ராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? மூன்று...
இந்த புவி காலம், இயக்க ஒழுங்குக்கு கட்டுப்பட்டது. என்னைப்போல வாரம் மூன்று பதிவு என்று சொல்லிவிட்டு இரண்டை தருகிற ஏமாற்று அதற்கு தெரியாது.
இப்புவியில் மனிதம் உட்பட எல்லா உயிரினங்களும் நிலை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. நிலை பெறுதல் என்றால் சாகாவரமெனெபதல்ல. இறவா வாழ்வுதான் நாம் நினைக்கிறோம்... இறந்தும் வாழ்வதுதான் நமக்கு கிடைத்த வரம். அந்த நிலைபெறுவதற்காக நாம் செய்யத்தகுந்தது என்ன?
இப்புவியில் பிறந்தோர்க்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது. அது இப்புவியை நிலைபெறுவதற்காக உயிர்க்கச்செய்தல். நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.
இந்த உயிர்க்கச்செய்தலில் குழந்தைப்பேறு முதன்மையானது. அதற்கு இன்னொரு துணையும் அவசியமாகிறது. இந்த சமூகம் இதை திருமண பந்தத்தின் வழியே முறைப்படுத்தி இருக்கிறது. யாரோடும், யாரும் இல்லவே இல்லை. அப்படி செயல்பட மிருகங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. மனிதம் எனச்சொல்லில் புனிதம் என்பதும் கலந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.
குழந்தைப்பேறு மிக நீண்ட வரலாறு, முடிவில்லா தன்மை கொண்டது. பதின்வயதில் நம்மை இந்த இயற்கை நம்மை தயார்படுத்துவதே இதற்குத்தானே. ஒரு பையன் தன்னை ஆணாக உணர்வதும், சிறுமி தன்னை பெண்ணாக உணர்வதும் பதின் வயதுகளில்தானே. காமத்தால் பிறந்த நாம், காமத்தில் உழல்வது அதிசயம் அல்லவே. நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட இந்த உயிர்க்கச்செய்தலில் காதல் திருமணம் செய்யும் பங்கு வேகமானது. இந்த விளக்கங்கள் திரு. முருகேசன் பதிவுகளில் நிறைய இருக்கின்றன.
சரி. இப்பொழுது இயற்கை, புவி, உயிர்க்கச்செய்தல் விளக்கமறிந்தோம்... தலைப்புக்கான காமத்திற்கு வரலாம்.
நம்மை ஒரு பெண்ணாக, ஆணாக, திருநங்கை ஆக உருவாக்குதலில் குடும்ப சூழல் மட்டுமல்ல, கிரகச்சூழலும் தான். தோற்றத்தில் ஆணாக, செயற்பாடுகளில் பெண்ணாக இருப்போரையும், தோற்றத்தில் பெண்ணாக, செயற்பாடுகளில் ஆணாக இருப்போரையும் நம் வாழ்வில் காண்கிறோம். இந்த வேலையை புதன், சனி, மற்றும் சந்திரன் செய்யவிழைகின்றர். சுக்கிரன் இதற்கு, இவர்களுக்கு உதவதயாராகிறான்...
இன்னமும் காண்போம்...
//நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.//
ReplyDeleteஇந்த மாதிரி உணர்வெல்லாம் எவனொருத்தன் செக்ஸை விழிப்புணர்வோட,ஆழமா, நீண்ட நேரம் அனுபவிக்கிறானோ அவனுக்குத்தான் வரும். இயற்கையும் ஒரு பெண் மாதிரி தான். இன்னைக்கு இந்த ...மகனுங்க பண்றது ரேப் மாதிரிதான்.
ரேப்பின் விளைவு அறுத்தெறியப்படுதல்தான். பெண்ணை இயற்கையின் பிரதி - நிதி - பிரதி நிதின்னு ஆழமான செக்ஸ் மூலம் உணர்ந்தவன் தான் இயற்கையை நேசிப்பான் அடுத்த தலைமுறைக்காக காப்பான்.
இந்த கொடுப்பினை இல்லாதவன் தன்னுள் நிறைவேறாத செக்ஸ் எண்ணங்களை வன்முறையா வெளிப்படுத்துவான். (இயற்கையின் மேல கூட மலையை மொட்டையடிக்கிறவன் கதையெல்லாம் இதான்)
அடுத்த தலைமுறை இவனுக பிணத்தை தோண்டி எடுத்துவந்து காறி துப்பும்