Saturday, October 31, 2009

எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி

ஆம். இந்திய எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி என்பதை மிக உறுதியாக சொல்லக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடிதங்களுக்கும், இ மெயில்களுக்கும் பிரபலங்கள் பதில் தராமலிருப்பது சகஜமே (இந்தியாவில்). ஆனால் இந்திய எம்.பிக்களுக்கு நான் அனுப்பிய மெயில்களுக்கு மட்டும் " நோ சச் யூசர்" என்று பதில்வந்தது. இத்தனைக்கும் நான் மெயில் அனுப்பிய முகவரிகள் தனிப்பட்டவை அல்ல. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தரப்பட்டிருந்தவையே.

மனிதர்கள் போலி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது அவர்களின் மெயில் முகவரிகளும் டுபாக்கூர் என்பது செய்தி தானே. இத்தனைக்கும் நான் ஏன் அவர்களுக்கு மெயில வேண்டி வந்தது ?

நான் இந்திய திரு நாட்டை திருவோடு நாடு என்ற நிலையிலிருந்து திரு (லட்சுமி) வருள் பெற்ற நாடாக மாற்ற 1986 முதல் மண்டையை உடைத்துக்கொண்டு 1997 நவம்பரில் அதற்கு இறுதி வடிவம் கொடுத்தேன்.அதன் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை எம்.பிக்களுக்கு வினியோகிக்கும்படி கோரி லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அவை என்ன கதியானது என்பதை எனது பழைய பதிவுகளில் தேடி படித்துக்கொள்ளவும்.

இப்பத்தான் எல்லாம் ஹைடெக் ஆயிருச்சே. மெயிலுக்கே தட்டினா போவுது என்று தான் மெயிலினேன். அப்பதான் " நோ சச் யூசர்"னு பதில் வந்தது. ஒருத்தர் ரெண்டு பேருக்கு அனுப்பினதுக்கு மட்டுமல்ல ஒரே ஒரு எம்.பி.யை தவிர அனைத்து எம்.பிக்களுக்கு அனுப்பின மெயிலுக்கும் இதுதான் பதில்

5 comments:

  1. நீங்கள் சரியான மெயில் ஐடிக்குத்தான் அனுப்பினீர்களா ??

    ReplyDelete
  2. வணக்கம்

    எனக்குள்ளும் இதுபோல் சில யோசணைகள் இருக்கின்றன.

    எப்படி இவற்றை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவது.

    இருவரும் சேர்ந்து ஏதேனும் நல்ல வழிகளை காண்போம்.

    ஏதாவது செய்யனும், பேசிக்கொண்டே இருக்காமல் செய்யனும்.

    இராஜராஜன்

    ReplyDelete
  3. ராஜராஜன் அவர்களே !
    உங்கள் நோக்கம் உயர்வானது. எனது அனுபவத்தை வைத்து நீங்கள் தள‌ர்ந்து போகாதீர்கள். ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது டி.வி.யில் இவ்ள நேரம் ஆட்டின (சாரி ஆடின ) பெண் என்ன கலர் ப்ரா அணிந்திருந்தார். சரியான விடையை இந்த முகவரிக்கு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புங்கள் என்று அறிவிப்பு வெளியானது. நம்மவர்க்கு நவதுவாரமும் எரிந்து தபால் துறைக்கு கடிதம் தீட்டினார். " ஒரு போஸ்டுகார்டு அச்சிட, விற்பனைக்கு கொண்டுவர, முகவரியில் சேர்க்க/ சில சமயம் முகவரிதாரர் கிடைக்கவில்லை என்றால் அனுப்புனருக்கு திருப்ப பல ரூபாய் செலவாகிறது. நுகர்வோர் தருவது 15 காசுதான் (அப்போ கதைங்கண்ணா) மிச்சம் எல்லாம் தயிர். இதை இப்படி துர்வினியோகம் பண்ணக்கூடாது வேணம்னா காம்படிஷன் போஸ்டு கார்டுனு தனியா போடுங்க "

    இது அமலான கதை அனைவருக்கும் தெரியும். (உங்களுக்கும்)

    நான் சொல்லவருவது ஒன்றே . உங்கள் யோசனைகள் எது குறித்தவை என்பதை தெரிவித்தால் அதை யாருக்கு/எப்படி சொல்லலாம் என்று வழிகாட்ட காத்திருக்கிறேன். தாங்கள் விரும்பினால் எனது வலைப்பூவிலேயே எழுதலாம்.

    ReplyDelete
  4. செந்தழல் ரவி அவர்களே !
    (உங்களுக்கான மறுமொழிய வடிவேலு பாணியில்படிக்கவும்)
    சரியான மெயில் ஐடிக்கு அனுப்பினிங்களா? என்னா அசால்ட்டா கேட்கிறாங்கய்யா கேள்வி. சென்ட்ரல் கவர்ன்மென்ட் வெப்சைட்டை நோண்டி "மொளகாரிச்சு"(இது என் அம்மாவின் பிரயோகம் இதற்கு என்ன அர்த்தம்?) ஒவ்வொரு ஐடியா பொறுக்கி யாஹூ காரனே இன்னைக்கு கோட்டா ஆயிருச்சு. இன்று போய் நாளை வா மகனேன்னிட்டான்யா. சரியான ஐடிக்கு அனுப்பினிங்களா ? இது கேள்வி. ஒரு வேளை அதிமுக வெப்சைட் மாதிரி இதையும் ஹேக் பண்ணி வச்சிருந்தப்ப எடுத்த ஐடிக்கு அனுப்பிட்டேன்னுவிங்களோ. இல்லய்யா.. ரெண்டு கண்ணும் டப்ஸ் ஆகிற அளவுக்கு பார்த்து பார்த்து கண்ணு பூத்து போக அனுப்பினேய்யா.. நல்லா கேட்கிறாங்கப்பா கேள்வி

    ReplyDelete
  5. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி சித்தூ முருகேசன் வாழ்க.
    ஆரம்பிச்சுடாங்கப்பா

    ReplyDelete