ்ளவு நாள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இனிமேலும் இது மாதிரி பேச்சு சுதந்திரத்திக்கு முழு அர்த்தமும் தெரிந்த ஒரு நபரை சந்திப்போம் என்று தோன்றவில்லை... பிரிய மனமில்லாமல் பிரியா விடை கொடுக்கிறோ(றேன்)ம்... 500 வரட்டும் மீண்டும் சந்திப்போம்..... டா டா