Saturday, August 25, 2007

கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்


நதிகளை இணைக்க சோனியா அம்மையாருடன் பேசி வரும் தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் தொலைநோக்கு தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.(திட்டத்த࠮?ன் முக்கிய அம்சங்களை இதே வலைப்பூவில் வேலையின்மை என்ற தலைப்பில் வைத்துள்ளேன் இந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவைப் பெற அவர்களுக்கு ஜாதகம் எல்லாம் கணித்து பலன் எழுதி அனுப்பியவன் நான். என் கணிப்பு நிஜமானதும்,அதற்கு அம்மையார் Thanks Caர்ட் அனுப்பியதும் உண்மை. தங்கள் நீண்ட‌ வாழ்வில் எத்தனையோ நல்லது,கெட்டதுகளை பார்த்திருப்பீர்கள். அரசு அலுவலகங்களில் வைக்கப் படும் பிரதமர்களின் படம் மாறும். காந்தியடிகளின் படம் மாறாது. காந்தியடிகளின் படத்தோடு தங்கள் படமும் நிரந்தரமாக இருக்க இந்த திட்டம் உதவும்..இந்த வலைப் பூவை கூரியரிலும் அனுப்புகிறேன். (ரகசியம்: தினகரன் இதழ் கடந்த சட்டம‌ன்ற தேர்தல்கள் குறித்த ஜோதிட கணிப்புகளை வெளியிட்ட போது..தங்கள் தலைமையி மைனாரிட்டி அரசு அமையும் என்றும் ராமதாசு தாங்கொணாத குடைச்சல் கொடுப்பார் என்றும் உறுதியாக கணித்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். ஆனால் தினகரன் என் கணிப்பை வெளியிடவில்லை. இன்னும் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது)

No comments:

Post a Comment