2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் மனைவியின் ஆடிட்டர் அலுவலகம்,கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகங்களில் ரெய்டு நடந்ததாக பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி செய்தி வெளியிட்டது.
ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீடு & அலுவலகத்தில் ரெய்டு நடந்ததாக சாட்சி டிவி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அடியேன் போட்ட பதிவைப்படித்த நம்மாளு ஒருத்தரு அது நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜ் தான்னு போட்டு உடைச்சாரு. இதை பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி உறுதிப்படுத்தியது.
தற்போது கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகத்திலும் (பேரு என்ன பாஸு) , கலைஞரின் மனைவியின் ( எத்தனாவது?) ஆடிட்டர் அலுவலகத்திலும் ரெய்டு நடந்ததாக மேற்படி சானல் செய்தி வெளியிட்டு வருகிறது.
ஆடிட்டர்னா கட்டாயம் கிராஸ் பெல்ட்டாத்தான் இருக்கும். ( கலைஞர் பாஷையில சொன்னா நூல்) .
அடுத்து முரசொலி அலுவலகத்துலயும், கலைஞர் வீட்லயும் ரெய்டு பாக்கி.. இப்பத்தானே தமிழிலான இலங்கை தேசீய கீதம் தடை செய்யப்பட்டதை கண்டிச்சிருக்காரு,
மேற்படி இடங்கள்ளயும் ரெய்டு விட்டா அன்னைக்கு வைகோவை அனுப்பின மாதிரி நாளைக்கு எவனாச்சும் காஞ்ச தலையன் கிடைச்சா அனுப்பியே உடுவாரு.
வாழ்க கலைஞரின் தமிழ்/ தமிழின பற்று.
No comments:
Post a Comment