Friday, October 16, 2009

சாதா ஜோக்குகள்+துளிப்பாக்கள்

சாதா ஜோக்குகள்
1."அவர் ஏங்க சைக்கிளை படுக்க வச்சு காத்து புடிக்கிறாரு?"
"அவர் இதுக்கு முன்னாடி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தவ‌ருப்பா"

.2."டைரக்டர் ஏன் கார் கீழ படுத்துக்கிட்டு டிஸ்கஷன் பண்றார்?"
"அவர் இதுக்கு முன்னாடி கார் மெக்கானிக்கா இருந்தவராம்"
3.பல்லிருந்தும் கடிக்காது அது என்ன ?
சீப்பு
4.காதிருந்தும் கேட்காது அது என்ன ?
செருப்பு
5.இறக்கை இருந்தும் பறக்காது அது என்ன ?
ஃபேன்
6.கால் இருக்கும் நடக்காது அது என்ன ?
நாற்காலி

7.நாய் எப்படி லவ் யூ சொல்லும் ?
ஐ வவ் யூ

8.நீங்க கிட்னி டாக்டராதானே இருந்திங்க ..ஏன் பல் டாக்டராயிட்டிங்க?
கிட்னி ரெண்டுதான் பல்லு 32 ஆச்சே
9."அந்த ஜோசியர் சொன்னதெல்லாம் நிச்சயம் நடக்கும் "
"எப்படி சொல்றே !"
"அவர் நாய், நரி,புலி ,சிங்கம்னு நடக்கிற விஷயத்தை தான் சொல்வார்"

துளிப்பாக்கள்

1.வாய்
சில நேரம் பல்லிடை சிக்கிய உணவு துகளாலும்
சதா பயனற்ற பேச்சுக்களாலும்
நாற்றமுறும் அங்கம்
2.கித்தார்
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
3.மாஸ்டர்
நான் ஸ்ட்ராங்கா வீக்கா
எனக்கே தெரியவில்லை
பார்த்ததும் போட்டு தரும் டீ மாஸ்டர்
4.மண்
நாளை அது தன்னை தின்னப்போவதை அறியாது
மண் தின்னும் பாலகன்
5.கவிதை
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்

6.மழலை
புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை

கம்ப்யூட்டர் பழமொழிகள்:
ஹார்ட் டிஸ்கிலிருந்தாதானே சி.டி.ல வரும்
பி2 க்கே கதியில்லயாம் ..லேப்டாப்புக்கு இன்டர் நெட் கனெக்ஷனுக்கு போயிட்டான்

1 comment:

  1. நான் ஒரு ஜோதிடனா என்பதிலேயே சில சமயம் சந்தேகம் வந்து விடுகிறது. என் லக்னம் கடகம். சுக்கிரன் பாதகாதிபதி. லக்னாதிபதியுடன் சேர்ந்து வாக்குஸ்தானத்தில் இருப்பதால் தான் ஏழ்மை என்பது ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு அளவில் தொடர்கிறது. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்னு கண்டமேனிக்கு எழுதவேண்டியது. பின்னாலயே ஆப்பு. நான் கடந்த 13 நாட்களாக எழுதிய பதிவுகள் கூட சுக்கிரன் தொடர்பானவையே. செல் வந்த புதிதிலிருந்து எத்தனையோ நெம்பர்கள் மாறிவிட்டன. ஆனால் 3 வருடமாக தொடர்வது 9397036815 கூட்டினால் 6 வரும்.

    கோமாவிலிருந்து மீண்ட எனது புராதனகால கம்ப்யூட்டரில் உருப்படியாய் 3 ஐட்டம் தயார் செய்தேன். தாளி சி.டி.ட்ரைவில் ஏதோ பிராப்ளம் போல ரைட் ஆகமாட்டேன் என்கிறது. ஒழியுது போ என்று நீரோ இன்ஸ்டால் செய்யப்பார்த்தால் எல்லாம் ஓகே. கொட்டுவாயில் சிஸ்டமே ஆஃப் ஆகிவிடுகிறது.மூன்று பலான ஜோக்குகள் தட்டச்சிய பின் தான் எப்படியோ விண்டோஸ் உபயத்தில் ரைட் செய்ய முடிந்தது. இங்கே கிடைத்த 6 ஆவது நெம்பர் கேபின்.

    ஆன்டி க்ளைமேக்ஸ்:
    வைரஸ் அதிகமாயிருக்கு காப்பி ஆகமாட்டேங்குது என்றுவிட்டான்கள்
    பார்ப்போம் இன்றில்லை நாளை பதிவேற்றியே தீருவேன் டோன்ட் வொர்ரி.

    முன்னோட்டம்:
    1.மூன்று பலான ஜோக்குகள்
    2.டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் ஹெலிகாப்டர் சித்தூர் ஃபாரஸ்ட் ஏரியாவில் எமர்ஜென்சி லேண்டிங் ஆகியிருந்தால் ? என்ற கற்பனையுடன் ஒரு குறு நாவல் துவங்கியுள்ளேன்
    3.ரொம்பகாலம் கழித்து (20 வருடங்கள்) இரண்டு நண்பர்கள் சந்தித்தால் என்ற கோனத்தில் ஒரு ஆக்கம்
    4. எனது இணைய கணிணி அனுபவங்கள் என்று ஒரு தொடர்.

    விரைவில் ஆரம்பம் டட்டடாஆஆஆஆஆஆஆஆஅங் !

    ReplyDelete