Wednesday, August 5, 2009

என்.டி.ஆர் எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே

என்.டி.ஆர் :அதென்ன தம்பி எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் அப்படி என்னதான் வித்யாசம் .. நீயே சொல்லி தொலை
எஸ்.முருகேசன்: எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். கேரளாவில் செட்டில் ஆனவர். இதையெல்லாம் மறைக்கவோ என்னவோ தமிழ், தமிழகம்னு குரல் கொடுத்துக்கிட்டிருந்தார். உங்களுக்கு இந்த தலையெழுத்து கிடையாது. இயல்பாவே உங்க மனசுல தாய் மொழி மேல் ஒரு பாசம் இருந்தது. எந்த வித அரசியல் நோக்கம் இல்லாத காலத்துலயே இயல்பாவே தாய் நாடு, தாய்மொழி பற்றிய பாடல்கள்,வசனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டிருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு திட்ட வட்டமான அரசியல் திட்டத்தோட இருந்தார். அவர் படம்,பாட்டு,பாத்திரம்வசனம் எல்லாமே செயற்கை. அரசியலிலும் அவரோட பங்கேற்பு,செயல்பாடு எல்லாமே சுய பாதுகாப்பு,சுய வளர்ச்சியை நோக்கமாக கொண்டவையே. பொதுவாழ்வில் அவர் காட்டிய பிம்பத்துக்கும் , உண்மைக்கும் ரொம்பவே வித்யாசம் இருந்தது. ஸ்ப்லி பெர்சனாலிட்டினு கூட சொல்லலாம்.
என்.டி.ஆர் :இதை தான் சின்ன பய புள்ள பேச்சுனு கிராமப்புறங்கள்ள சொல்வாங்க. நோக்கம் எதுவா இருந்தா என்ன ..அவர் செய்ததெல்லாம் நல்லதாதானே முடிஞ்சது
எஸ்.முருகேசன்: இல்லே தலைவா ! ஜெயலலிதால முடிஞ்சது.
என்.டி.ஆர் : நோ நோ .. உன் பேச்செல்லாம் அன் பார்லெமென்டரியா இருக்கு நான் போறேன்
எஸ்.முருகேசன்: தலைவா ! நான் தமிழனா தெலுங்கனான்னு எனக்கே சந்தேகம் வர்ர அளவுக்கு தெலுங்குல தேர்ச்சியும், என்னை நான் நம்பறதுக்கு பயிற்சியும் கொடுத்த குருநாதர் நீங்க. எம்.ஜி.ஆரை கலைஞர் கட்சிலருந்து கட்டம் கட்டினப்ப சத்யா ஸ்டுடியோவுல பதுங்கிட்டாராம் .ஏதோ அந்த காலத்துல மக்களுக்கு சொந்த பிரச்சினைங்க குறைவுங்கறதால கூட்டம் கூட்டமா வந்து வாத்தியாருக்கு ஆறுதல் சொன்னாங்களாம் ..அதுக்கப்புறம்தான் சார் ஓப்பன் டாப் ஜீப் ஏறி ஸ்பீச் கொடுத்தாராம். ஆனால் நீங்க அப்படியா தலைவா ! சந்திரபாபு ஏதோ மந்திரியா இருந்தாரேனு பெண்ணை கொடுத்திங்க. காங்கிரஸ் கட்சி கலாச்சாரம் தெரிஞ்சது தானே . தூக்கிப்போட்டுட்டாங்க. நீங்க இந்திரா லெலவல்ல போய் பேசிப்பார்த்திங்க மந்திரியில்லே கந்திரியில்லே எந்திரின்னுட்டாங்க . உடனே நீங்க கலகக்குரல் எழுப்பினிங்க. தனிப்பட்ட இழப்பை தூக்கி ஓரமா வச்சுட்டு காங்கிரசுக்கு எதிரா போர் கொடி தூக்கி மானிலமெல்லாம் பிரச்சாரம் செய்திங்க ஆட்சிய பிடிச்சிங்க . இந்த வெற்றிக்கும் உங்க சினி வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது அது ஒருவேளை உங்களுக்கு மானிலம் தழுவிய அறிமுகம், மீடியா கவனத்தை கொடுத்திருக்கலாம். தட்ஸ் ஆல். ஏனா நீங்க தரிச்ச பாத்திரங்கள் அப்படி. நீங்க ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடத்தையும் போட்டிங்க, கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடம் கூட போட்டிருக்கிங்க ,வுமனைசரா, பீடி,சிகரட் என்ன கஞ்சா அடிக்கிற பார்ட்டியா,குடிகாரனா,அப்பா வச்சிருக்கிற பெண்ணோடயோ டூயட் பாடற கேரக்டர்ல கூட நடிச்சிருக்கிங்க..
என்.டி.ஆர் :அது சரி இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே
எஸ்.முருகேசன்: நம்ம மானிலத்துல தெரியும் தலைவா ..தமிழ் நாட்டுல தெரியாது . உங்க கதைய சொல்லிட்டேன். எம்.ஜி.ஆர் கதை தெரியாத தலைமுறை ஒன்னிருக்கே அவங்களுக்காக 4 வார்த்தை . வாத்தியார் படத்துல ஒரே ஹீரோயின்,ரெண்டாவதா ஒன்னிருந்தாலும் அவளை க்ளைமாக்ஸ்ல தங்கச்சின்னிருவாரு. பீடி நோ..சிகரட் இல்லே தண்ணி இல்லவே இல்லே அவர் ஒரு ப்ளான் படிதானே படம் பிடிச்சு படம் காட்டி தமிழக அரசியலை பப்படமாக்கிட்டாரு
என்.டி.ஆர் :அப்படி அமைஞ்சதுனு கூட சொல்லாமில்லையா
எஸ்.முருகேசன்:உன் லொள்ளு தாங்க முடியலை தலை! என்னதான் அவர் உங்க உடன்பிறவா சகோதரரா இருந்தாலும் இப்படியா தாங்கு தாங்குனு தாங்கறது. அடமுக்கியமான விஷயத்தை விட்டுட்டேன். நீங்க எத்தினியோ ஹோரோயினோட நடிச்சிருந்தாலும் அந்த மாதிரி கிசு கிசு மட்டும் வந்ததே இல்லை . பெரியார் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப அண்ணா மாதிரி தலைவர்கள் கூட ஜீரணிச்சுக்க முடியாம போயிருச்சு . ஆனால் நீங்க இன்னொருத்தர் மனைவியா இருந்த லட்சுமி பார்வதியை "இவதாண்டா என் மனைவி"னு கைகாட்டினா மானிலமே ஒத்துக்குச்சு. இந்த வகைல கூட நீதான் தலை சூப்பர்
என்.டி.ஆர் :மொத்தத்துல நீ என்ன தான் சொல்ல வரே
எஸ்.முருகேசன்: நீங்க எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே ரெண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசமிருக்குனுதான்
என்.டி.ஆர் :அதை இவ்ள காலம் கழிச்சு இப்பத்தான் சொல்லனுமா என்ன !எஸ்.முருகேசன்: Better late than never தலைவா !

8 comments:

  1. முருகேசன் அண்ணே,

    எம்ஜிஆர் தேர்தலில் தோற்கலை, சாகும் வரை முதலமைச்சர். என் டி ஆர் அப்படியா ?

    :)

    ReplyDelete
  2. நல்லப் பதிவு நண்பரே. என்.டி.ஆர். பற்றி நிஜமாகவே நிறைய விஷயங்கள் தெரியவில்லை. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கண்ணன் அவர்களே !
    அரசியலில் வெற்றி தோல்வியெல்லாம் சகஜம். எம்.ஜி.ஆர்.வாழ்வில் கூட‌ ஒரு முறை அவர் கட்சி எம்.பி.தேர்தலில் ஒரே ஒரு எம்.பி யை பெற்று அவரும் தி.மு.கவில் சேர்ந்துவிட்ட அவலம் இடம் பெற்றுள்ளது.

    என்.டி.ஆர் எம்.ஜி.ஆர் மாதிரி கணக்கு போட்டு ,தில்லிக்கு காவடி எடுத்து கலைஞருடன் ரகசிய பேரங்கள் செய்து காலத்தை தள்ளவில்லை. அவர் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்தவர். அது சில சமயம் தோல்வியை கூட தந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தலைவணங்காது வாழ்ந்தவர் அவர்.

    துரோகங்களால் தான் அவரை வெல்ல முடிந்ததே தவிர (சந்திரபாபு) 1989 தேர்தல்களில் கூட அவர் கட்சி 100 வாக்கு, 1000 வாக்கு வித்யாசத்தில் தோற்ற இடங்களே 100க்கு மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. மெசர்க் அவர்களே ! (உச்சரிப்பு சரி தானா ?)
    பாராட்டுக்கு நன்றி. எதிர்காலத்தில் நான் ஏதேனும் சாதித்தால் அந்த சாதனைக்கு என்.டி.ஆரிடமிருந்து பெற்ற தன்னம்பிக்கை,சுயமரியாதைகளே காரணமாகும் என்று உங்கள் மூலம் பதிவுலகத்திற்கும், தமிழ் கூறு நல்லுலகத்திற்கும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
  5. Ellam sari thaanne1! MGR ORUVAR THAAN KADAISI VARAI KALAIGNARAI ADKKI VECHIRUNTHAR

    ReplyDelete
  6. //இன்னொருத்தர் மனைவியா இருந்த லட்சுமி பார்வதியை "இவதாண்டா என் மனைவி"னு கைகாட்டினா மானிலமே ஒத்துக்குச்சு//

    இதென்ன வஞ்ச புகழ்ச்சி அணியா? மாநிலம் ஒத்துகிச்சி சரி அவ புருஷன் ஒத்து கிட்டானா? இது என்ன பெருமையா?

    " கிருஷ்ணர் " சிலை வடிக்க தன் போட்டோவை கொடுத்த தலைக்கனம் எம்.ஜி.ஆர் க்கு இல்லை.

    " கிருஷ்ணர் " வேடத்தில் தன்னை தவற வேறு யாரையாவது நடிக்க வைத்தால் , அந்த தயாரிபாளர் , டைரக்டர் ஒதுக்கபடுவார் என்னுமளவிற்கு மிரட்டலை விட்டவர் என் டி ஆர்.

    பேத்தி வசுல இருக்குற ஸ்ரீதேவி கூட 'vissa' டிவி ல என் டி ஆர் போடுற ஆட்டத்த பாத்தா 'பால கிருஷ்ணா' வுக்கே பைத்தியம் பிடிக்கும்.

    பெத்த பிள்ளைகளே தூக்கி எறிஞ்சிட்டு போன ஒரு கேவலமான சொந்த வாழ்க்கைக்கு சொந்தமானவரை , 'தங்க கட்டி' எம் ஜி ஆர் ரோட கம்பேர் பண்ணாதீர்கள் ...

    ReplyDelete
  7. அஹோரி அவர்களே !
    தங்கள் மறு மொழிக்கு நன்றி.

    எம்.ஜி.ஆர் மணந்த ஜானகி ராமசந்திரன் கூட இந்த ரகம் தான் என்று கேள்வி. மற்றொரு டைரக்டர் கஸ்டடியில இருந்தாங்களாமே !

    நான் சொல்ல வந்தது என்னன்னா என்.டி.ஆர் ரேஷ்னலிஸ்ட்,புரட்சிக்காரர், ஹிப்பக்ரட் அல்ல,பெண்ணிய வாதி என்ற விஷயங்களைதான்.

    அவர் நினைச்சிருந்தா பார்வதியை வச்சிருந்திருக்கலாமே. அப்போ சந்திரபாபு, என்.டி.ஆர் மகன்கள் யாருமே எதிர்ப்பு கொடி தூக்கியிருக்க மாட்டாங்களே !

    எம்.ஜி.ஆர் ஜெயலலிதா /கன்ஷி ராம் மாயாவதி கேசை எல்லாம் பார்க்கும் போது பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதர்சமாகவே விளங்கினார் என்.டி.ஆர்.

    கிருஷ்ணர் சிலை வடிக்க தன் போட்டோவை கொடுத்தாரா ..என்னசார் இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.

    ஐதராபாத் டாங்க் பண்ட்ல வச்ச சரித்திர புருஷர்கள் சிலைக்கு என்.டி.ஆர் தான் மாடல்னு அப்போ எதிர்கட்சிங்க கூச்சல் போட்டாங்க ..இதெல்லாம் வதந்தி சார்

    வேறு நடிகர்களுக்கு ராமன், கிருஷ்ணன் வேடம் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு என்.டி.ஆர் மிரட்டலா ? ஒதுக்கி வைத்தாரா.. இது மறு மொழியில்ல சார் என்.டி.ஆர் புகழுக்கு மரு ஏற்படுத்தும் மரு மொழி.

    என்.டி.ஆர் தலை கனம் பிடிச்சவர்தான். ஆனால் அது அதீத தன்னம்பிக்கையா தான் இருக்குமே தவிர கர்வம் கிர்வம்லாம் தப்புண்ணே !

    இன்னைக்கு நேத்து பேஞ்ச மழைல இன்னைக்கு முளைச்ச காளான் எல்லாம் கதை பிடிக்கனும், ஸ்க்ரிப்ட் காட்டனும், நான் தான் டைரக்ட் பண்ணுவேனு அலம்பல் பண்றதை ஒரு தரம் நினைச்சு பாருங்க.

    என்.டி.ஆர் ஒரு படத்துல புக் ஆயிட்டா அந்த படம் ஷூட்டிங்,டப்பிங்,மிக்ஸிங் எல்லம் முடிஞ்சு ப்ரிவ்யூ பார்க்கிற வரைக்கு வாயை திறக்க மாட்டார். ப்ரிவ்யூ முடிஞ்சதும் வந்து தயாரிப்பாளர் ,டைரக்டர் எல்லாம் இவர் முன்ன நிப்பாங்களாம். படம் நல்லாயில்லேன்னா உதட்டை பிதுக்கிட்டு போயிருவார். அவ்ளதான்

    ஸ்ரீ தேவி கூட ஆட்டம் போட்டாருன்னா ரசிகர்கள் விரும்பினாங்க ..தயாரிப்பாளர்,டைரக்டர் படம் எடுத்தாங்க..

    ஒரு தமாஷ் தெரியுமா.. அவர் அரசியல்ல இறங்கிட்ட பிறகு நாதேசம்னு ஒரு படம் வந்தது. ஆக்சுவலா மூணு ப்ரொட்யூசர்ஸ் வந்து டேட்ஸ் கேட்டாங்களாம். மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கங்கனு தலைவர் டேட் கொடுத்தாராம். அது தலை பந்தா !

    பெத்த பிள்ளைகள் தூக்கி எறிஞ்ச தகப்பங்கறது அந்த தகப்பனுக்கு கேவலமில்லேண்ணே. அந்த பிள்ளைங்களுக்கு தான் கேவலம். இந்த பித்ரு துரோகத்தால தான் என்.டி.ஆர்.பிள்ளைகள் மட்டுமில்லே பேரனும் மக்களால் தூக்கியெறியப்பட்டனர். இன்னைக்கும் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆர் பாணியில தான் ஆட்சி நடத்தறார். இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இதெல்லாம் தான் காங்.கட்சிக்கு வெற்றிய கொடுத்தது.

    நிர்வாகத்தை மக்களுக்கு அதிலும் சாமானிய மக்களுக்கு நெருக்கமா கொண்டு வந்த ஆசாமி என்.டி.ஆர். அப்போ மாவட்டங்கள் தான் இருந்தது ..ரெண்டு மூனு தாலுக்கா சேர்ந்தது ஒரு மாவட்டம். தலை வந்து மண்டலங்களா பிரிச்சாரு. சித்தூர் மாவட்டத்துல் மட்டும் 60 மண்டலங்கள் இருக்குன்னா நிர்வாகம் எந்த அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டிருக்கும் பாருங்க. அந்த காலத்துல‌
    தாசில்தாருன்னா கடவுள் மாதிரி இப்போ மண்டல வருவாய்துறை அதிகாரியை மக்கள் பிடிச்சு உலுக்கி எடுக்கிறாங்க தெரியுமா ?

    ReplyDelete
  8. மம்முட்டி அவர்களே !
    கலைஞரை எம்.ஜி.ஆர் அடக்கி வச்சிருந்தது உண்மைதான். ஆனால் அவ்வப்போது அடங்கியும் போயிருக்காரு. ஒரு பிரச்சினைய கலைஞர் பேசாம இருக்க தனி ரேட்டு உண்டாம். மேலும் தில்லி எம்.ஜி.ஆரை கில்லி ஆட முடிவு செய்த போது கலைஞர் தோளில் கைபோட்டு "அதிமுக திமுக இரட்டைக்குழல் துப்பாக்கி" என்று சொல்லியதும் உண்டுங்களே !

    கலைஞர் பல தளங்களில் இயங்கியதால் அவர் பல சமயம் எதிர்கட்சி தலைவராகவே சாதனை படைத்திருக்கிறார். முதல்வராக அவர் தோற்றுப்போக காரணம் அவரது லக்னம். கடகலக்ன காரர்களுக்கு குடும்ப பாசம் ரொம்பவே அதிகம்னு விதி.

    மக்களை தலைவன் வழி நடத்தனும் அது தான் அவனுக்கு சிறப்பு. இப்ப இருக்கிற தலைவர்கள் எல்லாம் சர்வே பண்ணிதானே முடிவெடுக்குறாங்க. லட்சுமி பார்வதியை ஊரான் பெண்டாட்டி என்று சொன்னது ஒரு வகையில் தவறுதான். அவர் என்.டி.ஆரை மணப்பதற்கு முன் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார்.

    ReplyDelete