Thursday, August 27, 2009

இலங்கை விவகாரம் குரங்கு புண்

ஆம். குரங்குக்கு புண் வந்தால் அது சும்மா இருக்காதாம். அதை நோண்டி நோண்டி பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். அது போல் இலங்கை விவகாரம் என்பது தமிழர்களாலேயே பெரிதாக்கப்பட்டுவிட்டது என்பது என் கருத்து. ஒரு மெஜாரிட்டி பிரிவினருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது என்பது உலக வரலாற்றிலேயே ஒரு சிங்களர்கள் விஷயத்தில் தான் நடந்துள்ளது. அது என்ன இழவோ தெரியவில்லை. தமிழர் என்றொரு இன‌முண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது போல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தண்ணீரில் எண்ணெய் பொட்டு போன்று வாழ்கிறார்களே தவிர இரண்டற கலப்பதே இல்லை. உடல் அங்கே உயிர் எங்கோ என்பது போல் அவர்களின் நினைவு மொத்தம் தாய் நாட்டின் மீதே உள்ளது பிற மொழியினருக்கும், இனத்தாருக்கும் (ஏன் எனக்கும் ) புரிய மறுக்கிறது.

சிங்கள் அரசுகள் இன வாத அரசுகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.உலக நாடுகளிலான இன்றைய அரசியல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வந்து நிற்கிறது. எதை வேண்டுமானாலும் செய் அதிகாரத்தை கைப்பற்று என்பதே அரசியலின் முக்கிய நோக்கமாகிவிட்ட பின்பு இனவாதம், இனப்போர் எல்லாம் தவிர்க்க முடியாததே. அதை எதிர்கொண்ட மித வாத சக்திகளை இனவாத அரசுகள் கிள்ளு கீரையாய் நடத்த , தீவிர வாதம் கிளர்ந்தது.

அதிலும் பிரபாகரன் என்பவர் உலக கொடுங்கோலர்களில் எவருக்கும் இளைத்தவரல்ல. தமிழினமும் வேறு விதியில்லாத பட்சத்தில் தான் பிரபாகரனை ஆதரிக்க வேண்டி வந்தது. (அவர் தான் ஏனைய தீவிரவாத சக்திகள் அனைத்தையும் அழித்து ஒழித்துவிட்டாரே)

தமது இயக்கம் ப‌லவீனப்படும்போது அமைதி பேச்சுக்களை ஊக்குவிப்பதும், அந்த நேரத்தில் தம் இயக்கத்தை பலப்படுத்தி கொள்வதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது. மேலும் அவர் ஒரு ஈகோயிஸ்ட் . தான் மையப்புள்ளியாக இல்லை என்று அறிந்தால் போதும் உடனே அந்த அந்த ஏற்பாட்டையே நிராகரிப்பது அவர் ஸ்டைல். அவரது கிம்மிக்ஸ் நம் தங்க தமிழகத்து எந்த அரசியல் தலைவருடையதை காட்டிலும் இளைத்ததல்ல. தானம் கொடுத்த பசுமாட்டுக்கு பல் பிடித்து பார்த்தாலும் பரவாயில்லை , தானம் கொடுத்தவரையே கசாப்பு போட்ட காந்தீயவாதி பிரபாகரன்.
இலங்கை அரசு எப்படி புலிகளை உலக அரங்கில் வில்லன் களாக நிறுத்தியதோ அதே பணியை புலிகள் செய்திருக்கலாம். க்ளோபல் வில்லேஜ் என்ற வாதம் வலுப்பட்டு வரும் காலத்தில் உலக அரசுகள் மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளின் கைப்பாவைகளாகி ரொம்ப காலமாகிறது.

அவர்களது வியாபாரத்தை பாதிக்கும் எந்த விஷயத்தையும் மேற்படி மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகள் விரும்புவதில்லை. அதனால் உலக அரசுகளும் தீவிரவாதிகளை தீண்ட தகாதவர்களாக பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் எந்த நாட்டுக்கும் , எந்த நடுவருக்கும் அடங்காத/வளைந்து கொடுக்காத/ எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் ஒத்துவராத பிரபாகரனை உலக நாடுகள் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கை அரசு உலக நாடுகளின் ராணுவ/வியூக/ஆயுத /உளவு உதவியை பெற முடிந்தது. பிரபாகரன் கதையை முடிக்க முடிந்தது.

தனி நபர் புகழ்ச்சி என்பது அரசியலில் மட்டுமல்ல போராளிக்குழுக்களையும் நாசமாக்கும் என்பதற்கு புலிகள் ஒரு உதாரணமாகிவிட்டனர். மேலும் லட்சியம் எத்தனை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும். கோழைத்தனமான மனித வெடிகுண்டுகள்/ குழந்தை போராளிகள் /கண்ணி வெடிகள் என்று புலிகள் செயல்பட்டதால் உலகின் அனுதாபத்தை முழுக்க பெறமுடியாது போய்விட்டது.

ஒருபுறம் தற்காலிக "காலத்தின் கட்டாயங்களால்" ஆயுதம் தூக்க வேண்டி வந்தாலும் , நிரந்தர தீர்வுக்கு முயற்சி செய்திருக்கலாம். அதில் புலிகள் தவறிவிட்டனர். ராஜீவ் கொலை புலிகள் விஷயத்தில் இந்தியாவை ஒரு ரெஃபரி யாக கூட இயங்காமல் செய்துவிட்டது. சரி நடந்தது நடந்தது தான். இதை மாற்ற முடியாது. இனியேனும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிப்பதையும் உலகத்தமிழர்கள் விட வேண்டும்.

நீங்கள் என்னதான் இனமானம், தன்மானம் , வாழ்வுரிமை,சமத்துவம் என்று வாய் கிழிய பேசினாலும் மேற்படி ஐட்டங்களுக்காக போராடவேனும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். முள் வேலிக்கிடையில் சகதியில், பசி பட்டினியில் நோயில் சாகும் அந்த சகோதர, சகோதிரிகளின் துன்பங்களுக்கு முற்றும் போட முற்றும் துறக்கலாம்.

புலிகள் மொழியிலேயே கூறுகிறேன். புலி பதுங்கித்தான் ஆக வேண்டும். உயிர் பிழைத்தால்தானே மீண்டும் பாய. இலங்கை தமிழர்கள் ஸ்தூலமாக பட்டு வரும் வேதனைகள் ஒருபுறம் என்றால் அவர்கள் மனரீதியில் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள். அங்குள்ள குழந்தைகள் வளர்ந்தால் அவற்றின் மனோதத்துவம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்தாலே அச்சம் பிறக்கிறது.

நான் சொல்ல விரும்புவது ஒரே வரிதான் "Be a Roman when you are at Rom"
சாவுக்கே அழைத்துச்செல்லும் லட்சியவாதத்தை விட உயிர் வாழ செய்யும் மெட்டீரியலிசமே பெட்டர்.

பி.கு: உங்கள் மறு மொழியை சிங்களனுக்கு பிறந்தவனே என்று ஆவேசமாக துவக்கிவிடாதீர்கள். பத்து நிமிடம் யோசித்து பின் எழுத ஆரம்பிக்கவும். தமிழகத்தில் வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகளை இலங்கை அகதி முகாமில் ஒரு நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். அட இங்குள்ள அகதி முகாமில் அரை நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். மாயாவாதத்தை விட்டு மண்ணுக்கு வாருங்கள். உயிரோட இருந்தா உப்பு வித்து பொழச்சுக்கலாம் தலை. உயிரே போன பிறகு என்ன செய்ய.. வரிப்பணத்தை வீணாக்கி சிலை வைப்பான், அதை உடைக்க ஒரு கூட்டம் கிளம்பும் கம்பி கூண்டுல சிறைவைப்பான் அவ்ளதானே ஷிட் !

8 comments:

  1. dont write nonsence before writing think once

    ReplyDelete
  2. தமிழ் வாணன் அவர்களே !
    இனமானம், தன்மானம் ,சம உரிமை என்று வாயை கிழித்துக் கொண்டதன் பலன் தானே அங்கு என் அன்னைமார்களும், சகோதிரி மார்களும் படும் அவதி. இன்னுமா ..இனமானம் ? இன்னுமா தன்மானம்?
    ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து சேர்த்துவிட்ட பின்னும் மானமிழந்து வாழும் தலைவர்களை பெற்ற தமிழினத்துக்கு தன்மானம் ஒரு கேடா ? என் இனிய தமிழ் மக்களே ! போதும். போதும். இவர்களை நம்பினால் நட்டாறுதான்.

    புலிகளுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு நிதி கொடுப்பார்கள். சகோதர கொலைகள் வேண்டாம் என்று தடுக்க மாட்டார்கள். மிதவாதிகளை கொன்று குவிக்காதீர்கள் என்று நிபந்தனை விதிக்கமாட்டார்கள். உசுப்பி விட்டு பின்பு நாலுகாலையும் தூக்கிவிடுவார்கள்.

    போதும் தாயே.. இந்த நன்றி கெட்ட தலைவர்களையும் , வெந்ததை தின்று விதி வந்தால் சாகும் தாய் தமிழக மக்களையும் நம்பி நலிந்தது போதும். இவர்களை நம்புவதை விட சிங்கள அரசையே நம்பலாம்.

    ReplyDelete
  3. குழலி அவர்களே !
    நான் இன்றைக்கு காந்தீய வழி்யை பரிந்துரைக்க வில்லை. அன்றே ..தற்காலிகமாக ஆயுதம் தூக்கினாலும் அதை வைத்து காந்தீய வழியில் நிரந்தர தீர்வை எட்டவில்லையே என்று தான் வருத்தப்பட்டுள்ளேன்.

    இன்றைக்கு ..? தமிழ் வாணனுக்கு கொடுத்துள்ள மறுமொழியிலேயே தங்களுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  4. உங்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை புரி
    யாதது அகையால் தெரியாதவிடயத்தில்
    மூக்கை நுளைத்து அசிங்கப்படுவதிலும்
    பார்க்க மவுனமாய் இருக்கலாம்.அது
    தான் உங்களுக்குச் சிறந்தது

    ReplyDelete
  5. mr.murugesan
    if you know the history you can write without knowing anything dont simply write and attract the people and dont waste our time to.you said that instead of beliving the ltte ,srilankans are good.what a mad assumption do you know what s gong on for 3 lacks people.before writing do lot of research and write.

    ReplyDelete
  6. தேவேஷ் அவர்களே !
    ஈழத்தமிழர் பிரச்சினை என்ன உலக மக்கள் அனைவரின் பிரச்சினையையும், அவற்றின் மூலத்தையும் அறிந்தவன். முதற்கண் ஈழபிரச்சினை என்பது மானசிகமானது என்பது என் கருத்து. மெஜாரிட்டி பிரிவினரான சிங்களர்களுக்கு இன் செக்யூரிட்டி ஃபீலிங் வர காரணமே தமிழனின் தண்ணீரில் எண்ணெய் தனம் தான்.

    நீங்கள்/ உங்களை போன்றவர்கள் விசிறி விட்டதால் தான் இன்று தமிழன் நாதியற்ற சாவு சாகிறான். ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு தெலுங்கன் செத்தால் கூட தெலுங்கு தினசரிகளில் அதுதான் தலைப்பு செய்தி, தமிழகத்தில்? விஜயசாந்தி திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டால் அதுதான் தலைப்பு செய்தி. கன்னடன் சூப்பர் ஸ்டார் , பெங்களூர் பிராமணத்தி எதிர்கட்சி தலைவி, ஹீரோயின் கூட உங்களுக்கு தமிழ் தெரியாதவள் தான் உசத்தி. தமில் பேசும் தலைவன் தான் மாற்று ? அடபோங்கய்யா ..டாஸ்மாக் சாதனைல சாதனை படைச்சுக்கிட்டு இருக்கிற உங்களுக்கேதய்யா அந்த தகுதி.

    கேவலம் கூத்தாடி கும்பலுக்கு இருந்த இனமான உணர்வு கூட இல்லாத திமுகவை, காங்கிரசை ஜெயிக்கவச்ச நீங்களா இன மானத்தை பத்தி பேசறது. எனக்கு ஈழ பிரச்சினையும் புரிஞ்சு போச்சு..உங்க தலைவகளோட கையாலாகாத்தனமும் புரிஞ்சு போச்சு . அதுக்குத்தான் உசுரோட இருந்தா உப்பு வித்து பொழைக்கலாம்னு சொன்னேன்

    ReplyDelete
  7. தமிழ் வாணன் அவர்களே !
    நீங்க ஸ்ரீ ஸ்ரீ எழுதிய "ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்" என்ற கவிதையை படித்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.உலக சரித்திரம் என்பதே சாமானிய,ஏழை மக்களையும், பெண்களையும் இருட்டடிப்பு செய்து எழுதப்பட்டதே.

    இதில் தமிழ் ஈழ சரித்திரம் என்பது தமிழ் துரோகிகளின் சரித்திரம். உங்களுக்கு பட்டியல் வேண்டுமானால் தருகிறேன். "ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் " குறளை நினைத்து பாருங்கள். பிரபாகரன் புலிக்குட்டிகளுடன் ஃபோஸ் கொடுக்க எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் இன்னுயிரை பலிகொடுக்க வேண்டி வந்தது ?

    உயிர்களின் முதல் கடமை உயிர் வாழ்வது. தலைவனாக ஆசைப்படுபவன் வேண்டுமானால் தன் உயிரை பணயம் வைக்கட்டும், அவன் பின் செல்பவர்களும் அப்படியே செய்யட்டும். ஆனால் அவர்களின் அந்த செயல் சாமானிய மக்களுக்கு சமாதிகளாகிவிடக்கூடாது.

    வன்முறை என்பது "எமர்ஜென்ஸி கேட்" மாதிரி ஒரு பெரிய வியூகத்தில் பாகமாக உபயோகிக்கப்படலாமே அன்றி அதையே தலைவாசலாக கொண்டால் "பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்" என்பது நிஜமாகிவிடும். பட்டயம் எடுத்தவனை பாராட்டியவர்கள் கூட பட்டயத்தால் சாக வேண்டியதுதான்

    ReplyDelete
  8. தேவேஷ் அவர்களே !
    //மூன்று இராச்சியங்களையும் தனித்தனியாக
    நிர்வகித்த பிரித்தானியர் 1815ல் ஏற்பட்ட கண்டி உடன்
    பாடு காரணமாக நிர்வாக வசதிக்காக மூன்று இராச்சி
    யங்களையும் ஒன்றாக்கி ஏக இலங்கை யாக 1948ம்
    வருடம் வரை ஆண்டார்கள்.//

    இது தங்கள் பதிவின் ஒரு பகுதியே. நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள், இலங்கை ஏக இலங்கையாக ஆளப்பட்டது என்று. ஏக இலங்கையில் வாழும் தமிழர்கள் தனி தமிழீழம் கேட்பது என்பது ஒரு மிரட்டலாக , தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள் மேற்கொள்ளும் போராட்டத்திலான வியூகத்தில் ஒரு பாகமாக இருக்கலாமே தவிர அதுவே லட்சியமாகிவிடக்கூடாது.

    இலங்கையின் இடத்தில் இந்தியாவை கற்பனை செய்துகொள்ளுங்கள். தனி நாடு கோரிக்கையை கைவிட்ட அண்ணாவை நினைத்து பாருங்கள்.

    ReplyDelete