கழுகு வலைச்சரத்தில் அடியேன் எழுதிய இந்திய வல்லரசு கனவுகள் பற்றி தமிழமுதம் கூகுல் குழுமத்தில் நடந்து வரும் சர்ச்சை பற்றி ஞா இருக்கலாம். அதில் புதிதாக ( லேட்டஸ்டாக?) திரு செல்வன் அவர்கள் தம் கருத்துக்களை தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு என்றும் கூறலாம். அதற்கான என் விளக்கத்தை நமது வலைப்பூவில் தனிப்பதிவாக இடுகிறேன். இது குறித்த தங்கள் கருத்துக்களை இங்கு மறுமொழியாகவும் தெரிவிக்கலாம். அல்லது கூகுல் குழுமத்தில் நடைபெறும் சர்ச்சையிலும் பங்கு கொள்ளலாம்.
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.
//இது பொருளாதார திட்டம் அல்ல, அரசியல் திட்டம் என்பதால் இதை விட்டுவிட்டு
அடுத்தவற்றுக்கு நகர்கிறேன்//
அய்யா .. அசால்ட்டா அரசியல் திட்டம்னு தூக்கி போட்டுட்டிங்க. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணே இன்றைய பாராளுமன்ற ஜனநாயகம் தான். எம்.பி யா ஜெயிக்கனும்னா பத்து பன்னென்டு கோடி இன்வெஸ்ட் பண்ணனும். அப்பத்தான் ஜெயிக்க முடியும். ஜெயிச்சாத்தான் ஜெயிச்சு வந்த பிறவு பிரதமரை தேர்ந்தெடுக்கிற விசயத்துல / அப்பப்போ வெட்டுத்தீர்மானம்/ நம்பிக்கையில்லா தீர்மானம் சிச்சுவேஷன்ஸ் வந்தப்ப பெட்டி வாங்க முடியும். தேர்தல் சமயத்துல முதலா போட்டதை 100 மடங்கா எடுக்க முடியும்.
கட்சிகளோட நிலையும் இப்படித்தான் கிடக்கு. தங்களோட ஆளு பிரதமரா தேர்வாகனும்னா போதுமான எம்.பிக்கள் ஜெயிக்கனும். அதுக்கு ஜெயிக்கிறவனா பார்த்து சீட் கொடுக்கனும். இன்னைக்கிருக்கிற அரசியல் சூழல்ல நல்லவன் எவனும் சீட் கேட்டு வரமாட்டான். வர்ரவன் க்ரைம் ரத்னாவாத்தான் இருப்பான். அவன் எப்படியா கொத்த மொள்ளமாரியா இருந்தாலும் பரவால்லைனு அவனுக்கே சீட் கொடுக்கனும்.
மேலும் இந்த கட்சி ஜெயிச்சுருங்கற மாதிரி சிச்சுவேசனிருந்தா அவன் கிட்டருந்து மாலும் வெட்டிக்கலாம். அப்படியில்லைன்னா அவனை ஜெயிக்க வைக்க கட்சி நிதி கொடுக்கனும். கட்சிக்கு நிதி யார் கொடுப்பா?
இந்த விவாதத்துல சில மேதைகள் சொன்னாப்ல நாடு முன்னேறிட்டதுக்கு சாட்சியா இருக்கிற கோடீஸ்வரர்கள் தான் கொடுக்கனும். அவிக சொம்மா கொடுப்பாய்ங்களா என்ன? அவிகளுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் வாங்கிக்கிட்டு தான் கொடுப்பாய்ங்க.
அவிக என்ன கேட்க போறாய்ங்க. தபால் கார்டு விலைய குறைக்கச்சொல்லியா கேட்பாய்ங்க? ஊஹூம்.. அவிக மேலும் மேலும் கோடீஸ்வரர்களாக ஏழையோட விலாவை நொறுக்கத்தான் லைசென்ஸ் கேட்பாய்ங்க.
இந்த விஷமய சூழல்ல பிரதமரா வர்ர பார்ட்டி நிதி கொடுத்த முதலாளிகளுக்கு சர்வீஸ் பண்றதை பார்ப்பாரா? அல்லது எவனோ எம்பி கொடுத்த மூக்குத்தி,ஸ்டீல் குடங்களுக்கு, க்வார்டருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சர்வீஸ்பண்றதை பார்ப்பாரா?
நேரடி ஜன நாயகம்னா மோசமான கட்சிகளும் நாடு தழுவிய நற்பெயர் கொண்ட ஆசாமியத்தான் பிரதமர் வேட்பாளரா நிறுத்தும். அவர் ஜெயிச்சு வந்த பிற்பாடு எம்.பிக்களோட தயவு அவருக்கு தேவையிருக்காது. அதனால எம்.பி பதவிக்கு பெருசா டிமாண்ட் , சம்பாதனை, போட்டி இருக்காது.
அடுத்து நான் சொல்லியிருக்கிற 4 பாயிண்ட் ப்ரோக்ராமை அமல் படுத்தனும்னா இன்னைக்கிருக்கிற மன்மோகன் மாதிரி ஆசாமியாலயோ, கூட்டணி அரசாலயோ முடியாது. அதனாலதான் இதை மொத பாயிண்டா வச்சேன் பாஸு.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.
//இதுக்கு வருடம் எத்தனை செலவு பிடிக்கும் என நினைக்கிறீர்கள்?பத்து கோடி
பேருக்கு தலைக்கு மாதம் நாலாயிரம் சம்பளம் தந்தால் மாதம் நாற்பதாயிரம்
கோடி.வருடத்துக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி...இது சம்பளத்துக்கு மட்டும்.
இத்தனை பெரிய தொகையை எப்படி திரட்டுவீர்கள்?அதாவது ஒவ்வொரு இந்தியனுக்கும்
தலைக்கு ஐயாயிரம் ரூபாய் வரிவிதித்தால் தான் இத்தனை பெரிய தொகையை (ஒரு வருட சம்பளத்தை திரட்ட முடியும்).நாலு பேர் அடங்கிய குடும்பம் ஒன்றுக்கு ஒவ்வொரு வருடமும் 20,000 ரூபாய் வரிவிதித்தால் மட்டுமே இப்படி ஒவ்வொரு வருடத்துக்கான இந்த சம்பளத்தை நீங்கள் திரட்ட முடியும்...இது சம்பளம் மட்டுமே.உங்கள் நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஆகும் செலவு எல்லாம் கணக்கில் வரலை.அதுக்கு அடுத்து வருகிறேன் //
என்ன பாஸ் ! இந்த மேட்டர்ல 1986 லருந்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி வித்வானுங்க இந்த மாதிரி கேள்விகள் கேட்பிங்கனு தெரியாதா?
எக்கானமி பேக்கேஜ் 1 ,2,3,4 ன்னிட்டு நிறைய்ய ப்ரிப்பேர் பண்ணி வச்சிருக்கேன். அதை படிக்க கீழ் காணும் தொடுப்பை க்ளிக் செய்யுங்க.
http://www.dinakaran.com/Citizen-journalism/viewNews.aspx?id=260&mymode=newss
மேலும் வரி வரின்னு வரி வரியா எழுதியிருக்கிங்க. நீங்க சிதம்பரத்துக்கு தூரத்து உறவா என்ன? மேலும் பணம் பணம்னு பதைக்கிறிங்களே.. இன்னைக்கு எத்தீனி அரசுத்துறை ஊழியர்களுக்கு அரசு எத்தீனி லட்சம் கோடி பெண்டிங் வச்சிருக்கு தெரீமா?
மேலும் சிறப்பு ராணுவத்தோட தேவைகளை அரசு நேரடியா கவனிச்சிக்கிறதால சம்பளம்னு தனியா கரன்சியா கொடுக்க வேண்டியது ரெம்ப குறைச்சலாத்தான் இருக்கும் துரை. மத்திய அரசு உலக மார்க்கெட்ல மொத்தமா கொள்முதல் செய்யறதால சி.ரா. தேவைகள் மிக குறைந்த செலவில் நிறைவேறுங்கண்ணா. சி.ரா. தேவைகளை சப்ளை பண்ற மல்ட்டி நேஷ்னல் கம்பெனீஸ், சுதேசி கம்பெனிகளுக்கு தலா ஒரு பில் நிறுத்தி வச்சு அடுத்தடுத்த பில்ஸை செட்டில் பண்ணாலே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் சமாளிக்கலாம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். 4.கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.
//நதிகளை இணைக்க எத்தனை கோடி பணம் தேவைபடும் தெரியுமா?ஐந்துலட்சத்து
பதினைந்தாயிரம் கோடி.திட்டம் போக,போக இந்த பட்ஜெட் ஏறதான் செய்யும்.இந்த கனவு திட்டத்துக்கும் நிதி திரட்ட மீண்டும் தலைக்கு ஐயாயிரம், குடும்பத்துக்கு
நாற்பதாயிரம் ரூபாய் வரிவிதிக்கவேண்டும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் கற்பனையில் மட்டுமே நடக்கும் சாத்தியகூறு உள்ளவை.இவற்றை செயல்படுத்துவது நாட்டை திவாலாக்குவதில் தான் முடியும்.//
என்னங்கண்ணா ஜோக் எல்லாம் அடிக்கிறிங்க ! நாடு புதுசா திவாலாகனுமா என்ன? இப்பயே நிலைம அதானே தலைவா ! கடன் வாங்கி ஏற்கெனவே வாங்கின கடனுக்கான வட்டிக்கு வட்டியை தானே கட்டிக்கிட்டிருக்கம். இதே ரேஞ்சுல போனா ஒரு ம.ரு முயற்சியும் செய்யாமயே திவாலாகத்தான் போறோம்.
எங்க ஸ்டேட்ல ஒய்.எஸ்.ஆர் ஆஃப்டர் ஆல் ஒரு சி.எம். ஒரு மத்திய கட்சியின் மானில சட்டமன்ற கட்சித்தலைவரால ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூ செலவில் ஜலயக்னம் ஸ்டார்ட் பண்ண முடிஞ்சதுன்னா
மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படற, எம்பிக்களோட, கட்சி தலைமையோட சம்மதம் தேவைப்படாத பிரதமரா இந்த ரிஸ்கை எடுக்க முடியாதா என்ன? மேலும் பக்காவா ப்ளான் பண்ணி நீர் வழி போக்குவரத்துக்கான காண்ட் ராக்டை க்ளோபல் டெண்டர் மூலம் கொடுத்தா சில்லறை புரளாதா என்ன?
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது
சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
//என்னிடம் கணக்கில் இல்லாத பணம் ஒரு கோடி இருக்கு என வைத்துகொள்வோம்.நேராக அமெரிக்க என்.ஆர்.ஐ ஒருவரிடம் ஒரு கோடியை தந்து டாலராக மாற்றிகொள்கிறேன்.அவர் அந்த ஒரு கோடி இந்திய ரூபாயை இந்தியாவில் கொடுத்து புதிய கரன்சியாக மாற்றிகொள்ள போகிறார்.கணக்கு கேட்டால் டாலரில் சம்பாதித்து பாரெக்ஸ் மார்க்கட்டில் (forex) வாங்கியது என சொல்ல போகிறார்...
அடுத்து கருப்பு பணத்தில் பெரும்பகுதி ச்விஸ் வங்கிகளில் யூரோக்களாகவும்,
டாலராகவும், இந்தியாவிலும் பிறநாடுகளிலும் சொத்துக்களாகவும் தான்
இருக்கும்.கையில் பணத்தை வைத்திருப்பது ரொம்ப ரிஸ்க்...திட்டம் கவர்ச்சி
திட்டமா இருந்தாலும் அதனால் பலன் துளியும் இல்லை.//
அண்ணாத்தை !
இதைவிட பெட்டர் ஐடியா இருக்கே. கருப்பு பணம் உள்ளவன் தன் பெண்டாட்டி, மகள்,அக்கா தங்கச்சிங்க கையில கொடுத்து பலான தொழில்ல சம்பாதிச்சோம்னு கூட சொல்லி மாத்திக்கலாமே.
எக்கானமி பேக்கேஜ்ல மொத பாயிண்டே இந்தியாவுல ஸ்விஸ் மாதிரி கேள்வி நாழியில்லாத வங்கி ஒன்னை ஆரம்பிக்கனும்ங்கறதுதான். அப்போ நீங்க சொல்ற வெளி நாட்டு சொத்து, யூரோல்லாம் ஜீரோ ஆயிரும். அதுக்கப்பால லோக்கல் பன்னிகளை பிடிக்க விரிச்ச வலைதான் கரன்சி ரத்து
No comments:
Post a Comment