Wednesday, August 15, 2007

பட்ட கடன் தீர்க்க புதிய இந்தியா


அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரில் *குளித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.)


இன்று அந்த வினை தீர/அரசுக்குப் பட்ட கடன் தீர்க்க புதிய இந்தியாவை உருவாக்க திட்டம் தீட்டி கடந்த 10 வருடங்களாய் லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.


பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன?


வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால் வினை போகும். இது என் அனுபவம்.


என் நண்பன் ஒருவன் நான் அறிமுகம் செய்த முதியவரை ஏமாற்றினான். அந்த வயதில் அது என்ன ஏது என்பது தெரியாது. பிறகு அதே நண்பனுக்கு 900 ரூபாய் சம்பளத்துக்கு நான் இந்தி ஆசிரியனாக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.


அதிலும் 300 ரூபாய் குவார்ட்டர்ஸ் வாடகை, 100 ரூபாய் கரண்டு பில் போக ரூ.500 கைக்கு வரும். ஆனால் பாருங்கள் வினையின் வலிமை. அவன் என்னை குடி வைத்த வீடு அவன் அப்பா கட்டியது.அவருக்கு காலில் புண். அங்கு குடி போன சில நாட்களில் எனக்கும் காலில் புண் வந்து விட்டது.


இந்த ரகசியம் தெரியாது பணம்,பணம்,பணம் என்று ஜனம் அலைகிறது. வினை தீர்க்க‌,க‌ட‌ன் தீர்க்க‌ வேண்டி நோய்க்கோ,ரெயிடுக்கோ,த‌ண்ட‌னைக்கோ ஆளாக‌ வேண்டி வ‌ந்தால் ம‌ட்டும் புல‌ம்புகிற‌து.

No comments:

Post a Comment