பெண்ணின் மறுபக்கம் தொடரை படிச்சுட்டு தாய்குலம் பக்கெட் நிறைய சாணி கரைச்சு வச்சிருக்கிறதா மர்ம டெலிஃபோன் எல்லாம் வருது. அட்லீஸ்ட் நான் சொல்ற மேட்டர்ல நியாயம் உள்ளதா நினைக்கிற பார்ட்டிங்க இண்ட்லிலயும்,உலவுலயும் ஓட்டுப்போடலாமில்லியா பாஸ். கொஞ்சம் போல தகிரியமாச்சும் வருமில்லை. பதிவுக்கு கீழயே ஓட்டுப்பட்டை இருக்கு ஒரு சொடுக்கு சொடுக்குங்க தலை!
பகவத்கீதைல கிருஷ்ணர் சொல்றாராம்" நீ எந்த உருவத்துல என்னை வணங்கினாலும் அந்த உருவத்துல நான் உனக்கு அருள் புரியறேன்"னு. பொம்பளையும் கிட்ண பரமாத்மா மாதிரிதான்.
நீ அவளை உடம்பா பார்த்தா உடம்பாவே ரெஸ்பாண் ஆகறா. நாத்தத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, வெட்டி வெட்டி பார்த்துக்கிட்டு ,நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.
நீ அவளை மனுஷியா பார்த்தா மனுஷியா ரெஸ்பாண்ட் ஆகறா. ரா.கி.பரமஹம்சர் சொல்வாரு " உன் எண்ணத்துக்கேற்ப உன் பெற்றோர்,சகோதரர்,மனைவி,மக்கள், ஏன் ராஜாவோட மனசு கூட மாறிரும்"
நடுராத்திரி, ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு தனியா போயி திரும்பி வராளோ அதான் உண்மையான சுதந்திரம்னு ..காந்தி சொன்னாரே அந்த சுதந்திரம் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா ..ரெண்டு வேலை செய்யனும்.
ஒன்னு மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வர வைக்கனும். ரெண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும்.
இன்னைக்கு தங்கம் விலையேறுது விலையேறுதுனு அடிச்சிக்கிறாய்ங்க.ஏன் ஏறுது? மனுஷனுக்கு சகமனுஷன் மேல மட்டுமில்லை கார்ப்போரேட் கம்பெனிகள் மேல கூட நம்பிக்கை இல்லை. ( இருந்தா ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணுவானே) .
மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வரனும்னா ...வேணா ராசா மறுபடி ஆப்பரேஷன் இந்தியா2000 பத்தி மறுபடி ஒரு பாட்டம் எழுதியாகனும். நீங்க பேசாம நம்ம ப்ளாக்ல ஓடிக்கிட்டே இருக்கே அந்த அனிமேஷனை ஒரு தாட்டி பார்த்து படிச்சுருங்க. சுட்டி.
ரெண்டாவதா சொன்ன பாய்ண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும். அதுக்கு ஒரே வழி ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்சிங் கொண்டுவரனும். ( கர்பத்தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான பக்கா பயிற்சி கொடுத்து)
பல நூற்றாண்டுகளா செக்ஸ் ஏறக்குறைய தடைபடுத்தப்பட்டிருக்கிறதால அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியறாப்ல காஞ்சவன் கண்ணுக்கு கவிதையெல்லாம் காயிதமா தெரியுது. இவன் கழுதையா மாறி திங்க பார்க்கிறான்.
நெல் மூட்டைய அடுக்கி வைக்கிறச்ச பொரியை இறைச்சுவைப்பாய்ங்களாம்.எலி அதை பொறுக்கி பொறுக்கி தின்னுக்கிட்டிருக்குமாம். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைச்சாலே பெண்ணை உடம்பா பார்க்கிற நோய் ஒழிஞ்சு போயிரும்.
தாய்குலம் என்னவோ உண்மையிலயே திறமையை காட்டித்தான் இன்டஹ் சமூகத்துல அங்கீகாரம் பெற ட்ரை பண்ணுது ( ஒரு உயிரின் அடிப்படை இச்சை இது) ஆனால் சமூகம் அவளோட திறமைய பார்க்காம தினமலர் தனமான "தெறமைய "த்தான் பார்க்குது.
நிறைய சதவீதம் பெண்கள் தாளி திறமைய காட்டனும்னா ரெம்ப கஷ்டப்படனும், தெறமைய காட்டறது ச்சோ ஈஸினு இறங்கிர்ராய்ங்க.
நான் பலதடவை சொல்லியிருக்கேன். நாட் ஒன்லி இன் செக்ஸ் உணவுப்பழக்கத்துல கூட எவன் ருசிய தேடறானோ, ஊர் பீக்கு அலையறானோ அவனுக்குள்ள பசி மந்தமாயிருச்சுனு அர்த்தம். அவன் நாக்குல போதுமான சலைவா, இரைப்பைல சுரக்கவேண்டிய ஹெச்.சி.எல் சுரக்கலைனு அர்த்தம். ஜடராக்னி கூலாயிருச்சுனு அர்த்தம்.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. இளமை. செக்ஸ்ல இன்பத்தை தர்ரது ஆண்மை,இளமை.
செக்ஸ் குற்றங்கள்ள டீன் ஏஜர்ஸை விட மிடில் ஏஜ்ட் நரிகள் தான் அதிகமா இருக்காங்க.
நாட்ல வயசுப்பசங்களைவிட கிழவாடிங்கத்தேன் நிறைய லொள்ளு பண்றதா தகவல். (இதெல்லாம் மெனோஃபஸ் மாதிரி)
ஒருத்தன் புதுசுபுதுசா தேடறான்னா அவனால கில்மால செயிக்கமுடியலைனு அர்த்தம். புதுசு புதுசா தேடறவன் இவளையும் கழட்டிவிடமாட்டானு கியாரண்டி கிடையாது.
அப்பாறம் ஆளை மாத்தற சனம் சொல்ற காரணம் டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்கு.
மறுபடி மறுபடி சொல்றேன். ஒரு ஆண் பெண் உறவு உன்னதத்துல நிலைக்கனும்னா அந்த ரெண்டு பேருக்கிடையில செக்ஸ் நிகழக்கூடாது -வரக்கூடாது. நீ சொல்ற டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்குல்லாம் தொடரனும்னா காதல்,கடலை பர்பிக்கெல்லாம் இடம் கொடுக்காதே.
இயற்கை ரெம்ப கீன். விதைப்பரவல் ப்ராசஸ் தெரியுமில்லியா. அங்கே விதை பரவுது. இங்கே விதைகள்ள யிலருந்து விதைகள் பரவுது தட்ஸால். இயற்கை கொடுக்கும் உந்துதலுக்கு பலியாகிட்டா உன் ரோல் ஜஸ்ட் டெஸ்ட் ட்யூப்.அவளோட ரோல் ஜஸ்ட் ஒரு குடுவை அம்புட்டுதேன்.
பாய்ஸுக்கு சொல்றது "அவளை உடம்பா பார்க்காதே.. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை, மனசுக்கும் நல்லதில்லை.
கேர்ள்ஸுக்கு சொல்றது "உன்னை எவனாச்சும் உடம்பா பார்த்து சேப்பா இருக்கே,க்யூட்டா இருக்கே, அழ க் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ இருக்கேன்ன்னா செருப்பாலயே அடிங்க.
இது உங்களை ஒரு மனுஷியா அவமானப்படுத்தற மேட்டர். இங்கே இடம் கொடுத்தா தாளி ஷாட் கட் பண்ணா கிள்ளினான், அழுத்தினான், மல்லாக்கபோட்டான்னு கம்ப்ள்யிண்ட் கொடுக்கிறதுதான்.
இது ஜஸ்ட் பாடி மேட்டர். இது அவ்ள சீக்கிரத்துல தீர்ந்துபோற சப்ஜெக்ட் இல்லே பாஸ்.அப்பப்போ மூக்கை நீட்டிக்கிட்டே தான் இருக்கும். இப்ப லேசா மனச தொட்டு பார்ப்போம்.
ஒவ்வொரு நெஞ்சமும் ரணமா கிடக்கு. இதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. பூர்வ ஜன்ம நினைவுகள்,ஜீன்ஸ், பால்யம், டீன் ஏஜ் அனுபங்கள் இப்படி பலப்பல. அதை ஏதேதோ நம்பிக்கைகளாலயும் ,பொய்யாலயும் மூடி வச்சிருக்கம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு தோல் சைஸுக்கு மூடிக்கிடக்கு. இதை ஏதோ ஒரு பார்வை பூவா வருடிவிட்டா புல்லரிக்குது. அதுவே ஒரு முள்ளா மாறி கீறி விட்டுருச்சுன்னா போதும் ரண களமாயிருது.
இதெல்லாம் ஏன் ஏதுக்கு எப்படி நடக்குதுன்னு அப்பாறம் பார்ப்போம்.இப்போதைக்கு உடு ..........ஜூஊஊஊஊஊஊஊஊட்.
நல்ல கட்டுரை..
ReplyDeleteஆனால் சில கடுமையான வார்த்தகளை தவிர்த்தால் நல்லது
ஆ. இ 2000 படம் பார்த்தா சாணக்யர் கதை தான் ஞாபகம் வருது..
ReplyDeleteஓட்டு போட ஒவ்வொறு தளத்திலும் லாகின் செய்யவேண்டி உள்ளது.
ReplyDeleteகமாண்ட் போட ஜிமெயில் லகின் மட்டும் செய்தால் போதும்.
எனவே கமொன்ட் போடுவது சுலபம் என நினைக்கிறேன்.
வினோத் அவர்களே,
ReplyDeleteகமெண்ட் போடறவாள் ஓட்டுப்போடதேவையில்லை. ஒவ்வொரு கமெண்டும் நூறு ஓட்டுக்கு சமம்.
தொடரும் தங்கள் ஆதரவுக்கு நன்றி. என் ஆதங்கமெல்லாம் உ.ஊ காய்க்கு உதவாத பதிவெல்லாம் பிரபலமாகுது.
பிரபலமானதாலயே மஸ்தா பேரால படிக்கப்படுதேங்கறதுதான்
ஒரு காலத்துல தமிலிஷ்ல நம்ம பதிவு தொடர்ந்து பிரபலமாகும்.
இப்ப நாம அந்த வட்டத்தையெல்லாம் தாண்டி வந்துட்டம்னு அர்த்தமா என்ன புரியலை
பார்வையாளன் அவர்களே,
ReplyDeleteகடுமையான வார்த்தைகள் சாம்பார் வடையில் மிளகு மாதிரி .அப்பத்தேன் உறைக்கும். நான் எழுதற மேட்டர் ஓகே. எழுதறவிதத்துல எனக்கு பயங்கர அதிருப்தி உண்டு.
ச்சொம்மா விளக்கெண்ணைல ........ கழுவின மாதிரி போகுதோனு ஒரு சம்சயம்