மனம் என்றொரு வெங்காயம்
நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே... அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?
எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்... அவ்வளவுதான்...
என்னடா...வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?
ஆமாங்க... வெங்காயம் தான்... வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்...
நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்... அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்... இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.
நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க... நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்... மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது...
நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.
திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை... இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்...
ஒரு பரிசோதனை..... அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்... இதை படித்த பிறகு...
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி...
1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?
சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்...
1) இப்பொழுது நான் மனநிம்மதி வேண்டுமே என்று விரும்பிகிறேன்
ReplyDelete2) எனது வாழ்க்கை அடுத்து கட்டம் என்ன என்று சிந்திக்கிறேன்
3) ஏன் மெது கோபம்
4) ஏன் எனது வாழ்க்கை திடிர்னு மாறியது கடந்த இரண்டு வருடங்கள்
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா? ஆம்
நன்றி திருமுருகன்...
ReplyDeleteஅக்கறையோடு பதிலுக்கு பதில்...
1) தங்கள் தொழில் எதெனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதைய நிலை இது தங்களுக்கு மட்டுமல்ல. பழகிக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள்.
2) முயற்சியை கை விடாதீர்
3) தனது ஏமாற்றமே கோபத்தின் காரணகர்த்தா... Be as WINNER... Feel as a WINNER.
4) தவறுகளை படிகளாக்குங்கள்... மேலேருங்கள்
5) கை கொடுங்கள்... நல்ல யோசனை... விழிப்போடு இருங்கள்...
அன்புடன்
சுகுமார்ஜி