Tuesday, December 7, 2010

கணவர் கொலைவழக்குல உள்ளே

பெண்ணின் மறுபக்கத்துக்கு என்னெல்லாம் காரணம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.லிஸ்ட் மட்டும் தீர்ந்தபாடில்லை. பெண் பேயா மாற இத்தீனி காரணம் இருந்தாலும்  நிறைய பெண்கள் பெண்ணாவே இருக்காய்ங்க இது எப்டி?

1984 அவிக ஒரு லெக்சரர். கணவர் கொலைவழக்குல உள்ளே இருக்காரு. வருசத்தை இன்னொரு தாட்டி ரெஃபர் பண்ணுங்க 1984. இன்னைய தேதிக்கு தாளி மனுசனுக்கு மனுசனுக்கே கம்யூனிகேஷன் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் பாம்பே ஸ்வீட் விக்கிறானா பாம் விக்கிறானானு தெரிஞ்சுக்கற ஆர்வம் கூட இப்ப கிடையாது. 1984 ல சனத்துக்கு நிறைய ஃப்ரீ டைம் இருந்திருக்கும். எப்படியெல்லாம் நோண்டியிருப்பானு கெஸ் பண்ணுங்க.

மேலும் அந்த கணவன் கோடீஸ்வரன் கிடையாது. அரசியல்வாதி கிடையாது. இவிகளும் சவுண்ட் கிடையாது. லாஜிக்கலா பார்த்தா அவிக சேடிஸ்டாவே மாறியிருக்கனும். ஆனால் அவிக பிஹேவியர் ?

அந்த காலகட்டத்துல நாம சரியான பொறுக்கி நாம கலாய்க்கிறப்ப  எவளாச்சும் பொறுக்கினு திட்டினா வெறும் பொறுக்கியில்லை கண்ணு பொம்பளை பொறுக்கின்னு க்ளெய்ம் பண்ணிக்கிற ஸ்டேஜு.

அப்படியா கொத்தது எப்டி எப்டியோ மெயின் ஸ்ட்ரீமுக்கு வரவழைச்சு காலேஜ் மேகசினுக்கு கவிதை எழுதவச்சாய்ங்க. பேச்சு,கட்டுரை போட்டில பார்ட்டிசிப்பேட் பண்ண வச்சாய்ங்க. 1987ல புதுசுன்னு ஒரு ஒல்லியோ ஒல்லியா பத்திரிக்கை நடத்தினப்ப கதை எழுதி கொடுத்தாய்ங்க. குமுதம்காரன் ரேஞ்சுல பத்து பக்க கதையை ஒரு பக்கத்துக்கு ( ஃபுல் ஸ்கேப்ல குவார்ட்டர்)  சுருக்கி போட்டப்ப சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம பாராட்டினாய்ங்க, இதெப்படி அவிகளுக்கு சாத்தியப்பட்டுச்சு?

இங்கனதான் நான் அடிக்கடி சொல்ற பஞ்ச் உதவுது." பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி -அட இயற்கையே அவள்தான்" இன்னைக்கு இயற்கை மனுஷன் கையில சிக்கி என்ன பாடுபடுதுன்னு தெரிஞ்சுக்க  ஓசோன் படலத்து ஓட்டை ஒன்னு போதும்.
ஆனாலும் மாதவிலக்கு சமயத்துலயும் ரெப் கணவனோட  ஷூவுக்கு  பாலீஷ் போட்டுத்தர்ர மாதிரி, பெத்து இறக்கி பச்சை உடம்பா பரிதவிச்சு கிடந்தாலும் ஆஷ் ட்ரேவை நகர்த்தி வைக்கிற மாதிரி இயற்கை கருணைகாட்டிக்கிட்டே தான் இருக்கு.

இந்த நேச்சர் பெண்லயும் இருக்கு. அதனாலதான் நம்ம பிழைப்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியா ஓடிக்கினு கீது. மத்த பொம்பளைங்க மேட்டர்ல எல்லாம் இந்த பேசிக் நேச்சர் என்னாச்சுனு கேப்பிக. "எறும்பு ஊற கல்லும் குழியும்"ங்கறாய்ங்க. நீங்க அதை எதிர்க்க முடியாத நிலையில இருக்கிறச்ச  அந்த எறும்பு கடிக்க ஆரம்பிச்சா / அட அது ஒரு எறும்பு இல்லே எறும்பு கூட்டம்னு வச்சிக்கங்க . என்னாகும்?

மொதல்ல கண்ணு காலி. அப்பாறம் எறும்புகூட்டம் கண் ஓட்டை வழியே கபாலத்து
க்குள்ளே புகுந்தா மூளை காலி. இதே இழவுதான் பெண்கள் விஷயத்துலயும் நடக்குது. ஆனால் ஃபிசிக்கல் பாடிய பெருசா திங்கறதில்லை .. அவளுக்குள்ள இருக்கிற இயற்கை குணங்களை , இயற்கையை ஒத்த குணங்களை தின்னு தீர்த்துருது.

பாட்டன்,பூட்டன், முப்பாட்டன் பண்ண பெண் கொடுமைகளை தாங்கி வந்த ஜீன்ஸ்,அப்பன், அண்ணன் ,தம்பி,மாமன், சித்தப்பன், பக்கத்து வீட்டு அங்கிள்,க்ளாஸ் மெட்ஸ், லவர்,பஸ்ல டிக்கெட் கொடுக்கிறவன் , தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிறவன் இவ்ள ஏன் பொதுக்கழிவறையில கட்டணம் வசூலிக்கிறவன் வரை அவளை /அவளுக்குள்ள இருக்கிற இயற்கைய /இயற்கையை ஒத்த குணங்களை அந்த குணங்களால் ஆன உருவத்தை எறும்பு கூட்டம் போல தின்ன ஆரம்பிச்சா என்னாகும்?

அவளை திங்க நினைக்கிறவன் மட்டுமில்லை, அவளை பாதுகாக்கவேண்டிய நிலையில இருக்கிறவன் கூட அவளை வெறும் மாமிச பிண்டமா, பச்சையா சொன்னா ஒரு துளையாத்தான் பார்க்கிறான்.

அவள் பாதி ராத்திரி பி.பி.ஓ அனுப்பற மாருதில ஏறிப்போகலாம். ரத்தம் சுண்ட வேலை பார்க்கலாம். ஆனால் தான் ஒரு துளைங்கற விஷயத்தை மறந்துரக்கூடாது. அதை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும்.

அடங்கொய்யால யத்பாவம் தத்பவதின்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்னு அர்த்தம். இதையே நான் மாத்தி சொல்ல விரும்பறேன். ஒரு ஜீவனை பத்தி ஊர் உலகம் என்ன நினைக்குதோ அது அதுவாவே மாறுது.

அவளை மாமிசப்பிண்டமாவே பார்த்தா அவள் மாமிசப்பிண்டமாவே மாறிப்போயிர்ரா. ஆறாங்கிளாஸ் படிக்கிறவரை எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. (இப்ப மட்டும் கிழியுதாங்காட்டியும்னு நோகடிக்காதிங்க பாஸ். இங்கிலீஷ்ல ஒரு ப்ளாகே மெயின்டெய்ன் பண்றோமில்லை. ப்ளானட்ஸ் ஸ்பீகிங் தொடரை தவிர மத்ததெல்லாம் நாமளா விட்டதுதான்)

ஆறாங்கிளாஸ்ல ஜேவிஎன் என்று ஒரு சார். எல்லா பசங்களோட அசைன்மென்ட் பேப்பரையும் கட்டுக்கட்டி கொடுத்து திருத்திக்கிட்டு வாப்பான்னுட்டாரு. அங்கன பத்திக்கிச்சு.

ஒரு தாட்டி ஒரு கேள்விக்கு கேள்வி ஞானத்துல சொந்தமா பதில் எழுத எழுப்பி நிக்க வச்சு க்ளாஸையே க்ளாப் பண்ண சொன்னாரு.

இதுலருந்து என்ன தெரியுது? ஒரு ஜீவனை பத்தி சனம் என்ன நினைக்குதோ அந்த நினைப்பு அந்த ஜீவனை பாதிக்குது.

ஜேவிஎன் மாதிரி யாருனா ஒரு கவுரவஸ்தன் " த பாரும்மா.. நீ வெறும் மாமிசபிண்டமில்லை. உடலளவுல இருக்கிற ஆறுவித்யாசம்லாம் கிடக்கட்டும். மொதல்ல  நீ ஒரு ஹ்யூமன் பீயிங். ஒரு பெண் என்ற காரணத்தால் மனித உயிருக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டா ஒத்துக்கிடாதே. போராடு. அதே போல ஒரு மனித உயிருக்குரிய கடமைகள்ள இருந்து பின் வாங்காதே. சனத்தொகைல பாதியா உள்ள உனக்கு பாதி உலகம் சொந்தம் .உன் பங்கை விட்டுக்கொடுக்காதே. இந்த பிக்காலிங்க தங்களோட  பைத்தியக்காரத்தனத்தால உன் பங்கையும் சேர்த்து இந்த உலகத்துக்கே உலை வச்சிட்டானுவ. என்னா ஏதுனு விஜாரி..உன்னால முடியாதது ஒன்னுமில்லை. தாளி ஆண் என்ன அன்னிய கிரகத்தை சேர்ந்தவனா? இல்லே. உன் சக போராளி. மரணத்தை நோக்கியே போற வாழ்க்கை பயணத்துல சக பயணி - அவன் ஒன்னை மாமிசமாவோ துளையாவோ பார்த்தா போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோ"ன்னு சீறுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்தா மாறலாம். எதுவும் மாறலாம். மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.

இந்தியும் அதே கதைதான். சுட்டுப்போட்டாலும் , சுடாம போட்டாலும் வராது.  இந்தி டீச்சர் மூணு ப்ராமின் பெண்களையும், சில இன துரோகிகளையும் மட்டும் கிட்டக்க கூட்டி வச்சுக்கிட்டு கொஸ்டியன் ஆன்சர்ஸ் மார்க்  பண்ணி கொடுத்துரும். நித்தம்  நித்தம் கர்பமா இருக்கும்.

நாம பின்னாடி வரிசைல உட்கார்ந்து தமிழ்ல எழுதி மேல கோடு போட்டு இந்தின்னு கணக்கு பண்ணிக்கிட்டிருப்போம். அப்பாறம் ஆரோ புண்ணியம் கட்டிக்க ( எங்க சின்ன அண்ணன் தானு நினைக்கிறேன்) தட்சிணபாரத் இந்தி பிரச்சார சபாவுல சேர்ந்து பிரவேஷிகா வரை முடிச்சேன்.

இவனுக்கு இந்திவராது, இங்கிலீஷு வராதுனு சனம்  நினைச்சிட்டிருந்தாய்ங்க. அதுவரை எனக்கு ஒரு ம...ரும் வரலை.

ஏன் வராதுனு கேள்வி எழுப்பினேன். தூள் கிளப்பினேன்.தாய்குலத்துக்கும் இதைத்தேன் சொல்றேன். என் லாப்ல நான் தான் எலி. இந்த எலிக்கே ஒர்க் அவுட் ஆன ஊசி புலிங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாதா என்ன?

3வகை மனங்கள்:

மனித மனங்களை 3 வகையா பிரிக்கலாம்.

1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே  செயல்படுத்தற அடிமை மனங்கள்
2.  தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்

பல நூற்றாண்டுகளால்  மேதைகள் என்று தம்மைத்தாமே க்ளெய்ம் செய்துகொண்ட ஒரு இனத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ணம், ஜீன்களில் பொதிந்துள்ள அடிமைத்தனம் இதையெல்லாம் எதிர்த்து பெண் தன் இயற்கை குணங்களோட தொடரனும்னா அதுக்கு தேவை டைனமிக் மைண்ட்.ஸ்ட்ராங்கர்  செக்ஸுங்கற ஆண்கள்ளயே இந்த ஜாதி ரெம்ப கம்மி. இதுல தாய்குலத்துல கம்மியுலயும் கம்மி.

அதனாலதான் மெஜாரிட்டி ஆஃப் தி பெண்கள்  சனங்க, சமுதாய  எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் கஷ்டப்பட்டு, ரெட்டை வேடம் போட்டுக்கிட்டு, தங்களை தாங்களோ ஏமாத்திக்கிட்டு,  பேயா உருவாக்கப்பட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத ஆண்களையும் கஷ்டப்படுத்தி  கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காய்ங்க.

தாய்குலம் தங்களோட மைண்டை டைனமிக் மைண்டா கனெவ்ர்ட் பண்ணிக்கனும்னா ஒட்டு மொத்தமா ஒரு யு டர்ன் எடுத்து மாத்தி யோசிக்கனும். இன்னைக்கு  பேசப்படற ,  00.01% பெறப்பட்டிருக்கிற பெண் சுதந்திரமெல்லாம் ஆண் மனங்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணதுதேன். இதுவும் ஒரு அடிமைத்தனம் தேன்.

இதையெல்லாம் யார் பேசுவாய்ங்கனு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த என் சக போராளிகளுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்திலான சக பயணிகளுக்கும் என் உறுதி மொழி ஒன்னுதேன்.

உங்க எண்ணங்கள் என் மைண்டுக்கு  வந்து சேர்ந்தாச்சுங்கோ..

(தொடரும்)

6 comments:

  1. சில இடங்களில் ஆவேசமாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. ரொம்ம்ம்ம்ப நல்லா இருக்க்கு சர்ரே

    .....
    ஆ. இ 2000 பத்தி டபுட் இருக்கு சாரே

    ReplyDelete
  3. பார்வையாளன் அவர்களே,
    வேசமா தான் எழுதக்கூடாது.ஆவேசமா எழுதலாம். தப்பில்லை

    ReplyDelete
  4. வினோத் அவர்களே,
    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. ஆ.இ குறித்த சந்தேகங்களை நெத்தியடியா கேட்டு அதிரடி பண்ணுங்க பாஸ்..

    வேணம்னா உங்களை ஆத்தரா இன்வைட் பண்றேன். தனிப்பதிவே போடுங்க.

    ReplyDelete
  5. //1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே செயல்படுத்தற அடிமை மனங்கள்
    2. தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
    3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்//
    எப்பவாவது யோசிக்கிறது எங்க பாணி... எப்பவுமே யோசிக்கிறது உங்க பாணி... கலக்குங்க...

    ReplyDelete
  6. சுகுமார்ஜீ அவர்களே,
    வரவுக்கும்,மறுமொழிக்கும் நன்றி.

    ReplyDelete